பிறர் உதவி நாடாதே

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

பிறர் உதவி நாடாதே

Post by mubee » Wed Oct 02, 2013 4:32 pm

பூனைக்குட்டி ஒன்றும் குருவிக் குஞ்சு ஒன்றும் ஒன்றாக வளர்ந்தன. நட்புடன் இருந்தன. அவை விளையாட்டாகச் சண்டை போட்டுக் கொள்ளும். பிறகு கூடிக் கொள்ளும். இரண்டிற்கும் இடையே பகை ஏற்பட்டதே இல்லை.

'இப்படியே சில ஆண்டுகள் சென்றன. பூனைக் குட்டி வலிமையுள்ள பெரிய பூனையானது. அதுவும் குருவியும் முன்பு இருந்தது போலவே நட்புக் கொண்டிருந்தன.

அந்தக் குருவிக்கும் இன்னொரு குருவிக்கும் பகை ஏற்பட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று கொத்திச் சண்டையிட்டுக் கொண்டன.

தோற்ற குருவி அழுது கொண்டே தன் நண்பனான பூனையிடம் வந்தது. "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய குருவியை நீதான் தண்டிக்க வேண்டும்" என்றது.

"என்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டது பூனை.

"உன் வலிமை உனக்குத் தெரியாது. நீ நினைத்தால் ஒரே அடியில் அந்தக் குருவியைக் கொன்று தின்ன முடியும்" என்றது குருவி.

உடனே பூனை அந்தப் புதுக் குருவியைப் பிடித்தது. தன் கால்களில் பிடித்து அழுத்தியது. அதைக் கடித்து விழுங்கியது. ஆ! இந்தக் குருவி இவ்வளவு சுவையாக உள்ளதே! குருவியின் இறைச்சி மிகவும் சுவை என்பதை அறியாமல் போனேன் என்று நினைத்தது.

நண்பன்தான் என்று நினைத்துப் பூனையின் அருகில் வந்தது குருவி. அவ்வளவுதான் அதன் மீது பாய் ந்து அதையும் பிடித்து விழுங்கியது பூனை.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: புறா என்ன செய்தது?

Post by mubee » Thu Oct 03, 2013 3:57 pm

புறா ஒன்றைக் கழுகு ஒன்று துரத்திக் கொண்டு சென்றது. வழியில் உழவன் ஒருவன் காக்கைகளைப் பிடிப்பதற்காக வைத்திருந்த வலையில் இரண்டும் சிக்கிக் கொண்டன.

உழவன் அங்கு வந்தான். அவனைப் பார்த்துக் கழுகு, "உன் வயலுக்குத் தீங்கு செய்யும் பறவைகளைப் பிடிப்பதற்காக இந்த வலையை விரித்து வைத்துள்ளாய். தவறுதலாக நான் இதில் சிக்கிக் கொண்டேன். நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? என்னை விடுவித்துவிடு" என்று கெஞ்சியது.

அதற்கு அவன் "கழுகே! இந்தப் புறா உனக்கு என்ன கெடுதல் செய்தது? ஏன் அதைக் கொல்வதற்குத் துரத்திக்கொண்டு ஓடி வந்தாய்?" என்று கேட்டான். ஏதும் பதில் சொல்ல முடியாத கழுகு விழித்தது. "பிறரிடம் அன்பு காட்டாதவர்கள், மற்றவர்களிடம் அன்பை எதிர்பார்க்கக் கூடாது" என்ற அவன் அந்தக் கழுகைக் கொன்றான்.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: வல்லவனுக்கு வல்லவன்

Post by mubee » Fri Oct 04, 2013 3:12 pm

குகையில் சிங்கம் ஒன்று படுத்திருந்தது. கொசு ஒன்று அதன் முகத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வந்தது.

எரிச்சல் அடைந்த சிங்கம் "அற்ப கொசுவே! என்ன துணிச்சல் இருந்தால் இப்படிச் செய்வாய்? ஓடினால் பிழைத்தாய்" என்று கத்தியது.

அதற்குக் கொசு, "சிங்கமே! உன்னைவிட வலிமையுள்ளவன் நான். உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?" என்று தற்பெருமையுடன் சொன்னது.

சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த அது கடிக்கத் தொடங்கியது.

கோபம் கொண்ட சிங்கம், "கொசுவே! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி தன் கால்களால் முகத்தில் அறைந்தது.

இதை எதிர்பார்த்த கொசு அங்கிருந்து பறந்து அதன் மூக்கில் கடித்தது.

சிங்கமோ கொசுவை அடிக்கடி தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தது.

கொசுவோ பாய்ந்து பாய்ந்து அதன் முகத்திலும் கன்னத்திலும் உடலிலும் மாறி மாறிக் கடித்தது.

தன் கால்களால் அறைந்ததாலும் நகங்களால் கீறியதாலும் சிங்கத்தின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. கொசுவோ அதனிடம் சிக்கவே இல்லை.

களைப்பும் வேதனையும் அடைந்த சிங்கம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

'சிங்கத்தையே வென்று விட்டோம்' என்று மகிழ்ச்சி அடைந்தது கொசு. அப்படியே அங்கிருந்து பறந்தது.

குகையின் ஒரு மூலையில் இருந்த சிலந்தி வலையை அது கவனிக்க வில்லை. அந்த வலையில் சிக்கிக் கொண்டது. விடுபடத் தன்னாலான முயற்சி செய்தது. அதனால் முடியவில்லை.

அருகில் வந்த சிலந்தி அதைக் கொல்லத் தொடங்கியது. "வலிமை வாய்ந்த சிங்கத்தையே வென்றேன். அற்பச் சிலந்தியிடம் சிக்கி உயிரை விட வேண்டி வந்ததே" என்று வருத்தத்துடன் சொல்லியபடி உயிரை விட்டது கொசு.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: உதவி செய்! உதவி கிடைக்கும்!

Post by mubee » Mon Oct 07, 2013 5:18 pm

வணிகன் ஒருவன் தன் கழுதையின் முதுகில் நிறைய மூட்டைகளை ஏற்றினான். அதை ஓட்டிக் கொண்டு காட்டு வழியாகப் புறப்பட்டான். காவலுக்கு நாயும் உடன் வந்தது.

வழியில் நல்ல புல்வெளியைப் பார்த்தான் அவன். கழுதையை மேயவிட்டு விட்டு அருகிலிருந்த மரத் தின் நிழலில் தூங்கத் தொடங்கினான்.

புல்லை நன்கு மேய்ந்து கொண்டி ருந்தது கழுதை. பசியால் வாடிய நாய் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தது.

அதனால் முடியவில்லை.

கழுதையின் அருகே வந்து அது, "நண்பனே! கொஞ்சம் கீழே படு. ஒரு மூட்டையில் உள்ள உணவில் சிறிதளவு எடுத்துக் கொள்கிறேன். பசி தாங்க முடியவில்லை. எசமான் தூங்கிக் கொண்டு இருக்கிறார்" என்றது.

ஆனால் கழுதையோ அதைக் காதில் வாங்காதது போல புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

பசி தாங்காத நாய் மீண்டும் மீண்டும் கழுதையைக் கெஞ்சியது.

எரிச்சல் அடைந்த கழுதை, "ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? இன்னும் சிறிது நேரத்தில் எசமான் எழுந்து வருவார்.

அவர் வந்ததும் உனக்கு உணவு கொடுப்பார். என்னை இப்படித் தொந்தரவு செய்யாதே" என்றது.

பசி தாங்க முடியாத நாய் அப்படியே சோர்ந்து விழுந்தது. அங்கே வந்த ஓநாய் ஒன்று கழுதையின் மீது பாய்ந்தது. உயிருக்கு அஞ்சிய கழுதை, "நண்பனே! ஓடி வா! ஓநாயிடம் இருந்து என்னைக் காப்பாற்று" என்று கெஞ்சியது.

தான் இருந்த இடத்தை விட்டுச் சிறிதும் அசையாத நாய், "கழுதையே! ஏன் அவசரப் படுகிறாய்? இன்னும் சிறிது நேரத்தில் எசமான் எழுந்து வருவார். அவர் உன்னைக் காப்பாற்றுவார்" என்றது.

கழுதையின் மேல் பாய்ந்து ஓநாய் அதைக் கொன்றது.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re:அழகான குட்டி

Post by mubee » Thu Oct 10, 2013 5:15 pm

படைப்புக் கடவுள் காட்டு விலங்குகளை எல்லாம் அழைத்தார். "நாளை இங்கே அழகுப் போட்டி நிகழ உள்ளது. எந்த விலங்கின் குட்டி அழகாக உள்ளதோ அதற்குப் பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்தார். மான் தன் குட்டியுடன் அங்கு வந்தது.

அதே போலச் சிங்கமும் புலியும் தங்கள் குட்டிகளுடன் அங்கு வந்தன. அப்படியே பல விலங் குகளும் தங்கள் குட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்தன. கடைசியாக குரங்கு ஒன்று தன் குட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்தது. அந்தக் குரங்குக் குட்டியின் சப்பை மூக்கையும் அவலட்சணமான முகத்தையும் பார்த்து மற்ற விலங்குகள் சிரித்தன.

குரங்கைப் பார்த்துச் சிங்கம் "அழகான குட்டிக்குத்தான் கடவுள் பரிசு அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார். எந்த நம்பிக்கையில் உன் குட்டியை இங்கே அழைத்து வந்திருக்கிறாய்?" என்று கேட்டது. அதற்கு குரங்கு, "என் கண்களுக்கு என் குட்டிதான் மிக அழகாக உள்ளது. சிறந்ததாகக் காட்சி அளிக்கிறது. பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அழைத்து வந்திருக்கிறேன் கடவுள் பரிசு தருவாரா மாட்டாரா என்பது எனக்குத் தெரியாது" என்று பதில் சொன்னது.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”