Page 1 of 1

பணமா ஆரோக்கியமா

Posted: Fri Aug 12, 2022 12:36 pm
by ஆதித்தன்
பணமா ஆரோக்கியமா என்ற கேள்வி கேட்டால், ஆரோக்கியமும் விலை உயர்ந்த பணப்பைதான். ஆகையால், அத்தோடு சேர்த்து பணம் சம்பாதித்தால்தான், சேமிப்பு நிற்கும்.

ஆரோக்கியத்தினை கோட்டையவிட்டு, சம்பாதித்தால், சம்பாதித்த தொகையை மருத்துவம் பிடிங்கிக் கொள்ளும். ஆகையால், ஆரோக்கியத்தினையும் சேர்த்தே சம்பாதிப்போம்.

தினமும் வேலை செய்வோம், உடல் நல்லக் கட்டுக்கோப்பாக இருப்பதனை உறுதி செய்வோம்.

ஒரு ஆறு மாசம்தான் கொஞ்சம் கவனத்தினை திசை திருப்பினேன்.. சின்னதா பெல்லி. அது நமக்கு ஆகாதுன்னு உடற்பயிற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

குடல் கெட்டால் உடல் கெட்டுப் போகும் என்பதனைக் கூட படித்தாலும், அனுபவம்தான் வலியச் சொல்லிக் கொடுக்குது. ஆகையால், பசிக்க சாப்பிடனும், பசிக்கு சாப்பிடணும் என்பதனை வலுவாக கடைப்பிடிக்க வேண்டும்.

பெண்ணாசை, பொன்னாசைன்னு மனசு கெட்டிருந்தாலும் ஆரோக்கியம் கெட்டுப்போகும். இருக்கிற ஆசைய வெளியத் தள்ளி மனச சுத்தமா வைச்சிக்கணும். குறிப்பிட்டு சொல்ல முடியாத விசயமாக இருந்தாலும், மனசுக்குள் தோன்றியது எல்லாம் அவன் செயல்.. அவன் மேல் பாரத்தைப் போட்டுட்டு, ஆசைகளை பிரபஞ்சத்தோடு பேசுங்கள் அது பெண்ணாசையாக இருந்தாலும் பொன்னாசையாக இருந்தாலும் நிறைவேற்ற வேண்டியது யார் கையில் இருக்கிறதோ அவர் கையில்..

வாயில் வடை சுட முடியுதோ இல்லையோ, மனசில் சுட்டால் நல்லா சுவையாக கிடைக்கும் என்பதனை ஒர் இரவு அனுபவித்துவிட்டு சொல்கிறேன், எண்ணம் வலிமையானது. ஆசைகளை மனசால் சுட்டுவிடுங்கள், பலன் கிடைக்கும்.

Re: பணமா ஆரோக்கியமா

Posted: Mon Oct 17, 2022 12:24 am
by marmayogi
:clab: :great: :thanks: :ros: