Page 5 of 5

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Mon Mar 26, 2012 7:49 pm
by muthulakshmi123
Athithan wrote:
muthulakshmi123 wrote:எல்லாரும் நல்லா கதை எழுதுகிறீர்கள் ,வாழ்த்துக்கள்....முத்துலஷ்மி மருத்துவமனைக்கு பீஸ் கொடுக்காமலே சென்று விட்டீர்களே..எப்படி வசூலிப்பது..
லெட்சுமியம்மா,

ராஜா சார் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவந்தவர். ஆகையால் அவரை பிடிச்சி வசூல் பண்ணிக்கோங்க. :ays:
ராஜா மருத்துவமனை பீஸை அனுப்பி வையுங்கள்

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Mon Mar 26, 2012 7:58 pm
by ஆதித்தன்
muthulakshmi123 wrote: ராஜா மருத்துவமனை பீஸை அனுப்பி வையுங்கள்
PM க்கு அனுப்பணுமா? அல்லது EM க்கு அனுப்பணுமா? என்பதை தெளிவா சொல்லிடுங்க. இல்லைன்னா ராஜா சார் தவறா, யாருக்காவது அனுப்பி வைச்சிடப் போறார். :grain:

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Tue Mar 27, 2012 5:24 am
by rajathiraja
muthulakshmi123 wrote:ராஜா மருத்துவமனை பீஸை அனுப்பி வையுங்கள்

பிரசவத்திற்கு இலவசம்னு போர்டு போட்டுகிட்டு பணம் கேட்கறீங்களா?

யாரங்கே?
நில அபகரிப்பு வழக்கு மாதிரி இதுக்கு ஏதாவது வழக்கு போடலாமா?

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Tue Mar 27, 2012 10:36 pm
by sumayha
rajathiraja wrote: பிரசவத்திற்கு இலவசம்னு போர்டு போட்டுகிட்டு பணம் கேட்கறீங்களா?

யாரங்கே?
நில அபகரிப்பு வழக்கு மாதிரி இதுக்கு ஏதாவது வழக்கு போடலாமா?
பிரசவத்துக்குத்தான் இலவசம்....டெஸ்ட்டுக்கு எல்லாம் காசு குடுங்கப்பா....

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Wed Mar 28, 2012 10:56 am
by rajathiraja
sumayha wrote:பிரசவத்துக்குத்தான் இலவசம்....டெஸ்ட்டுக்கு எல்லாம் காசு குடுங்கப்பா....
ரொம்ப அக்கறையா கேட்கறீங்க? உங்களுக்கும் கமிஷன் இருக்கோ?

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Sat Mar 31, 2012 9:29 pm
by sumayha
rajathiraja wrote: ரொம்ப அக்கறையா கேட்கறீங்க? உங்களுக்கும் கமிஷன் இருக்கோ?
ம்க்கும்... குடுக்கவேண்டிய பீஸ் வாங்கறதுக்குள்ளயே போதுமாகுது.... இதுல கமிஷன் வேறயா.... வேணாம்பா.....

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Mon Apr 02, 2012 2:22 am
by rajathiraja
ஆளாளுக்கு கமெண்ட்ஸ் போட்டுவிட்டு ஓடிடறாங்க. கதையை தொடருங்கப்பா! .

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Tue Apr 17, 2012 10:03 am
by RukmaniRK
Athithan wrote:
அதற்கு காரணம் பக்கத்து வீட்டு "_ _ _ _ _""

தொடரும்.......
பக்கத்து வீட்டு தோழி பிருந்தா. கோகிலாவை போன்றே கல்யாணம் ஆகி நான்கு ஆண்டுகள் பிறகே குழந்தை பாக்கியம் கிடைத்தது பிருந்தாவுக்கு. அவள் கணவனும்,அவளும் எல்லை இல்லா மகிழ்ச்சியில் உற்றார், உறவினர் என்று தங்கள் சந்தோஷத்தை இனிப்புடன் பகிர்ந்து கொண்டனர். யார் கண் பட்டதோ என்னவோ... 3 மாதங்கள் முடியும் முன்பே அவளின் கரு சிதைந்து போனது. சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தவள் அதில் இருந்து மீளவே இல்லை. நாட்கள் நகர்ந்து, 4 மாதங்கள் ஆன பின்பு அம்மாவிடம் சொல்லலாம். எதற்கு அவர்கள் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டும். எல்லாம் நல்லபடியாக நடந்தால் அம்மாவும் சந்தோஷம் தானே அடைவார்கள். கணவனிடமும் தன் முடிவை கூறி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்தார்கள்.

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Tue Apr 17, 2012 7:33 pm
by ஆதித்தன்
நிகழ்வைச் சொன்னால் நினைவை கொண்டு வந்துட்டாங்க, சரி பரவாயில்லை தொடர்கிறேன்.

===============================================

கண்ணனும் - கோகிலாவும் எடுத்த முடிவினால் எல்லோர் வீட்டிலும் நிகழும் மகிழ்ச்சி ஆராவரம் இங்கு இல்லாமல் போய்விட்டது, அதற்கு மாறாக கண்ணனின் பரிவான பாசம் மிகவும் கூடிவிட்டது என்றே சொல்லலாம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என கோகிலாவின் அருகில் இருக்கும் நேரம் எல்லாம், அவளை எந்த வேலையும் செய்ய விடுவதே இல்லை. அதிலும் வெயிட்டான பொருட்கள் என்றால், அவள் தூக்க முயற்சித்தால் கூட கோபப்படுவதும், தானே செய்வதும் என அவள் மீதோ! அவள் சுமக்கும் குழைந்தையின் மீதோ!! அன்பு இரட்டிப்பாகிவிட்டது.

என்னதான் யாரிடமும் சொல்லக் கூடாது என முடிவெடுத்து இரகசியம் காத்தாலும், பெண் புத்தி மாறிவிடுமா?

ஆம், பிருந்தாவின் மாமியார் ஜாடையாக தன் மருமளை பேசுவது போல், கோகிலாவைப் பற்றி வெற்றிவேலிடம் ஏதோ சொல்ல...


தொடரும்...

Re: வாங்க கதை எழுதலாம்

Posted: Fri Oct 10, 2014 12:40 pm
by வெங்கட்
அடடா.. இவ்வளவு கேரக்டர்கள் வந்ததில் வெற்றிவேல் யார் என்பது மறந்துவிட்டது. கண்ணனின் தந்தையா அல்லது கோகிலாவின் தந்தையா?

இதுல கதைய எங்க கன்டின்யூ பண்றது? அட போங்கப்பா? :wai: