சொர்க்கம் நரகம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

சொர்க்கம் நரகம்

Post by பத்மணி » Fri Oct 11, 2013 10:06 pm

ஒரு பிரபலமான துறவியின் ஆசிரமம்,தூரத்திலிருந்து ஒருவர் அவரை பார்க்க வந்து இருந்தார்.வழக்கமான உபசரிப்புகலெல்லாம் முடிந்த பிறகு வந்தவர்,துறவியிடம் கேட்டார்,

'ஐயா,சொர்க்கம்,நரகம்னு சொல்லறாங்களே,அதெல்லாம் நிஜமாகவே இருக்குதா?.சும்மா புருடாவிடுராங்களா?.

துறவியோ சற்றும் யோசிக்காமல் சொன்னார்,'
இதிலென்ன சந்தேகம்?அவை நிச்சயமாக இருக்கிறது.பொய்யில்லை'

வந்தவர் அமைதியாக இருந்தார்.இந்தப்பதிலில் அவருக்கு முழு திருப்தி இல்லை எனபது அவரது முக பாவத்திலேயே தெரிந்தது.

'என்ன யோசிக்கிறீங்க?எதுவானாலும் தயங்காம கேளுங்க'.

நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது.இங்கே வர்றதுக்கு முன்னாடி,இன்னொரு துறவியின் ஆசிரமத்துக்கு போயிருந்தேன் அவருகிட்டேயும் இதே கேள்வியைக் கேட்டேன்.

'அப்படியா?அவர் என்ன பதில் சொன்னார்?'

'சொர்க்கம் நரகம்ன்னு எதுவும் கிடையாது.எல்லாம் சுத்த பேத்தல்ன்னு சொன்னார்'.

உண்மைதான்!. துறவி.

வந்தவர் அதிர்ந்துவிட்டார்.என்னது,,,?.சொர்க்கம்,நரகம் எல்லாம் உண்மைன்னு கொஞ்சம் முன்னாடி நீங்கதானே சொன்னீங்க!.

'ஆமா சொன்னேன்.அதுவும் உண்மைதான்!'

அதெப்படி ரெண்டும் உண்மையாக இருக்கமுடியும்?.

நீங்க முன்னமே பார்த்தவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

இல்லை!'அவர்தான் துரவியாச்சே'.

உங்களுக்கு?.

'கல்யாணமாகி ரெண்டு குழந்தைக இருக்காங்க'.

"அதனாலதான்'. முன்னால நீங்க பார்த்த துறவிக்கு சொர்க்கமும் நரகமும் இல்லை. உங்களுக்கு ரெண்டும் உண்டு".
ரெண்டுமே உண்மைதான்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”