இல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா?

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

இல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா?

Post by jayapriya » Sat Apr 30, 2016 11:46 am

அன்பான நண்பர்களுக்கு வணக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு உதவிகளத்தில் நண்பர் ஒருவரின் திருமணம் உதவி என்ற பதிவும் அதற்கான பின்னுாட்டங்கள் சிலவற்றை படித்தபோது எனக்குத் தோன்றிய சில வரிகளை எழுதியுள்ளேன், உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் படியுங்களேன்.

இணையம் தனில் இருகரம் கொண்டு
இலட்சம் பல பெற்றாலும்
இலட்சியம் தனை அடைந்தாலும்
இரவலும், ஈகையும் பெற
இல்லாதோர். இயலாதோர் பல இருக்க
இல்லறம் தனில் அடியெடுத்து வைக்க
இரவலாய் பணம் கேட்பதும், கொடுப்பதும் சரிதானோ?
இருமனம் இணையும் இல்லறத்தை நல்லறமாக்க
இரவல்தனை கேட்கும் இல்லானை நம்பிவரும்
இல்லாளும் இன்புற்றிருக்கக் கூடுமோ?
Last edited by jayapriya on Sat Apr 30, 2016 3:20 pm, edited 2 times in total.
வெங்கட்
Cash on hand: Locked

Re: இல்லறம் தனை அமைக்க இறவல் பணம் தேவைதானா?

Post by வெங்கட் » Sat Apr 30, 2016 1:40 pm

கவிதைநயம் நன்றாக இருந்தாலும் தனிமனித விமா்சனம் தேவைதானா?நொந்தவரை மேலும் ஏன் நோகடிப்பானேன்?

அது இவலா? இவலா?
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: இல்லறம் தனை அமைக்க இறவல் பணம் தேவைதானா?

Post by jayapriya » Sat Apr 30, 2016 3:38 pm

வெங்கட் wrote:கவிதைநயம் நன்றாக இருந்தாலும் தனிமனித விமா்சனம் தேவைதானா?நொந்தவரை மேலும் ஏன் நோகடிப்பானேன்?

அது இவலா? இவலா?

இது தனிமனித விமர்சனம் கிடையாது. என்னைப் பொருத்தவரை படுகை தளம் என்பது மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் தளம் இதுபோன்ற தளத்தில் பதிவிடவேண்டும் என்பதற்காக எதையாவது பதிவிடுவதும். அதற்கு பின்னுாட்டமிடவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை பின்னுாட்டமிடுவதையும் படிக்கும்போது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அதற்காகத்தான் இதை எழுதினேன், தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திகொள்கிறேன்.

இறவலை இரவலாக மாற்றியுள்ளேன். சுட்டிகாட்டியதற்கு நன்றி
Post Reply

Return to “கவிதை ஓடை”