பிட்காயின் என்றாலே ... இலட்சம் இலட்சமா பணம் சம்பாதிக்கலாம் என்பது தான் ஆரம்பத்திலிருந்தே எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள், அதன்படியே பல இலட்சங்களை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பல இலட்சங்களை பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் ஏராளம் பேர்.
நீங்களும் பிட்காயினில் கண்டிப்பாக முதலீடு செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் நமது படுகை இணையதளம் 2013 ஆம் ஆண்டிலிருந்தே பிட்காயின் பற்றி பேசி வருவதோடு, பலரும் எவ்வாறு பிட்காயினை இலவசமாக சம்பாதிக்கலாம் என்பதனை விவரமாக சொல்லிக்கொடுத்த தளம்.
இலவச பிட்காயின் மூலம் பலர் இலட்சதிபதி ஆகிவிட்டார்கள், சிலர் மல்ட்டி மில்லினியர்கள் ஆகிவிட்டார்கள். சிலர் டிரில்லியன் டிரில்லியன் என பெரும் பணக்காரர் ஆகிவிட்டார்கள். பல ஏழையர்களை பணக்காரர் ஆக்கிய பிட்காயினை மறந்திட முடியுமா? அல்லது அதன் வளர்ச்சியினைத்தான் தடுத்திட முடியுமா என்ன?
தன்னை வளர்த்த பிட்காயினுக்காக ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த சிறு உதவியினைச் செய்தால் கூட, அதன் வளர்ச்சி என்பது என்றும் நிரந்தரமாக இருக்கும் என்பது உண்மை. அந்த வகையில், நானும் என்னால் முடிந்த சிறிய முதலீட்டினை எப்பொழுதும் அதில் வைத்திருக்கிறேன் என்பது உண்மை. பணம் சம்பாதிக்கத்தான் வாங்கினேன், எனக்கு இலாபம் கிடைத்துவிட்டது என்று, அத்தனை பிட்காயினையும் பணமாக மாற்றாமல், கொஞ்ச பிட்காயினை அப்படியே அங்கு விட்டுவிடுவது எனது வழக்கம். இவ்வாறு பல காயின் வாலட்களில், அப்படியே விட்டு, அப்படியே போய்விடும். அதற்காக கவலைப்படுவதும் இல்லை.
வரலாறு என்பது புதிய வரும் காலத்திற்கு உதவுவதாக இருக்கும். விட்டுவிடுவது என்பது எனக்கு நல்லதையே கொடுத்திருப்பதால், இன்றும் அது தொடர்கிறது. அங்கங்கு அப்படியே விட்டுவிடுவது. ஒர் சிலர், இதோ தருகிறேன் என்று வாங்கியதனைக்கூட அப்படியே விட்டுத்தான் வைத்திருக்கிறேன், கேட்கவில்லை. கண்டிப்பாக எதிர்காலம் கொண்டுவந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை. அது தன்னம்பிக்கையாக உயர்ந்திருக்கிறது என்பதுதான் வலு. ஏனெனில் பிறர் மீது நம்பிக்கை வைக்காதீர்கள், பிறர் மீது நம்பிக்கை வைக்காதீர்கள் என பலமுறை கூறியிருக்கிறேன். அந்த வகையில், கொடுத்ததை சொன்னபடி திரும்ப கொடுக்கவில்லை என்பதும், ஒர் நம்பிக்கைக்கு விழுந்த அடிதான். ஆகையால்தான் மீண்டும் சொல்கிறேன், பிறர் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். உங்களிடம் இருப்பதனை, உங்களுக்கு தேவையானதை, இதோ திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதனை நம்பி, அவர் மீது நம்பிக்கை வைத்து ஒருபோதும் எதனையும் கொடுத்துவிடாதீர்கள். கொடுக்காவிட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் செய்யுங்கள், அதில் தவறில்லை.
பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என்று சிலர் சொல்கிறார்கள். டிஜிட்டல் தங்கத்தினை நம்பி போவதனைக்காட்டிலும், பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என்று ஏற்றுக் கொள்வது பெரிய தவறு இருப்பதாக தெரியவில்லை. பிட்காயின், கடந்த ஐந்து மாதங்களாக வளர்ச்சியாக அமைந்து, தற்பொழுது 50000 டாலர் என்ற விலையை தொட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 50000 டாலர் என்ற விலையை எட்டுவது என்பது பலர்க்கும் உற்சாகத்தினையும், மீண்டும் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையையும் கொடுத்திருக்கும்.
இது இவ்ளோதான், மார்க்கெட் அப்படியே டவுண்ட் ஆகிடிச்சி.. இனி ஏற வாய்ப்பில்லை. பிட்காயின் லைப் முடிஞ்சது என்று நினைத்தவர்கள் எல்லாம் இனி திரும்ப வருவார்கள். பிட்காயினை ஒர் கோல்டு ரேஞ்சுக்கு உயர்த்தி பேசுவார்கள். பிட்காயினில் முதலீடு செய்தால் கண்டிப்பாக வளர்ச்சியினை அடையும் என்று பேச ஆரம்பிப்பார்கள். அடுத்தக்கட்டமாக 1 பிட்காயின் விலை ஒர் இலட்சம் டாலர் என்ற விலையை அடுத்த ஆண்டில் தொடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால், அடுத்தக்கட்ட முதலீடு என்பது பிட்காயினில் இருக்கலாம்.
பிட்காயினில் முதலீடு செய்யலாம், ஆனால் கிரிப்டோ கரன்சி வாங்கவே தயக்கமாக இருக்கிறது. பிட்காயினும் ஒர் கிரிப்டோ கரன்சிதானே என்று நினைத்தால், பிட்காயின் கிரிப்டோ காயின் என்பது உண்மை. ஆனால், அதனை வாங்க தயக்கம் வருவதற்கு காரணம், தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கைதான். ஆகையால், நல்ல நபர்களிடம் பிட்காயினை வாங்குவதில் எந்தவொரு தவறும் இல்லை.
அடுத்தக்கட வளர்ச்சியினை பார்க்க இருக்கிற பிட்காயினில் கூடுதல் பணத்தினை நீண்டகால முதலீடாக போட்டுவைத்தால் இலாபம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
- Forex Board index Forex Online Home Business Website Digital Currency Exchange
-
- It is currently Tue May 21, 2024 6:27 pm
- All times are UTC+05:30
Bitcoin - பிட்காயின் புதிய விலை ஏற்றம்
We do Currency Exchange service for you to withdraw and depositing money from Online Wallet with nominal fees. Such as, Perfect Money, Bitcoin, Neteller, OkPay, Skrill, and Payza.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Return to “Digital Currency Exchange”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை