சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சுய நலம்...

Post by cm nair » Sat Nov 09, 2013 2:05 pm

இது என்ன வாழ்க்கையா...இல்லை...வழுக்கையா...?வாழ்க்கையில் உறவுகள் புதர் போன்ற தலை முடிகளாக.........வாழ்ந்து பார்கையில் ஒவ்வொரு முடியைய்ம் பிடுங்கி கொள்ள வேண்டிய நிலை சில சந்தர்ப்பங்கள்...
பத்மினிக்கு சிந்தித்து உணரமுடிந்தாலும் கோபமும்,வேதனையும் எட்டி பார்க்கதான் செய்தது. பட்டதாரியும் கை நிறய சம்பளமுமாக பிறந்த வீட்டில் வாழ்ந்தவள் பெற்றோரின் மரணத்திற்கு பின் கல்யாண வலையில் சிக்க வேண்டியதாயிற்று. பட்டதாரி...நல்ல வேலை என்றெல்லாம் கூறி கோபாலை அவளுக்கு கட்டி வைத்தார்கள். படிப்பும்,வேலையும் மட்டும் பொய் ஆகல...அவன் பேச முடியாமல் விக்கி விக்கி பேசிய போது அதிர்ந்து போய் அழுது விட்டாள். எல்லாரும் ஒரு விதத்தில் ஊனமுற்றவர்கள் தானே..உடல் ஊனம் வெளிய தெரியறது....உள்ள ஊனம்...மன வேதனை யாருக்கு தெரிகிறது...?அன்பிருந்தால் போதும் என்று எண்ணினாள். தன்னை அவனுக்கு அர்ப்பணித்தாள்.. தன் எண்ணங்களை, கடந்த காலங்களை அவனுடன் பங்கிட்டாள்.எல்லாம் அவன் என நினைத்தாள்.வாழ்க்கையில் இருவரும் பாதி-பாதி ஆனால்தான் ஒரு முழுமை என்று அவனிடம் சொன்னாள்
எல்லாவற்றிற்கும் அவன் மௌனம் சாதித்தான்.அவளது அன்பு அவனுக்கு பலத்தை தந்து அவளுக்கு பலவீனத்தை அளித்தது. வாழ்க்கையில் பல கனவுகளை கொண்டு வரும் எல்லா பெண்களை போல் அவளும் கனவு கண்டு வந்தாள். ஆனால் இங்கு நிலை..அவனுக்கு முதல் மனைவி டீவீ நிகழ்ச்சிகள்..பின் 2வது மாத நாவல்கள். ஒரு வாரம் சென்ற பின் முதலிரவு ஏதோ கடமை போல் நடந்தது..அவளை எங்கும் அழைத்தும் செல்ல மாட்டான்...பேசவும் மாட்டான்.மாமியார் ராஜம்தான் அவளுக்கு சிறிது ஆறுதல்..ராஜமும் அவளது பெண்கள் வந்து விட்டால் பத்மினியிடம் பேச மாட்டாள்..பத்மினிக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.அவள் ஒரு முடிவை எடுத்தாள்..ராஜம் அதிர்ந்து போனாள்.....அவள்எடுத்த முடிவு....?
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சுயநலம் -2

Post by cm nair » Mon Nov 11, 2013 11:02 pm

பத்மினி அவளது உடைகளை பெட்டியில் திணித்தாள். எங்கம்மா ....கிளம்பிட்டே... என்றாள் ராஜம் பதற்றத்துடன். ' இப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு எதற்கு அம்மா..?எல்லா விததில்லும் ஏமாற்றி விட்டீர்களே..' அழுதவாறு கூறவும்' உன் வீட்டில சரியா அவன பத்தி விசாரிக்காதது....யார் தப்பு....நிச்சயம் முதல் நாள்தான் எனக்கு தெரியும்...உன்னை பெண்பார்ததது....அந்த அளவுக்கு என் மேல அன்பு...'.என்று கூறிய ராஜத்ின் கண்களிலும் ஈரம் படிந்தது..! 'இல்லம்மா..நான் bangalore போறேன்.என் ஆஃபீஸ்-ன் branch இருக்கு...மறுபடியும் முயற்சிக்கிறேன்' என்றாள் பத்மினி.'பொறு..நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன் என்ற ராஜம் ஹால் பக்கம் சென்றாள். கோபால் ஸீரீயஸ் ஆக டீவீ ஸீரியல் பார்த்து ரசித்து கொண்டிருதான். ராஜம் ரிமோட் எடுத்து ஆஃப் செய்தாள். கோபம் கொண்ட கோபால் உங்களக்கு என்ன பைத்தியமா..நான் பார்த்து கொண்டிருப்பது தெரியல...கத்தினான். கோபத்தில் விக்கலும் இல்லை..பத்மினிக்கு ஒன்றும் புரியல... சாதாரண சமயங்களில் விக்கி பேசுபவன் இப்பொழுது எப்படி சரியாக பேசுகிறான்.'எதுக்கு நீ கல்யாணம் பண்ணிகிட்டே ...அந்த பொண்ண அழ வைக்கவா....கொஞ்சும் வெளிய கூட்டிகிட்டு போன என்ன..எப்ப பாரு ஒரு டீவீ..இல்லனா ஒரு கதை புக்....'என்றாள் ராஜம். 'எல்லாம் எனக்கு தெரியும்...உங்க வேலைய பாருங்க..போதும்...'என்றான் கோபால்.பத்மினிக்கு கோபம் வந்தாலும் அடக்கி கொண்டாள். 'ஒவ்வொரு ஆண்பிள்ளைம் கல்யாணம் கட்டிக்கிட்டா..எப்படா தனியா பேச கிடைக்கும்...பொண்டாட்டியோட வெளிய போக முடியும்-னு காத்து கிட்டு இருப்பாங்க...இங்க என்னடானா....எப்ப பாரு டீவீ...என்ன ஜென்மமோ..?'என்று முணுகினாள் ராஜம். பத்மினிக்கு மாமியாரின் பேச்சு ஆறுதல் தந்தது. முனுமுனுத்து கொண்டு வந்த கோபால்..'பப்பி...வா..வெளிய் போயிட்டு வரலாம். ' அவள் மாமியாரை பார்த்தப்பொழுது'போயிட்டு வாம்மா...'என்றாள். அவள் கிளம்பி வெளியே வந்தபொழுது அவன் கரத்தை பற்ற முயன்ற பொழுது அவன் கையை உதறினான். வேதனையாக இருந்தாலும் அவனுடன் சேர்ந்து நடக்க முற்பட்டபொழுதும் அவன் முன்னால்..அவள் பின்னால்...(ஒரு எஜமானும்...அவன் நாயும்..)அவள் விழிகளில் ஈரம் கசிந்தது.அவன் ஒரு பார்க்-ல் சென்று உட்கார்ந்தான்.. இருவரும் ஒன்றும் பேசவில்லை.அங்கு எல்லாரும் ரெண்டு ரெண்டு ஜோடியாக...சின்ன குறும்புகளுமாய்....சல்லாபித்து கொண்டிருந்தனர். பத்மினி பேச ஆரம்பித்தாள்...உங்க மனைவி...உங்களுக்கு எப்படி இருக்கினம்னு நெனக்கிறீங்க...சொல்லுங்க....நான் அது மாதிரி இருக்கிறேன்..அவன் பேசல...அவள் மீண்டும் கேட்கவே "ஒண்னும் பேச இருந்தாபோதும்..என்றான்...அவள் திடுக்கிட்டாள்......
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுயநலம் -2

Post by ஆதித்தன் » Mon Nov 11, 2013 11:12 pm

இதுதான் அந்த கதையா, இப்பொழுதுதான் படித்தேன்.. :clab:

கற்பனைக் கடல் ஓயாது அலைகளை வீசட்டும்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சுயநலம் -3

Post by cm nair » Tue Nov 12, 2013 9:26 pm

வீடு வரை இருவரும் பேசவில்லை. ராஜம் சாப்பிட்டு படுத்திருந்தார்.அறையில் சென்ற கோபால்..ஆடை மாற்றி குளிக்க சென்றான். எது வரை போனீர்கள்..என்றாள் ராஜம் படுத்தபடி...பார்க் என ஒற்றை சொல்லில் உதிர்த்து விட்டு காலும் முகமும் கழுவி கொண்டு கோபாலுக்கு சாப்பாடு எடுக்க எத்தனிப்போது...வெளிய் வந்த கோபால் அவளிடமிருந்து தட்டை பிடுங்கி தானேஎடுத்து கொண்டு டீவீ பார்க்க சென்றான்.பீறிட்டு வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் பத்மினி படுக்கையில் சரிந்தாள். ஒரு வார்த்தை அவனும் கேட்கவில்லை சாப்பிடவில்லயா என்று.!வரவும் சரியாக இருந்தது . துக்கம் கரையான் புற்று போன்றது. வாய் விட்டு அழுதால் கரைந்து போகும்..அவள் அழுதபடி உறங்கிவிட்டாள். டீவீ ஸீரியல் முடிந்த பின் கோபால் நேரத்தை பார்த்தான். மணி 12. நாளை வேலைக்கு போகனும்..இனி உட்கார சரிவராது..என்று எண்ணியபடி படுக்க சென்றான்.படுத்தவனின் கரங்கள் மெதுவாக பத்மினியின் இடையில் சுற்ற கோபத்தோடு பத்மினி கையை உதறிவிட்டு தரையில் படுத்து கொண்டாள். எதற்க்கும் தேவை இல்லாதவள்....இதற்கு மட்டும் தேவையா...?என்று எண்ணியபடி உறங்கி போனாள். விடியற்காலை மணி 5.வெங்கடேஸ்வர சுப்ரபாதம் கேட்டு எழுந்தவள்..குளித்துமுடித்து வரவும் ராஜம் எழுதிருக்கவும் சரியாக இருந்தது. வாசல் பெருக்கி கோலமிடும் நேரம் கோபால் வாசலில் கையில் டூத் ப்ரஶ் பேஸ்ட் எடுத்து கொண்டு வந்து நின்றான்.பத்மினி கோலமிடும் அழகை விட...அவனுள்...அன்று மலர்ந்த மலர் போன்ற அவள் அழகு...போதை தந்தது. அலை பாயும் சுருள் காற்றை சிவந்த ஆப்பிள் கன்னத்தை வருட...அவனுள் கவிதை,போதை இரண்டும் பொங்கியது...கோலமிட்டு முடித்த பத்மினி திடீரென்று தலை தூக்கியபோது கோபாலின் பார்வை அவளை தின்றுகொண்டிருந்தது.வேகமாக உள்ளே செல்ல எத்தனித்த அவளை அவன் பிடித்து இழுக்க முயற்சித்தபோது வலையில் சிக்காத மீனாக அவள் உள்ளே சென்றாள்.பல் தேய்த்து முடித்தவன்...'எப்பொழுதும் பெண்கள் எல்லாம் ஆண்களின் காலடியில்" என்றான்.பத்மினிக்கு கோபமும் வெறுப்பும் வந்தது.அவள் வாய் திறக்க முயன்ற நேரம் ராஜம் குளித்து முடித்து வந்தாள். இது அவன் இரண்டாவது முறை கூறுவது..அடுத்த முறை வரட்டும் என காத்திருந்தபோது அவன் குளிக்க செல்லவும்...மாமியார் ராஜம் சொன்னதை கேட்டு அதிர்ந்தாள்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுயநலம் -3

Post by ஆதித்தன் » Tue Nov 12, 2013 9:35 pm

கதை நன்றாக இருக்கிறது.

கொஞ்சம் பார்க்கவும் நல்லாயிருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஒவ்வொரு செசனையும் பத்தி பத்தியாக எழுதினால் பார்க்க நன்றாக இருக்கும். அப்படியே இடையில் கதைக்குத் தகுந்த படம் ஒன்று போட்டுவிடுங்கள்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Tue Nov 12, 2013 10:12 pm

நன்றி செல்வா...அனால் எப்படி ஒரு பக்கத்தில் கொண்டு வருவது ? முதலில் முயற்சி செய்தேன் முடியல...ஆதான் அப்படி நியூ டொபிக்-ல போட்டுட்டேன் ....படங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.....
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Tue Nov 12, 2013 10:34 pm

ok...ok...
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...-3

Post by cm nair » Thu Nov 14, 2013 9:14 pm

[/attachment]
images-story.jpg
நேற்று ரெண்டு பெரும் தனியா படுதீங்களா....என்றால் ராஜம்.
பத்மினி திடுக்கிட்டாள் .இல்லையம்மா…..ஏன் கேட்கிறீங்க...என்றாள்...படுக்கும்போது அறை கதவு மூடிவிட்டு படுப்பதுதான் வழக்கம்...இவர்களுக்கு எப்படி தெரியும்...?
எப்பவும் பாக்கற மாதிரி நேற்றும் கதவு இடுக்கு வழிய பார்த்தேன்..பேட்-ல உன்னை காணல....என்றாள் ராஜம்.
சீ...மாமியாரும் சரியில்லை...என்ன்மோ போல் இருந்தது பத்மினிக்கு..’ஏதாவது வியாதியாய் இருக்குமோ...மகனின் படுக்கை அறை..அந்தரங்கத்தை அலசுகிறார்களே...இதை இப்படி விட்டுவிட கூடாது...’என தீர்மானித்தாள்.கோபால் குளித்து ஆஃபீஸ் செல்லும் ஆடையில் சாப்பிட ராஜமும் ஆக உட்கார்தான்.பத்மினி பரிமாறினாள்,இருவரும் சாப்பிட்டுவிட்டு சென்றனர்.கோபால் புறப்படும் நேரத்தில் அவனை வழி அனுப்ப பின் சென்றாள்.ஒன்றும் சொல்லாமல் அவன் சென்றான். ராஜம் அவள் சாப்பிடும் சமயம் சமையல் அறை-க்கு வந்தாள். மாமியாரை பார்க்கையில் அவளுக்கு குமட்டி கொண்டு வந்தது.அவள் வாந்தி எடுக்க ஓடினாள். ராஜத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் பத்மினியின் பின் சென்றாள்.பத்மினி தலை சுற்றி விழ போனவள்...மாமியாரின் தோளில் சாய்தாள்..ராஜம் அவளை மெதுவாக தாங்கி படுக்கையில் கிடத்தினாள். இருக்கும் ரெண்டு மரு மகள்-ல் இவள் மட்டும் வித்தியாசமானவளாக இருக்கிறாள்..தங்க பதுமை போல் கிடக்கும் பத்மீனியை வாஞ்சையுடன் பார்த்தார். முகத்தில் நீர் தெளிக்க பத்மினி எழ முற்பட்டாள்.
"கொஞ்சும் நேரம் படுத்துக்கோ...நான் இன்று சமைக்கிறேன்...என்ற ராஜம் சமைக்க சென்றாள்...
என்ன ஆயிற்று எனக்கு...? பத்மினிக்கு ஒன்றும் புரியல...அப்படிய படுத்து கிடந்தாள்...
ராஜம் மனமார வேண்டினாள்..பத்மினிக்கு அதுவாக இருக்க வேண்டும்..பின் அவள் கோபாலை விட்டு போக மாட்டாள். வேறு மக்கள் இருந்தாலும் வயதான கால்த்தில் அவளை பார்த்து கொள்ள யாரும் தயாராக இல்லை. மணி 1 அடித்தது..ராஜம் சமைத்து முடித்தாள். மெல்ல எட்டிப்பார்த்தாள். பத்மினி எதையோ சிந்தித்து படுத்திருப்பது தெரிந்தது.
அம்மாடி...கொஞ்சும் ஏதாவது சாப்பிடாம்மா....சாயந்தரம் டாக்‌டர் கிட்டேய் போயிட்டு வரலாம்...-ராஜம்.
பத்மினி மெதுவாக எழுந்தாள். நேற்று சாப்பிடாமல் படுத்ததால் ....இப்படியோ..என்று எண்ணியபடி மாமியாருடன் சாப்பிட உட்கார்தாள். கீரை பொரியலும்...ஆவியலுமாக
ராஜம் சமைத்திருந்தாள்.சாப்பிட வாயில் கொண்டு சென்றவள்லுக்கு மீண்டும் குமட்டியது.மாமியார் ராஜத்ின் முகத்தில் 1000 வாட் பல்ப் போல் மகிழ்ச்சி பூத்தது.
இது மசக்கைதான் என்று உறுதி தோன்றியது ராஜதிருக்கு.கஷாயம் வைத்து கொடுத்து பத்மீனியை உறங்க வைத்தாள். மாலை 3 மணி ராஜம் பத்மீனியை எழுப்பி டாக்ட்ரிடம் அழைத்து சென்றாள். பத்மினியிடம் எல்லாம் விசாரித்து..பரிசோதித்த டாக்‌டர் லதா ராஜம்-த்தின் பக்கம் திரும்பி
"வாழ்த்துககள்....நீங்க மீண்டும் பாட்டி ஆக போறீங்க என்றாள். பத்மினி,ராஜம் இருவரும் ஆனந்தத்தில் புன்னகை செய்தார்கள்.
வீடு திரும்பிய உடன் ராஜம் அவளுக்கு உணவும் மருந்தும் அளித்து உறங்க சொன்னவள் "மழலை பிறக்கும் நேரம் கோபால் திருந்திவிடுவான் என்று நம்பிக்கை அளித்தாள். பத்மினி அதை நம்பி உறங்கி போனாள். வீடு திரும்பிய கோபால் ஆடை மாற்ற பேட் ரூம்-ல் சென்றான். பத்மினி உறங்குவதை கண்டு வியப்பில் ராஜாத்ிடம் விசாரிக்க ஹால்-க்கு சென்றான்
[attachment=0]imagesstry3.jpg

என்ன..அவ படுத்திருக்கா...என்றான் கோபால்.
நீ அப்பாவாக போறேன்...என்றாள் ராஜம்.அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தபடி....
கோபாலுக்கு அதிர்ச்சியாக இருந்தது...மௌனம் ஆனான்.ஒரு முறை மட்டுமாய் தவறு நடந்தது...எப்படி..கவலை முகத்தில் பதிந்தது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Thu Nov 14, 2013 10:29 pm

கதை எல்லாம் சூப்பரா எழுதுறீங்க .... :clab:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by cm nair » Fri Nov 15, 2013 1:09 pm

நன்றி செல்வா.............
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”