நான் படித்த பள்ளி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

நான் படித்த பள்ளி

Post by sailakshmi » Thu Oct 10, 2013 5:20 pm

நண்பர்களே! இப்பொழுது நான் படித்த பள்ளியை பற்றி பார்க்கலாமா? நான் ஆரம்ப காலத்தில் சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் வில்லியம்ஸ் என்ற ஸ்கூலில் படித்தேன்.அங்கு இரண்டு வருடம் தான் படித்தேன் (ப்ரீ கே ஜி மற்றும் எல் கே ஜி ) அங்கு நடந்த சம்பவம் ஒன்று இன்னும் என் மனதில் பதிந்து இருக்கிறது.அதை நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன்.அன்று என்னுடைய பள்ளியின் முதல் நாள்.சென்ற ஒரு சில நிமிடத்தில் ப்ரேயர் என்று சொன்னார்கள்.என்னை முதற்கொண்டு அனைவரும் அங்கு வந்தனர்.யாராவது ஒருவரை மேடையில் பாட சொன்னார்கள். உடனே எனது ஆசிரியர் என்னை அழைத்து உனக்கு தெரிந்த ஒரு கடவுள் வாழ்த்தைபாடு என்று சொன்னார். .அப்பொழுது என்னக்கு 3 வயது.எதற்கும் அஞ்ச மாட்டேன்.எங்கள் குடும்பமோ ஒரு சங்கீத குடும்பம். உடனே நான் பாட துவங்கினேன்.பாடி முடித்ததும் அனைவரும் ஒரே சிரிப்பு.அது என்ன பாட்டு தெரியுமா? நீங்களே கேளுங்கள்.மாசிலா உண்மை காதலே!மாறுமோ தென்றல் வந்த போதிலே!பேசும் வார்த்தை உண்மைதானா?பேதையே ஏங்க நீங்க போடும் வேஷமா? இந்த பாடலை தான் நான் பாடினேன் .எனக்கு குரல் வளம் கொஞ்சம் நன்றாகவே இருக்கும்.எனது பெரியப்பா எனக்கு கற்று கொடுத்த பாட்டு இது. சிறு குழந்தையிலிருந்தே எனக்கு அந்த பாட்டை கற்று கொடுத்து கற்று கொடுத்து எனக்கு அந்த பாடல் பதிந்து விட்டது .


இரண்டாவது சம்பவம் என்னவென்றால், அன்று என் நண்பனின் பிறந்த நாள்.அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தான்.நானும் வாங்கினேன் .சாப்பிட்ட பிறகு அதனுடைய கவரை நன்றாக சுருட்டி மூக்கில் வைத்து உள்ளே இழுத்து விட்டேன் .அது மூக்கில் மாற்றி கொண்டது. யாரிடமும் சொல்லவில்லை வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டில் வந்த சிறுது நேரம் கழித்து மூக்கு ஏறிய ஆரம்பித்தது .அப்பொழுது மெதுவாக என் அம்மாவிடம் சொன்னேன் .உடனே என் தாய் தவித்தே போய்விட்டால்.உடனடியாக பக்கத்துக்கு வீடு அம்மாவை அழைத்து நடந்ததை கூறினார்.உடனே அவர் கட்டிங் பிளையர் வைத்து என் மூக்கில் விட்டு அதனை எடுத்தார். எடுப்பதற்கு 45 நிமிடங்கள் ஆனது.எடுத்து விட்டு அவர் சிரித்தார்.இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன.




நன்றி !மீண்டும் சந்திப்போம்.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: நான் படித்த பள்ளி

Post by பத்மணி » Fri Oct 11, 2013 7:56 am

அன்பு சகோதரியாரே தமிழை கொஞ்சம் பார்த்து திருத்துங்கள்.'என் தாய் தவித்துப்போய்விட்டாள்' என்பதற்குபதிலாக,(தவித்துப்போய்விட்டால்) கேள்வி வாக்கியமாக அமைந்துவிட்டது.தட்டச்சு செய்யும்போது தவறாக இருந்தாலும் படித்துப்பார்த்து திருத்திவிடுங்கள், நன்றி.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: நான் படித்த பள்ளி

Post by cm nair » Sat Oct 12, 2013 9:31 am

நல்ல...நினைவாற்றல்...சிறு வயதே...இப்படி என்றால்...இப்பொழுது எப்படி...விளையாட்டுக்கு சொன்னேன்...லக்ஷ்மி.... :)
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”