வெங்கட் wrote:திரு.அருண் ஸ்டெபி அவர்கள் பக்கம் தான் நான் நிற்பேன். (அதற்காக மற்றவர்கள் எல்லாம் தவறு என்று கூறமாட்டேன்.)
மலை ஏறுவது சாதனை என்று அவர் கூறுகிறார். இல்லை, அங்கே தடை அதிகம், கீழே விழுந்து விடலாம், சமவெளியில் நடப்பதே பாதுகாப்பு என்று பிறர் கூறுகின்றனர்.
மற்றவர்கள் கூறுவது உண்மை என்றாலும், பயந்துகொண்டே இருந்தால் சாதனை ஏது? ஓரளவு ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் ரிஸ்க் என்று தெரிந்து இறங்கிய பிறகு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு அடுத்தவரை குற்றம் சொல்லக் கூடாது.
நன்றி சார்,
எதையும் நன்கு புரிந்து செய்தால் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்.
எதிலும் சில tricks செய்வதன் மூலமாக எளிதாக லாபம் பார்க்க முடியும்.
ஒரு உண்மை சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். 5 வருஷம் முன்பு நான் வெளிநாடு போறதுக்காக வீட்ல வெயிட் பண்ணிட்டிருந்த நேரம் வெறும் 3500 கட்டி ஒரு health பாலிசி எடுத்தால் 1 வருடத்தில் 3 லட்சத்துக்கான க்ளைம் பண்ண வாய்ப்பு இருப்பதாகவும் மற்றும் இதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்று சொல்லி என் வீடு தேடி வந்தான் ஒரு நண்பன்.
வீடு தேடி வந்த மட்டும் நான் ஒரு பாலிசி எடுக்குறேன் ஆனா சம்பாதிக்க வர ஐடியா இல்லன்னு சொல்லி பாலிசி போட்டேன்.
என் வீடு தேடி வந்தவனுக்கு வேறு பாலிசி கெடைக்கல போல இருக்கு ஆளே காணாம போய்ட்டான். அவனுக்கு ட்ரைனிங் கொடுத்தவங்க என்ன businessla இழுத்து விட்டாங்க.
சொந்த காரங்க தெரிஞ்சவங்க அவங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு
ரெண்டு சைடும் கிழை (branch) ஜெட் வேகத்துல வளர்ந்து மூணே மாசத்துல கிராஸ் வருமானம் 25,000 மேல போச்சு.
ஆனா அதுக்கும் மேல என்னால earn பண்ண முடியல ஏனா மூணாவது பார்ட்டி ஆளுங்களுக்கு இது பத்தின தெளிவான புரிதல் இல்ல. அவங்களாம் வைரஸ் ஆகி சம்பாதிக்க வரல.
சோ என்னோட வருமானம் அதோட நின்னிடுச்சு.
யாருமே எதையும் நன்கு புரிந்து செய்தால் மற்றுமே வெற்றி லாபம் பார்க்க முடியும். நன்றி.