சாவு அருகில் வந்தால்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

சாவு அருகில் வந்தால்

Post by mubee » Fri Oct 11, 2013 2:29 pm

காட்டில் கிழவன் ஒருவன் விறகு வெட்டினான். வெட்டிய விறகுகளைப் பெரிய கட்டாகக் கட்டினான். அதைத் தோளில் தூக்கிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.

வீடோ நெடுந்தொலைவில் இருந்தது. அவனால் விறகுக் கட்டைச் சுமக்க முடியவில்லை. கட்டைக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஒரு மரத்தடியில் இளைப்பாறினான்.

"என்ன வாழ்க்கை இது? இப்படி ஒரு வாழ்க்கை வாழ் வதை விட இறந்து விடுவது மேல்" என்று நினைத்தான் அவன்.

"ஏ! எமனே! எல்லோருக்கும் சாவைக் கொண்டு வருபவனே. நீ எங்கே இருக்கிறாய்? உடனே இங்கு வந்து இந்தத் துன்பங்களி லிருந்து என்னை விடுதலை செய்" என்று உரத்த குரலில் சொன்னான்.

யாரோ சருகுகளின் மேல் நடந்து வரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான் அவன்.

அங்கே கிழவர் ஒருவர் நின்றிருந்தார். "முதியவரே! நான்தான் எமன். உமக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னை அழைத்தீர்?" என்று கேட்டார்.

கண் எதிரே எமனைக் கண்ட அவன் அஞ்சி நடுங்கினான். "எமனே! இந்த விறகுக் கட்டு மிகுந்த எடை உள்ளது. யாராவது தூக்கி என் தலையில் வைத்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் உம்மை அழைத்தேன். இந்த விறகுக் கட்டை என் தலையில் தூக்கி வையும்" என்றான் அவன்.

எமன் அந்த விறகுக் கட்டைத் தூக்கி அவன் தலையில் வைக்க அங்கிருந்து வேகமாக நடந்தான் அவன்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”