இதுபோதும், இன்னும்வேண்டும்!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

இதுபோதும், இன்னும்வேண்டும்!

Post by பத்மணி » Thu Oct 10, 2013 7:16 am

இது ஒரு குழு கூட்டத்தில் கேட்டகதைதான்.ஒரு கிராமத்தில அண்ணன்தம்பி ரண்டுபேர் இருந்தாங்க,அண்ணன்கிட்ட 99மாடுக இருந்துச்சு,தம்பிகிட்ட ஒரே ஒரு மாடு மட்டும்தான் இருந்துச்சு,தம்பிக்கு அந்த ஒரு பசுமாடு போதுமானதாக இருந்தது.அதுல பால் கறந்து வீட்டுல எல்லாருத்துக்கும் கொடுத்துட்டு மிச்சமிருக்கிறத வெளியில வித்தும்,தன்னோட நிலத்துல கஷ்ட்டப்பட்டு ஒழச்சான்,பலன் கெடச்சது சந்தோசமாக வாழ்ந்தான்.

ஆனால் 99மாடுகளை வச்சிருந்த அவனோட அண்ணன் சந்தோசமாக இல்லை.அவன்எப்படியாவது இந்த99பசுமாடுகல நூறாக மாத்தியாகவேணுமுன்னு என்னென்னவோ பண்ணிப்பார்த்து தோத்துப்போய் நிம்மதியே இல்லாம தவிச்சான்.ஒருநாள் அண்ணன், தம்பிய பாக்கவந்தான்,'தம்பி உன்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு மாடுதான் திடீர்ன்னு அது தொலஞ்சு போச்சுன்னா நீ என்ன பண்ணுவே?'' 'கொஞ்சநாள் கஷ்ட்டமா இருக்கும் அப்புறம் மறந்துடுவேன்'என்றான் தம்பி "எனக்கு அது ஒரு பெரிய இழப்பா தொனாதுன்னுநினைக்கிறேன்"

உண்மைதான் தம்பி."நீ ஒரு மாட்ட வச்சிருக்கிறதும் இல்லாம இருக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான்!".என்று கிண்டலாக சொன்னான் அண்ணன்."ஆனா என்னப்பாரு 99பசுமாடுகல வச்சுக்கிட்டுகஷ்ட்டப்படுறேன்','எங்கிட்ட இன்னும் ஒரே ஒரு மாடு இருந்தா போதும்.நூறு மாட்டுக்கு சொந்தக்காரன்னு ஊர்ல எல்லாரு எம்மேல பெரிய மரியாத செலுத்துவாங்க இல்லையா?'

'ஆமாண்ணா'ன்னு சொன்ன தம்பி 'வேணுமுன்னா,என்னோட பசுமாட்ட நீயே வெச்சுக்கோயேன்!'.

அதாவது,நம்ம மனசு நெறையா இருந்தா இன்னோ வேனுமுங்குது,கொறச்சலா இருந்தா,அதையும் விட்டுக்கொடுக்க தயாரா இருக்குதுங்கிற உண்மை புரியுதுங்களா?.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”