நகைசுவை சிறு கதைகள் ....

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

நகைசுவை சிறு கதைகள் ....

Post by cm nair » Wed Oct 16, 2013 11:16 am

“ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.


"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.

கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''

கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''

மனோபலம்

ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தார்.கனமான இரும்புக்குண்டுகளை அனாயாசமாகத் தூக்குவாr தாங்குவார் .

அவர் யாரிடமும் தோற்றது கிடையாது.
ஒரு நாள் பாரசீகக் கவிஞர் ஷா அந்த பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம் பயில்வான் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார்.

கவிஞர் அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப் பேசி விட்டார்களாம். அதனால் தான்கோபமாக இருக்கிறார்.''

இதைக் கேட்ட கவிஞர் ஷா அதி சொன்னார் '' எத்தனையோ கடுமையான எடைகளைத் தாங்கும் இந்த பயில்வான் ,யாரோ கூறிய ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க முடியாதவராய் இருக்கிறாரே? ஐயோ பாவம்!''


ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?
கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

தற்பெருமை

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.

முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.

அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.

முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.

பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குறத்தில் இறங்கினர்.

முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.

முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.

முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.


இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.

சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?

கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்

ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .

ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,

சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.

பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.

"தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.

ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.

ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்" என்றார் ஆசிரியர்.

மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி

"போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!" என்று கத்தினான்.

"டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்" என்றார் ஆசிரியர்.

"நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன்.

"நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

"நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும்.

"தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர்.

"அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”