புத்தியே பலம்!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

புத்தியே பலம்!

Post by mubee » Sat Oct 12, 2013 3:02 pm

ஒரு ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் பலசாலிகள். உடல் பலத்தை விட மூளை பலமே வாழ்க்கைக்கு உதவும் என்பது இளங்கோவின் கருத்து

உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும், மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். என்று சொல்லி சிரிப்பர். அவனின் நண்பர்கள் ஒருநாள் இளங்கோ தனது கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். வண்டியை நிறுத்தி விட்டு யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான். எதிர் திசையில் இருந்து அவனது மூன்று நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

மேட்டியிலிருந்து இறங்கி தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான். அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான். “எனதருமை நண்பர்ளே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி’” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று அவர்கள் கேட்டனர். “உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ. அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் பலமான சிரிப்புச் சிரித்தனர். ஆளைப்பார்த்து எடை போடாமல் போட்டிக்கு வருமாறு இளங்கோ சவால்விட்டான்.

அவர்களும் வேண்டா வெறுப்பாக போட்டிக்கு சம்மதித்தனர்.அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை. திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ” என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

இளங்கோவிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங்கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.வண்டி இப்பொது மெல்ல மேட்டில் ஏறத்துவங்கியது.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்தக்கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ. அவர்களுக்க அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று. “மூளை பலம் என்பது இது தான்” என்று சொல்லி விட்டு தனது வண்டியை இழத்துக்கொண்டு சென்றான் இளங்கோ.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re:இருக்கின்ற இடத்தையும் கவனி

Post by mubee » Tue Oct 15, 2013 11:09 am

ஓர் ஊரில் வானவியல் அறிஞர் ஒருவர் இருந்தார். இரவு நேரத் தில் வானத்தில் விண்மீன்கள் எங்கெங்கே உள்ளன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார் அவர். ஒருநாள் இரவு அவர் வானத்தில் உள்ள வின்மீன்களைப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தார். கீழே இருந்த பெரிய பள்ளத்தை அவர் கவனிக்கவில்லை.

அந்தப் பள்ளத்தில் விழுந்த அவர் காயம் அடைந்தார். “யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார் அவர். குரல் கேட்டு அங்கு வந்த ஒருவர் “இவ்வளவு பெரிய பள்ளம் இருந்தது.

உமக்குத் தெரியவில்லையா? எப்படி இதில் விழுந்தீர்?” என்று கேட்டார். “ஐயா நான் வானவியல் அறிஞன். வானத்தில் உள்ள விண்மீன்களைப் பார்த்தபடி நடந்தேன். பள்ளத்தைக் கவனிக்கவில்லை.

என்னைத் தூக்கி விடுங்கள்” என்றார் அறிஞர்.

“அவ்வளவு தொலைவில் உள்ள விண்மீன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உங்களுக்கு அருகில் உள்ள பள்ளம் தெரியாமலா போய்விட்டது? இருக்கின்ற இடத்தையும் கவனியுங்கள்” என்ற அவர் அந்த அறிஞரைப் பள்ளத்திலிருந்து தூக்கிவிட்டார்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”