டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா?

ஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா?

Post by ஆதித்தன் » Sun Jun 07, 2015 9:31 pm

Image


டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகம் பலருக்கு வேலை வாய்ப்பினைக் கொடுத்துள்ளதோடு, பல மில்லியன் கோடி புழங்கும் ஒர் பெரிய தொழில் ஆகிவிட்டது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்ன, அதனைச் செய்ய என்னென்ன தேவை, அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம், நிகழ்கால மற்றும் எதிர்கால வரவேற்பு எப்படி? .. இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் பிசினஸ் செய்ய என்னத் தெரிந்திருக்க வேண்டும் எப்படி எல்லாம் செய்யலாம் என்று கொஞ்சம் விளக்கமாகவும்... இக்கேள்விகள் உள்ளவர்கள் படித்தவுடனே புரிந்து செயல்படும் விதத்தில் உங்களது கட்டுரையை 60 வரிகளுக்கும் மேல் எழுதுபவர்களுக்கு, பரிசாக 0.50$ வழங்கப்படும்... கோல்டன் மெம்பர் என்றால் 1.50$ வழங்கப்படும்.

உங்களிடம் கேள்விகளே உள்ளது பதில்கள் இல்லை என்றுச் சொன்னால்.. அந்தக் கேள்விகளையும் தெளிவாக, அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதற்கான விளக்கம் என்று 70 வரிகளுக்கு மேல் விவரமாக எழுதுபவர்க்கும் பரிசு வழங்கப்படும்.

கட்டுரை ஒர் தொடர் அமைப்பாக படிப்பதற்கு அர்த்தத்துடன் விளங்க வேண்டும்.

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஏனோ தானோ என்று இருந்தால் நிராகரிக்கப்படலாம்.. அவ்வாறு நிராகரிக்கப்படும் கட்டுரையாளர்கள் மீண்டும் சரிபடுத்தி எழுதலாம்.


கட்டுரையின் அடியில் Perfect Money $ ID கொடுத்திடவும்... கட்டுரை ஏற்கப்படின் உடனடியாக டாலர் அனுப்பப்படும்
வாய்ப்பு மூடப்பட்டது
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by கிருஷ்ணன் » Mon Jun 08, 2015 10:34 pm

MARKETING என்றாலே சந்தைப்படுத்துதல் என்பது அனைவருக்கும் தெரிந்துதான்.

DIGITAL MARKETING என்றால் என்ன என்று கேட்டால் அதுவும் ஏதோ ஆன்லைன் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்துதல் என்பதும் உங்களுக்குள் ஃப்ளாஷ் ஆகியிருக்கும்.

சரி..இதனை எப்படிச் செய்கிறார்கள்?இதனால் யாருக்கு இலாபம்?இதற்கு என்ன தகுதி வேண்டும்?இதில் எவ்வளவு முதலீடு வேண்டும்?எவ்வளவு சம்பாதிக்கலாம்? இதுதான் இங்குள்ள கேள்விகள்?

இவற்றில் எனக்குத் தெரிந்த சில வரிகள்.. ..

DIGITAL MARKETING என்றால் என்ன ?
Image
நடைமுறை வாழ்க்கையில் பல நிறுவன ஏஜென்ட்களும் பல்வேறு விதமான மார்க்கெட்டிங் முறைகளைக் கையாண்டு தங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.அதற்காக அவர்கள் பல விளம்பர யுக்திகளைக் கையாளுவதும் நமக்குத் தெரிந்ததுதான்.

அதே விளம்பர யுக்திகளைக் கையாள டிஜிட்டல் மீடியாக்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக மாறிவிட்ட‌ இணையத்தில் சந்தைப்படுத்தும் இந்த விளம்பர நடைமுறைகள்தான் டிஜிட்டல் மார்கெட்டிங் என்பதாகும்.



இதன் மூலம் இவர்கள் தங்கள் நிறுவனத்தின் சிறப்புகள்,நிறுவனப் பொருட்களின் தரம்,விலை,தள்ளுபடி எல்லாவற்றினையும் வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இடைத்தர இணையதளங்களை நாடுகிறார்கள்.

இந்த வலைத்தளங்கள் இவர்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.இதனால் இருதரப்பினைரும் பலனடைய முடியும்.

நடைமுறைச் சந்தைப்படுத்துதலைவிட எளிதானதாகவும்,மலிவானதாகவும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஓர் சிற‌ந்த வழிமுறையாக மாறிவிட்டது.

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் சில வகைகள்.

1. DISPLAY(BANNER) ADVERTISING

அனேகமாக எல்லா வலைத்தலங்களிலும் இந்த பேனர் விளம்பர முறைகளைப் (GOOGLE ADSENSE,CHITIKA)பார்த்து இருப்பீர்கள்.

இவற்றில் முக்கியமானது GOOGLE ADSENSE.

பல தளங்களும்,வலைப் பூக்களும் இதற்கான அப்ரூவல் பெறுவதற்காக தங்கள் வலைத்தளங்களுக்கு பார்வையாளர்களைக் கொண்டு வர போட்டி போட்டு கவரும் விதத்தில் பலவிதமான கட்டுரைகள்,செய்திகளை வெளியிட்டு பிரபலபடுத்த முயல்கின்றனர்.

ஆனாலும் வரும் வாடிக்கையாளர்கள் இயற்கையான முறையில் வரவழைக்கப்பட வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை விதித்தே இவர்களுக்கு அப்ரூவல் வழங்குகிறது.

2. SOCIAL MEDIA MARKETING (SMM)

சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.

இதற்காக FACEBOOK,TWITTER,YOUTUBEபோன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் நிறுவன வலைத்தளங்களை பிரபலப்படுத்த பல இடைத்தரக இணையதளங்களை நாடுகின்றன.

இவை இலவசமாகவும்,பணம் வழங்கியும் சந்தைப்படுத்த முயற்சிக்கின்றன.

உதாரணமாக நாம் ஆன்லைன் ஜாப்பில் கூட பல தளங்களில் ஃபேஸ்புக்கில் லைக் போட்டு (ADDMEFAST,LIKE4LIKE)சம்பாதித்து வருகிறோம்.இப்படி பார்வையாளர்களுக்கு பணம் வழங்குவதன் மூலம் இயற்கையாகவோ,செயற்கையாகவோ விளம்பரங்களை அவர்களைச் சென்றடைய வைக்கின்றன இந்த தளங்கள்.

3. SEARCH ENGINE OPTIMIZATION (SEO)

எந்த தேவையாக இருந்தாலும் இன்று அனைவரும் உடனடியாக சில வார்த்தைகளை டைப் செய்து தேடுவது GOOGLE,BING,YAHOOபோன்ற தேடு பொறிகளில்தான்.

அப்படி அவர்கள் தேடும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு விளம்பரங்களை முன்னிறுத்தும் மற்றொரு முறைதான் இந்த SEO.

இதற்காக பலவிதமான தேடு வார்த்தை (KEY WORDS)ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் "SAREE" எனத் தேடினால் அதற்கான தயாரிப்பு நிறுவன விளம்பரங்கள் (FLIPKART,AMAZON)முன்னிலையில் டிஸ்ப்ளே ஆவதற்காக பலதரப்பட்ட KEY WORDS களை உருவாக்கி இந்த இணையதளங்கள் செயல்படுகின்றன. அந்த தளங்களின் ட்ராஃபிக் (பார்வையாளர்களின் எண்ணிக்கை)சம்பந்தப்பட்ட பொருட்கள்,கருத்துக்கள்,பாப்புலாரிட்டி ஆகியவற்றினைப் பொறுத்தே இவை முன்னிலையில் தோன்றுகின்றன.

4. EMAIL MARKETING

பலருக்கும் பல்க் மெயில்களை அனுப்பி அதனை அவர்களைச் சென்றடைய வைக்கும் ம‌ற்றுமொரு முறைதான் இந்த EMAIL MARKETING.

சில தளங்கள் மெயில்களைப் படிப்பதற்கு பணமும் வழங்கி பார்வையாளர்களை ஊக்குவிக்கின்றன.

5. PAY PER CLICK.(PPC)

விளம்பரங்களைப் பார்ப்பதற்கு நேரடியாக பார்வையாளர்களுக்கு பணம் வழங்கியாவது அவர்களிடம் விளம்பரத்தினை,விற்பனைப் பொருட்களைக் கொண்டு சென்றடையச் செய்வதுதான் இந்த PAY PER CLICKமுறை.இதற்காக பல PTC (PAID TO CLICK)தளங்களும், GPT (GET PAID TO)தளங்களும் செயல்பட்டு வருவது நாம அறிந்த முறையே.இதன் மூலம் தங்கள் விற்பனைப் பொருட்களின் விவரங்கள் பார்வையாளர்களை உறுதியாகச் சென்றைடைந்துவிடும் என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு ஏற்படுகின்றன.


6. PAY PER DOWNLOAD.(PPD)

இதுவும் PAY PER CLICK போன்று விளம்பர வீடியோக்கள் மற்றும் MOBILE APPLICATIONகளை டவுன்லோட் செய்ய வைப்பதற்காக பணம் வழ‌ங்கி பார்வையாளர்களைச் சென்றடைய வைக்கும் ஓர் முறைதான். உடனடிப் பலன்களை இந்த முறைகள் (INSTANT FEEDBACK)அளிக்கின்றன.

7. CONTENT MARKETING

எந்தவிதமான உள்ளடக்கங்களை (CONTENT),தகவல்களை பயனுள்ள தகவல்களை தங்கள் தளங்களில் முன்வைத்தால் தங்கள் பொருட்களுக்கான விளம்பரங்களை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லலாம் என்பதே இங்கு மிக முக்கியமாகச் செயல்படுகிறது.(CONTENT IS KING).

8 .AFFILIATE MARKETING

நேரடியாக பார்வையாளர்களைக் கொண்டு வருபவர்களுக்கு ஊக்கத் தொகை வழ‌ங்குவதன் மூலம் உண்மையான பார்வையாளர்களைக் கொண்டுவரும் முறைதான இந்த AFFILIATE MARKETING.

நிறுவனங்களுக்கு நேரடிப்பலன்களை கொடுக்கும் முறை இது.

இதில் பார்வையாளர்கள் தங்கள் பரிந்துரைகள்,ரிவியூ(REVIEW),ARTICLE,FORUM WRITING ஆகியவற்றின் மூலம் மற்ற பார்வையாளர்களை அந்த நிறுவன தளங்களுக்கு கொண்டு வருவதோடு அவர்கள் மூலம் விற்பனையாகும் பொருட்களுக்குண்டான கமிஷனையும் பெறுகின்றனர்.
----------------------------------

இப்படி பல வழிமுறைகளை இந்த நிறுவனங்கள் கையாளுவதோடு தாங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்காக செலவழித்த முதலீட்டின் மேல் வரும் வருமானம் (RETURN ON INVESTMENT),எந்த வழிமுறைகள் அதிகமாக பலனைக் கொடுக்கின்றன என்பதையும் பல வழிமுறைகள்( GOOGLE ANALYTIC,WEB MASTER TOOLS) மூலம் ஆராய்ந்தே அடுத்த கட்ட சந்தைப்படுத்தலில் ஈடுபடுகின்றன.


இந்த முறைகள் மூலம் யார் வேண்டுமானாலும் பணமீட்டலாம்.

தேவை சரியான வலைப் பூக்கள்,வலைத்தளங்கள்,வெப் டிசைன்,டொமைன்,எந்த பொருட்களை மார்கெட்டிங்க் செய்ய விரும்புகிறீகளோ அதற்கேற்ற உள்ளடக்கங்கள் என பல விஷயங்களில் கவனமாக இருந்தால் அதிகமான பார்வையாளர்களை (ட்ராஃபிக்)கொண்டு வருவதன் மூலம் எளிதாக டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ஜெயிக்கலாம்.

நிகழ்காலத்தில் பல மில்லியன் டாலர்களில் புரளும் இந்த தொழிலில் குறைந்த முதலீட்டிலேயே உங்கள் திறமையினை மட்டுமே அதிக மூலதனமாகக் கொண்டு நீங்களும் நிறையச் சம்பாதிக்கலாம்.
வாழ்த்துக்கள்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by சாந்தி » Tue Jun 09, 2015 11:00 am

Image

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருளை பற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்வது...
பொருளை விற்பனை செய்வது அல்ல..

சாதாரணமாக ஒரு பொருளை விற்பனை செய்ய முக்கியமானது விளம்பரம்...எந்த பொருளை நாம் விற்பனை
செய்ய முடிவு செய்திருக்கிறோமோ அந்த பொருளைப் பற்றி எப்படி விளம்பரம் செய்தால் மக்களைச் சென்றடையும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்..அது ஒரு வீடியோவாக..ஒரு பேனராக இருக்கலாம்... ஆனால் மக்களை கவரும் வகையிலும் அதைப் பற்றிய எல்லா விபரங்களையும் புரியும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்...முன்பெல்லாம் வானொலியிலும் சுவரொட்டியிலும் விளம்பரப்படுத்தினார்கள்..இப்பொழுது அறிவியல் முன்னேற்றம் அடைந்ததால் கணிணி (ஆன்லைனில்) மூலம் விளம்பரம் செய்கிறார்கள்... இந்த முறையில் விளம்பரப்படுத்துவதால் லட்சக் கணக்கான மக்கள் அந்த விளம்பரத்தை பார்த்து பயனடைகிறார்கள்..அந்த பொருளை பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டு பொருளை வாங்க முடிவெடுக்கிறார்கள்..மேலும் ஒப்பிட்டு பார்க்கவும் உதவுகிறது..இதைத்தான் டிஜிட்டல் மார்கெட்டிங் ஆகும்..

Image

டிஜிட்டல் மார்கெட்டிங் செய்யும் வழிகள்:-

1. கூகிள் அட்சன்ஸ்:-[Search Engine Optimization (SEO)]
நாம் நிறைய இணையதளங்களில் வேலை செய்யும் போது Ads by Google என்று வரும்...அதுதான் கூகிள் அட்சென்ஸ் என்பது... விளம்பரம் செய்ய முதல் இடத்தில் வகிப்பது கூகிள் அட்சென்ஸ் தான்......கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது... நாம் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற தமிழ் நாளிதழ்களையும் Hindu, Times of India போன்ற ஆங்கில நாளிதழ்களையும் தினமும் படிக்கிறோம் அல்லவா? அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம்..இது எதற்காக என்று யோசித்தது உண்டா? நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும்,எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதறகாகத்தான் நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம். ஆனால் இந்த முறையில் மிகச் சிலரே பார்க்க முடியும்.. ஆனால் இதையே ஆன்லைனில் விளம்பரம் செய்தால் லட்சக்கணகானவர்கள் பார்த்து பயனடைவார்கள்..
பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட பொருளின் விபரங்களைப் பார்க்க Google,Yahoo,Bing.com முதலிய search engines மூலம் தேடுவார்கள்...அது பற்றி சரியான தகவல் தெரிய வேண்டுமென்றால் அந்த பொருளுக்கு தகுந்தாற் போல் key word கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்...அப்பொழுதுதான் அது பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை சென்றடையும்..

2. Social Media Optimization (Facebook, Twitter,Google+,Pin interest,youtube)
ஆன்லைனில் பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் இடமான (Forum Discussion) Facebook, Twitter,Google+,pin interest போன்றவைகளில்
பலதரப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் செய்வது...

3. Affiliate Marketing
ஒரு நிறுவனத்துடன் இணந்து அந்த நிறுவனம் ஆன்லைனில் கொடுத்திருக்கும் விளம்பரத்தினை நம்முடைய பிளாக்கில்
அல்லது வேறு இணைய தளத்தில் பதிவிடுவது....அதைப் பற்றிய content-களை சிறப்பாக மக்களை கவரும் வண்ணம்
எழுதுவது...அந்த விளம்பரத்தினை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதற்குரிய commission நமக்கு கொடுத்துவிடுவார்கள்..

4. Pay Per Click
தற்பொழுது நிறைய இணயதளங்கள் அவர்கள் வெளியிடும் விளம்பரங்களை கிளிக் செய்தால் நமக்கு commission கொடுத்துவிடுவார்கள்..

5. Email advertisement
பெரும்பான்மையான நிறுவனங்கள் நம்முடைய mail idக்கு அவர்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்த mail
அனுப்புவார்கள்.. அதனை படிப்பதற்கு பணம் தருவார்கள்...

தற்பொழுது டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம் விளம்பரம் செய்வது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு
வெற்றியாகவே இருக்கிறது...வாடிக்கயாளர்களுக்கும் எங்கும் அலைந்து திரியாமல் உட்கார்ந்த
இடத்திலேயே ஒரு பொருளை பற்றிய அனைத்தும் அறிய முடிகிறது...

இன்னும் வரும் காலங்களில் Digital Marketingக்கு வேலை செய்ய நிறைய பேர் தேவைப்படுவார்கள்...
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இருக்காது..
Digital Marketing என்பது எல்லோராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை...
திறமை இருப்பவர்கள் இந்த துறையில் நிறைய சாதிக்கலாம்...
Last edited by சாந்தி on Wed Jun 10, 2015 3:40 pm, edited 2 times in total.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by ElaMech » Tue Jun 09, 2015 11:40 am

What is Digital Marketing?

நுகர்வோர் அடைய டிஜிட்டல் சேனல்களை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகள் சந்தைப்படுத்தல் . பிரதான நோக்கமாகும் டிஜிட்டல் மீடியா பல்வேறு வடிவங்களில் மூலம் பிராண்ட்கள் ஊக்குவிப்பது ஆகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் இணைய பயன்பாடு தேவையில்லை என்று தடங்கள் அடங்கும் இணைய மார்க்கெட்டிங் விரிவுபடுத்தியுள்ளது.

Image

Digital Marketing includes:

Internet marketing techniques, such as search engine optimization (SEO), search engine marketing (SEM) and link building. It also extends to non-Internet channels that provide digital media, such as mobile phones (both SMS and MMS), callback and on-hold mobile ring tones, social media marketing, display advertising, e–books, optical disks and games, and any other form of digital media


1. Segmentation:

மேலும் கவனம் நுகர்வோர் துறைகளுக்கு வணிக மற்றும் வர்த்தக இரு வணிக குறிப்பிட்ட சந்தைகளில் இலக்கு வைப்பதற்கு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ள பல பிரிவுகளுக்கு வைக்கப்பட்டார்.
Image

2. Influencer Marketing:

முக்கிய முனைகளில், செல்வாக்கு என அழைக்கப்படும் சமூகங்கள், கண்டறியப்படுகிறது. இந்த டிஜிட்டல் இலக்கு ஒரு முக்கிய கருத்தாக்கமாக வருகிறது. இது போன்ற, SAP C4C, மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ், பிருகு CRM மற்றும் விற்பனைக்குழு சிஆர்எம் போன்ற பேஸ்புக் விளம்பர அல்லது Google AdWords விளம்பரங்களைப், அல்லது அதிநவீன sCRM (சமூக வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) மென்பொருள் மூலம் பணம் விளம்பர வழியாக, செல்வாக்கு, அடைய முடியும். பல பல்கலைக்கழகங்கள் இப்போது, செல்வாக்கு ஈடுபடும் உத்திகளை, முதுநிலை அளவில், கவனம்
Image

3. Online Behavioural Advertising:

ஆன்லைன் நடத்தை விளம்பரம், பயனரின் நலன்கள் மற்றும் விருப்பங்களை [ஏற்ப விளம்பரங்களை வழங்க பொருட்டு, ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் வேறுபட்ட, தொடர்பில்லாத வலைத்தளங்களில் ", காலப்போக்கில் ஒரு பயனர் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரித்து சாகுபடியாகும் ]
Image

4. Collaborative Environment:

ஒரு கூட்டு சூழலில் அமைப்பு, தொழில்நுட்ப சேவை வழங்கும், மற்றும் முயற்சி மேம்படுத்த டிஜிட்டல் ஏஜன்சிகள், வள பகிர்வு, மீண்டும் பயன்படுத்தவும் மற்றும் தகவல் தொடர்புகள் அமைக்க முடியும்
Image

What Is SEO?

SEO stands for “search engine optimization.” It is the process of getting traffic from the “free,” “organic,” “editorial” or “natural” search results on search engines.
Image

What Is Search Marketing?

Search marketing is the process of gaining traffic and visibility from search engines through both paid and unpaid efforts.
Image

My perfectmoney : U9178647
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by ஆதித்தன் » Tue Jun 09, 2015 12:31 pm

கிருஷ்ணன் wrote: சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
-----------

--------
எந்த தேவையாக இருந்தாலும் இன்று அனைவரும் உடனடியாக சில வார்த்தைகளை டைப் செய்து தேடுவது GOOGLE,BING,YAHOOபோன்ற தேடு பொறிகளில்தான்.
dollar released .. :ro:


============================================================
சாந்தி wrote:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருளை பற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்வது...
பொருளை விற்பனை செய்வது அல்ல..
நச்சுன்னு இருக்கு ... ஆனால் போதிய வரிகளுக்கு கொடுக்க வேண்டிய விளக்கம் எவ்வளவோ இருக்க, இல்லாததால் .. மீண்டும் விரிவாக எழுதவும்..

=====================================
ElaMech wrote:2. Influencer Marketing:

முக்கிய முனைகளில், செல்வாக்கு என அழைக்கப்படும் சமூகங்கள், கண்டறியப்படுகிறது. இந்த டிஜிட்டல் இலக்கு ஒரு முக்கிய கருத்தாக்கமாக வருகிறது. இது போன்ற, SAP C4C, மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ், பிருகு CRM மற்றும் விற்பனைக்குழு சிஆர்எம் போன்ற பேஸ்புக் விளம்பர அல்லது Google AdWords விளம்பரங்களைப், அல்லது அதிநவீன sCRM (சமூக வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) மென்பொருள் மூலம் பணம் விளம்பர வழியாக, செல்வாக்கு, அடைய முடியும். பல பல்கலைக்கழகங்கள் இப்போது, செல்வாக்கு ஈடுபடும் உத்திகளை, முதுநிலை அளவில், கவனம்
கூகுள் ட்ரான்ஸ்லேட் போட்டு காப்பி பேஸ்ட் பண்ணீங்களா, பாஸ்?

கொஞ்சம் புரிந்து நீங்களாகவே எழுத ஆரம்பியுங்கள்... புக்கில் என்ன இருக்குதோ அதுதான் அன்ஸ்வர் என்பதல்ல புரிதல்...

ரஜினிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருக்கிறது என்று அவரது வாய்ஸினை வாங்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கிறதே .. அதுவும் influence marketing தத்துவம் தான். இப்படி நாமே இடத்திற்கு இடம் படித்ததை சரியாக பயன்படுத்துவதற்கு பெயர் தான் புரிதல்.


மீண்டும் அர்த்தத்துடன் சொற்றொடராக எழுதுங்கள்... எதுவும் முழுமையான வரியாக தென்படவில்லை...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by கிருஷ்ணன் » Tue Jun 09, 2015 2:37 pm

ஆதித்தன் wrote:
கிருஷ்ணன் wrote: சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
-----------

--------
எந்த தேவையாக இருந்தாலும் இன்று அனைவரும் உடனடியாக சில வார்த்தைகளை டைப் செய்து தேடுவது GOOGLE,BING,YAHOOபோன்ற தேடு பொறிகளில்தான்.
dollar released .. :ro:


============================================================
Received .Thank You Sir..!! :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by ஆதித்தன் » Thu Jun 11, 2015 9:19 pm

சாந்தி wrote:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருளை பற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்வது...
பொருளை விற்பனை செய்வது அல்ல...

ஊக்கத்தொகை அனுப்பப்பட்டுவிட்டது... :ros:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா? - 1.50$

Post by சாந்தி » Fri Jun 12, 2015 3:42 pm

Amount received..
Thanks a lot Sir..
:thanks:
Locked

Return to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”