Page 1 of 1

மனம் மணக்கும் பூமனம்

Posted: Thu Dec 14, 2023 6:53 pm
by ஆதித்தன்
மனமே மணம்
மணக்கும் பூமனம்

காயும் மனம்
கனியும் மனம்

விளைவால் மனம்
வித்தெடுப்பதும் மனம்

விதைப்பதும் மனம்
விருட்சமும் மனம்

வெளியாய் மனம்
வெறுமை மனம்

எல்லாம் ஏற்கும் மனம்
ஏடாய் எடுக்கும் மனம்

தெளிந்த மனம்
தெருவே மணக்கும் பூமனம்