ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.
தேங்காய் எண்ணெய்
தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.
கற்றாழை
கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
ரோஜாப்பூ
ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
தேன்
தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.
கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.
கிளிசரின்
1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.
க்ரீம் மில்க் க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.
வேஸ்லின் மற்றும் தேன்
வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.
- Forex Board index Forex Online Home Business Website சக்தி இணை மருத்துவம்
-
- It is currently Tue May 21, 2024 9:26 pm
- All times are UTC+05:30
உதடு வெடிப்பதை தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..
ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
-
- Posts: 97
- Joined: Fri Oct 18, 2013 12:34 pm
- Cash on hand: Locked
Return to “சக்தி இணை மருத்துவம்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை