அணுவை உண்டு நோய் நொடியின்றி ஆயுள் 1000 வாழ்வது எப்படி?

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12051
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அணுவை உண்டு நோய் நொடியின்றி ஆயுள் 1000 வாழ்வது எப்படி?

Post by ஆதித்தன் » Mon Jun 10, 2019 10:26 am

நாம் அனைவரும் உணவு உண்கிறோம். அணு உண்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்றுச் சொல்லிவிடுவோம். ஆனால், ஒர் நபர் அணுவை உண்பதாகச் சொல்லி எனை பேரதிர்ச்சிக்கு உட்படுத்திவிட்டார். தனது ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அணு உண்பதே காரணம், என்று சொன்னார்.

அணுவை எவ்வாறு உண்ண முடியும்?
அணுவை எல்லோரும் உண்ண முடியும் அது என்னவென்று தெரிந்து கொண்டால். ஆம், நமக்கு அணு உலை தெரியும், அதில் தனிமத்தினை பிளந்து, பிளந்து, அதன் சின்னஞ்சிறு பகுதியிலிருந்து மிகப் பெரிய ஆற்றலை பெறுவது.

அணு என்பது, ஒவ்வொரு பொருளும் உருவாகுவதற்கான அடிப்படையாகிய சிறியத் துகள். பொருள் ஒவ்வொன்றினையும் கூறிட்டு சிறுகச் சிறுகக் கொண்டு சென்றால், கடைசியாகக் கிடைப்பது அணு ஆகும்.

நாம் உண்பது பொருள். அந்தப் பொருளை நன்றாக மென்று, சிறுகச் சிறுக நொறுக்கி, அணு அளவிற்கு நொறுக்கிவிட்டால் கிடைப்பதுதான் மிகப் பெரிய ஆற்றல்.

நமக்குத் தேவையான ஆற்றல் என்பது அணு அளவிற்கு செரிமானம் செய்வதில் முழுமையாகவும் அதிகமாகவும் கிடைக்கிறது.

உணவுப் பொருளிலிருந்து சத்து எனப் பிரிக்கப்படுவது எல்லாம், ஆற்றலாகச் செரிமானம் ஆனப்பின்னர்தான் சத்தாக, உடலின் 7 தாதுக்களாக மாற்றம் அடைகிறது.

அணு அளவுக்கு செரிமானம் செய்ய, அதன் செயல்பாட்டிற்கு ஏற்ற அளவு உணவினை கொஞ்சமாக கொடுத்தால் போதும். அந்த கொஞ்ச உணவு செரிமானம் ஆகி, ஆற்றலாக மாறியப்பின்னர், பசி என்ற உணர்வு உடலின் தேவையாக கேட்டப் பின்னர், அடுத்து சிறுது உண்டால் போதும்.

உடம்புக்கு சத்து ஏறுவது என்பது அதிகம் உண்பதில் இல்லை. உண்டதனை அணு அளவிற்கு உடைத்து செரிமானம் செய்வதில்தான் இருக்கிறது.

அணு அளவிற்கு உடைத்து செரிமானம் செய்தால் மலம் வருமா?

காத்துதாங்க வருது...

நல்ல உயிர்சத்து கொண்ட உணவு உண்டு சிறப்பான செரிமானம் ஆனால், கழிவு குசியாகத்தான் வெளியேறும். இல்லாத அளவுக்கு உணவினை உட்கொள்வது மகாசித்தி... காற்றினை மட்டும் உண்டால், வாய்ப்பிருக்கிறது. உண்பது கொஞ்சமாக, நல்ல தானியங்களாக, பழங்களாக இருந்தால் காற்றுக்கழிவு இருக்கலாம். உடலுக்கு தேவையற்றது அதில் இருந்தால் திடக்கழிவு உருவாகும்.

தேவையற்ற உயிர்ச்சத்தை வாங்குவதும் உணவில் கலந்து இருந்தால், திடக்கழிவும் வெளியேறும்.

தேவையே இல்லாத ஒன்றே உணவு என்று கொடுத்தால், வாந்தியாகவே வெளியேற்றிவிடும்.

உணவு கொஞ்சமாக உண்டால் போதுமானது. அது முழுமையாக, செரிமானம் ஆவது கடைசியாக சிறுநீரகத்தின் உதவிக் கொண்டும் செரிமானம் ஆகி எஞ்சிய உயிர்ச்சத்தும் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஆகையால் நல்லா சாப்பிடுறேன்னு, நேரத்துக்கு சாப்பிட்டு உடலுக்கு ஒவர் டூட்டி கொடுத்து, தூங்கவிடாமல் செய்து தன்னையே நோய்ப்படுத்திக் கொள்வது தெரியாமல், உடல் உறுப்புகளை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

தேவைக்கு அளவா, பசிக்கு பசிக்க சாப்பிடுங்கள். நல்ல செரிமானம் ஆகும், முழு ஆற்றலும் அணு அளவிற்கு பிரித்தெடுக்கப்படும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”