சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Thu Jun 26, 2014 5:29 pm

இது ரொம்ப வினோதம்
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...26

Post by cm nair » Tue Jul 22, 2014 8:31 pm

முரளிக்கும்-சந்தியாவிற்கும் கோபால்-பத்மினி நிலை ஜீரணிக்க

முடியவில்லை என்றாலும் 'சரி' என்று சம்மதித்தனர். இரவு வீடு

திரும்பிய பின் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு படுத்தனர்.மௌனம்

நிலவியது.. பத்மினி மெதுவாக..என்னங்க..என்று கோபாலிடம் பேச்சு

கொடுத்தாள். 'என்ன' என்ற கோபாலிடம் 'எனக்கொரு பொருள்

வேணும்.. எடுத்துக்கட்டுமா' தயங்கி தயங்கி கேட்டாள்.

'என்ன..சொல்லு..என்றவனிடம் 'நம்ப கல்யாண ஃபோடோ

எடுத்துக்கட்டுமா'..குரல் உடைந்தது. கோபால் அதிர்ச்சி அடைந்தான்.

'ராட்சசி..இனியும் உன் மனத்தில்...எனக்கு இடமா...உன்னால் எப்படியடி

முடிகிறது...அதை கலைத்து விட கூடாதா..' மனதினுள் குமுறியவன்

'ம்' என்றபடி கலங்கிய கண்களுடன் திரும்பி படுத்தான். 'தாங்க்ஸ்ங்க.

என்றவள் உடனே அந்த போட்டோவை தன் பெட்டியில் வைத்து

மூடியவள் அழுதவாறு உறங்கி போனாள். காலையில் முதலில்

கோபால் எழுந்தான்.எழுந்து அமர்ததவன் சிறிது நேரம் பத்மீனியை

நோக்கியபடி பெருமூச்சு விட்டான் . பல் தேய்த்து அவளுக்கும் சேர்த்து

காப்பி கலந்தான். சமையல் அறையில் பாத்திரத்தின் ஓசை கேட்டு

பத்மினி பொழுது விடிந்தததை உணர்ந்தாள். பல் தேய்த்து முகம் கழுவி

வந்தவளிடம் 'குட் மார்னிங்' என்றபடி காப்பி கோப்பையை கோபால்

நீட்டினான். குட் மார்னிங்' என்றவள்-ன் குரல் தேய்ந்தது. கண்கள்

கலங்கியது. கோபாலின் மனத்திலும் இனம் புரியாத வேதனை. காப்பி

குடித்து கோபால் குளிக்க செல்லவும் பத்மினி முற்றம் பெருக்கி

கோலமிட்டு சிறிது உப்புமா கிண்டி வைத்தாள். கோபால் வந்தவுடன்

அவளும் குளித்து நீல நிற சேலையில் ஆகாய தேவதையாக சாமி

கும்பிட்டு அவனருகே அமர்ந்து உப்புமா சாப்பிட்டாள். கோபாலுக்கு

அவளை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருந்தது. இன்றைய

தினம்... சிந்தித்தவன் அவள் மேலிருக்கும் தன் பார்வையை

சாப்பிடுவதில் திருப்பினான். இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பத்மினி

தன் தோழி கண்மணியை ஏற்கனவே வர சொல்லி இருந்தாள்.

பத்மினியின் அண்ணன் ராமுவும் கோர்ட்-ல் வருவதாக கூறியிருந்தான்.

இருவரும் புறப்பட்டனர். பத்மினி வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தாள்.

மனத்தில் பாரம் கூடியது. கோபால் அவள் செய்கைகளை கவனித்து

கொண்டிருந்தான். இருவர் மனத்திலும் சுமைகள். ...கண்கள்

கடலாகி 'வெளியே வரட்டுமா' என்றது நீரலைகள்..ஒருவரை ஒருவர்

தங்களது வேதனையை மறைத்தனர். பத்மினி தன் பெட்டியை

எடுக்கவும் கோபால் அதை வாங்கி கொண்டான். பத்மினி வாசலுக்கு

செல்லவும் பூஜை அறையின் தீபம் அணைந்தது. கோபால்

கதவை பூட்டினான் கோர்ட்-ல் எல்லாரும் வந்திருந்தனர்.ராமுவை

கண்டதும் 'அண்ணா' என்று பத்மினி கட்டி பிடித்து அழுதாள். ராமுவின்

கண்கள் கலங்கியது.தலையை வருடினான். ஒன்றும் ெய்யவோ..

சொல்லவோ முடியாத நிலை.. கண்மணியுடன் கணேசனும்

வந்திருந்தான்.பத்மீனியை பார்த்தவன் சிறிது நேரம் நிலை

குலைந்தான்.எல்லாம் ஒரு வழியாக முடிந்தது. எல்லோர் மனத்திலும்

வேதனைகளின் சுமை! கடைசியாக பத்மினி ஆட்டோவில் ஏறும் முன்

கோபாலை ஏறிட்டு நோக்கினாள். அவன் கண்ணீரை மறைத்து கொண்டு

விரைவில் அங்கிருந்து நகர்ந்தான். பத்மீனியை கட்டி பிடித்து சந்தியா

அழுதாள். ராமுவும் ,கணேசனும், கண்மணியும் பத்மீனியை

அரவணைத்து கிளம்பினார்கள்.

'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...என்ற நிலையிலும்

பிடிவாதம்,கௌரவம்,சுயநலம் இதன் முன் எல்லாம் பூஜ்யம் தான்..!
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...27

Post by cm nair » Sun Oct 19, 2014 12:39 am

கண்மணியின் வீட்டிற்கு சென்ற பத்மினி பாக்கியத்தை கட்டி பிடித்து அழுதாள். அண்ணன் ராமுவுக்கு சங்கடமாக இருந்தது. அவளை ஆறுதல் படுத்தியவன் அனைவரிடமும் கண் கலங்க நன்றி கூறினான். அவன் நிலை யாவரும் அறிந்ததே ... அண்ணி ராஜி நன்கு படித்தவள். குதர்க்கமாக பேசி பழகியவள். நம் யமூனாவிற்கு அக்கா என்று கூறலாம். அதனால் தான் ராமு அவளை தான் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை. சிறிது பணமும் பத்மினியிடம் கொடுத்து விட்டு நேரம் கிடைக்கும் போது வரேணம்ம..போன் செய்கிறேன்.' என்று அவள் தலையை வருடிய வண்ணம் அனைவரிடமும் விடை பெற்று சென்றான். பாக்கியமும்,கணேசனும்,கண்மணியும் ஏதோதோ கதை பேசி அவளை சாப்பிட வைத்தனர். பத்மினி முகம் கழவ சென்றவள் 'இனி அழுவதாலோ...துடிப்பதாலோ எந்த லாபமும் இல்லை' என்று உணர்ந்தவள் இனி நடப்பது நடக்கட்டும்.என் மனத்தில் தைரியத்தை கொண்டு வர முயற்சித்தாள். இரவு பத்மினி பாக்கியதுடன் படுத்து கொண்டாள். எதையோ சிந்தித்தவள் அப்படியே உறங்கி போனாள்.கண்மணியின் அறையில் சிரிப்பும், சினுகல்கள் கேட்ட பாக்கியம் மெதுவாக திரும்பி பத்மீனியை பார்த்தாள். அவள் உறங்குவது கண்டு பெரு மூச்சு விட்டாள். கண்மணி…....காதலித்து கல்யாணம் செய்து கொண்டவள்.கணேசன் பணக்கார வீட்டு பையன். வீட்டில் எதிர்ப்பு இருந்தும் அவன் அவளையே கை பிடித்தான். 3 வருடமாகியும் மழலை இல்லாமல் போகவே டாக்‌டர் செக்-அப் நடத்தினார்கள். ரிஸல்ட்- 2 நாட்கள் கழித்து வர சொல்லிருந்தார்கள். கணேசன் தான் மட்டும் போய் வருவதாக கூறி சென்றான்.ரிஸல்ட்-ல் குழப்பம் கணேசன்க்கு அல்ல என்று தெரிந்தது. கண்மணியின் கருப்பையில் உள்ள கட்டி தான் காரணம் என தெரிந்தது.கருப்பையை நீக்க வேண்டும் என்றும், மழலைக்கு இடமில்லை என்றும் கூறி விட்டனர். கணேசன் அதிர்ந்து போனாலும் யோசனையுடன் வெளி வந்தான். வீட்டிற்கு வந்தவன் கால் அலம்பி படுக்கை அறையில் நுழையவும் தண்ணீருடன் கண்மணி வந்து நின்றாள். நீரை வாங்கி. குடித்தான். 'என்ன.. டா..சாப்பிட்டியா' என்றான் அன்போடு. 'என்னிக்கு நீங்க வராமல் சாப்பிட்டு இருக்கே..அது போகட்டும்..ரிஸல்ட் கிடைத்ததா..டாக்‌டர் என்ன சொன்னார்' ஆவலுடன் அவள் கேட்டாள். உண்மையை மறைத்தவன் அவளை அணைத்தவண்ணம்...' அது வந்து..எனக்கு தான்டா ..என்று இழுத்தவன்..திடீரென 'நீ வேணுமின்னா வேற..' என்று முடிப்பதற்குள் அவன் வாயை தன் மலர் கரங்களால் பொத்தியவள் கண் கலங்க மெல்லிய புன்னகையுடன் 'இவ்வளவு பெரிய பையன் இருக்கும் போது இன்னொன்று எனக்கு எதுக்கு' என கூறவும் அவன் அவளை இறுக அணைததான். அவன் கண்கள் கலங்கியது. என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆண்கள்...இதே குறை தங்களுக்கு இருந்தால்..அவர்கள் ஆகட்டும்..அவர்கள் வீட்டில் ஆகட்டும்..பெண்ணை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்..ஆனால் பெண் எவ்வளவு தியாகங்களை செய்கிறாள் என யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் ஆண்களிலும் நல்லவர்கள் உண்டு என்பதை கணேசன் நிரூபித்து விட்டான். 2 மதங்கள் முடிந்திருக்கும்..திடீரென்று ஒரு நாள் கண்மணி வயீற்று வலியால் துடித்தாள். டாக்‌டர் உடனடியாக ஆபரேஶந் செய்ய சொல்லி விட்டார்கள். கணேசன் அவளிடம் உண்மையை கூறினான்.
அவள்...அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவன் அவளை அணைத்து சமாதான படுத்தினான். 'என்னம்மா..இது...ஏழு ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் என் மனைவி..காதலி... என்றான் தலையை வருடிய வண்ணம்! ஆபரேட்ஶநம் முடிந்தது...அவன் அவளை ஒரு குழந்தை போல் கவனித்து கொண்டான்.. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் வாழ்ந்தனர். சில மாதங்களுக்கு பின் அவனுக்கு பதவிஉயர்வு கிடைத்ததும் கண்மணியிடம் வேலைக்கு செல்ல வேண்டாமென கூறினான். ஆனால் இருவருக்கும் மழலைகளின் மீது அலாதி விருப்பம் இருந்தது.பத்மினியின் நிலை அறிந்தபோது ஒரு புறம் வேதனை அடைந்தாலும் மறு புறம் தங்கள் வீட்டில் ஒரு மழலை பிறக்க போவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தனார். பத்மினி காலை எழுந்து குளித்து பாக்கியத்திற்கு உதவி செய்தாள் மணி 7 அடித்தும் கண்மணியின் அறை கதவு திறக்காத கண்ட பாக்கியம் கதவை தட்டி விட்டு சென்றாள். கண்மணியும், கணேசனும் குளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தனர், கணேசன் அடிக்கடி பத்மீனியை பார்த்தான். 'என்ன..கண்மணி..இப்படி ஒரு தூக்கம்' என கடிந்து கொண்டாள் பாக்கியம் பரிமாறியவாறு.. 'ராத்திரி..ஒரே கொசு கடி' என்று கணேசனை பார்த்து கண் சிமிட்டினாள் கண்மணி. கணேசனின் முகத்தில் அசடு வழிந்தது. அவன் கண்மணியின் காலை மிதிததான் மெதுவாக. எல்லாவற்றையும் பார்த்த பத்மினி கண்டும், காண தவளாக தனக்குள் சிரித்து கொண்டாள். கணேசன் பத்மினியின் மிகுந்த அன்பை காட்டினான். பத்மினிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நாள்...கணேசன் அவள் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு ஃபோடோ பத்மினியிடம் காட்ட பத்மினி அதிர்ந்து போனாள்..அந்த ஃபோடோ.....?
'உணர்வுகள், வேதனைகள் எல்லாம் எல்லாருக்கும் ஒன்றே..உடல்,உருவம் மட்டுமே வேறுபட்டது.கண்ணாடி பிரதிபலிப்பதை நிழல் பிரதிபலிப்பதில்லை.நிழல் பிரதிபலிப்பதை கண்ணாடியும் பிரதிபலிப்பதில்லை.இரண்டிலும் உள்ளது உருவம் மட்டுமே!
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by தயாளன் » Sun Oct 19, 2014 12:27 pm

அருமை.........
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Wed Oct 22, 2014 10:17 pm

நன்றாக செல்கிறது..... உலகில் ஆண்களோ பெண்களோ நூறு வீதம் நல்லவர்களும் இல்லை. நூறு வீதம்் கெட்டவர்களும் இல்லை. இக்கதை சிறப்பாக உணர்த்துகிறது
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...28

Post by cm nair » Sat Oct 25, 2014 10:33 pm

அந்த ஃபோடோ-வில் பத்மினி வேறு யாருடனோ...திடுக்கிட்டாள். அவளுக்கு கோபாலை தவிர யாரையும் தெரியாது... 'இது..என் ஃபோடோ..எப்படி உங்க கையில்...தடுமாறிய வண்ணம் கேட்கவும் அங்கு வந்த கண்மணி 'ஏண்டா... அவளை..பயமுறுத்தரா...என்றவள் பத்மினியிடமிருந்து ப்போட்டோவை வாங்கியவாறு.... ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்வாங்க இல்லயா பப்பி....இது அவரோட அக்கா..ஒரு விபத்தில் ரெண்டு பேரும் போய் சேர்த்திட்டாங்க..என்றாள். கணேசனின் கண்கள் கலங்கியது. அவன் தன்னிடம் காட்டிய அன்பின் உண்மையை புரிந்து கொண்டவள் அவனை கனிவோடு நோக்கினாள். மறு பக்கம் கோபால் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் அகர்பத்தி ஊதி தள்ளினான். தான் செய்தது சரியா என அவனுக்கு தெரியவில்லை. என்றாலும் செலவு செய்ய முடியாத நிலை உறுதியாக பட்டது.சித்தி கமலத்தின் வீட்டிற்கு சென்றான். அவன் செல்வதற்கு முன்னே சந்தியா போன் மூலம் கமலத்திடம் எல்லாம் சொல்லியிருந்தாள். உள்ளே நுழைந்த கோபாலை கண்ட கமலம், 'என்ன..கோபாலு... வேலைக்கு போகலயா' என்றாள் ஒன்றும் அறியாதவள் போல்! 'இல்லே சித்தி..லீவ் போட்டுட்டேன்' என்றவனிடம் 'இப்ப தானே சேர்ந்தே... அதுக்குளே லீவ் போட ஆரம்பிச்சிட்டியா?' என்றாள் கமலம். 'சித்தி..நான் பத்மீனியை விவகாரத்து பண்ணிட்டேன்.. எப்பவும் அந்த ஒரு ஜீவனாலே டென்ஷன்..ரெண்டு பேரும் பேசிதான் முடிவு செய்தோம். என்றதும் 'என்னது..இவ்வளவு ஈஸியா சொல்றேன்.. இது அக்காவுக்கு தெரியுமா..?' என்றாள் கமலம். 'இல்லை... அவங்க கிட்டே பொய் சொல்லி ரகு வீட்லே விட்டு இருக்கேன்.என கோபால் சொல்லவும் 'சரி... இப்போ உன் டென்ஷன்... போய் இருக்குமே...அப்பறம் என்ன..'என்றாள் சிறிது கோபத்தோடு. சித்தியின் கோபம் அவனை பலவீன படுத்த 'நான் போய்ட்டு வரேன்' என்று வெளியேறியவன் கையில் ஒரு கோர்டரும்,அகர்பத்தியுமாக வீட்டை அடைந்தான். வீடு இருண்டு இருந்தது... லைட் போட்டவன் கதவை வெறுப்போடு சாத்தினான். பத்மினி எல்லாவற்றையும் சுத்தம் செய்து சென்றிருந்தாள்.தீர்த்தம் உள்ளே செல்ல..அவன் தன் நிலை மறந்து கிடந்தான். மறு நாள் சோம்பல் முறித்து எழுந்தவன் வீட்டை சுத்தம் படுத்தினான். போன் மணி ஒலித்தது. எடுத்த போது மறு முனையில் அவன் சக ஊழியன் சங்கர் அவனை உடனடியாக வர கூறவும்..குளித்து முடித்து ஆஃபீஸ் க்கு புறப்பட்டு சென்றான். சங்கரின் அருகே சென்றவன் 'என்னடா..சங்கர..அவசரமா வர சொன்னேன்... என்றதும் 'நாளை முதல் M.D. பொண்ணு காமினி வர போற..M.D.க்கு வெளியூர் போறாராம்..வர கிட்டத்தட்ட மூன்று வருடம் ஆகுமென்று சொல்லறாங்க..அது வர இந்த காமினி தான் M.D. என்றவனிடம் ' அதுக்கு என்னடா..இப்போ..என்றான் கோபால். 'முதலில் ஒரு வாரம் அவ இங்கிருந்தபோது வேலை செய்து இருக்கேன்.. ரொம்ப கண்டிப்பு மட்டும் இல்லே...கடிவாளம் கட்டாத அடங்கா பிடாரி குதிரைன்னு எல்லாரும் சொல்லுவாங்கடா..வேல எல்லாம் அப்-டு-டேட் ல இருக்கணும்..கரெக்ட் டைம்க்கு வரணும்..இல்லேன்னா போச்சு..என்றான் சங்கர்.
'நீ புதுசு...வேலை பாக்கியில்லாம பாத்து நடந்துக்கோ..என்றான். கோபால் வேலையில் ஈடுபட்டான். மாலை வீடு திரும்பியவன் குளித்து முடித்து டீ.வீ.யில் தன் கவனத்தை திருப்பினான். வரும்போது ரொட்டி வாங்கி வந்திருந்ததால் வெண்ணை தடவி சூடாக்கி சாப்பிடு படுத்தான். இரண்டு நாட்கள் சென்றது . காமினி வரும் நாள் ஆனதால் அந்த குதிரையை காண விரைவில் ஆஃபீஸ்-க்கு புறப்பட்டு சென்றான்.
காமினி வரும் நாள் ஆனதால் ஆஃபீஸ்-ல் எல்லாரும் நேரத்திற்கு வந்திருந்தனர். மணி 10.30 அடிக்க M.D. கருணாகரன் அனைவரையும் மீடிங்க் அறையில் அழைத்தார்.அனைவரும் வந்த பின் 'நம் ப்ரோடுக்ட்க்கு ஜெர்மனில் நல்ல வரவேற்பு உள்ளதால் அங்கு ஒரு கம்பனி துவங்க நினைத்துள்ளேன். என கூறவும் அனைவரும் கை தட்டி வரவேற்றார்கள். 'நான் ஜெர்மன் செல்ல விருப்பத்தால் அங்குள்ள வேலை முடியும் வரை இங்கு என் மகள் காமினி கவனித்து கொள்வாள்.. அவளுக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தர வேண்டும்..'என கூறி முடிக்கவும்...ஒரு நவ நாகரீக மங்கை உள்ளே நுழைந்தாள். 'ஹாய்..எவெரிபடீ..' என்றவள் M.D. அருகே சென்று 'ஸாரீ..டாட்..லிட்ட்ல் லேட்..சிக்னல் ப்ரொபளம்..'என்றவள் தன் கரு கண்ணாடியை கழற்றி கைப்பையில் வைத்த போது கோபால் அவளை கவனித்தான்.. 'அந்த கூர்மையான வேல் விழிகளின் தீட்சணயம் அவள் கண்டிப்பானவள் என உணர்த்தியது. மீடிங்க் முடிந்து எல்லோரும் அவரவர் இடத்திற்கு செல்லவும்..கருணாகரன் காமினியிடம் ஏதோ கூறி விட்டு வெளியேறினார். தந்தை சென்ற பின் காமினி மேஜையில் உள்ள எல்லாவற்றையும் படித்தவள் இண்டெர் காம் மூலம் முதலில் சங்கரை அழைத்தாள். சங்கருக்கு மனம் பட பட த்தது. உள்ளே சென்றவனிடம்.. 'மெடீரியல் ஸூபர்‌வைஸிங்க் பார்க்கிறவர வர சொல்லுங்க..' என்றாள். 'எஸ்..மேடம்..' என்று வெளியே வந்த பின் அவன் மூச்சு சீரானது. 'அடடா..மெடீரியல் ஸூபர்‌வைஸிங்க்..நம்ப கோபால் ஆச்சே..முடிச்சிருப்பானோ..' என எண்ணியவாறு கோபாலின் அருகே சென்றான். 'கோபால்..உன் வேலை .. முடிஞ்சுதா..என்றான் சங்கர். 'ம்' என்று தலை ஆட்டியவனிடம் 'மேடம்..கூப்பிடறாங்க...பாத்து நடந்துக்கோ..என்றான் சங்கர். ஃபைல் எடுத்த சென்ற கோபால்.. ' மே..ஐ..கம் இன் மேடம்' என கேட்கவும் 'எஸ்' என்றாள் காமினி தன் கம்ப்யூடர் வேலையில் இருந்து கண் எடுக்காமல்! உள்ளே வந்து நின்றவனிடம் 'ப்ளீஸ்..டேக் யூவர் ஸீட்..' என்றாள்.
கோபாலுக்கு வசதி ஆனது. அவனது பார்வை..அவள் மீது படர்ந்தது..நாகரீக மங்கை..வெட்டிவிடப்பட்ட எண்னை இல்லா முடி கற்றை..கூர்மையான ஐ-லை னர் பூசப்பட்ட வேல் விழிகள்..கூர்மையான நாசி..வடிவெடுத்தாற் போன்ற சாயம் பூசப்பட்ட இதழ்கள்...ஸ்லீவல்ஸ் சோலியில்..வழு வழுதத வெண்மையான தந்தம் போன்ற தோள்களின் கீழ் பெண்மையின் மதர்ப்பு மின்னியது.தன் வேலையை முடித்தவள் தலையை உயர்த்தவும் கோபால் சடரென தன் பார்வையை கையில் உள்ள ஃபைல் க்குள் செலுத்ினான், காமினிக்கு அதிசயமாக இருந்தது.. ஆஃபீஸ்-ல் பலரும் பல விதத்தில் பார்வைகளால் படம் எடுப்பதை பார்த்த பின்னே அவள் கண்டிப்பானவள் ஆனாள்.முதல் முறையாக கோபால் ஃபைல் ஐ பார்த்து அமர்ந்திருப்பது அவன் மீது மதிப்பை தந்தது. 'மிஸ்‌டர் ' என்றுவளிடம்'கோபால்' என்றான். 'உங்க ஃபைல்-யை கொடுங்க' என கேட்டவள் அனைத்தையும் பார்த்த பின் 'ஓகே..வெல்டந்' என்று திருப்பிக்கொடுத்தாள். அவன் மெல்ல புன்னகைத்து கொண்டு வெளியே வந்தான்.


பூனைக்கு கட்டுபாடு போட்டாலும் திருட்டுத்தனத்தை அது விடுமா?`
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...29

Post by cm nair » Wed Nov 05, 2014 6:29 pm

கோபால் புன் சிரிப்புடன் வெளி வருவதை கண்டபோது சங்கருக்கு நிம்மதி வந்தது.'என்னடா..ஏதாவது.. என்பதற்குள் 'சரியா வேலை முடிச்சதாலே இதுவரை ஒண்ணும் சொல்லலே'என்றான் கோபால். 'நல்லதா போச்சு..ஆனாலும் ஜாக்கிரதையாயிரு..எப்ப கத்துவானு தெரியாது' என்றான் சங்கர். திடீரென 'ஏன்டா சங்கர்..அவ இன்னும் கல்யாணம் பண்னிக்கலயா'..என்ற கோபாலிடம் ' ஏன்..நீ பண்ணிக்கீறியா..அட..போடா..போய் வேலை பாரு..பெரிய இடத்து விஷயம் நமக்கு எதுக்கப்பா..என்றவாறு சங்கர் தன் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய துடங்கினான். 'சங்கர் கேட்ட மாதிரி நடக்குமா..நான் விவகாரத்து வாங்கினது சங்கரை தவிர யாருக்கும் தெரியாது.சில சமயம் நடந்தால்..?சக்க போடு..போடு ராஜா..உன் காட்டிலே மழை பெய்யுது..வேலையின் இடையில் கற்பனை சிறகடிக்க துடங்கியது கோபாலுக்கு! அவன் கற்பனையை கலைக்க வந்து சேர்ந்தான் மேனேஜர் ராஜேஷ்.'மிஸ்‌டர் கோபால்' இரு முறை அழைத்தும் பதில் வராத நிலையில் டேபலெலில் தட்ட திடுக்கிட்டு எழுந்தான் கோபால்.. 'எஸ்..ஸார்..என்றவனிடம் 'என் காபினுக்கு வாங்க..என கூறிவிட்டு சென்றான் மேனேஜர் ராஜேஷ். 'அட..பாவி...என்னடா ஆச்சு..உனக்கு...கனவு கண்டுட்டு இருந்தே..போய் வாங்கி கட்டிக்கோ..மவனே..என்றான் சங்கர்.தன்னை சுதாரித்து கொண்டு ராஜேஷின் காபினுக்குள் நுழைந்தான்..'ஸார்..' என்பதற்குள் 'உட்காருங்க'என்று கை அசைத்த ராஜேஷ் தன் இருக்கையில் அமர்ந்தவன் கோபாலை உற்று நோக்கியவாறு 'கனவு காணவா..ஆபீஸ் வரீங்க...என் இடத்திலே மேடம் வந்திருந்தா..உங்க சீட்டு கிழிஞ்சு இருக்கும்'என்றான். 'அட..மாங்க மடையா..கனவு கண்டதே அந்த மேடத் தை தானே..'என மனதுக்குள் புலம்பிய கோபால், 'ஸாரீ..ஸார் ஏதோ யோசனையில் உட்கார்ந்திட்டே..இனி அப்படி நடக்காது..என சொல்லவும்..'ஓகே..மெடீரியல் கந்ஸம்ப்ஶந் விவரம் 2009 -ல் இருந்து 2014 வரை இயர் வைஸ் வேணும்..2 நாளில் கிடச்சா நல்லது' என்ற ராஜேஷினிடம் 'எஸ்..ஸார்..ஐ வில் ட்ரை..ஸார்'என்றவன் ராஜேஷை உற்று பார்த்தான்.ராஜேஷ் ஃபைல் எடுக்க திரும்பினான்.25 -28 வயது இருக்கும்.ஒருவிதம் அழகு தான்..இவனுக்கெல்லாம் கனவு,கற்பனை வராதா..எப்ப பாரு வேலையை கட்டி புடிச்சிட்டு உட்கார்ந்திருக்கான்..ச்சே..'என மனதுக்குள் முணுமுணுத்த கோபாலிடம் 'நீங்க போகலாம்' என்றான் ராஜேஷ். தன் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய துவங்கினான். மாலை முடிந்து இரவு மணி 7 அடித்தது.காமினி அறையில் இருந்து வெளி வந்தவள், கோபாலும், சங்கரும் வேறு இருவரும் வேலையில் இருப்பதை கண்டாள். 'நாளை பார்த்து கொள்ளலாம்..கிளம்புங்க ' என்றதும் ஃபைல்-ஐ எடுத்து வைக்க துவங்கினர். சங்கர்,கோபால்..நீங்களும் கிளம்புங்க..என்றாள். அவள் குரல் கேட்டும் கேட்க்காதவன் போல் கோபால் வேலை செய்து கொண்டு இருந்தான்.காமினி, கோபாலின் ஸீட் அருகே வந்து 'கோபால்'என்றாள்..இரு முறை...! ஒரு அசைவும் இல்லாமல் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். டேபலில் மெதுவாக தட்டி அழைக்கவே..திடுக்கிட்டவன் போல் கோபால்,'எஸ்..மேடம்..'என்றான். அவளுக்கு அவனுடைய வேலை பார்க்கும் தன்மை பிடித்தது.'வீட்டுக்கு கிளம்புங்க' என்றபடி வெளியே சென்றாள்.கோபால் உள்ளுக்குள் சிரித்து கொண்டான். 'வாடா..'என்ற சங்கருடன் கோபால் கிளம்பி கேட் அருகே வரவும் காமினியின் கார் புறப்பட்டு அவர்கள் அருகே நின்றது.காரை நிறுத்தியவள்..' வாங்க..சங்கர்..உங்கள் இருவரையும் பஸ் ஸ்டாப்-ல் ட்ராப் பண்ணுகிறேன்..' என்றதும் 'இல்லே... மேடம் நாங்க போறோம்..' என சங்கர் கூற.. 'பரவாயில்லை சங்கர்...வாங்க..' என்றவள் காரின் பின் கதவை திறந்து கொடுத்தாள். சங்கருக்கு ஆச்சரியமாக இருந்தது.கோபாலின் முகத்தை பார்த்தவாறு உள்ளே ஏறி அமர்ந்தவனுக்கு காரின் ஏ.ஸீ.யிலும் வியர்த்தது. 'கடிவாளம் போடாத ..இந்த குதிரை..நமக்கு என்ன கடிவாளம் போட போகுதோ...என்ற பட படப்புடன் இருந்தான் சங்கர்.கோபாலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அவன் காமினி பின்னால் அமர்ந்தான்.


உலகம் நாடக மேடை ஆனாலும்..திரையில் நடிக்கும் நடிப்பு எல்லாருக்கும் வருவதில்லை.வாழ்க்கையில் அந்த திரை நடிப்பு நடிக்க ஆரம்பித்தால்..அது எங்கே கொண்டு விடும் என யாரும் சிந்திப்பதில்லை.. :wae:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Wed Nov 05, 2014 6:46 pm

உலகம் நாடக மேடை ஆனாலும்..திரையில் நடிக்கும் நடிப்பு எல்லாருக்கும் வருவதில்லை.வாழ்க்கையில் அந்த திரை நடிப்பு நடிக்க ஆரம்பித்தால்..அது எங்கே கொண்டு விடும் என யாரும் சிந்திப்பதில்லை.. :wae:

True words
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...29

Post by cm nair » Sun Nov 09, 2014 4:35 pm

காமினியின் ட்ரைவிங்க் ஸீடிந் பின் கோபால் அமர்ந்தான். கண்ணாடியில் அவளை பார்க்கும் வாய்ப்பை நழுவ விட அவன் விரும்பவில்லை.. சங்கரின் மனைவி,குடும்பத்தை குறித்து விசாரித்தவள் ஏதோ நெருடலுடன் கண்ணாடியில் பார்க்க..திடுக்கிட்ட கோபால் வெளியே பார்ப்பது போல் அமர்ந்தான். காமினி தனக்குள் சிரித்து கொண்டாள் . ஏனோ அவளுக்கு கோபாலை பிடித்து இருந்தது. இவனை குறித்து சங்கரிடம் தான் கேட்க வேண்டும் என நினைத்தவறு அவர்களை பஸ் ஸ்டாப்-ல் இறக்கினாள் . 'தாங்க்ஸ்..மேடம்' என்றனர் இருவரும்! காமிணிக்கு புரியவிலை..தனக்குள் ஏன்..இந்த மாற்றம்..என்று..ஒரு காலத்தில் ஆண்களை வெறுத்தவள் அவள்..சிந்தித்தவாறு வீட்டை அடைந்தாள். சங்கரும்,கோபாலும் பஸ் வரவே பிரிந்தனர். வீட்டை அடைந்த கோபால் கதவை திறந்து எல்லா அறைகளிலும் லைட் போட்டான்.அந்த பிரகாசம் அவன் மனத்திலும் காமினியின் நினைவால் நிறைந்தது. குளித்து முடித்து சிறு சமயலை செய்து முடித்தவன் படுக்கை அறையில் நுழைந்து படுக்கையில் சாய்ந்தான். பத்மீனியை பிரிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.திடீரென அவன் மனத்தில் பத்மினியும்..காமினியும் ஒரே சமயத்தில் வந்து நின்றார்கள். பத்மினி..படித்தவள் என்றாலும்..குத்து விளக்கு..எளிமை! ஆனால் காமினி..படித்தவள்..வெளிநாடு சென்று வந்தவள்.. பட படப்பாக பேசும் அவள் மின்சார அலங்கார விளக்கு..ஆடம்பரமும், செல்வாக்கின் ஒளியும் அவளில் ஜொலித்தது. பத்மினியின் உறவு முடிந்த பின் அவளை குறித்து நினைப்பது சரியல்லா..என அவனுள் தோன்ற காமினியை நினைத்தான்.அவள் எனக்கு கிடைத்தால்.... என் எல்லா எண்ணங்களும் நிறைவேறும்.கடிவாளம் பூட்டாத அந்த குதிரைக்கு நான் எப்படியாவது கடிவாளம் பூட்டுவேன் என நினைத்து கொண்டான். மாதங்கள் உருண்டுடொடியது. கோபாலை குறித்து சங்கரின் மூலம் அறிந்தவள் ஏதோ காரணத்தால் விவகாரத்து ஆகிவிட்டதாக எண்ணி..அவனை வேதனை படுத்தாமல்..சாதாரண நட்பாகி பழகியவளுக்குள் காதல் மலர் மெல்ல மலர ஆரம்பித்தது. கோபாலும் அவளை சுற்றி வந்தான்.சங்கருக்கு காமினி..கோபாலின் போக்கு தடுமாற்றம் தந்தது என்றாலும் பின் புரிந்து கொண்டான். அவர்கள் ஒன்றாக நெருங்கிவிட்டதை..! ஆனால்..கோபால்..காமினிக்கா.. இல்லை.. காமினி..கோபாலுக்கா கடிவாளம் போட போவது..? பார்ப்போம்.. இதன். இடையில்...மாதங்கள் செல்ல..செல்ல.. ராஜம், பத்மினியின் நிலை அறிய துடித்தாள். 'அம்மா..அம்மா..'என்று வாய் நிறய அழைக்கும் ‘அவள் ஏன் ஒரு போன் கூட செய்யவில்லை..?’ கோபால் ரகுவை அழைத்து பேசுவதோடு நிறுத்தியிருந்தான். ராஜத்ின் பொறுமை போனது. 'ரகு..எனக்கு வீட்டுக்கு போகனும்...பத்மீனியை பாக்கணும்..என்றாள் ஆதங்கத்தோடு.. ரகுவிற்கும்,அவன் மனைவி சுதாவிற்கும் ராஜத்தை சமாதானப்படுத்த முடியாத நிலையில் சந்தியாவையும், முரளியையும் வரவழைக்க...முரளி..கோபாலிடமும் வர சொன்னான். சந்தியாவைகண்டதும் ராஜத்ின் கண்கள் கலங்கியது.ராஜம் மெலிந்து இருந்தாள். 'சந்தியா..பத்மினி எப்படியிருக்கா...ஏன் அவ எனக்கு போன் பண்ண லே..இது அவளுக்கு 7ம் மாதம்..ஒழுங்க எல்லாம் சாப்பிடராளா..டாக்‌டர் கிட்டே செக்-அப் செய்கிறாளா..அடுக்கி கொண்டே போன ராஜத்ின் கேள்விகளுக்கு பதில் ஏதும் சொல்ல தெரியாமல் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 'கோபால்..வரேன்னு சொல்லி இருக்கனம்மா' என்றாள் சந்தியா. ராஜம் சிறு குழந்தை போல் சந்தோஷம் அடைந்தாள். பத்மீனியை பார்க்க போகலாம் என்ற மகிழ்ச்சியில் தள்ளாத வயதிலும் சமையல் அறையில் சென்று பத்மினிக்கு பிடித்த வித விதமான பதார்த்தங்களை சமைத்தாள். சந்தியாவும், சுதாவும் எவ்வளவு கூறியும் அவர்களை ராஜம் சமைக்க விடவில்லை. 'சிறிது பத்மினிக்கு எடுத்துட்டு போறேன் சுதா' என்றவள் தனி தனி டப்பாக்களில் எடுத்து வைக்க சுதா..சந்தியாவின் கண்கள் கலங்கியது.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 'நாங்க செய்ய்யறோம்..நீங்க உட்காருங்கம்மா..' என இருவரும் கூறினார்கள்.வாசலில் மணி அடித்தது. சிறு மழலை போல் தள்ளாத வயதிலும் துள்ளி ஓடி கதவை திறந்தாள் ராஜம். கோபால்தான்..!அவன் உள்ளே நுழைய..'பத்மினி எப்படி இருக்கா என்றாள். நுழைந்தவன் எல்லோர் முகத்தையும் பார்த்தான். இதற்காக தான் வரவழைத்தார்களா..யாரும் ஒன்றும் கூறவில்லை.. ராஜத்ிடம் என தெரிந்தது. சந்தியா தந்த நீரை குடித்தவன் இனியும் சொல்லாமல் இருப்பது சரியில்லை என தோன்ற உண்மையை கூற ராஜம் நெஞ்சை பிடித்து கொண்டு சோஃபாவில் சரிந்து விழுந்தாள்

எதுவும் யாரும் எதிர்பார்த்தோ..கேட்டோ..வருவதில்லை... குத்து விளக்கின் நெருப்பில் காயம் காய்ந்து விடும்... ஆனால் மின்சார விளக்கில் உயிர்தான் மாய்ந்து விடும்...
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by தயாளன் » Sun Nov 09, 2014 5:42 pm

அருமையான வரிகள் ........தொடரட்டும்....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”