காதலர் தினம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
arun03
Posts: 1
Joined: Sat May 27, 2017 12:15 pm
Cash on hand: Locked

காதலர் தினம்

Post by arun03 » Wed Feb 06, 2019 9:40 am

பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.அடிப்படையில் பார்த்தால் காதலர் தினம் ஒரு மேற்கத்திய கலாச்சார முறைதான்.மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி இன்று நம்மையும் ஆக்கிரமித்துவிட்டது. உண்மையில் இது ஒரு நல்ல கலாச்சார முறைதான். ஆனால் நம் மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டார்களோ என தோன்றுகிறது. காதலர் தினத்தின் உண்மையான அர்த்தம் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒரு நாளே. அது உங்கள் நண்பராக இருக்கலாம்; உங்கள் மனையவியாக இருக்கலாம்; உங்கள் அம்மாவாக கூட இருக்கலாம். சரி ; நம்மில் பெரும்பாலோனோருக்கு திருமணம் ஆகியிருக்கும். இன்றைய நாளில் பெரும்பாலோனோர் திருமணம் முடிந்து ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் மனைவியிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை. கேட்டால் பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் என்று கூறுவார்கள். நான் உங்களை தவறாக கூறவில்லை. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட உங்கள் மனைவி உங்களுக்கு முக்கியம். அவர்கள் உங்கள் குடும்பத்திற்காக செய்யும் வேலையை ஒப்பிடும்போது நீங்கள் சம்பளத்திற்காக பார்க்கும் வேலை ஒரு தூசு கூட பெறாது. உங்களால் அவர்களுக்காக அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றால் இந்த ஒரு நாளையாவது அவர்களின் மகிழ்ச்சிக்காக செலவிடுங்கள். காதலர் தினத்தன்று அவர்களுக்கு கட்டாயம் ஒரு surprise கிப்ட் கொடுங்கள். கிப்ட் கொடுப்பது ஒரு அற்புதமான கலாச்சார முறை. அது உங்கள் அன்பை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தும். ஆனால் துரதிஷ்டவசமாக நம் மக்கள் பிறந்த நாள், திருமண விழாக்களை தவிர மற்ற நாள்களில் பெரும்பாலும் பரிசுகள் கொடுப்பதில்லை. நீங்கள் மட்டும் உங்கள் மனைவிக்கு காதலர் தினத்தன்று ஒரு கிப்ட்டை கொடுத்து பாருங்கள் ; அப்புறம் பாருங்க அவர்கள் ரியாக்க்ஷனை.. முடிந்தவரை உங்கள் மனைவியை கோவில், park, பீச், சினிமா என்று அழைத்து செல்லுங்கள். அடலீஸ்ட் ஒரு நல்ல ஹோட்டலுக்கு டின்னராவது அழைத்து செல்லுங்கள். திருமணம் ஆகாதவர்கள் தங்கள் அம்மா, நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்து இந்த வருடம் காதலர் தினத்தை கொண்டாடலாம். உங்களுக்கு கிப்ட் செலக்ட் செய்வதில் குழப்பம் இருந்தால் நான் ஆன்லைன்ல உள்ள மிகச்சிறந்த கிப்ட்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முடிந்தால் படியுங்கள் /best-valentines-day-gifts-girlfriends-wives/
.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”