Genuine FREE WEB HOSTING SITE WITHOUT ADVERTISEMENT

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Genuine FREE WEB HOSTING SITE WITHOUT ADVERTISEMENT

Post by ஆதித்தன் » Sat Apr 28, 2012 11:44 pm

Publishing our Domain Website On Blogspot Free Hosting

சொந்த டொமைனில் வலைப்பூ இணையதளம் அமைத்தல்


ஒர் Domain -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கிப் பயன்படுத்தினாலும், அதனை ஒர் இணையதளமாக வெளியிட்டால்தான் பயன். அதற்கு Webhosting இடத்தினை வாங்க வேண்டும். அப்பொழுதுதான், நம் தளத்தில் இணைக்கும் Data-க்களை நாம் படிக்கும் வகையிலான டேட்டாக்களாக http (Hyper Text Transfer Protocol) பகிர்வு முறையில் நம் Domain-ஐ http://padugai.com அல்லது http://www.padugai.com எனப் பயன்படுத்தி ஒர் இணையதளமாக பார்வையிட முடியும். Web Hosting Server place service ஐ பல பல தளங்கள் கொடுத்தாலும் இலவசமாக, அதுவும் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் இலவசமாக நமக்கு கோஸ்டிங்க் சர்வீஸ் வழங்குவது கூகுள் ப்ளாக்கர். அதுமட்டும் இல்லாமல், நம்மை விளம்பரத்தினை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் Google Adsense மூலம் வழிவகைச் செய்து கொடுக்கின்றனர். மேலும், Data Base Storage, Website Template, Version Updates, New Applications & more என நம் வெப்சைட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களே பராமரித்துக் கொள்வதும், புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதும் நமக்குக் கூடுதல் பாதுகாப்பானதும் சிறப்பானதும் கூட.
Image
கூகுள் ப்ளாக்கர் சப்போர்ட் பகுதியில், நமது Custom Domain-ஐ ப்ளாக்கர் ப்ளாக்குடன் இணைப்பது/பயன்படுத்துவது எப்படி? என்பதனை http://support.google.com/blogger/bin/s ... page=ts.cs" onclick="window.open(this.href);return false; என்ற முகவரியில் கூகுள் பக்கத்தில் கொடுக்கப்பட்டதைத்தான் மேல் உள்ள படத்தில் காட்டியுள்ளேன். அதில் கடைசியாக CName என்ற முறையில் Host Name ஆக கூகுளின் ghs.google.com என்பதனை இணைத்துக் கொள்வதன் மூலம் நம் கஸ்டம் டொமைனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் உங்கள் ப்ளாக்கர் ப்ளாக்கை www.padugai.in என்ற முகவரியோ அல்லது blog.padugai.in என்ற முகவரியோ அல்லது விரும்பிய வேறு பெயரிலோ, CNAME recordஆக கூகுளின் Host Name ஆன ghs.google.com என்பதனை இணைத்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.

CNAME Record உருவாக்குவது எப்படி என்பதனை மேல் உள்ள பதிவில் கொடுத்திருக்கிறேன், ஆகையால் அதனைப் பார்த்து படித்து செய்து கொள்ளுங்கள். அதனை செய்துவிட்டு, உங்களது blogger.com கணக்கிற்குள் வாருங்கள். Blogger.com-ல் ஏற்கனவே ஒர் வலைப்பூ உருவாக்கவில்லை எனில், புதியதாக உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்து www.blogger.com/home என்ற முகவரிக்குள் சென்று லாக்கின் ஆகுங்கள்.
Image
www.blogger.com/home -ல் லாக்கின் ஆகியதும் முகப்புப் பக்கத்தில் உங்களது வலைப்பூத் தலைப்புகள் அனைத்தும் காண்பிக்கப்படுவதில், எந்த வலைப்பூவின் முகவரியை கஸ்டம் டொமைன் பெயருக்கு மாற்ற இருக்கிறோமோ அந்த ப்ளாக்கின் டைட்டில் மீது ஒர் கிளிக் செய்யுங்கள்.
Image
குறிப்பிட்ட வலைப்பூவின் பெயரினைக் கிளிக் செய்ததும் திறக்கும் பக்கத்தில் மேல் உள்ள படத்தில் காட்டியபடி இடப்பக்கம் உள்ள Blog Control Menu-வில் கடைசியாக Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். தற்பொழுது வலப்பக்கத்தில் காட்டியதுபோல், publishing blog address என்ற ஆப்சனுக்குக் அருகில் + Add a Custom Domain என இருக்கிறது அல்லவா! அதன் மீது ஒர் கிளிக் செய்யுங்கள்.
Image
+ Add a Custom Domain என்பதனைக் கிளிக் செய்தவுடன் திறக்கும் option - தான் மேல் உள்ள படம். அதில் Already have own domain? Switch to Advanced settings என்பதன் மீது ஒர் கிளிக் செய்யுங்கள்.
Image
Switch to Advanced settings என்பதனைக் கிளிக் செய்தவுடன் திறக்கும் ஆப்சனுக்குள், நீங்கள் ஏற்கனவே Cname கொடுத்துவைத்த Domain அல்லது Sub-Domain பெயரைக் கொடுத்துவிட்டு, Save என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள், அவ்ளதான். அடுத்த சில மணி நேரங்களில் உங்களது வலைப்பூ, நம் சொந்த டொமைன் முகவரியில் இயங்க ஆரம்பித்துவிடும்.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூ வைத்திருந்தால், ஒவ்வொன்றிற்கும் Sub-Domain உருவாக்கி இவ்வாறு இணைத்துக் கொள்ளலாம். அதாவது, onlinejob.padugai.in , blog.padugai.com , Surveyjob.padugai.in போன்று பல பெயர்களில் CNAME Record உருவாக்கிவிட்டு, அதனை நம் ப்ளாக்கர் வலைப்பூவுடன் இணைத்துக் கொள்ளலாம்.

ஒர் டொமைன் ரிஜிஸ்டர் செய்வது முதல் அதனை இணையதளமாகப் பயன்படுத்துவது வரைக்கும் சொல்லிக் கொடுத்திட்டேன். அப்புறம் என்ன? இப்பவே ஒர் டொமைனை ரிஜிஸ்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

டாட் இன் டொமைன் என்றால் முதல் வருடத்திற்கு ரூ.100/- மட்டுமே!

:thanks:
Post Reply

Return to “உதவிக் களம்”