நெல்லிக்கனி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

நெல்லிக்கனி

Post by mubee » Sun Oct 13, 2013 5:41 pm

பேரூந்தை விட்டிறங்கி, திவ்யா வருவதைக் கண்டதும் கல்லாவிலிருந்து கடிதத்தை எடுத்துத் தயாராய் வைத்துக் கொண்டு காத்திருந்தான் பழனி முறுவலுடன். பழக்கடை அருகில் வந்த திவ்யா, “என்ன பழனி, நேத்து பொண்ணு பாக்கப் போய் இருந்தீங்களே, என்னாச்சு? ரொம்ப உற்சாகமா இருக்காப்புல? அப்போ கல்யாண இனிவிடேஷன் நமக்கும் வருமில்ல?” என்று உற்சாகமாய்க் கேட்டாள்.

தினமும் அந்தப் பழக்கடையில் நூறு கிராம் நெல்லிக்காய் வாங்குவதற்காகவே வருவாள் திவ்யா. பழக்கடையைத் தாண்டி நாலு எட்டில் இருக்கிறது அவள் வேலை செய்யும் ஆஃபிஸ். காலையில் அவள் டிஃபன், அந்த நெல்லிக்கனிகள் தானாம். பிறகு மதியத்துக்கு தான் தயிர் சாதமும் ஊறுகாயும். “என்ன மேடம் தெனமும் நெல்லிக்கா தின்றதுனு வேண்டுதலா?” என்று ஒருமுறை வாய் பொறுக்காமல் கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் பழனி.

‘யோவ், அதெல்லாம் ஒனக்கெதுக்குய்யா! பேசாம யாவாரத்த கவனிப்பியா’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் கேட்டு விடுவாளோ என்று பயந்து விட்டவன், அவள் புன்னகையில் நெகிழ்ந்து போனது உண்மை தான். அன்றிலிருந்து புன்னகையோடு தொடர்ந்தது இன்று, பழனி, குடும்ப விவகாரங்களைப் பகிர்ந்து கொள்வது வரை வளர்ந்தது ஒரு மெல்லிய நட்பு. அவ்வப்போது திவ்யா குடும்ப விவகாரங்களைக் கூட அவள் கூறுவதுண்டு. “அப்பா ரிட்டையர் மெக்கானிக். அம்மா ஊறுகா போட்டு கைசெலவுக்குப் பணந்தேடிக்கு வாங்க. டென்த்து வரிக்கும் தான் தங்கச்சி சியாமளா படிச்சிருக்கா. அதைவிட அவளுக்குப் படிப்பு மண்டையில் ஏறமாட்டேனுரிச்சி. ரொம்ப அழகானவ. வீட்டை இப்போ கிரேடா நிருவாகம் பண்றது அவ தான். என்னை விட பொறுமையானவ. தங்கமான கொணம்.” என்று, அவள் குடும்பத்தைப் பற்றியும் கூறியிருக்கிறாள்.

இப்படி பழனியோடு ஒரு நாள், ஆஃபிஸ் விட்டு பஸ் வரும் வரை பேசிக் கொண்டிருந்த போது தான், திவ்யாவோடு காலேஜில் படித்த அன்புக்கரசுவும் பழம் வாங்கக் கடைக்கு வந்தபோது, ஏதேச்சையாய்ப் பார்த்துவிட்ட திவ்யாவை ஆச்சர்யத்தோடு பார்த்துப் பேசினான். “ஹேய் திவ்யா! வாட் எ சப்ரைஸ்! இவ்ளோ நாளைக்கப்பறம் இப்படி திடீர்னு உன்னப் பாப்பேன்னு நான் கனவுலயும் நெனைக்கல ஹ்ம்... காலேஜு ரொம்ப காம்மா இருந்த, இப்போ ரொம்ப அழகா இருக்க? கல்யாணம் ஆச்சா?” என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

“அதுவா, அதுக்கெல்லாம் இப்போ என்ன அவசரம்? சீதனம் இல்லாமே எவன் கட்டிக்குவான்? இப்போதான் ரத்னம் டிராக்ஸ் கம்பெனில ஒரு ஓர்க் பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பணம் சேர்த்துட்டு அப்பறம் பாக்கலாம் கல்யாணம் கச்சேரி எல்லாம். ஆமா, நீங்க எங்க இங்க?” என்று அவளும் விசாரித்தாள்.

“இந்த ஊர்ல தான் எங்க அக்கா குடும்பம் இருக்கு. இந்த ஊருக்கே என் ஜாபையும் டிரான்ஸர் வாங்கிட்டேன். வேற ஒரு நல்ல ஜாபுக்கும் அப்ளை பண்ணி இன்ரவியுவுக்காக காத்திருக்கேன். உன்னப் பாத்ததுல ரொம்ப சந்தோஷம். இங்க அடுத்த தெருல தான் அக்கா வீடு. வாயேன், ஒருக்கா?”

“இன்னொரு நேரம் பாக்கலாம் அன்பு” என்று புன்னகையோடே விடைபெற்றுச் சென்றாள் திவ்யா.

இந்த அன்புக்கரசு சொல்லி வைத்தாற் போல் மறுநாளும், திவ்யா ஆஃபிஸ் ஆஃபாகும் நேரம் பார்த்து பழக்கடையில் வந்து நின்றான். ஒரே ஓர் ஆப்பிள் வாங்குவதற்காகவே. வாட்டசாட்டமான வாலிபன்தான் அவனும். காலேஜ் படிக்கும் போதே நல்ல கெட்டிக்காரன். அப்போதெல்லாம் திவ்யாவை அவ்வளவாய் அவன் கண்டு கொள்வதில்லை. ஒரு லட்சியத்தோடு தான் படித்தான். வாழ்வில் உயர வேண்டும், குடும்பத்தைக் காக்கவேண்டும் என்பது போல நிறைய பொறுப்பானவனாய் கவனம் கொண்டு படித்து நல்ல சித்திகள் பெற்று கொண்டு தான் காலேஜை விட்டு வெளியேறினான்.

“என்ன பழனி, கேட்டுக்கிட்டே இருக்கேன் ஏதோ யோசனையாவே இருக்கீங்க? பொண்ணு புடிக்கலியோ?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பழக்கடைங்கிறப் பேர்ல வெயிலுக்கு சூம்பிப் போன நாலு பழங்கள வச்சிக்கிட்டு காஞ்சிக் கெடக்கிற என்னை விட பட்டப்படிப்பு படிச்சி முடிச்ச என் தம்பிய வேண்ணா கட்டிக்கிறாளாம். அவங்களுக்குத் தெரிஞ்ச யாரோ பெரியவங்களப் புடிச்சி, தம்பிக்கு நல்ல வேலையும் வாங்கித் தர்றாங்களாம். என்னைப் புடிக்கலியாம். இப்பிடீனு விஷயத்த நம்ம தரகர் சொன்னதும் என் தம்பிக்கு வந்திச்சே பாருங்க கோவம், நேர அந்த பொண்ணு வீட்டுக்குப் போய் அந்தப் பொண்ணையே வாங்கு வாங்குனு வாங்கிட்டான். அங்க பெரிய கூத்து நடந்து போய்ரிச்சாம். தரகர் வந்து ரொம்ப வருத்தமா செல்லிட்டுப் போறாரு.” என்று சற்று வாடிய முகமாய் சொன்னான் பழனி.

அவனிடம் ஏன்டா கேட்டோம் என்றானது. ஆண்களுக்கும் கூட இப்படிப் பிரச்சினைகள்! ஒரு முப்பது வயது மதிக்கத் தக்கவன் பழனி. நல்ல உழைப்பாளி என்பது அவன் கட்டான தேகம் சாட்சி சொல்லும். அவன் சிறு வயதிலேயே தகப்பனை இழந்து விட்டபின் அப்பாவின் பழக்கடையை அம்மா தான் நடத்தி வந்தாராம். பழனிக்கு ஓர் அக்காவும் தம்பியும். அப்பா இருந்த காலத்தில் அக்காவை ஓரளவு படிக்க வைத்திருந்தமையால், அப்போதே அக்காவைக் கல்யாணம் முடித்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்களாம்.

“ஏன் மேடம் சிரிக்கிaங்க?”

“இல்ல பழனி. அந்தப் பொண்ணு குடுத்து வெச்சது அவ்ளோதான்” “அவள சொல்லியும் குத்தமில்லீங்க. அது காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு கொஞ்சம் நாகரீகமான கேரக்டராம். நான் பத்து வரைக்கும் தான் படிச்சிருக்கேன்னதும் சங்கடப்படுது” “என்ன பழனி நீங்க பேசுறது? படிச்சிருந்தா திமிரும் கூட வந்துடணுமோ? அவளுக்கு அவ்ளோ திமிறிருந்தா, உங்கள மாதிரி ஆளுக்கு எவ்ளோ திமிருருக்கணும்? அதுல வேற அரவிந்த கட்டிக்கணுமாமோ? அவரக் கட்டிக்க அவ ஏணி வெச்சாலும் எட்டமாட்டா அதை அரவிந்தே போய் சொன்னது தான் பொருத்தம். அப்படிப்பட்ட ஒரு பொண்ணு உங்களுக்கே பொருத்தமில்ல, அரவிந்துக்கு எப்புடிப் பொருந்துவா சொல்லுங்க?” என்று திவ்யா பொறுக்க மாட்டாமல் ஆத்திரப்பட்டாள்.

பழனி சிரித்தான். பின், “அந்தப் பொண்ணு என்னமோ நம்ம அரவிந்துக்குப் பொருத்தமில்லை தான்... ஆனா உங்கள மாதிரி ஒரு பொண்ணு நம்ம அரவிந்துக்கு மனைவியா கெடைச்சா என் லட்சியம் கம்ப்Zட் ஆகிடும் மேடம். ஆனா என்னை மாதிரி ஒருத்தன் கனவு பலிக்குமா என்னா? அன்புக்கரசு முந்திக்கிட்டாரே?” என்று ஏதோ புதிராய் பழனி சொல்ல, “என்ன பழனி, என்னென்னமோ பேசுaங்க?” என்று புரியாமல் திவ்யா பார்த்த போது, பட்டென்று அந்தக் கடிதத்தைக் கொடுத்தான் பழனி.

“இதை அன்புக்கரசு உங்கக்கிட்டத் தரச் சொன்னாரு மேடம்” “இது என்னா, ஏதோ லெட்டர் மாதிரி இருக்கு? என்ன லெட்டர்?” என விழித்தாள் திவ்யா.

“வேறென்ன. லவ் லெட்டர் தான்” என்று விட்டுப் பழனியும் சிரித்தான்.

“ஐயையோ! அதெல்லாம் வேணாம் பழனி. அதை அவருக்கிட்டவே குடுத்துருங்க” என்று முகம் மாறியவள் திரும்பி விடுவிடுவென நடக்கத் தொடங்கினாள்.

மீண்டும் ஆஃபீஸ் விட்டதும் பஸ்ஸ¤க்காக வந்து கொண்டிருந்த திவ்யாவை எதிர்கொள்ள, பழக்கடையருகே நின்றிருந்த அன்புக்கரசு புன்னகையோடு காத்திருந்தான். ஆனால் அவளோ, திரும்பியும் பாராது பழக்கடையையும் தாண்டிப் போய்க் கொண்டிருக்க, “ஏய் திவ்யா!” என்றவாறு அவள் பின்னே விரைந்தான். அவளை நெருங்கிவிட்டவன்,

“ப்Zஸ் திவ்யா. கொஞ்சம் நில்லேன்” என்றதும் நின்றாள்.

“திவ்யா, அந்த லெட்டர ஏன் பாக்கல?” எனக் கேட்டான்.

“அதுல என்ன எழுதி இருக்கீங்க?” என்று அவனை நேரடியாய்ப் பார்த்துக் கேட்டாள்.

“ஒரு பொண்ணுக்கு ஒரு பையன் என்ன எழுதுவான்? லவ் தான்! என்று பிடறியைத் தேய்த்துக் கொண்டு மெல்லியப் புன்னகையோட திரும்பிக் கொண்டான் அவள் நேரடிப் பார்வையைத் தாங்காது”

“இதோ பாருங்க அன்பு. எனக்கு நெறய பொறுப்புகள் இருக்கு. இதுக்கெடையில இந்த லவ்வு கிவ்வுனெல்லாம் என்னால திரிஞ்சிட்டிருக்க முடியாது. எதுவா இருந்தாலும் என் தங்கச்சி லைஃப் செட்டில் ஆற நெலமை வந்தப்பறம் தான் நான் என்னப் பத்தி யோசிக்க முடியும். அதுவரிக்கும் நீங்களும் பொறுமையா காத்திட்டிருந்தீங்கனா, நாம மெரி பண்ணிக்கலாம்” என்றாள் திட்டவட்டமாய் திவ்யா.

“இப்போ கல்யாணத்துக்கு எனக்கும் அவசரமில்ல தான் அதுக்கெடையில பேசிப் பழகலாமே?”

“இப்போ கூட அதானே பண்ணிட்டிருக்கோம்?”

“மை காட்! அப்போ நீயும் என்னை லவ் பண்ணிட்டா இருக்க?”

“சேச்சே. பேசிப் பழகிட்டிருக்கோம்னு சொல்ல வந்தேன். இந்த லவ்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல அன்பு. நான் எல்லாரு கூடவும் பேசுற மாதிரி உங்கக் கூடவும் பேசுறேன். இந்த லிமிட்டோடவே இருந்தா எனக்கும் நல்லது உங்களுக்கும் நல்லதுனு நெனைக்கிறேன்.”

“அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு இஷ்ட்டமில்லியா?”

“எப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா வச்சிருக்கிங்கனு சொல்லுங்க பாக்கலாம்”

“இன்னும் ஒரு வருஷத்துல”

“அப்போ வந்து கேளுங்க சொல்றேன்”

“அதை இப்போவே சொல்றதுக்கென்ன? அதுக்கெடையில நீ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டியனா?”

“பண்ணிக்கிட்டா? கவலை தாங்காமே சூசைட் பண்ணிக்குவீங்களா?”

“ஏன் திவ்யா இப்படி எடுத்தெறிஞ்சி பேசுற?”

“உங்கள ஹர்ட் பண்ணல அன்பு இந்த ஒருவருஷ கேப்ல நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்போ வந்து கேளுங்க நான் கண்டிப்பா ஒத்துக்கிறேன். இதுக்கெடைல நானும் நீங்களும் ஃப்ரெண்ட்லியா பேசுக்கிறதுல எந்தத் தடையும் இல்ல பஸ் வருது பை” என்று சிரித்துக் கொண்டே பஸ்ஸிலேறிப் போய்விட்டாள்.

எப்போதும் போலவே திவ்யா காலையில் வந்து நெல்லிக்கனி வாங்கிச் செல்வதும், மீண்டும் ஆஃபிஸ் விட்டதும் பஸ் வரும் வரை பழனியோடு பேசிக் கொண்டிருக்கும் போது அன்புக்கரசு வருவதும், அவனோடும் ஸினேகமாய் திவ்யா பேசிவிட்டுப் போவதும் வழமையானது. போகப் போக அன்புக்கரசு விட்டு விட்டு வரத் தொடங்கினான். “என்ன சார் திடீர்னு காணாமப் போயிர்aங்க?” என்று பழனி கேட்டான். “அதுவா...? எனக்கு வேற ஒரு நல்ல கம்பெனில ஜாப் செட்டாகிரிச்சி பழனி கம்பெனிக் கார்லயே போய் கார்லயே வந்தர்றனா, ரொம்ப ரெஸ்பொன்சவலான உத்தியோகம், அதான் டைம் செட்டாறதில்ல” என்று பேசியவன் வழமையைவிட கொஞ்சம் கெத்தாய் தான் இருந்தான்.

“என்ன திவ்யா, இப்படியே தாமரை இலைத் தண்ணியா இருந்தா என்னார்த்தம்? இன்னிக்காச்சும் வாயேன். காஃபி ஷாப் வரை போய்ட்டு வரலாம்” என்று திவ்யாவை அழைக்க. “நம்ம ஒரு வருஷ கெடு முடிய இன்னும் நாலு மாசந்தானே அன்பு? இன்னுமே கல்யாண ஏற்பாட்டப் பத்தி நீங்க பேசலியே? எங்க வீட்லயும் என் கல்யாணத்துக்கு இந்த ஒரு வருஷ டீலை பத்தி நான் சொல்லி வச்சிருக்கேன் இன்னும் நாலு மாசந் தானே இருக்கு, இப்போவே ஏதாச்சும் ஏற்பாடு பண்ணா தான், நாலு மாசத்துக்குள்ளக் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொல்றாங்க மொத உங்க வீட்டாளுகள வந்து மொறையா பேசச் சொல்றதில்லியா சரி? அதுக்கப்புறம் எப்ப வேணாலும் காஃபி ஷாப் போய்க்கலாமே?”

அவ்வளவு தான்! திவ்யா இப்படிப் பேசியது குற்றம்! ஒரு ஆண்பிள்ளையை இவ்வளவு சோதிக் கக் கூடாது நாயாய் அலைய விட்டு விட்டாள். ஒரு காஃபி அருந்த வருவதில் தான் கற்பே போய் விடுமா என்ன, கண்ணகிப் பரம்பரையில் வந்த கற்புக்கரசியாய் நினைப்பு, நான் “உம்” என்றால் என் முதலா ளிப் பெண்ணே என்னைக் கட்டிக் கொள்ளப்பதறியடித்துக் கொண்டு வருவாள் வாக்கு தவறிடக் கூடாதே என்று கண்ணியமாய் மணமுடிக்கவே காத்திருந்தால், மிகவும் சோதித்து விட்டாள். இனியும் பொறுமை யாய் இருந்தால் ஆண்பிள்ளை என்பதிற்கே அர்த்தமில்லை. உன் வழியில் இனிமேல் நான் குறுக்கே வருவதற்கில்லை குட் பை என்று திவ்யா பேரில் குற்றப் பத்திரிகை வாசித்து விட்டுப் போயேவிட்டான் அன்புக்கரசு.“என்ன மேடம்! அவரு பாட்டுக்கு கோச்சுட்டுப் போய்ட்டாரு நீங்க எதுவுமே நடக்காத மாதிரி பஸ்ஸப் பாத்திட்டிருங்கீங்க” திவ்யா திரும்பிப் பழனியைப் பார்த்தாள். “இப்போ என்ன நடந்துரிச்சினு நீங்க இவ்ளோ எமோஷனலா பாத்துட்டிருக்கீங்க பழனி?”

“என்ன மேடம் இப்படிக் கேக்குaங்க? அவரு எட்டு மாசமா எவ்வளோ பொறு மையா, சின்சியரா உங்கள லவ் பண்ணாரு இப்போ கோச்சிக்கிட்டுக் கடைசிங்கிற மாதிரி ஏதேதோ பேசிட்டுப் போறாகு, நீங்களும்...”

“பொறுங்க பழனி!” என்ற திவ்யா முகத்தில் என்றுமே காணாத கடுகடுப்பு தெரிந்தது. “எது பழனி சின்சியர் லவ்? அவனவன் லவ்வு லவ்வுனு உயிரை விடுறான், செருப்பால அடிப்பேன்னாலும் கெஞ்சிக் கூத்தாடுறான். காதலி வேற எவனையும் கட்டிக்கிட்டப்பறமும் இவன் தேவதாஸா ஆகிடுறான் ஆயுசு பூரா. நான் இவன அப்படியா இன்செல்ட் பண்ணேன்? இல்ல கட்டிக்க சம்மதிக்கவே மாட்டேன்னனா? இவனா தான் ஒரு வருஷக் கெடு வெச்சான். அதைத்தானே நான் ஞாபகமூட்டி விட்டேன்? இவன் கூட ஒரு கப் காஃபி சாப்பிட வரலேங்கிறது தான் இவன் காதல் ஃபெய்லியருக்குக் காரணம்னா, கேட்டவன் சிரிப்பான்.

இவனுக்குக் காதலும் கெடையாது ஒரு மண்ணாங் கட்டியும் கெடையாது பழனி. இவன் எனக்கு ரூட்டு விடும் போது இவனும் நானும் ஒரே தராதரம் அவனும் சம்பாதிக் கிறான். நானும் சம்பாதிக்கிறேன். லைஃப்ல செட்டிலாக அப்போ அது போதும் இப்போ என் தராதரத்தை விட அவன் தராதரம் ஒயந்துடிச்சி. மொதலாளிப் பொண்ணுக்கு ரூட்டுப் போடுற தகுதி இப்போ அவனுக்கு வந்துடிச்சி. இனி எதுக்கு என் கூட கமிட்மென்ட்? வெலக ஒரு சாட்டு வேணா? அதுக்கு தான் இதெல்லாம் அத விடுங்க பழனி”

மெல்ல சகஜ நிலைக்கு வந்தாள். “உங்க தம்பிக்கு இப்போ தானே வேல கெடச் சிருக்கு? அவருக்கு பொண்ணு பாக்கப் போறேங்கிaங்க? அதுக்கு இப்போ என்ன அவசரம்? மொத நீங்க இல்ல கல்யாணம் பண்ணிக்கணும்?” என்று கதையை திசை திருப் பினாள் திவ்யா.

“அப்பிடியில்ல பழனி, உங்க தம்பி தகுதிக்கு ஜாம்ஜாம்னு எப்போ வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா, என் தங்கச்சி சியாமளா ரொம்பப் படிக்காதவ இல்லியா? மூத்தவ என் கல்யாணத்துக்கு எல்லாத் தையும் வாரி எறைச்சு முடிச்சா, அவ எதிர் காலம் கேள்விக் குறியாகிவிடாதா? எட்லீஸ்ட் என்னை மாதிரி ஒரு நல்ல ஜாப்செய்றவள்னாலும் சொல்ல லாம் அவ எதிர் காலத்தை அவ பாத்துப்பானு அப்பிடி இல்லியே? என் காரியம் முடிஞ்சா சரின்னு என்னால எப்பிடி கண்டுக்காம இருக்க முடியும் சொல்லுங்க?”

எப்போவும் அலெட்டாவே இருந்துட்டிருக்கேன் தன்னை விட வசதியிலயோ படிப்புலயோ அதிகமாக இருக்கதுல தான் எல்லாருக்குமே ஈர்ப்பு அதிகமா இருக்கு அன்பான லைஃப் எதுங்கிறதை நெனச்சே பாக்கிற தில்லை. பாக்கலாம் இன்னா ருக்கு இன்னாருனு இருக்கில்ல? அதிருக்கட்டும், உங்கப் பழக் கடைல வெல ஜாஸ்த்தியானப் பழங்களப் பகட்டாவச்சி, இந்த நெல்லிக்காய்கள் எதுக்கு ஒரு ஓரமா வச்சிருக்கீங்க? நெல்லி பெறுமதி தெரியலியா என்னா?” என்று சிரித்துவிட்டு பஸ்ஸேறிப் போய்விட்டாள் திவ்யா.

திவ்யா, பழனி கண்முன் வந்து புன்னகைத்துக் கொண்டே இருப்பது போல் பிரம்மை. நம் அரவிந் வரதட்சணை வாங்கிக் கல்யாணம் முடிப்ப தில்லையென்ற குறிக்கோலே வைத்திருக்கிறான். ஆனாலும் அவனுக்கு ஒரு படித்தப் பெண் ணையே தேடிக் கொண்டி ருக்கிறான் பழனி. அவனுக்கு பேங்க் உத்தியோகத்திற்கான அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும் கிடைத்து விட்டது. திவ்யா அரவிந்தனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால், அதன் பிறகு பெரிய சீர் வரிசையோடு திவ்யா தங்கை சியாமளாவை நல்ல முறையில் திருமணம் முடித்துக் கொடுக் கலாமே! இந்த உத்தேசத்துக்கு திவ்யா சம்மதிப்பாளா? அரவிந்துக்கு திவ்யாவை விட ஒரு நல்ல பெண் கிடைப்பாளா? பேசிப் பாத்து விட்டால் தான் என்ன?

நெல்லிக் கனிகளோடு திவ்யாவுக்காகக் காத்திருந்தான் பழனி. அதென்னவோ பழனி யைப் பார்த்து விட்டாலே பூவாய்ப் புன்னகைப்பாள் திவ்யா தம்பியின் பெண்சா தியாய்க் கற்பனை செய்து அவளைப் பார்த்தடியே அவள் கடையருகே வருவதற்குள் ஒரு குறுங்கனவு கண்டு மீண்டான் பழனி.

வழமையான உரையா டலோடு ஆரம்பித்து மெல்ல அவன் கனவைச் சொன்னான். சட்டென்று நிமிர்ந்து பார்த்த, திவ்யா எண்ணத்தை ஊகிக்க முடியவில்லை பழனியால் “சாரி மேடம் நான் தப்பா ஆசைப்பட்டுட்டேனா? என் தம்பிக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கத் தகுதியில்லியா?” என்று ஆதங்கமாய்க் கேட்டான்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”