இரசாயன தொழிற்சாலை நடத்தும் குரு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இரசாயன தொழிற்சாலை நடத்தும் குரு

Post by ஆதித்தன் » Thu Sep 20, 2018 9:11 am

நமது உடலில் இராசயான தொழிற்சாலையாக இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு கல்லீரல் ஆகும். இதற்காக பிரபஞ்ச சக்தி வழங்கும் கிரகம் குரு.

நம் உடலுக்கு கால்சியம் வேண்டும் என்றாலும் சரி, கோளோரைடு வேண்டும் என்றாலும் சரி, தாயார் செய்வதன் மூல கர்த்தா கல்லீரல் ஆகும்.

நம் உடலுக்குள் கெட்ட கெமிக்கல் சென்றாலும் அவற்றினை உள்வாங்கி செயல் இழக்கச் செய்யும் பணியினைச் செய்வதும் கல்லீரல்தான்.

நிறைய ஆல்கஹால் குடித்தால் லிவர் கெட்டுப் போய்விடும் என்றுச் சொல்வார்கள். ஆனால் எல்லோருக்கும் கெட்டுப்போவதில்லை. காரணம் குருவின் ஆதிக்கம் அங்கே அதிகமாக இருக்கும் நபராக இருக்கலாம்.

நம் உடலில் சுரக்கும் கெமிக்கலும், வெளியில் தயாரிக்கும் கெமிக்கலும் நிறைய வேறுபாடு உள்ளது.

வெளியில் ஆராய்ச்சியாளர்கள், தாயாரிக்கும் கெமிக்கல் எதுவும் நம் உடலுக்கு ஒத்துவராது. கெமிஸ்ட்ரி படித்த நபர்கள், லேபில் பல கெமிக்கலைப் பார்த்திருப்பார்கள்.. அதே அமைப்புடன் நம் உடம்பிலும் கெமிக்கல் இருக்கும்...

லேபில் இருக்கும் கெமிக்கல் அணு அமைப்புடன், உடலில் இருக்கும் கெமிக்கல் அணு அமைப்பும் ஒன்றாக இருக்கிறது என்று ஒரே பெயரினைச் சூட்டிவிடுகிறார்கள்.

ஆனால், உண்மையில் இரண்டு கெமிக்கலும் வெவ்வேறு, நம் உடலுக்குத் தகுந்த கெமிக்கலை இன்று வரை வெளியில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது லேபில் தயாரிக்கவில்லை.. தயாரிப்பது என்பதும் ஆய்வுக்குள்ளானதே!

மாடு பச்சைப் புல்லான மக்னீசியத்தினை உண்டுவிட்டு, கால்சியம் என்றப் பாலைக் கொடுக்கிறது. இங்கு கால்சியம் கொடுத்ததால் கால்சியம் கிடைக்கவில்லை என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலுக்கு எந்த கெமிக்கல் வேண்டுமோ, அதனை உற்பத்தி செய்யும் திறனை ஆரோக்கியமான உடல் மூலம் லீவர் பெற்றுக் கொள்கிறது.

கால்சியம் மூட்டுக்கு நல்லது என்பதற்காக நாம் கால்சியத்தினை உணவாக உட்கொள்ள வேண்டியது இல்லை, நாம் நமக்கான ஆரோக்கியமான உணவினை உட்கொண்டால் போதும், லீவர் நமக்குத் தேவையான பல்வேறு கெமிக்கலை தயார் செய்து கொள்ளும், அதில் நமக்குத் தேவையானது எதுவோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் தயாரிக்கும், பின் அடுத்ததை தாயரிக்கும்.

வெளியில் தாயாரிக்கப்படும் கெமிக்கலை உடலுக்கு மாத்திரை மருந்து என்றப் பெயரில் கொடுப்பதனை எல்லாம், லீவர் தனக்கு ஒவ்வாததது என்று பிடித்து அப்புறப்படுத்தும் பணியினைத்தான் செய்கிறது... அதுவே நாளடைவில் குடிகாரனுக்கு லீவர் கெடுவதுபோல, சுகர்..பிபி நு மாத்திரை சாப்பிடுபவர்கள் குடிகாரனைப்போல் கெட்டதாகிய மாத்திரையை சாப்பிட்டு பின், குடிகாரனைப்போல் குடிச்சே ஆகணும்.... மாத்திரை சாப்பிட்டே ஆகணும் என்ற அபாய சூழலுக்குச் சென்றாலும் நோய் வளர்கிறது என்பது தெரியாமல், வருடக் கணக்கில் மாத்திரை உண்டு கொண்டிருப்பவர்கள்... மாத்திரையை சாப்பிடுவதனை விடுங்கள்... மருத்துவமனைக்கு செல்வதனை தவிருங்கள்.

இயற்கை விதிப்படி சுவாசத்தினை தன் கட்டுக் கொண்டுவந்தால் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்ற உண்மையை நம்புங்கள்.

சரியான வாழ்க்கை பழக்கத்தில் இருந்த நம் முன்னோர்களுக்கு இத்தகைய மருத்துவம் தேவைப்படவில்லை.

வாழ்க்கைமுறையில் தவறிய நமக்கே மருத்துவம் என்றப் பெயரில் சம்பாதித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்... அப்படியும் நலமில்லாமல்.. நோயாளியாக வாழ்வது எத்தனை கொடுமை என்று நினைத்துப் பாருங்கள். இதனை சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்று அழைப்பார்கள்.

நோய் என்றுக் கூறு, இலட்சம் இலட்சமாக வீணாகச் செலவழிப்பதனைக் காட்டிலும், ஒர் சில ஆயிரம் செலவு செய்து, சுவாச நாடியின் விதிகளைக் கற்றுக் கொண்டு அதன்படி செயல்பட்டால் நல்லா நோயும் குணமாகும்.

இயற்கையாக சுவாச நாடி என்பது விதிப்படி சரியாக பிறப்பு முதல் இயங்கும்.. இடையில் நம் தவறான பழக்க வழக்கங்களால் விதி மாறி, நோய்களை உண்டாக்குகிறது.

விதி என்பது நமக்கு நன்மையானதே. பிரபஞ்ச விதி நமக்கு நன்மையே அளிக்கிறது.

நாம் தவறு செய்துவிட்டு, விதி என்று தவறாக பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், இடையில் வந்தவர்கள் தங்களது சுகபோக வாழ்விற்காக, தவறான விதிகளை மக்களிடம் புகுத்திவிட்டனர்.

பிரபஞ்ச விதி என்பது, இன்றைய நாள் என்பது வியாழன். இன்றைய நாளில் இடது நாடி சூரிய உதயத்தின் பொழுது ஓட வேண்டும்... 1 மணி நேரம் தொடர்ச்சியாக இடது நாடி சுவாசம் ஓடியது என்றுச் சொன்னால் நம் பிரபஞ்ச விதிப்படி நன்மையாக ஆரோக்கியமாக இருப்போம்.


சுவாச நாடி விதிப்படி, வியாழன் என்பது பெண்ணாகவும் ஆணாகவும் மாறி இயங்கக்கூடியது என்பதனை, தன் சுவாசத்தினை ஆழ்ந்து பல வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்த சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வளரும் பொழுது பெண்ணாகவும், தேயும் பொழுது ஆணாகவும் செயல்படுகிறது குரு சுவாச நாடி.

குருவின் உயிர் சுவாச நாடியில் வியாழக்கிழமை காலை சூரிய உதயத்தின் பொழுது நன்றாக மூச்சுக் காற்றினை உள்வாங்கி கிரகித்துக் கொண்டால், குரு மின் காந்த சக்தி உடலில் அதிகரிக்கும். லீவர் ஆரோக்கியம் அடையும்.

லீவர் ஆரோக்கியம் அடைந்தால், இன்றைய சூழலில் கிடைக்கும் கலப்பட உணவுகளின் நச்சுகளை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து, நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சுவாச நாடி அறிந்த மதி, விதியை வெல்லும் வல்லது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”