சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Fri Jun 06, 2014 9:37 pm

but this ID search la varala FB ku, my name u search and find me
Last edited by Aruntha on Fri Jun 06, 2014 9:48 pm, edited 1 time in total.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Fri Jun 06, 2014 9:41 pm

now see dear...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Fri Jun 06, 2014 9:51 pm

ok done
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...15

Post by cm nair » Tue Jun 10, 2014 10:10 pm

அதிர்ந்து போனாள் பத்மினி.மானின் மருண்ட கண்கள்...இவன் என்

மழலையை கொல்ல வந்தானோ... அவனது மறு கரம் ஆலிலை

வயற்றில்... அவள் கண்கள் சென்ற திசையை கண்ட கோபால்

கரத்தினை மெதுவாக பின்னுக்கு இழுத்தான்.மானின் மருண்ட கண்களில்

கனல் தீ பரவ ஆரம்பித்தது. பத்மினி தன் கோபத்தை அடைக்கியவாறு

படுக்கையை மடக்க ஆரம்பித்தாள். 'பப்பி...நான்...என்று பேச

வந்தவனை தன் சைகையால் 'ஒன்றும் பேச வேண்டாம்' என்றாள்.

ஏதேனும் பேசி ராஜத்தை எழுப்ப அவள் விரும்பவில்லை.

போர்வையும், தலயனையும் எடுத்து கொண்டு கதவை திறந்து ஹால்-ல்

ராஜத்ின் கட்டில்-ன் கீழ் விரித்து படுத்தாள். கோபாலுக்கு அவள்து

செய்கை வேதனையும்,கோபமும் அளித்தது என்றாலும்.. கைக்கு

எட்டியது வாய்க்கு கிட்டாமல் போனதில் நிராசையானது.ஒரு நாள்

வரமாலா போகும் என எண்ணி படுத்தான். ஹால்-ல் படுத்த பத்மினிக்கு

உறக்கம் வாராமல் புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.ஆணித்தரமாக

அவன் குழந்தை வேண்டாம் என்று சொன்னதால் அவனுடன் அவளுக்கு

உடன் பாடில்லை.எப்பொழுதும் பெண்தான் அனுசரித்து

போகவேண்டுமா...? பெண்கள் என்ன கிள்ளு கீரையா..? அன்புக்கு

க்ட்டுப்படுவாள் பெண்..அகங்காரத்திற்கு அல்ல... என்று எண்ணியாவாறு

தூங்கி போனாள். காலை மணி 5 ஒலிக்கவும் 'கிருஷ்ணா' என்று எழுந்த

ராஜம் தன் காலின் அருகே ஏதோ தட்டுப்படவே கீழே பார்த்தவள்

பத்மீனியை கண்டு திடுக்கிட்டாள். 'பிள்ளைதாச்சி பொண்ணு... இவ..

ஏன்..இங்கே?சுருண்டு கிடந்த பத்மீனியை எழுப்பினாள்.

'அம்மா...பத்மினி..எழுந்து மேலே படு...' என்றாள். தூக்க கலக்கத்தில்

பத்மினி மேலே ராஜத்ின் படுக்கையில் படுத்தாள்.ராஜம் படுக்கை

அறையில் எட்டி பார்த்த போது கதவு திறந்து இருந்தது. கோபால்

தலயனையை கட்டி பிடித்து படுத்து இருப்பது தெரிந்தது. ' நேத்து என்ன

நடந்திருக்கும்....ஏன் பத்மினி...ஹால்-ல்...என்னதான் நடக்குது

இங்கே? முணுகியவாறு தன் காலை கடமைகை செய்ய துவங்கினாள்

ராஜம். மணி 5.30. திடுக்கிட்டு எழுந்த பத்மினி தான் ராஜத்ின்

படுக்கை-ல் இருப்பதை உணர்ந்தாள். ராஜாத்திற்கு என்ன பதில்

சொல்வது...குடைந்து..குடைந்து கேட்பார்களே...ம்..வருவது வரட்டும்...

என்று எண்ணியவாறு எழுந்தாள்.

பத்மீனியை கண்டால் ராஜம் 'ஏன்மா..முடியலனா படுத்துக்க வேண்டியது

தானே...என்றாள். அடுப்பை பற்ற வைததாவாறு! எனக்கு

ஒண்ணுமில்லாமே..குரல் தடுமாறியவண்ணம் பத்மினி. 'நீ எப்படி

ஹால்-ல் ..வாயை கிளறினாள் ராஜம். 'அது வந்து...ரொம்ப புழுக்கமா

இருந்தது...அதான்..உங்க கிட்டே படுத்தேன்..பாதி..பாதியாக

வார்த்தைகள்...அவள் எதையோ மறைக்கிறாள் என்பது ராஜத்திற்கு

புரிந்தது..

அந்தரங்கம்....கணவன்-மனைவிக்கு உரியது... மூன்றாம் நபருக்கு

அதில் முக்கியத்தவம் இல்லை.பறை சாற்றினால் அது அந்தரங்கம்

ஆவதில்லை..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Tue Jun 10, 2014 10:39 pm

சில கற்பனைகள், கண்ணுக்குள் அகப்படுவதில்லை ...


தொடரட்டும்...
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Wed Jun 11, 2014 4:45 pm

மனதின் எண்ணங்கள் ஊற்று எடுக்கும்போது எழுவது கற்பனை. சில சமயம் அது கண்ணுக்குள் காண்பதும்,காணாமல் இருப்பதும் நடை முறையில் வருவது உண்டு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Wed Jun 11, 2014 4:55 pm

cm nair wrote:மனதின் எண்ணங்கள் ஊற்று எடுக்கும்போது எழுவது கற்பனை. சில சமயம் அது கண்ணுக்குள் காண்பதும்,காணாமல் இருப்பதும் நடை முறையில் வருவது உண்டு.
நீங்க ரொம்ப புத்திசாலி...

கற்பனைகளை கண்ணெதிரே கொண்டு வந்தாலும் ஆச்சர்யத்திற்கு இடமில்லை :enn:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...16

Post by cm nair » Thu Jun 12, 2014 8:11 am

தேநீர் தயாரித்த ராஜம் பத்மினீக்கும் ஒரு கோப்பையில் ஊற்றியவாறு

அவளிடத்தில் வந்தாள். பத்மினிக்கு மனம் பட படத்தது.என்ன

கேட்பார்களோ என்ற பயத்தில் முகத்தில் தோன்றிய வியர்வை

துள்ளிகளை மீண்டும் முகம் கழுவுவது போல் கழுவினாள். எல்லாம்

கவனித்து கொண்டிருந்த ராஜம் ஒன்றும் பேசவில்லை. தேநீர்

அருந்தியவள் 'அம்மா...உங்களுக்கு கோவிலுக்கு போகணம்

இல்லியா...நீங்க குளிச்சிடுங்க... நான் அதற்குள் வாசல் கூட்டி கோலம்

போட்றேன்...என்றவாறு ராஜத்ிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று

எண்ணி புடவையை தூக்கி சொருகியவாறு வாளியில் நீர் எடுத்து

சென்றாள். சந்தியா - யமுனா இருவரையும் வரவழைத்தால் இங்கு

என்ன நடக்கிறது என்பது தெரியும் என்று எண்ணியவாறு ராஜம் குளிக்க

சென்றாள்.வாசலை கூட்டி நீர் தெளித்து கோலம் புள்ளிகள்

வைத்தவளின் நினைவு அவளது அம்மா- அப்பாவிடம் சென்றது.

விழிகளின் நீர் துள்ளிகள் கோலபுள்ளிகளை கலைத்தது.திடீரென ஒரு

நிழல் தெரியவே ஏறிட்டு நோக்கியவள் திடுக்கிட்டாள். அங்கே கோபால்

கையில் brush-மாக நின்றிருந்தான். 'நேத்து ஒண்ணும் நடக்கல...பின்

ஏன் இவள் விழிகளில் நீர் கோலம்? அம்மாவிற்கு ஏதேனும் தெரிந்து

இருக்குமோ? அவன் சிறிது பயந்தான். பத்மினி விழிகளை

துடைத்தாள்.அவள் கோலமிட அமர்ந்த கோலத்தில் போதையும், நேற்று

இரவு அவள் நடந்து கொண்ட விதத்தின் கோபமும் அவனது விழிகளில்

இளம் சிவப்பாக மாறியது. ஒர கண்ணால் அவனை பார்த்த பத்மினி

புடவையை சரி செய்தாள். 'வீட்டுக்கு கொண்டு வருகிற நாய்- க்கு

லைஸெந்ஸ் கட்டி பாக்கறது அது அந்த எஜமான் சொல்றபடி

கேட்பதற்கு.. அது அதோனோட கடமை' என்றான்.திடுக்கிட்டாள் பத்மினி.

நாயோடு தன்னை ஒப்பிடும் அளவிற்கு நான் செய்த பாவம்தான் என்ன?

இவனது தில்லுமுல்லுகளை அறிந்தும்...அவன் மழலையை சுமப்பதா..?

'நன்றி உள்ள நாய் தன் எஜமானே தன் மழலைக்கு காலன் என்று

தெரிந்தபின் எப்படி வாலாட்டி அன்பை காட்ட முடியும்? கடிக்காமல்

விட்டதே மகா பாக்கியம்.. என்றபடி உள்ளே சென்றாள். 'படித்த

திமிர்'என்று முணுமுணுத்த வண்ணம் பல் துலக்கி ஹால்-ல் டீ.வீ,

பார்க்க அமர்ந்தான் கோபால். பத்மினிக்கு அவன் அவ்வாறு பேசியது

கண்களில் ஈரம் கசிய வைத்தது. குளித்து முடித்து வெளியே ராஜம்

வரவும் பத்மினி குளிக்க சென்றாள்.சாமி கும்பிட்டு முடித்த ராஜம் மீதி

இட்லி,சட்னி தயார் செய்தாள். கோபாலிடம் 'டீ வேணுமா' என்றாள்

எரிச்சலுடன்!அவன் பத்மினியின் செக் அப் குறித்து கேட்காததால்

எரிச்சல்! 'ம்' என்ற கோபாலுக்கு டீ கொடுத்தவள் 'இன்னைக்கு வேலை

இல்லயா' என்றாள். 'ஏன் ' என்றவனுக்கு மதியம் ஒரு கம்பனி-இல்

இன்டர்‌வ்யூ-க்கு அழைப்பு இருந்தது. 'இல்லே...சும்மா கேட்டேன்..' என்ற

ராஜத்திற்கு அவன் பதில் அளிக்கவில்லை. பத்மினி குளித்து முடித்து

படுக்கை அறையில் கண்ணாடி முன் அமர்ந்தவள் சிறு போட்டு இட்டு

நெற்றி வகிட்டில் குங்குமம் இடவும் கோபால் உள்ளே நுழைந்தான்.

சோப்பின் நறுமணமும், எளிமையிலும் தேவலோக கன்னிகையாக

சிவப்பு சேலையில் மின்னிய தன் அழகிய ராட்சஷியை பார்த்து

பெருமூச்சு விட்டான்.

ஆசை யாரை விட்டது..? ஒருபுறம் சுயநலத்தில் விளைந்த கனவும்,

காமமும் போட்டியிட ஆயத்தமானது. மறு புறம் பயமும்,

பிரார்த்தனையும் கைக் கூப்பி நின்றது. எது ஜெயிக்கும்..?

சுயநலமா..பிரர்த்தனைய... பொறுத்து இருந்து பார்கலாம்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Thu Jun 12, 2014 9:35 am

இதென்னடா புதுவிதமான கேள்வியாக இருக்கு???

நாளை பார்ப்போம்.
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by kselva » Thu Jun 12, 2014 5:24 pm

சுய நலம் -3 எப்போது வரும். :great:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”