சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Sun Nov 09, 2014 6:32 pm

குத்து விளக்கின் நெருப்பில் காயம் காய்ந்து விடும்... ஆனால் மின்சார விளக்கில் உயிர்தான் மாய்ந்து விடும் true words
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...30

Post by cm nair » Mon Nov 10, 2014 1:11 pm

'அம்மா' என்று அலறியவாறு சந்தியா,சுதா என அனைவரும் ராஜத்ின் அருகில் சென்றனர். சுதா தண்ணீர் கொண்டு வந்தாள். கோபால் திகைப்புடன் அமர்ந்திருந்தான். சந்தியா 'என்ன கோபால்..சிறிது நேரம் பேசிட்டு சொல்லி இருக்கலாமில்லே..இது கூடவா உனக்கு தெரியாது..?'என கடிந்து கொண்டாள். முகத்தில் நீர் தெளித்து கண்களை திறந்த ராஜம் மீண்டும் மயக்க நிலை அடைய வே டோக்ட்ரை வரவழைத்தார்கள். டாக்‌டர் சதாசிவம் உடனடியாக அட்மிட் செய்ய சொன்னார். அவர் கூறியது கேட்டு அனைவரும் நிலை குலைந்தனர். 'மைல்ட்..ஹார்ட் அட்டாக்' இது தான் அவர் கூறியது.ராஜத்தை அட்மிட் செய்தாகி விட்டது. முரளி கோபாலிடம் 'நீ வந்த வேலை ஓவர்-லே..நீ கிளம்பு..நாங்க பார்த்து கொள்கிறோம்' என்றான். கோபால் அமைதியாக நின்றான். 8 மணி நேரம் எப்படியோ கடந்து சென்றது. ராஜத்தை சென்று பார்கலாம் என்ற நிலையில் 'சந்தியா..யாரும்மா' என்றார் டாக்‌டர் சதாசிவம். சந்தியா முன் வந்தாள் 'நீங்க போய் பாருங்க..உங்க பெயரை தான் கூப்பிடுட்டு இருக்காங்க' என்றார். சந்தியாவிற்கு பயம் பிடித்து கொண்டது. என்ன கேள்விகள் கேட்க போகிறார்களோ..என்ன சொல்வது' என்ற நிலையில் அவள் முரளியையும்,ரகு,சுதாவை பார்த்தாள். முரளி அவள் முதுகை தட்டி 'தைரியமாக போ' என்றான்.சந்தியா எல்லா தெய்வங்களையும் பிரார்த்திததவாறு ராஜத்ின் அருகே சென்றாள். ராஜம் சந்தியாவை தன் அருகே அமர சொன்னாள்.சந்தியா அமரவும் அவள் கரங்களை தன் கைக்குள் வைத்து கொண்டு 'என்ன..சந்தியா..நீ கூட..எங்கிட்டே இருந்து மறைசிட்டியே..'ராஜத்ின் கண்கள் கலங்கியது. சந்தியாவிற்கு என்ன சொல்லுவதென தெரியாமல் கண் கலங்கியது. 'இல்லேம்மா..'என்ற சந்தியாவிடம் 'அவங்களுக்குள் அப்படி என்ன தான் ப்ராப்லம்' என்றாள் ராஜம். 'நீங்க இருந்தபோது நடந்த ப்ராப்லம் மட்டும் தான்..குழந்தை விஷயம்..என்றாள். 'நீ...வீட்டுக்கு மூத்த மருமகள்..நீ எப்படி இதுக்கு சம்மதிச்சே..நல்லபடி சொல்லி..அதை விலக்கியிருக்கலாமில்லாயா' என்ற ராஜத்ிடம் 'உங்களுக்கு தான் கோபாலின் குணம் தெரியுமே..அதுவுமில்லாமே அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு..எல்லாம் செய்திட்டு தான் சொன்னாங்க..' என்றாள் நாத்ழுக்க. 'ஆக மொத்தம்..எல்லாரும் எங்கிட்டே இருந்து எல்லாம் மறைக்க கத்துகிட்டிங்க..நான் இந்த வீட்டில் யாருமில்லே.. இல்லியா..என்று அழுதவாறு கூறிய ராஜத்தை 'அய்யோ..அப்படி இல்லேம்மா...எதுவுமுங்களால் தாங்க முடியாது என்பதால் சொல்லவில்லை. 'பத்மீனிய..இனி பார்க்கவேமுடியாதா... இவன் இப்படி இனி எப்படி..ஒத்தையாதான் இருக்க போறானா..' என்றாள் ராஜம். 'நான்கு மாதம் ஆகி விட்டது..நான் அங்கிருந்து வந்து..இனி நான் அங்கே போனா..பத்மினி நினைவு தான் அதிகமா இருக்கும்...நான் இங்கேயே இருக்கிறேன்..' என்றவளிடம் 'எங்கிட்டே கொஞ்சும் நாள் இருக்கலாம் இல்லயா..' என்றாள் சந்தியா. 'பார்க்கலாம்' என்ற ராஜம் 'பத்மினி இப்போ...... எங்கே இருக்கானாவது தெரியுமா'
என்றாள். ''தெரியலமா' என்றாள். பெருமூச்சுடன் கண்களை ராஜம் மூடி கொள்ளவும் சந்தியா வெளியேறினாள். சந்தியா வெளி வரவும் அனைவரும் அவளை சூழ அவள் நடந்ததை கூறினாள். கோபாலின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. உறங்கும் தாயை பார்த்து விட்டு அவன் கிளம்பினான். 2 நாளில் டிஸ்‌சார்ஜ் செய்யலாம் என்ற டாக்‌டர்-ன் கருத்துப்படி முரளியும் சந்தியாவும் சிறிது பணம் ரகுவின் கையில் கொடுத்து விட்டு சென்றனர். வீட்டிற்கு சென்ற கோபால் அசதியாக உட்கார்ந்தான்.அவனுக்கு அம்மாவின் நிலை வேதனை அளித்தாலும்.. காமினி வந்து விட்டால் சரியாகி விடும் என நினைத்தான். எழுந்து . குளித்தவன் சாப்பிட்டு படுத்தான். அவன் மனத்தில் காமினியை குறித்த எண்ணங்கள்ள் ஓடியது.மறு நாள்.. கோபால் எப்பவும்போல் வேலைக்கு சென்றான். ஆப்பீஸ்-ல் காமினி வரவில்லை..மணி 10.30 என காட்டியது. கோபாலுக்கு வேலை ஓடவில்லை.'என்ன ஆயிற்று..காமினிக்கு'என சிந்தித்தபடி ஃபைல்ஐ எடுப்பதும்..வைப்பதுமாக இருந்தான். சங்கருக்கு சிரிப்பு வந்தது. இங்கே.. காமினி காரை ஒட்டி கொண்டு வரும்போது தான் கவனித்தாள்..முன்னே பைக்-ல் சிரித்து பேசியபடி செல்லும் தம்பதிகளை..! நன்கு தெரிந்த முகம் ..அந்த பெண்..அவள் அவர்களை ஒவர்டேக் செய்த வண்ணம் ஹோர்ன் அடிக்க அந்த பெண் திரும்பி பார்த்தாள். 'என்னங்க..வண்டிய..கொஞ்சும்..ஸைட்-லே நிறுத்துங்க...என்றாள் கணவனிடம்.காமினியும் காரை ஸைட்-ல் நிறுத்தினாள். கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை..ஏன் கண்மணி வண்டியை நிறுத்தினாள்...காரில் இருந்து இறங்கும் பெண் யார்'என யோசிக்கவும்.. கண்மணி 'ஏம்மா..எங்க வண்டி..முன்னாடி காரை ஒவர்டேக் பண்ணெறே...கண்ணு தெரியாமயா வண்டி ஓட்டாரே' என்று சண்டை போடவும் கணேசன் அதிசயமாக தன் மனைவியை பார்த்தான். ஏன் எனில் கண்மணி யாரிடமும் சண்டைக்கு போகாதவள். காமினி கண்ணாடி கழற்றினாள். 'ஏன்..நீ கொஞ்சும் ஸைட் ல போனாதான் என்ன' என்றாள் பதிலுக்கு பதில்.. இருவரும் சண்டை போட்டார்கள். கணேசன் கண்மணி என அழைக்கவும்...அங்கு நடந்த காட்சி கண்டு திகைததான். சண்டை போட்டவர்கள்ள் கட்டி பிடித்து கொண்டு இருந்தார்கள். 'ஹேய்..காமினி..நீ எப்படி..அமெரிக்கா-ல இருந்து வந்தே..என்ற அவள் குரல் கண்மணி என காட்டி கொடுக்க இறுக அணைத்த காமினி 4 மாதமா இங்க தான் இருக்கே..கண்மணி கணேசனை அறிமுகப்படுத்தினாள். 'என்னங்கா..இவ..நான்..பத்மினி..நாங்க மூவரும்.. முதல் இருந்து காலேஜ் வர ஒண்ணா படிச்சவங்க..என அறிமுகம் செய்தாள்.கணேசனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..'வீட்டுக்கு வாங்களேன்' என்றவனிடம் 'அய்யோ..லேட் ஆய்யிடுச்சி.. கண்மணி...பப்பிய எங்கே இருக்காளோ..சரி..நீ...உன் நம்பர் கொடு..நான் கூப்பிடேறேன்'என்றவள் கண்மணியிடம் போன் நம்பர்-ஐ வாங்கி சென்றாள்.

சிலரது அன்பு நம்மை கட்டி போடும்.நட்போ நகர விடாது.உண்மையான காதலில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து செல்லும்.உண்மையில்லாத சுயநல காதல்...முடிவில் சுயம் தன்னையே வேதனைக்கு உள்ளாகிவிடும்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Tue Nov 11, 2014 2:54 pm

சிலரது அன்பு நம்மை கட்டி போடும்.நட்போ நகர விடாது.உண்மையான காதலில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து செல்லும். mmmm true
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...31

Post by cm nair » Fri Nov 14, 2014 12:05 am

காமினியின் மனம் நிறைந்து இருந்தது. தன் பால்ய கால தோழியினை சந்தித்ததில்..பத்மினி..எங்கே இருக்கிறாளோ..அவள் திருமணத்திற்கு போக இயலவில்லை.தன் MBA ப்ரொஜெக்ட்காக அவளுக்கு லண்டன் செல்ல வேண்டிய சமயம் ஆனதால் யாரரியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் கண்மணி கிடைத்து விட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து பத்மீனியை கண்டுபிடிப்போம் என எண்ணியவாறு காரை அலுவல்கத்தில் நிறுத்தினாள். உள்ளே நுழைந்த அவளை அனைவரும் ஆச்சிரியமுடன் பார்த்தனர்.. அவள் சேலை கட்டி இருந்ததாள். கோபாலும் கவனித்தான். அனைவரையும் பார்த்தவள் ஒர கண்ணால் கோபாலை பார்த்து விட்டு அறையின் கதவின் அருகே சென்றபோது 'மேடம்..புடவையில்..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..என்றாள் ஸ்டாஃப் புவனா.'தாங்க்ஸ்' என்று புன்னகையுடன் கூறி உள்ளே சென்று அமர்ந்தவள் பீயூன் ரங்கசாமியை கூப்பிட்டாள். 'ரங்கசாமி...நீங்க போய்..லட்டு வாங்கி எல்லாருக்கும் கொடுங்கா' என்ற படி ரூபா 2000/- எடுத்து கொடுத்தாள். அவள் மனம் நிறைந்து இருந்தது. தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள். ரங்கசாமி ஒன்றும் கேட்கவில்லை. 'அம்மாவை..பொண்ணு பாக்க வந்து இருப்பாங்களோ'அதான் சேலை, ஸ்வீட் எல்லாம் போல் இருக்கு' என மனத்தில் கூறியவன் லட்டு வாங்கி கொடுத்தவண்ணம் வந்தவன் கோபாலிடம் 'எடுத்துகோங்க ஸார்'என கூறவும் 'என்ன விசேஷம்..ரங்கசாமி'என கேட்டவாறு வாயில் போட்டவனிடம் 'காமினி அம்மாக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்கும் போல் இருக்கு..அம்மா தான் எல்லாருக்கும் வாங்கி கொடுக்க சொன்னாங்க' என்றதும் கோபாலின் முகம் மாறியது. சங்கர் அவனை கவனித்தான். மீண்டும் உள்ளே சென்ற ரங்கசாமி பாக்கி பணம் கொடுக்க 'பரவாய்யிலே..நீங்க வச்சுக்கோங்க..'என்றவளிடம் தலை சொறிந்த வண்ணம்'அம்மா ..ஒன்னு கெட்ட தப்ப நினச்சுக்க மாட்டீங்களே..என பீடிகை போட்டான் ரங்கசாமி. 'சொல்லுங்க' என்றவளிடம் 'உங்களை பொண்ணு பாக்க வந்தாங்களா அம்மா..' என்றான் தயக்கதுடன். காமினி சிரித்த வண்ணம் 'அட போங்க ..ரங்கசாமி..'என கூறவும் சிரித்தபடி வெளியேறினான். காமினி சங்கரை அறைக்கு அழைத்தாள். உண்மையில் சேலையில் மிக அழகாக இருந்தாள் அவள். காஷ்மீர் ஆப்பிள் போன்ற சருமத்திற்கு மெருன் கலர் புடவை மேலும் அழகு கூட்டியது. எளிமையாக வந்திருந்தாள்.வேல் விழிகளில் மெலிதான ஐ-லைநர் மட்டுமே.செல்வாக்கில் வளர்ந்தவளின் கன்னங்கள் மின்னியது. 'என்னா...ஆச்சு..சங்கர்..என்ற அவளின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தான். தட்டு தடுமாறியவன்... 'ஒண்ணுமில்லே..மேடம்..இன்னிக்கு நீங்க ரொம்ப அழக இருக்கீங்க' என்றான் சங்கர். காமினி சிரித்து கொண்டவாறு 'தாங்க்ஸ்' என்றாள். அவளுக்கு சங்கரை குறித்து தெரியும். அனாவசியமாக பேசுபவனோ..பார்ப்பவனோ..அல்ல.அதிலும் தன் மனைவி விமலா மீது உயிரயே வைத்து இருப்பதும் தெரியும்.'நான் எதுக்கு கூப்பிட்டேன்னா..ஆடிடர்ஸ் வருவாங்க..கொஞ்சும் டீடேல்ஸ் கலெக்ட் பண்ண வேண்டி இருக்கு..கூட ஹெல்ப்க்கு வேணுமின்னா கோபாலை கூப்பிடுங்க' என்றவளிடம் 'ஓகே..மேடம்' என்றவன் மேடம்..நான் உங்களை ஒண்ணு கேட்க்கலாமா.. என்றான் தயக்கதோடு. 'கேளுங்க..சங்கர்'என்றாள் காமினி 'மேராஜூ..ஏதாவது ஃபிக்ஸ் ஆயிருக்கா..மேடம்..' ரங்கசாமியின் அதே கேள்வி கேட்டு சிரித்தாள். 'இல்லே..சங்கர்..சும்மாதான்..' என்றவளை இடைமறித்து 'லட்டு கூடவா' என்றான். 'இன்னிக்கு..என் தோழியினை சந்தித்தேன்..மனசுக்கு சந்தோசமா இருந்தது..அதனால லட்டு வாங்கினேன்'என்றாள் காமினி. ஓகே..மேடம்'என்று வெளியே வந்தவன் முதலில் கண்டது கோபாலை! அவனை கொஞ்சும் வெறுப்பு ஏற்றலாமென நினைத்து அவனருகே சென்றான் சங்கர். கோபால் ஏதோ ஆழ்ந்த சிந்தையில் . . இருந்தான். ... 'கோபால்..என்ன யோசனை...' என சங்கர் கேட்கவும் அவர்கள் அருகில் வந்தான் மெனெஜெர் ராஜேஷ். 'என்ன..சங்கர்..ரங்கசாமி சொன்னது சரி தானா...' கோபாலை ஒர கண்ணால் பார்த்தபடி சங்கரை பார்த்து கண் சிமிட்டினான் ராஜேஷ்.ஒரு விதம் கோபால்- காமினி விவகாரம் ஆஃபீஸ்-ல் ஒரு விதம் அரசல்..புரசல் தான்! 'ஆமா..மேடம்..கல்யாண பத்திரிகை..சீக்கிரம் வரும் போல் இருக்கு...ரொம்ப சந்தோஷமா இருக்காங்க...' என்றான் பங்கிற்கு சங்கர். கோபாலுக்கு ஆத்திரமும், கோபமும் பொங்க சில குறிப்புகளை ஒரு ஃபைல்-ல் இட்டு ராஜேஷின் கையில் கொடுத்து..'உங்க கந்ஸம்ப்ஶந் டீடேல்ஸ்' என்ற வண்ணம் எழுந்து பாத் ரூமுக்கு சென்றான் கோபால். ' தன் எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றம் ஆகி விடுமோ என்ற வேதனை மனத்தில் குடைந்தது.முகத்தை அலம்பினான்..கண்ணாடியில் அவன் முகம் வேதனையை பகிரங்கப்படுத்தியது.

சில சமயம் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களை தரும்..எப்போதும் உலகில் சிலர் நேரம் போகவில்லை என்றால் யாரையாவது குறித்து அவல் போல் வாயிலிட்டு மெல்ல தான் செய்கிறார்கள்... அதில் அவர்களுக்கு ஒரு அலாதி சுகம்.உண்மை அறியாமல் உருகுவதால் பயன் தான் என்ன..?
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...32

Post by cm nair » Wed Nov 19, 2014 4:45 pm

வெளியில் வந்த காமினி ,ஸீட்-ல் கோபால் இல்லாததை கண்டவள் 'மிஸ்‌டர்.சங்கர், கோபால் வந்தா..எக்ஸ்‌போர்ட் கந்ஸம்ப்ஶந் ஃபைல் எடுத்திட்டு வர சொலுங்க'என்றபடி மீண்டும் உள்ளே சென்றாள். தன் ஸீட்டில் அமர்ந்தவள் கோபாலிடம் கூற வேண்டும் கண்மணியை சந்தித்ததை. முகம் அலம்பி ஸீட்-ல் அமர போன கோபாலிடம் சங்கர் காமினி கூறியதை கூற அவன் ஃபைல்-ஐ எடுத்து கொண்டு காமினியின் அறையின் கதவை திறந்தவன் 'மே..ஐ..கம் இன்..மேடம்.."என கேட்க 'எஸ்..ப்லீஸ்..கம் இன்' என்றாள் காமினி ஏதோ ஒரு ஃபைல்-ஐ புரட்டியபடி! 'டேக் யுவர் ஸீட்'என்றாள். கோபால் அமர்ந்தவன் அவளை சிறிதும் பாராமல் ஃபைல்-ஐ டேபலில் வைத்தான். புரட்டிய ஃபைல்-ல் மூடி வைத்தவள் அவனை பார்க்க..அவனோ..தன் கைகளை பார்த்தவண்ணம் குனிந்து அமர்ந்திருந்தான். 'என்னாயிற்று..இவனுக்கு' யோசித்த வண்ணம் அவன் தந்த ஃபைல்-ல் இருந்து தன் தந்தை கூறிய மெய்ன் லெட்டேரை எடுத்து ஃபைல்-ஐ திருப்பி கொடுத்தபோதும் கோபால் இன்னும் பழய நிலையில் உள்ளதை கவனித்தவள் 'மிஸ்‌டர்.கோபால்..நீங்க கொஞ்சும் சங்கருக்கு ஹெல்ப் பண்ணனும்.. நாளை சில சமயம் ஆடிடர் வருவார் என்றாள்..அவனை பார்த்தவண்ணம்! அவள் தந்த ஃபைல்-ன் மீது கண் வைததவாறு' எஸ்..மேடம்'என்றான் சுரத்தில்லாமல்! மற்றவர்கள் கூறியது போல் அவன் ஏதேனும் கூறுவான் என எதிர்பார்த்த காமினி ஏமாந்தாள். இருவருக்கு ஒரு ஒப்பந்தம் இருந்தது. ஆஃபீஸ்-ல் நண்பர்கள் அல்ல..மேடம்..ஸ்டாஃப் என்ற ரிலஶந்ஷிப் மட்டுமே என்பது அது.! கதவருகே சென்றவனை 'மிஸ்‌டர்.கோபால்..'என காமினி அழைக்க.திரும்பாமல் 'எஸ்.மேடம்' என்றான் கோபால். 'என்ன..எல்லாரும் விதம் விதமா கேட்டாங்க..சொன்னாங்க.. உங்களுக்கு சொல்லவோ..கேட்கவோ ஓண்ணுமில்லியா..' என்றவளிடம் 'கந்‌க்ர்யாட்ஸ்..மேடம்..'என்றான் திரும்பாமல்..! காமினிக்கு இப்போது அவன் போக்கு புரிந்து விட்டது. சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் காசுகளை கொட்டியது போல் குலுங்கி குலுங்கி சிரிக்க...'ராட்சசி..இவ்வளவு நாள் நாடகமா போட்டாய்..' மனதுள் குமுறியபடி கோபால். அவன் அமைதியாக நிற்க..சிரித்து முடித்தவள், 'என்ன..எனக்கு திருமண வாழ்த்துக்‌களா' என்றாள் கேலியாக. அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. முகம் சிவந்த்து. கதவை திறந்து வெளியே சென்றான். காமினிக்கு அவன் கோபம் பிடித்தது. வெளியே வந்தவனின் முகம் காண ஒரு கூட்டம் சங்கரின் டேபல்-ல் கூடியிருந்தது. அதை கண்ட கோபால் சிரிக்க முயன்றான்.முடியவில்லை. 'என்ன..கோபால்..என்னாச்சு..மேடம் ஏதாவது சொன்னாங்களா..ஒரு மாதிரி இருக்கீங்க..என்று அவன் வாயை கிளறினான் மெநேஜர் ராஜேஷ். கோபாலுக்கு கடுப்பாக இருந்ததால் பேசாமல் ஸீட்-ல் அமர்ந்தான்.அனைவரின் பார்வையும்..கேலியும்..மனதை காயப்படுத்தியது. 'இவரு படிச்ச படிப்புக்கும்..குடும்ப அந்தஸ்துக்கும்...புளி மரத்தை புடிச்சிட்டதா நெனைச்சாரு...இப்போ வேதனை பட்டு என்ன பிரேயோஜனம்..விரலுக்கு தகுந்த வீக்கததிற்கு தான் ஆசை படணும்..' என்ற பலரது பேச்சு அவனை நிலை குலைய செய்யவில்லை..மாறாக பிடிவாதத்தை உண்டு பண்ண
'எப்படியும்..அவளை மணப்பேன் என்ற உறுதியை அளித்தது. அவன் பேசாமல்..பார்க்காமல் சென்றது காமினிக்கு வேதனை அளிக்க கோபமும்..அழுகையும் அவளுள் போட்டியிட...சங்கரை அழைத்தாள். காமினிக்கு தெரியும்..சங்கருக்கு எல்லாம் தெரியும் என்பது..! காஷ்மீர் ஆப்பில் இன்னும் சிவந்து போய் இருந்தது. சங்கருக்கு வியர்த்தது. 'எஸ்..மேடம்'என்றான். 'இங்க..என்ன நடக்குது..'என்றாள் கோபமாக. அவன் நிலைகுலைந்தான். 'மேடம்...ரங்கசாமி..'என்று இழுத்தவனை 'ரங்கசாமியை கூப்பிடுங்க...'என்றாள்.
சங்கர், ரங்கசாமியை அழைக்க.. உள்ளே வந்த ரங்கசாமி காமினியை காளியாக கண்டான்..சிவந்து போய்யிருந்தாள் 'அம்..மா' என்பதற்குள் 'நீங்க விளையாட்ட கேட்டிங்குன்னு நினைச்சேன்...
இப்படி மென்னு துப்புவிங்கின்னு நினைக்கல' என்றாள் கோபத்தோடு.. 'இல்லே ம்மா..நீங்க பதில் சொல்லாமே சிரிச்சதால.. உண்மையின்னு நினைச்சிட்டேன்...மன்னிச்சிடுங்கம்மா'என்று கும்பிடு போடவும் இருவரிடமும் 'வேலை செய்யதான் ஆஃபீஸ் வரீங்க..உங்க கிட்டே பேசறதை...மத்தவங்க கிட்டே சொல்லி கதை சொல்வதிற்கு இல்லை..என்றவள் 'கெட் லாஸ்'என்றாள். இருவரும் வெளியே செல்லவும் காமினி கம்ப்யூட்டரேயை மூடி தன் கைப்பையை எடுத்து வெளியே வரவும்..வெளி வந்த சங்கரிடம் 'என்னாச்சு..சங்கர்..'என்றபடி மெநேஜர் ராஜேஷ் சங்கர் அருகில் வர சொல்ல வாயெடுத்தவன் காமினியை கண்டதும் 'ஒண்ணுமில்லே..'என்றபடி ஸீட்-ல் அமர்ந்தான். 'என்ன ராஜேஷ்..உங்களுக்கு..வேலை இல்லயா'என்றாள். 'எஸ்..மேடம்' என்று அவன் தன் இருக்கைக்கு சென்றான். சங்கர் அருகே வந்தவளின் கண்கள் கோபாலிடம் சென்றது. ஆனால் கோபாலோ மும்மரமாக வேலையில் இருப்பது போல் இருந்தான். "சங்கர்" என்று அவள் அழைக்கும் போதாவது அவன் தன்னை பார்ப்பான் என எண்ணியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'எஸ்.. மேடம் என்றவனிடம் 'ஆடிடர் டீடேல்ஸ்..நாளைக்கு எவ்வளவு தர முடியுமோ..கொண்டு டேபல்-ல் வையுங்க'என்றவாறு நகர்ந்தாள்.

அன்பு அதிகம் இருக்குமிடத்தில் தான் சந்தேகமும்,கோபமும் அதிகம்.சந்தேகம் வியாதி...கவனிக்காவிடில் மரணத்தில் தள்ளும். கோபம்...தீ பந்து.. இது இரண்டால் சாதித்தவர்களும் யாருமில்லை. நன்கு வாழ்ந்தவர்களும் இல்லை... :ro:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Sat Nov 22, 2014 11:16 pm

அன்பு அதிகம் இருக்குமிடத்தில் தான் சந்தேகமும்,கோபமும் அதிகம்.சந்தேகம் வியாதி...கவனிக்காவிடில் மரணத்தில் தள்ளும். கோபம்...தீ பந்து.. இது இரண்டால் சாதித்தவர்களும் யாருமில்லை. நன்கு வாழ்ந்தவர்களும் இல்லை... :ro:

10000000000% true word.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...33

Post by cm nair » Tue Dec 02, 2014 11:37 pm

வந்து 6 அல்லது 7 மாதங்கள் தான் ஆகிறது. கோபாலுக்கு பிறரது கேலி பார்வையும் பேச்சும் பிடிக்காமல் போனது மட்டுமல்லா நட்பாகி,காதலாகி தன்னுள் மலர்ந்து வாசம் வீசியவள் தன்னிடம் சொல்லாமல் பிறர் மூலம் முள்ளாகி போனது சகிக்க முடியவில்லை. பத்மீனியை- சந்தியா தான் ஸெலெக்ட் செய்தாள்.காமினியிடம் ஏதோ ஒன்றால் நட்பாகி..மனதால் காதலிக்க துவங்கி இருந்தான். அவன் எழுத ஆரம்பித்தான். சங்கர் கோபாலை பார்த்தான்...அவன் paper-ல் ஒரு கை வைத்து மறைத்தபடி ஏதோ எழுதி கொண்டிருந்தான். எழுதி முடித்தவன் சங்கரை பார்த்தான்..அவன் மீண்டும் வேலையில் இருந்தான். அவளுக்கு தர வேண்டிய ஃபைல்-ல் வைத்து அவள் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றவன் அவள் படிக்கும் முக்கியமான லெட்டர்-க்கு இடையில் வைத்துவிட்டு திரும்பினான். தலை வலித்தது. அவன் சங்கரிடம் கூறி கிளம்பினான். சங்கருக்கு அவனை பார்க்கையில் பாவமாக இருந்தது. காமினி நேராக சந்திக்கும் இடமான மெரினா கடற்கரையில் அமர்ந்தாள். துள்ளி வரும் அலைகளை ரசிக்கும் நிலை இன்று அவளிடமில்லை. குழந்தைகள் மணல் வீடு கட்டுவதை பார்த்து அமர்ந்தாள்.அதற்குள் ஓரலை அதை கலைக்கவே அதில் ஒரு குழந்தை அந்த அலையை அழுதவாறு அடிக்க ஓடியது. காமினி திடீரென்று ஆபீசுக்கு போன் செய்தாள்.சங்கரை அழைத்து கோபாலிடம் கொடுக்க சொன்னாள். சங்கர் சொன்ன பதிலால் காமினி கோபால் வரவை காத்து நின்றாள். வெகு நேரமாகியும் கோபால் வரவில்லை.அவன் போன்-ம் ஸ்விச்ட் ஆஃப் என்று வந்தது. அந்த குழந்தை மாதிரி காமினி மாறினாள்.கண்களில் நீரலைகள் ...கோபாலிடம் அவள் கொண்ட காதல் வீட்டை இன்றய நிலையில்... எதிர்ப்பார்ப்பு எனும் பேரலை அடித்து விட்டது. அவள் மெதுவாக எழுந்து காரின் அருகே சென்றாள். அவள் மெதுவாக காரில் அமர்ந்தாள். எண்ணங்களோட..காரின் வேகமும் ஓடியது. இடையிடையே ப்ரேக் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டில் சென்றவள் படுக்கையில் விழுந்தாள். சூடான கண்ணீர் முத்துக்கள் கன்னத்தை முத்தமிட்டது. கோபால் அவள் எண்ணங்களை மறக்க டீ.வீ. போட்டவன் அதிலும் காதல் ஸீரியல்..ச்சே..என்றவன் அதை ஆஃப் செய்து விட்டு ஒரு மாத்திரை சாப்பிட்டு படுத்தவன் உறங்கி போனான். காமினியால் உறங்க முடியவில்லை..பொழுது விடிய காத்திருந்தாள். விரைவில் எல்லாம் வேலை களையும் முடித்து அவனுக்கு பிடித்த கருநீல சுரீதாரை அணிந்தாள்.அவனை காண காரை வேகமாக ஒட்டி ஆபீஸில் நிறுத்தினாள்.கதவை திறந்து உள்ளே நுழைந்தவளை கண்டதும் எல்லாரும் அவரவர் ஸீட்-க்கு சென்றானது மட்டுமல்லா..எல்லாருக்கும் அவள் இவ்வளவு சீக்கிரம் வந்தது கேள்வி குறியாக இருந்தது. கோபால் இன்னும் வந்திருக்கவில்லை. கடிகாரம் 9.45 காட்டியது..இன்னும் 15 நிமிடம் உள்ளது. மெதுவாக ஒவ்வொரு கடிதம் படிக்க துவங்கியவள் அடுத்த கடிதத்தை எடுத்தாள்.. பிரித்தாள்... அதிர்ச்சி அடைந்தாள். சங்கரை அழைத்தாள். 'எஸ்..மேடம்' என்றவனிடம் கடிதத்தை கொடுத்தாள்.சங்கரும் அதிர்ச்சி அடைந்தான்..ஆம்..அது கோபாலின் ராஜினாமா கடிதம்..!அவள் கண்கள் கலங்கிய நிலை கண்ட சங்கர் 'வைட்..மேடம்..போன் பண்ணி பார்க்கிறேன்' என்றான் அவளை ஆறுதல் படுத்த..! ஆனால் மறுமுனையில் ஸ்விச்ட் ஆஃப் என்று பதில் வந்தது. காமினி ..சங்கரின் முகத்தை பார்க்க..'ஸாரீ..மேடம்..போன் ஸ்விச்ட் ஆஃப்' என்றான் தயங்கிய வண்ணம். காமினிக்கு இருப்பு கொள்ளவில்லை. 'சங்கர்..உங்க கையில் கோபால் அட்ரெஸ் இருந்த கொடுங்கள்ளேன்' என்ற காமினியிடம் 'என்னிடம் இல்லை..பட் ஆஃபீஸ் ஃபைல்-ல் இருக்கும் என்றான் சங்கர். சங்கர் அப்லிகேஶந் ஃபைல்-ல் இருந்து ஒரு வழியாக கோபாலின் விலாசத்தை எடுத்து கொடுத்தான். காமினி 'சங்கர்..யார் கிட்டயும் ஒன்னும் சொல்லாதிங்க..கேட்ட..பாங்க் வரை போய் இருக்கிருதா சொல்லுங்க..' என்றவள் ஹேன்ட் பேக் எடுத்து கிளம்பினாள். அவள் சென்ற பின் தான் சங்கர் அவன் விண்ணப்பத்தை படித்தவன் திடுக்கிட்டான். கோபாலின் க்வாலிஃபிகேஶந் 10ம் வகுப்பு வரை...காமினியோ..M.Com.,MBA.,LLB..காமினி காதலித்தாலும்..
கருணாகரன் கண்டிப்பாக இந்த காதலுக்கு சம்மதிக்க மாட்டார்.காமினி காரை எடுக்க போகும் நேரத்தில் அவள் போன் ஒலித்தது. மறு முனையில் கோபால்...காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்தவள் போனை எடுத்தாள். 'ஹல்லோ' என்றவளின் குரல் அழுகை போட்டி போட்டு உடைந்து போனது.கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை..'என்னாச்சு..மேடம்' என்றதும்..'நான் இப்போ மேடம் இல்லே...உங்க காமினி...உங்க வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்..காரில் உட்கார்ந்து பேசறேன்..ஏன்..கோபால்..அப்படி செய்திங்கா...என்றால் விம்மலுடன். 'என்ன..சொல்லுறீங்க...புரியலா' என்றான் கோபால். 'எனக்கு..உங்களை..பார்க்க வேண்டும்..வீட்டுக்கு வரவா....இல்லை... மெரினவா' என்றாள் காமினி.'அய்யோ..அவள்..இங்கு வந்த..என் கல்யாண ஃபோடோ எதாவாது பார்த்த..அப்பறம்..சொல்லவே வேண்டாம்..பொல்லாப்பு...மீன் வலையில் சிக்கிடிச்சு போல் இருக்கு என நினைத்தவன் 'இல்லே..உங்க மரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்கும்போது என் கிட்டே பேசறது சரியில்லே மேடம்' என்றான். 'நான் ..சொன்னேனா ..உங்க கிட்டே..?...நேரில் பேசலாம்' என்றவுடன்..'சரி..நான் மெரினா வரேன்.. என்ற கோபால் போனை வைத்து விட்டு மெரினா பீச்-க்கு கிளம்பினான். காமினியும் காரை எடுத்து மெரினாவில் காத்திருந்தாள்.

காதலுக்கு கண்ணில்லை..உண்மையான காதல் ஜாதி,மதம், வசதி எதையும் பார்த்து வருவதில்லை..அக் காதலில் காதலிக்கும் அவ்விருவர் மட்டுமே..உலகம்..! வேறு எதுவும் தெரிவதில்லை.. சுய நலத்திற்கு காதலிப்பதில்..அழகு,வசதி...எல்லாம் எதிர் பார்க்க படுகிறது போலும். :ro: :): :ro:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Wed Dec 03, 2014 9:52 pm

காதலுக்கு கண் இல்லாவிட்டாலும் தன் தகுதிக்கு தகுந்தவரை பார்க்காவிட்டால் காதல் மட்டும் இனிக்கும் வாழ்க்கை கசக்கும். காதலிக்கும் போது இருக்கும் வாழ்க்கை கல்யாணத்துக்கப்புறம் இருப்பதில்லை.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Wed Dec 03, 2014 11:39 pm

கதையின் தலைப்பு படித்து விட்டீர்கள் அல்லவா..இனி வர போவதும் அது தான்...ஆனால் தகுதி,,வயது,அழகு எதையும் பாராமல் ஒருவரை ஒருவர் உணர்ந்து காதலித்து..திருமணமாகி..மக்களை பெற்ற பின்னும் வாழும் காதலும் உண்டு.ஆனால் அது 5% தான். :ro:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...34

Post by cm nair » Sat Jan 10, 2015 4:05 pm

காமினி மெரின்னாவில் அவனை காத்து நின்றாள். மனத்தில் பல எண்ணங்கள் ஓடியது. மெரினாவை அடைந்த கோபால் தொலைவிலேயே காமினியை பார்த்தான். அவன் அவள் அருகே வரவும் அவள் பொது இடம் என்பதையும் மறந்து அவனை கட்டி பிடித்து அழுதாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறர் பார்ப்பதை உணர்ந்தவன்..ஹேய்..காமினி என்ன இது...என்றவண்ணம் அவளை மெதுவாக விலக்கினான். காமினிக்கு அப்போது தான் நினைவு வந்தது...தான் எங்கே நிற்கிறோம் என்பது..சுதாரித்து கொண்டாள். இருவரும் அவ்விடம் விட்டு சென்னை பல்கலை கழக கட்டிடத்தில் சென்று அமர்ந்தனர்.கோபால் அவள் முகத்தை பார்த்தான்..நன்கு சிவந்திருந்தது..வெகு நேரம் இருவரும் பேசவில்லை..காமினியின் கன்னங்களில் விழி நீர் முத்துக்கள் உருண்டு ஓடியது.கோபால் பேச ஆரம்பித்தான்...'இப்போ எதுக்கு அழறீங்க காமினி..என்றான். அவனுடய மரியாதை அவளை மேலும் வேதனை படுத்தியது. அவள் ள் பதில் சொல்லவில்லை. 'என்னிடம் பேச விருப்பம் இல்லயா..என்றவன்..சரி..நான் போகிறேன் என எழ முயற்சிக்கவும் அவள் அவன் கரங்களை பற்றினாள்.'ஏன்..அப்படி செய்தீங்க'என்றாள் விம்மலுடன். 'எப்படி.. என்றான். வேலை ஏன் ராஜினாமா செய்தீங்க' என்றாள். 'பிடிக்கலே.. விட்டுட்டேன்..'என்றவனிடம்..'என்னையா..' என்றாள்.'அப்படி இல்லே..உங்களை பிடிக்கறததுக்கும்.. பிடிக்காம இருக்கவும் எனக்கு என்ன தகுதி இருக்கு..என்றான். காமினி மெதுவாக 'என் மீது..உங்களுக்கு கோபமா..?' என்றாள். 'உங்களை கோபிக்க நான் யார்..என்றான் கோபால். அவள் அவன் சட்டையை பற்றி கொண்டு அவன் கண்களுக்குள் எதையோ தேடியவள்...இந்த மரியாதை போதும்...நான் யாரும் இல்லை..அப்படி தானே..என்று அவன் கண்களை உற்று நோக்கவும்..அவளது அருகாமையில் கோபால் தடுமாறினான். அவளை உற்று பார்த்தவன்..புன்னகைத்ாவாறு கட்டி பிடித்தான்..ஏனோ அவன் விழிகளும் கலங்கியது.அவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.இருவரது மனமும் பேசியது..மௌனம் நிலவியது. திடீரென தன் நிலைக்கு வந்தவன் 'வீட்லே..நேரம் இல்லே போலே..அதான் இங்கே இப்படியோ...ச்சே..ச்சே..காலம் ரொம்ப கேட்டு போச்சு..'என்றவண்ணம் இருவர் பேசி சென்றனர். காமினியை விலக்கினான். வா..போகலாம்..என்றவனிடம் 'ஏன்..' என்றாள்.'உன் காரில் உட்கார்ந்து பேசலாம்' என்றான்.அவள் அவனை ஒட்டி நடந்தவாறு காருக்குள் சென்று அமர்ந்தனர். 'ம்ம்..சொல்லு..' என்றான்.'ஆஃபீஸ்-க்கு வர மாட்டீங்களா..'என்றாள். 'இல்லே..வர மாட்டேன்..'என்றவனிடம் 'ஏன்'என்றதும்.. 'நீ ஏன் அப்படி செய்தாய்..என்றான். எப்படி..ஒரு மகிழ்ச்சிக்கு இனிப்பு கொடுத்தது..தவறா...என்றாள். 'அப்படி என்ன மகிழ்ச்சி..' என்றவனிடம் தன் பால்ய காலம் முதல் கல்லூரி வரை படித்த தோழியினை சந்தித்ததை கூறினாள்.. ஆனால் பெயர் சொல்லவில்லை.அவனும் ஆப்பீஸில் பலர் பேசிய வார்த்தைகளால் வேதனை பட்டதையும் கூறி.. எனக்கு அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை' என்றான் நாசுக்காக..! 'இதுதான்..உங்க முடிவா...என்னை பார்க்காமல் உங்களால் இருக்க முடியுமா..என்றாள். 'ஆஸ் யூஷுவல்..இங்கே சந்திப்போம்..என்றான். 'வேற வேலைக்கு பார்கணம்..என்றவனிடம் 'ம்ம்..மன்னிச்சிடுங்க.. என்னாலே..என முடிப்பதற்குள் அவள் இதழ்களை பொத்தியவன் 'ஏன் மீதும் தப்பு இருக்கு..அவசர பட்டு டேன்..என்றான் கைகளை விலக்கிய வண்ணம்.. 'நீங்க இல்லாம என்னால் இருக்க முடியாது...என்றவண்ணம் அவன் தோளில் சாய்ந்தாள் 'ம்..என்றவன் ஒரு கையால் அவளது தோளில் கை வைத்து அணைத்தாவாறு.. மறு கையால் காரின் கண்ணாடியை மூடினான். அவளது பிறை நெற்றியில் முத்தமிட்டான்...அவள் அவனை இறுக அணைத்தாள்.அரை மணி நேரம் இருக்கும்...அவர்கள் தன்னிலைக்கு வந்தபோது...அப்போது யாரோ காரின் கண்ணாடியில் டக்..டக்..என்று அழைக்கும் ஓசை கேட்கவே..உடையை சரி செய்த காமினி மெதுவாக கண்ணாடியை கீழே இறக்க...அங்கு முதுகை காட்டியபடி பேசி கொண்டிருந்த ஜோடிகளை கண்டு திடுக்கிட்டாள் .காமினி காரின் கதவை திறக்கவும், குரலை கேட்டு திடுக்கிட்ட கோபால் மறு கதவு வழியாக இறங்கி ஓடினான்..
'பெண்ணுக்கு காதல் கடலில் விழுந்து விட்டால்..எல்லாம் காதலிப்பவன் மட்டுமே...ஆணில்...சில சமயங்களில் மட்டுமே அவள் எல்லாம்...(75%ஆண்கள்..)மற்ற சில ஆண்கள் முத்து குளித்து பின் பெண்ணின் மூச்சை அடக்கி பொம்மையாக்கி விடுபவர்களும் உண்டு.கற்பு பெண்ணுக்கு மட்டுமல்ல..ஆணுக்கும் உள்ளதால் தான் பண்டய காலத்தில் திருமணத்தில் காலில் தண்டை அணிவித்தனர்.ஆனால் இப்போது கற்பு என்பது கத்திரிக்காய் நிலையில்.. கேட்டால்..கலியுகம்..! உணர்வுகளே உலகம் ஆகி விடாது... பொய்யை திரை போட்டு மறைத்தாலும்..அந்த திரையும் கிழிந்து போகலாம்...."
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”