8th Demo Work : “சிறுகதை - கதை எழுதலாம் வாங்க”

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

8th Demo Work : “சிறுகதை - கதை எழுதலாம் வாங்க”

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 8:24 am

சிறுகதை - கதை சொல்லலாம் வாங்க!!!
சிறுகதைகள் என்பது நமது பொழுதை போக்கும் ஒன்றாக இருந்தாலும் , அவை நமக்கு சிறந்த சிந்தனையை தூண்டும் ஒன்று. நம்முள் பலருக்கு கதைப் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. அப்படி இல்லாவிடினும் , ராணி, குமுதம் , குங்குமம், வாரமலர் , சிறுவர்மலர், குடும்பமலர், ஆனந்தவிகடன், கோகுலம், ராணிமுத்து, க்ரைம் ஸ்டார், இந்தியா டூடே , நக்கீரன் மற்றும் பல புத்தகத்தில் வந்த கதைகளை நாம் படித்து மகிழ்ந்து பொழுதை கழித்திருக்காலம். அப்படி நீங்கள் படித்து ரசித்த கதையை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நமக்குத்தோன்றும். இல்லை, அப்படித்தான் நமது முன்னோர் சொல்லிய கதைகள் ஒருவருக்கு ஒருவர் சொல்லியே இன்றும் வாழ்ந்து வருகிறது. குறிப்பா பாட்டி வடை சுட்டக் கதை, ராஜா ராணிக் கதை, நிலாக் கதை, நீதிக் கதை, காட்டு ராஜா கதை, குள்ள நரிக் கதை என பல... இப்படி சிறு கதைகளை கேட்டு வளர்ந்த நாம் எப்படி அறிவுக்கூர்மையாய் சிந்திக்கிறோமோ! அதைப்போல நமது குழந்தைகளும் படித்து மகிழ நாமும் பல கதைகளை விட்டுச் செல்ல வேண்டும் அல்லவா....

அதற்காக, நாம் இந்த எட்டாவது பணியில் சிறுகதை எழுதி மகிழலாம்.

சிறுகதை என்பது நாம் படித்து மகிழ்ந்த அல்லது கேட்டு வளர்ந்த கதை தான். ஆகையால் உங்களுக்கு பிடித்த கதையை விரிவாக புதிய எழுத்து நடையுடனும் கதாபாத்திரத்துடனும் ஒரு 1000 வார்த்தை கொண்டு எழுதினால் நலம்.

சரி, நம்ம வேலையை பார்க்கலாமா?

எப்பொழுதும் போல, கீழ் கொடுத்துள்ள ”பணி ” பண்ணுங்க

Subject : உங்களது சிறுகதைக்கு ஏற்ற தலைப்பு. எடுத்துக்காட்டு : தாத்தா பாட்டிக் கதை / சிங்கமும் குரங்கும் / முயல் - ஆமைக் கதை / அம்புலி மாமா கதை / சுப்பர் மேன் / மற்றும்

Message Box : உங்க கதைய கட்டுக்கதையா எழுதினாலும் சின்னதா ஒரு நிகழ்வைக் காட்டி முற்றுப் புள்ளி வைங்க ... அதுக்காக இரண்டு வரியில் எழுதிடாதிங்க... சும்மா ஒரு பக்கத்துக்கு எழுதித் தள்ளுங்க .... எழுதி முடிச்சதும் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துட்டு Submit பட்டணை பிரஷ் பண்ணுங்க ... அம்முட்டுத்தான் பயபுள்ளா... கண்டிப்பா பண்ணனும் சரியா!

எடுத்துக்காட்டுக்கு எனது சிறுகதை படிங்க :

நான் எழுதிய, ”சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை”

சரி, இப்ப உங்க வேலைய தொடங்கலாமா>

இதோ கீழே சொடுக்கி உங்களது சொந்த சிறுகதையை பதியவும்.

பணி 8 -Click - ”சிறுகதை- கதை சொல்லலாம் வாங்க”

முதல்ல இந்த பணியை முடிங்க. அப்புறம் அடுத்து என்ன பணி என்று பார்க்கலாம் சரியா.

.
நன்றி.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: 8th Demo Work : “சிறுகதை - கதை எழுதலாம் வாங்க”

Post by dhaya1982 » Thu Apr 04, 2013 1:14 pm

வணக்கம்

திரு.ஆதி சார் எனக்கு பெரும்பாலும் கதைகள் தெரியாது ஒன்றிரண்டு கதைகள் தெரியும் அதுவும் மற்றவர்களுக்கு தெரிந்தவையே வலைத்தளத்தில் உள்ள கதைகளை இங்கே copy past செய்ய முடியவில்லை எப்படி செய்வது என பதில் அளிக்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 8th Demo Work : “சிறுகதை - கதை எழுதலாம் வாங்க”

Post by ஆதித்தன் » Thu Apr 04, 2013 1:16 pm

தெரிந்தவரை செய்யுங்கள்... தெரியாததை விட்டுவிடுங்கள்... ஆனால் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ARIVU
Posts: 21
Joined: Tue Jun 11, 2013 12:07 pm
Cash on hand: Locked

மனிதாபிமானம்

Post by ARIVU » Sun Jun 30, 2013 11:32 am

" நான் சொன்னபடி கேட்டா எல்லோருக்கும் நல்லது, இல்லாவிட்டால் ஊரில் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள்' என்று பிடரியில் அடித்தார் போல் அரவிந்தன் தீர்மானமாக தன்னுடைய தம்பியிடம் சொன்னான். இதை கேட்ட செல்வம் ஒரு நிமிடம் ஆடி போய் விட்டான். அரவிந்தன் கோபப்படும் அளவிற்கு என்ன நடந்து விட்டது என்று அனைவரும் திகைத்து விட்டனர்.
அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு இடத்தை வாங்கி போட்டார்கள். இது வாங்கியது இருவருக்கும் கல்யாணம் நடப்பதற்கு முன்பு. பின்னர் இருவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாண செலவுக்கு பற்றாக்குறை ஏற்படவே இருவரும் முடிவு செய்து அந்த இடத்தை விற்று விட்டனர். அதுவும் அடிமாட்டு விலைக்கு விற்றார்கள். காலம் கடந்தது. இருவருக்கும் இரண்டு குழந்கைகள் பிறந்து விட்டனர். சமீபத்தில் அவர்கள் விற்ற இடத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. அதே ஊரில் பெரிய தொழில் சாலைகள் வந்து விடவே இடத்தின் மதிப்பு அதிகரித்தது.

அந்த இடத்தை வாங்கியவர் நிலத்தை பதிவு செய்ய சென்றபோது அரவிந்தனும் செல்வமும் கையெழுத்து போட அவசியம் ஏற்பட்டது. அதனால் பத்திரம் பதிய அண்ணன் தம்பி இருவரும் பதிவு அலுவலகம் சென்று கையொப்பம் இட வேண்டிய நிலை ஏற்பட்டது. செல்வம் மற்றும் அவன் மனைவிக்கு இடத்தின் மதிப்பு அதிகரித்தால் அதைக் காரணம் காட்டி ஒரு தொகை வாங்கி விட கணக்கு போட்டனர். இதற்கு அரவிந்தன் மற்றும் அவன் மனைவி சம்மதிக்கவில்லை. " நாம் அவசரத்திற்கு நிலத்தை விற்று விட்டோம். இப்போது அதைக்காரணம் காட்டி பணம் கேட்டால் மனஸ்தாபம் ஏற்படும்" என்று கூறி விசயத்திற்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு எடுத்தான்.

ஆனால், செல்வம் தன முடிவை மாற்றாமல் "ஒரு தொகை வாங்கி கொண்டு பத்திரம் பதிவோம்" என்று கூறினான். "தற்போது உள்ள விலை நிலவரப்படி ஒரு தொகை கொடுங்கள்" என்று கூசாமல் இடத்தை வாங்கிய மதிவாணன் மற்றும் அவர் மனைவியிடம் கூறினான். இதை கேட்ட அவர்களும் ஒரு நிமிடம் ஆடி போய் விட்டனர். அவர்களும் எவ்வளவோ போராடி பார்த்தனர். யார் யாரிடமோ கூறினார்கள். அழுது பார்த்தனர். கெஞ்சி பார்த்தனர். முடிவாக ஒரு தொகை தருவதாக முடிவு எடுத்து அரவிந்தன் மற்றும் செல்வத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பேச்சுவார்த்தை முடிந்து பணத்தை வாங்கி ஆளுக்கு பாதி பிரித்து கொண்டனர். மதிவாணன் மனைவி ஊர் முழுக்க தாங்கள் ஏமாந்த கதையை சொல்லி நியாயம் தேடி கொண்டிருப்பதாக கேள்வி.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: 8th Demo Work : “சிறுகதை - கதை எழுதலாம் வாங்க”

Post by ASVM » Tue Sep 24, 2013 9:12 pm

மரியாதை ராமன்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.
ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.
அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.
அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.
கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.
சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.
ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”