சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Thu Jun 12, 2014 5:32 pm

selva...next 17....
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...17

Post by cm nair » Thu Jun 12, 2014 11:35 pm

கோபாலை கண்ட பத்மினி சமையல் அறைக்கு நுழைந்தாள்.மனமார

வேண்டினாள் 'என் கணவர் மனம் மாற வேண்டும்...என் மழலையை

காப்பாற்று என்று கண்கள் கலங்க சாமி கும்பிட்டாள். கோபால் குளிக்க

சென்றான். ராஜம் மருந்து சாப்பிட வேண்டியதால் சிற்றுண்டி சாப்பிட்டு

முடித்தாள்.அப்போதுதான் பத்மினிக்கு நினைவு வந்தது.

'அய்யோ...அம்மா போயிட்ட கோபாலிடம் தனியாக மாட்டி

கொள்வோமே 'என்ற பயம்!. குளிக்க சென்ற கோபால் ஷவரின் கீழ் நின்ற

போது பத்மினி-ன் நினைவு வந்தது. திருமணமான புதியதில் அவளுடன்

ஒன்றாக குளித்ததும், களித்ததும்! ஷவரை முடியவன் நேற்று இரவு

நடந்ததை நினைத்தான். ஏனோ அவனுக்கு பத்மினி வேண்டும்.

முயற்சித்தால் என்ன..? அதனிடைய ' நான் ஏன் இப்படி' என்று

சிந்திக்கவும் செய்தான். குளித்து முடித்து லுங்கியில் நுழைந்தான்.

'அம்மா...நானும் கோவிலுக்கு வரட்டுமா..' தயங்கியவாறு பத்மினி

ராஜத்ிடம் கேட்டாள் ராஜத்திற்கு அதிசயமாகவும், அவள் எதற்கோ

பயப்படுவது போல் தோன்றியது இவளை அழைத்து சென்றால் சந்தியா

-யமுனா விடம் பேச முடியாது. 'இல்லேம்மா..பத்மினி...சில சமயம்

நான் வர லேட் ஆயிடும்...அப்பறம் வெயிலாயிடும் அம்மா..' என்றாள்.

இதை உள்ளிருந்து கேட்ட கோபாலின் மனம் மகிழ்ச்சியில் குரங்காட்டம்

ஆடியது.ஆனால் பத்மினி..பாவம் துவண்டு போனாள். குழந்தை

விஷயத்தில் அவர்களுக்குள் சண்டைகள் பல நடந்து முடிந்து விட்டது.

ராஜம் கதவை சாத்தி சென்றாள். பத்மினிக்குள் போராட்டம்... சிற்றுண்டி

கோபாலுக்கு எடுத்து வைத்து விட்டு பாக்கி வேலைகளை கவனிக்க

துவங்கினாள். சாப்பிட அமர்ந்த கோபால் ஓரக்கண்ணால் சாப்பிட்டபடி

அவளை பார்த்தான். 'ராட்சசி...எவ்வளவு நாள் பட்டினி போட்டே...

..மவளே...இன்னைக்கு ஏன் ராஜ்யமடி என்று மனத்தில் கொக்கரித்தான்.

பத்மினி மனம் பட படத்தது. சாப்பிட்டு கை அலம்பியவன் படுக்கை

அறையின் திரைசிலைகளை மூடினான். கமாந்த்கனுக்கு

பகலெங்கெ...இரவெங்கே...? திடீரென உஷ்ணமூச்சு தன் மீது

படரவே திடுக்கிட்டு திரும்பினாள் பத்மினி. பின்னால் அவள்

அருகாமையில் கோபால்..'பப்பி..அம்மா..வெளியே போய்

இருக்காங்க...வா பப்பி என்றவாறு கையை பிடித்து இழுத்தான்.

'இல்லே...எனக்கு வேல இருக்கு...அவனது பிடியில் இருந்து விடுபட

முயற்சி செய்தாள்.அவன் அவளை தூக்கினான். அவள் திமிரினாள்.

எடை கனத்தது...'ஓ...வய ற்றில் உள்ளதின் எடையா இருக்கலாம் என்று

எண்ணியவாறு படுக்கையில் பூ போல் வைத்தான் அவள் எழுந்து

உட்கார முயன்றாள். அவன் விடவில்லை. அவளது விழிகளில் நீர்

பிரவாகமெடுத்தது.அப்பொழுது யாரோ கதவை தட்டினார்கள்...கதவை

திறந்த கோபால் அதிர்ந்தான்...அங்கே....?

பிரார்த்தனை ஜெயித்தது.நம்பிக்கையும் ,நல்ல எண்ணங்களும் யார்

தோற்கடிக்க நினைத்தழிளும் வெற்றியே கிட்டும். சத்தியமும்,தர்மமும்

போல்தான் பிரார்த்தனையும்..! கேட்டு பெற வேண்டியதில்லை.

எண்ணமும் மனமும் தூய்மையானால் தானே எல்லாம் நன்மையும்

தேடி வரும்.


இது சிற்றின்ப கதை அல்ல. உலகில் சில இடங்களில் பெண்களுக்கு

நேரும் துன்பமும்..அவர்களது வாழ்வும்... எப்படி ஒரு பெண் போராட

வேண்டும்..? சுயநலம் படிப்பினையும்,அன்பு வெற்றியை தரும் என்பதை

காட்டுவது....!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Thu Jun 12, 2014 11:39 pm

பாகத்திற்கு பாகம் அறிவுரை!! பலே!!!!

தொடரட்டும்....
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by kselva » Fri Jun 13, 2014 6:49 am

கோபால் போன்ற ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கதை விரு விருப்பாக போகிறது.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...18

Post by cm nair » Fri Jun 13, 2014 11:41 pm

யமுனாவும்,சந்தியாவும் நின்றிருந்தார்கள். ச்சே..நேரம்,காலம்

தெரியாமா இவர்கள்...யார் அழைத்தார்கள் இவர்களை என கோபாலுக்கு

ஒரு புறம் எரிச்சல் தோன்றினாலும் மறு புறம் அவர்கள் வரவு பிடித்து

இருந்தது. 'என்னடா...முழிக்கிறே'..என்றாள் அண்ணி சந்தியா. 'என்ன

அண்ணா...வேலைக்கு போகலயா' என்றபடி யமுனா உள்ளே

நுழையவும் பின்னால் வந்தாள் ராஜம். 'ஓ...இவங்க வேலயா... என்று

எண்ணியபடி தங்கை யமுனாவுடன் பேச ஹால்-ல் உட்கார்ந்தான்

கோபால்,இங்கே பத்மினி தலை சுற்றி விழந்து கிடந்தாள். யமுனவுக்கு

பத்மீனியை பிடிக்காது. நடுத்தர குடும்பனாலும் அழகும், படிப்பும்

உள்ளதுதான் காரணம். பொய் பல சொல்லி பத்மினியின் வாழ்க்கையை

தொலைத்தது போதாதென்று தாயின் அழைப்பிற்கு

வந்து ேர்ந்தாள்.ஆனால் சந்தியாவிற்கு ராஜத்தை போன்றே

பத்மினியின் மீது பரிவு,பாசம்! 'எங்கே...பத்மினி' என்றபடி

சந்தியாவும்,ராஜமும் படுக்கை அறைக்கு வந்த் போது அவர்கள் கண்ட

காட்சி திடுக்கிட வைத்தது. துவண்ட மலராக பத்மினி விழுந்து

கிடந்தாள்.'என்ன...அவ காலையிலே...தூங்க ஆரம்பிச்சிட்டாளா'

..என்றாள் யமுனா குதர்க்கமாக... கோபாலிடம். அவளது பேச்சை கேட்ட

கோபாலுக்கு பத்மினியின் வயிற்றில் உள்ளதை கலைக்க யமுனா-வுடன்

பேச திட்டமிட்டான். பத்மினியின் விழிகளின் ஈரம் காயவில்லை.

'அம்மா...பத்மினி..பத்மினி..' என்ற அழைத்த ராஜம் என்றும்

இல்லாமால் காலையில் அவள் கோவிலுக்கு வருவதை

சொன்னதையும்,ஏதோ வேதனையை, பயத்தையும் மறைகிறாள்

என்றாள் சந்தியாவிடம். சந்தியா முகத்தில் நீர் தெளித்தாள். கண்

விழித்த பத்மினி சந்தியாவை கண்டதும் எழுந்திருக்க முயன்றாள்.

'அண்ணி..நீங்க..எப்ப... என்றவளை ராஜமும்,சந்தியாவும்,

'படும்மா..பத்மினி... ஒண்ணும் சாப்பிடலயா என்றார்கள். 'என்ன

நடந்தது' சந்தியா கேட்கவும் தாயின் மடியில் முகம் புதைத்து அழும்

மழலையாக அவள் சந்தியாவின் மடியில் 'அண்ணி' என்று முகம்

புதைத்து தேம்பி அழ ஆரம்பித்தாள். ராஜத்ின் கண்கள் கலங்கியது.

சந்தியா அவள் தலையை வருடியவாறு 'என்னம்மா' என்றாள்.

ராஜத்திற்கு தன் முன் அவள் எதுவும் சொல்ல மாட்டாள் என

தோன்றியதால் ராஜம் ஹால்-க்கு சென்று யமுனா-கோபாலுடன்

அமர்ந்தாள். 'என்னம்மா..உன் மருமகளை கெடுத்து வச்சிருக்கே..பகல்

தூக்கம் என்ன வேண்டியிருக்கு...என்றாள் நாததனாரின் தோரணையோடு

யமுனா! 'வாய மூடு...தலை சுற்றல்...இல்லாம கண்ட நேரத்திற்கு

தூங்கிறாவ இல்லே அவள்..' பத்மினிக்கு பரிந்து பேசினாள் ராஜம்.

'ஏம்மா...பத்மினிக்கு உடம்பிலே தெம்பு இல்லாதபோது குழந்தை எதுக்கு'

என்றாள் யமுனா. 'ஏன்.. நீகூடதான் நேகா வயததிலே இருக்கும்போது

பத்மீனிய விட மோசமா நொஞ்சனா இருந்தே... நீ பெத்துக்கிலயா..

ஏண்டி.. நீயும் ஒரு பெண்தானே' என்றாள் கோபத்துடன் ராஜம்.

'இல்லேம்மா..அண்ணாவுக்கு சரியான வேலையில்லே...திக்கு வாய்

ஆனதாலே நல்ல வேலை கிடைக்கிறதும் கஷ்டம்.. பத்மினிக்கோ

அப்பா-அம்மா இல்லே.. பிரசவ செலவு நம்ப தலையிலே தானே

விழும்.. என்றாள் யமுனா. கோபாலுக்கு அவள் தன்னை திக்கு வாய்

என்றது கோபம் வந்தாலும் தான் நினைத்தது நடந்தால் போதும்

என்றிருந்து விட்டான். ராஜம் திடுக்கிட்டவாறு கோபாலை நோக்கினாள்.

சந்தியா பத்மினி கூறிய அனைத்தையும் கேட்டு திடுக்கிட்டாள்.

சில சமயம் பெண்களுக்கு பெண்களே எதிரிகள். ஒரு பெண் மகளாக,

சகோதிரியாக ,மனைவியாக ,தாயாக, மாமியாராக என தொடர்ந்தாலும்

வந்த வழியினை சிந்திப்பதில்லை. தன்னுடையது என்று எண்ணும்போது

தலை முடிக்கும் மரியாதை.. பிறருடைது என்று எண்ணும்போது

எல்லாம் காற்று ஆகிவிடுகிறது... கண்ணதாசன் வாக்குபோல்!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Sat Jun 14, 2014 12:13 am

கதையில் புதிய வாட்டம் வந்திருக்கே.... அப்ப அடுத்த பாகம், சந்தியாவின் தாக்கா?
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...19

Post by cm nair » Sat Jun 14, 2014 3:22 pm

சந்தியா பத்மினிக்கு ஆறுதல் கூறினாள். அவளுக்கு கோபாலின் மீது

கோபகோபமாக வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பதற்கு

உதாரணமாக இருக்கிறேன் என்பதுபோல் கோபால்! 'என்னால்

முடிந்ததை உனக்கு செய்கிறேன் பத்மினி..கவலைப்படாதே.. என்றபடி

சந்தியா ஹால்-க்கு சென்றாள். 'அய்யோ...மதிய உணவு தயாரிக்க

வேண்டுமே என்றெண்ணி பத்மினி சமையல் அறைக்கு நுழையவும்

ராஜம் அங்கே வந்தாள் . 'அம்மாடி...முதல்லே... நீ ஏதாவது சாப்பிடு..

என்றவள் ஃப்ரிட்ஜ் திறந்து காய்கறிகளையும் ரெண்டு தட்டுகளையும்

எடுத்து ஹால்-க்கு சென்றாள்.பத்மினி பருப்பை அலசி குக்கர்-ல்

போட்டு நீர் ஊற்றி அடுப்பில் வைத்தாள். 2 இட்லிகளை சாப்பிட்டாள்.

சந்தியா மாமியார் ராஜத்ிடம் இருந்து கோசை வாங்கி பொடியாக அரிய

ஆரம்பித்தாள். ராஜம் சாம்பார்க்கு காய்களை நீர்-ல் அலசி அரிய

ஆரம்பித்தாள். கோபால் யமுனாவிடம் பேச சொல்லி செய்கை

செய்தான். யமுனா தன் பேச்சினை தொடர்ந்தாள். 'என்னம்மா..நான்

சொன்னதை யோசனை செய்திங்களா... என்றவுடன் 'என்ன விஷயம்

என சந்தியா கேட்கவும் யமுனா அவள் காதில் முணுமுணுத்தாள். அதை

கேட்ட சந்தியா திடுக்கிட்டாள். பத்மினிக்கு ஒன்றும் கேட்கவில்லை.

ஆனால் தன்னை பற்றி என்று மட்டும் புரிந்தது. அவ்வளவு மெதுவாக

பேசி கொண்டிருந்தார்கள். எவ்வளவு பொய் சொல்லி கல்யாணம்

பண்ணி கொடுத்தோம்...நல்லபடியா பாத்துக்க வேண்டியது அவன்

பொறுப்பு.. அவனுக்கு குடும்பம்னு ஆயிட்ட..அப்பறம் நம்ப அதிலே

மூக்கு நுழைக்கிறது நல்லதில்லே..என்றாள் சந்தியா. 'அய்யோ..

அண்ணி...அண்ணாவே சொன்னது இது என்றாள் யமுனா. ராஜத்ின்

கண்கள் கலங்கியது.இப்போது சந்தியாவின் குரல் உயர்ந்தது...

கோபத்தோடு கோபாலை நோக்கியவள், 'ஏன்..தம்பி...கல்யாணத்துக்கு

முன்னாடியே யோசிக்க வேண்டியது தானே...ஏன் அப்பவும் 2

வருடத்துக்கு ஒரு முறை தானே வேலைக்கு போய்கிட்டு

இருந்தீங்க.. இப்பவும் அதேயே தொடர்ச்சி செய்றிங்களோ..என்றாள். '

படிச்ச பொண்ணு..அனுபவசாலி... புரிஞ்சுப்பாணு நினைச்சேன்.

வேலைக்கும் போக முடியும் இல்லயா...என்றான் கோபால்.சந்தியா

விடவில்லை. 'அப்ப ஏன் நிச்சயதார்த்ததுக்கு அவங்க வீட்டிலேயும்,அவ

கிட்டேயும் வேலைக்கு போக வேண்டாம்-னு சொன்னே..எங்க

மானத்தை வாங்கவா..என்றாள் கோபமாக.. ' இல்லே...அண்ணி

இப்பவும் வேலைக்கு போக சொல்லலேயே.. வயிற்றில்

இருக்கிறது...இப்ப வேண்டாமேன்னு தானே சொலேறேன் என்று

இழுத்தான் கோபால். சந்தியா செல்வ சிறப்புடைய வீட்டில் பிறந்தவள்.

முரளியை கை பிடித்த பின்தான் ராஜம் அவள் தந்த சீதனத்தால்

மக்களுக்கு திருமணம் முடித்தாள்.அதனால் எல்லோருக்கும்

சந்தியாவிடம் மரியாதை இருந்தது.கமலம் சொன்னதையே சந்தியாவும்

கூறினாள். அதற்குள் யமுனா 'வேலை இருந்தாதானே குடும்பம் ஓட்ட

முடியும் அண்ணி' என்றாள். கேள்வி குறியாக..சந்தியா கோபாலை

பார்தாள். 'ஆமா..அண்ணி.. எனக்கு வேலையில்லே... இனிக்கு 2

மணிக்கு ஒரு இன்டர்‌வ்யூ-க்கு போகணும் என்றதும் உள்ளே இருந்த

பத்மினியும், ராஜமும் திகைத்தார்கள். 'பிறகு தினமும்..நீ எங்கே

போய்ட்டு இருந்தே..என்ற ராஜத்ின் கேள்விக்கு பதில் இல்லை.

பத்மினியின் வேதனை அதிகமாகியது.'கல்யாணம் முடிந்தும் ஏன்

தம்பி...இன்னும் மாறாம இருக்கீங்க.. எல்லாருக்கும் குடும்பம்

ஆயாச்சு...இனி எல்லாரும் கூட இருப்பாங்கனு எதிர்பார்க்க வேண்டாம் '

என்று கறாராக பேசினாள் சந்தியா. கோபாலுக்கும்-யமுனாவிற்கும்

சந்தியா பேசியது பிடிக்கவில்லை.சந்தியா அப்படியாவது நல்ல பதிலை

கிடைக்குமென எண்ணினாள். ராஜத்திற்கு சந்தியாவின் மனம்

புரிந்தது. உடன்பாடு கிடைக்காமல் போகவே யாரும் எதிர்பாராத

வண்ணம் கோபால் கூறிய பதிலால் அனைவரும் ஸ்தம்பிக்க...பத்மினி

நிலைகுலைந்து சிலையாக அமர்ந்தாள். அப்படி என்னதான்

சொன்னான்..?

புரியாதவர்களை புரிந்து கொள்ள சொன்னால் புரியவில்லை என்று

புரிந்தும் புரியாதது போல் இருந்தால் புரிய வைப்பது எப்படி..?

(என்ன...செல்வா...முணுமுணுகிறீங்க...என்னை மாதிரி என்ற...?) :blove: :Bcry:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Sat Jun 14, 2014 3:47 pm

புரிந்தும்
புரியாத பிடிவாதம்
புரிய பிரிக்கிறது.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Sat Jun 14, 2014 5:49 pm

selva..plz come fb
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...20

Post by cm nair » Sun Jun 15, 2014 11:27 pm

நீங்க அவளை சொல்லி புரிய வைப்பிங்கேன்னு நெனச்சேன்..இப்ப நீங்க

சொல்லி தான் தெரியறது...'எல்லாருக்கும் குடும்பம் தனிப்பட்ட

முறையில் இருக்கறது... எனக்கு எதுவும் உங்ககிட்டே பேசறதிக்கிலே..

ஒரு தீர்மானம் எடுத்திட்டா அதில இருந்து பின் மாறி நிற்பவனல்ல

நான். ஆனாலும் பெரியவங்க உங்க உதவி எதிர்ப்பார்த்து என் தப்பு...

அவளுக்கு என்னை விட குழந்தை தான் முக்கியம்-ன நாங்க ஒண்ணா

வாழறதே விட பிரியறதே நல்லது.. என்றவன் படுக்கை அறைக்கு

சென்று உடை மாற்றி வெளியே கிளம்பியவன் ' போய்ட்டு வரேன்

யமுனா...தங்கையிடம் மட்டும் கூறி கொண்டு கிளம்பினான். மௌனம்

நிலவியது. யமூனாவிற்கு அவன் பதில் பிடித்து இருந்தது.சந்தியாவின்

கண்களிலும்,ராஜத்ின் கண்களிலும் நீர் பிரவாகம்.. 'ஏனம்மா...அவன்

நல்லாயிருக்கினமேன்னு தானே சொன்னே... தப்பா புரிஞ்சுகிட்டா எப்படி

என்றாள் சந்தியா. குக்கர் சீட்டி அடிப்பதை கேட்டு சமையல் அறைக்குள்

நுழைந்தாள் யமுனா. குக்கர்-ன் சீட்டியையும் மறந்து பத்மினி

அழுதவாறு சிலையாக அமர்ந்திருந்தாள். gas-ஐ அணைத்த யமுனா

பத்மினியின் பக்கம் திரும்பினாள். 'இப்போ அழுது என்ன பிரயோஜனம்...

கொஞ்சும் விட்டு கொடுத்து போய்யிருந்த இப்படி கேட்க வேண்டி

வந்திருக்குமா....? உன் தலையெழுத்திற்கு எல்லாரையும் அழ

வைச்சிட்டியே..என்று கத்தினாள். ஏற்கனவே பத்மினியின் வெந்த

புண்ணில் ஈட்டியை குத்துவதை உணர்ந்த சந்தியாவும்,ராஜமும்

சமையல் அறைக்கு வந்தனர்.'யமுனா..பேசமே இரு...'என்று ராஜம்

கூறியும் அவள் பொருட்படுத்தவில்லை. ' ஏன் யமுனா..ஆரம்ப நிலயா

இருந்தா உன் அண்ணா சொன்னபடி செய்திருப்பே... 3 மாதம் அதாவது

90 நாட்களானதை எப்படி அழிக்க முடியும்..? நேகா அப்படியாயிருந்த நீ

அழிச்சிருப்பியா..இப்போ 5 மாதமாகிவிட்டது... எப்படி அழிக்க

முடியும்..? என்றாள் அழுதவண்ணம் பத்மினி. பத்மினியும், யமுனவும்

ஒரே வயதை உடையவர்கள். 'வாய் பேச்சுகொண்ணும் குறைச்சல்

இல்லே.. அப்ப அனுபவி..ஆனா ஏன் குடும்பத்தை இழுக்காதே... என்

வீட்டுக்காரர் நல்ல வேலையில்தான் இருக்கிறார்..அதனால் எங்களுக்கு

அதை பத்தி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றாள்

யமுனா. 'எவ்வளவு விஷயங்களை மறச்சு கல்யாணம் பண்ணிங்க..

அப்ப இந்த வாய் எங்கிருந்தது.. என்றாள் பத்மினி. குற்ற உணர்வால்

சந்தியா தலை குனிந்தாள். 'சரி...நாங்க எல்லாம் மறைச்சு

செய்தோம்... கல்யாணம் முடிஞ்சப்போ அண்ணாவை பத்தி எல்லாம்

தெரிஞ்சதுதானே..அப்பவே விட்டு தொலைக்க வேண்டியதுதானே...

விட்டு தொலைச்சிருந்தா ஏன் அண்ணனுக்கு நல்ல பொண்ணு

கிடைச்சிருக்கும்...இப்படி திமிர் பிடிச்சவ கூட வாழ வேண்டி

வந்திருக்காது என்றாள் யமுனா. ராஜம் அவளை அடக்கினாள். அவள்

அடங்குவதாக இல்லை. பத்மினி இனி இவளை பேச விட கூடாது என்ற

முடிவுக்கு வந்தாள். 'அம்மா சொன்னதால்தான்... ஒரு குழந்தை பிறந்தா

சரியாயிடுமின்னு... சொன்னாங்க.. எல்லாம் மறந்து நேசிச்சே...

சுயநலவாதின்னு புரிஞ்சுக்க நேரமாயிட்டது... ஏன் உன் அண்ணாவுக்கு

மட்டுமில்லே..பிரிஞ்சு வாழற எல்லாருக்கும் வாழ்க்கை கிடைக்கும்...

என்றாள் பத்மினி. மெல்ல எழுந்த பத்மினி துக்கம் பொங்கி வருவதை

மறைக்க தண்ணீர் குடித்தாள். 'அதானே..பார்த்தேன்..அப்படின்னா..உன்

வயததிலே வளர்வது..யார் குழந்தையோ... கேடு கெட்டவளையா என்

அண்ணன் வச்சிருக்கான் என்றதும் யாரும் எதிர்பாரா வண்ணம்

பத்மினியின் ஐந்து விரல்கள்களும் யமுனா-வின் கன்னத்தை பதம்

பார்த்தது. யமுனா இதை எதிர்பார்க்கவில்லை. ராஜமும்,சந்தியாவும்

விக்கித்து நின்றனர். ' யார..பத்தி..நீ என்னல்லாம்..சொல்றியோ..

அதெல்லாம் உனக்கு ஒரு நாள் திரும்பி கிடைக்கும்..'கோபமும்

அழுகையுமாக கூறீனாள் பத்மினி.அவள் முகமும்,கண்களிலும் சிவந்து

இருந்தது. கோபாலை தவிர பத்மினியின் கோபம் யாரும் அறிந்து

இருக்கவில்லை. பசு போன்ற பத்மினி புலியாக மாறியிருந்தாள். சிவந்த

சேலையில் சிவந்து நின்றவள் காளியாக மாறுவாள் என யாரும்

எதிர்பார்க்கவில்லை.

ஒருவரை குறித்து அவ தூறு கூறுவது எளிது.ஆனால் அதே அவதூறு

தனக்கு திரும்ப கிடைக்கும் போது தான் பிறரது வலி தெரியும். மேலே

தூக்கி எறிந்த ஆப்பிள் பூமிக்கு வந்த.... ந்யூட்டனின் புவிஇர்ப்பு விசை

போல்... கூறியவரை வந்து சேரும்..! மல்லாந்து படுத்து துப்பினால்

துப்பினவங்க மேலே தானே விழும்..?
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”