நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக

Post by cm nair » Sat Nov 09, 2013 9:48 am

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு...

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
வந்து பார்த்தா அந்த நாய் வாயில
ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
சீட்டை எடுத்து அதில் உள்ள
சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
அதே பையில் நாய் கழுத்தில்
மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க
ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின்
ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை...

அது பின்னாலே அதன் வீடு செல்ல
முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள
பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
எடுத்துகிட்டு வருது அதை போய்
அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
எடுத்துட்டு போகாம வந்து கதவ
தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட
பொறுப்பே இல்லன்னு....

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
பெயரே கிடைக்காது
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”