இஸ்ட்டமில்லாமல் தொடங்கி இளங்கலை.

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

இஸ்ட்டமில்லாமல் தொடங்கி இளங்கலை.

Post by பத்மணி » Fri Oct 04, 2013 7:12 pm

படிக்கப்போக வேண்டும் என்றாலே மிகவும் கசப்பாக இருந்தது.பள்ளிப்படிப்பை தொடங்கியது என்னவோ விஜயமங்கலம் பக்கமுள்ள முருகம்பாலயம்புதூர் தான்.அதுதான் நான் பிறந்த ஊர்,ஈரோடு மாவட்டம்.பள்ளிக்கூடம்
போகச்சொன்னால்,,,! பாலத்துக்கு அடியில் பதுங்கி இருந்து விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து விடுவேன்.இதை யாரோ பார்த்துவிட்டு வந்து என் அம்மாயிடம் சொல்லிவிட,அடுத்தநாள் பிடிபட்டேன்.இரண்டு வாரங்களில் இரண்டுநாள்தான் பள்ளிக்கூடம் போயிருப்பேன்.அதனால் டீச்சர் வாத்தியார் ,பேரெல்லாம் ஞாபகமில்லை

அடுத்தவாரமேஎன்னைஎன்அப்பாவின்ஊருக்குஅனுப்பிவைத்து விட்டார்கள். அது ஈரோட்டிலிருந்து வெள்ளகொவிலுக்குப்போகும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எழுமாத்தூர் என்ற கிராமம்.இங்குதான் எனது பள்ளிப்பயணம் தொடங்கியது,அப்பா என்றால் எனக்குப்பயம்.அவருக்குப்பயந்து பள்ளிக்கு ஒழுங்காகப் போகத்தொடங்கினேன், முதல் வகுப்பு டீச்சர் மேரிடீச்ச்சர்,நான் ஏழாவது படிக்கும்போது ஒருமுறை என்னைப்பார்த்து நீ மாணிக்கம்தானே,நல்லா இருக்கியா நல்லா படிக்கிறாயா?.என்று கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,அவர்கள் நாபகம் வைத்திருந்ததுக்கு காரணம் பிறகுதான் தெரிந்தது,டீச்சருக்கு ஒரே பொண்ணு அதுவும் என்கூடத்தான் ஒன்னாம் வகுப்பு படித்தது.கிளாஸ் ரூம்லேயே அவுங்க பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவாங்க கைல சாப்பாட்டை எடுத்து அதோட வாய்க்கிட்ட கொண்டுபோகும்போது நானும் என்னோட வாயைத் திறப்பேன்,அது என்னையறியாமல் செய்தது.அதற்காக பிரம்பால் அடி பின்னி எடுத்து விட்டார்கள்,யார் யாரோ சமாதானம் செய்தும் அழுகை நிற்கவேயில்லை.பிறகு தலைமை ஆசிரியரிடம் விசயம்போயி திட்டும் வாங்கியிருக்கிறார்.என்னை மறக்க முடியுமா?

மூன்றாவது வரைக்கும்தான் எழுமாத்தூரில் பிறகு ஜாதக குளறுபடியால்கோயம்புத்தூருக்கு குடும்பமே குடிபோகவேண்டியதாயிற்று நாலு ஐந்து வகுப்புகள் மதுக்கரை யூனியனில் உள்ள பச்சாபாளையம் என்ற கிராமத்தில்தான் படித்தேன்.இங்கு மூன்றே ஆசிரியர்கள்தான் சின்னவாத்தியார் பெரியவாத்தியார்,ஒரு டீச்சர். இந்த பள்ளியில்தான் எனக்கு ஆங்கில அறிவு கொஞ்சம் தோன்றியது,ka-என்றால் க என்றும் ku என்றால் கு என்றும்வார்த்தைகளை உருவாக்கக்கற்றுக்கொண்டேன்.கூடவே சமையல் செய்யவும் கற்றுக்கொண்டேன், ஆமாம் ஆயம்மா இல்லாததால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் தினம் இருவர் சமையல் செய்ய வேண்டும்.

மீண்டும் ஜாதக பிரச்சனையால் ஆறாவது படிக்க எழுமாத்தூருக்கே போனேன். சொல்பேச்சு கேக்காமல் டிராக்டரில் ஏறி விழுந்து இடது கை முறிந்து இறுதி தேர்வு எழுத முடியாமல்,டாக்டர் சான்றிதல் கொடுத்து பாஸ் ஆனேன்.குறும்பு அதிகமானதால்,கோயம்புத்தூருக்கே அனுப்பப்பட்டேன் .ஏழாவது எட்டாவதும்,வழுக்குப்பாறையில் படித்தேன்,ஒன்பதாவது மதுக்கரையில் கட் அடித்தது அதிகம் என்பதால் ரிசல்ட் பார்க்கக்கூட போகவில்லை பிறகு பத்தாவதும் பிளஸ்டுவும் கரசில்தான் படித்தேன்.பீ.காம்.கூட கரஸ்லாதான்.சுவாரசியமாக இல்லாவிட்டாலும் இதுவரை பொறுமையாக படித்த அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றி.
Last edited by பத்மணி on Fri Oct 04, 2013 8:57 pm, edited 2 times in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இஸ்ட்டமில்லாமல் தொடங்கி இளங்கலை.

Post by ஆதித்தன் » Fri Oct 04, 2013 7:31 pm

ஏன் கசப்பாக இருந்தது?
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”