நெஞ்சம் மறப்பதில்லை- பள்ளி நினைவுகள்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

நெஞ்சம் மறப்பதில்லை- பள்ளி நினைவுகள்...

Post by cm nair » Tue Oct 01, 2013 5:28 pm

முதலில் ஜோதி நர்ஸரீ-ல் ஜோதி டீசர்...ரொம்ப நல்லவங்க.ஆனா அவங்க புருஷன் ஜார்ஜ் சார்...பார்க்க பயமா இருக்கும்.கண்ணு எல்லாம் சிவப்பா இருக்கும்.ஆம்பிள பசங்கள தல கீழ தொங்க விடுவாரு.. கல் உப்பு மேல முட்டி போட வைப்பாரு.நான்ரொம்ப அமைதியான பொண்ணு ஆனதால் என்னை ரொம்ப பிடிக்கும்.கன்னத்தை கிள்ளுவாரு..எனக்குபுடிக்காது.ஒண்ணாவது முதல் அஞ்சு வரை ஸீ.எஸ்.ஐ-ல் படித்தேன். எல்லா டீசர்-ம் நல்லவங்க..தையல் டீசர் மட்டும் எல்லாருக்கும் பயம்.வயிறை கிள்ளி தண்டனை கொடுப்பாங்க.ஆறு முதல் பனிரெண்டு வரை ப்ரெஸிடந்ஸீ பெண்கள் பள்ளியில் படித்தேன்.எனக்கு முதல் ரெண்டு தோழிகள் கிடைத்தார்கள்.நளினி..ரதி..படிப்பில் இவர்களுடன் போட்டி.கேம்ஸ் டீசர்-ஐ பயம். அதனால் வெளயாட போக மாட்டேன்.ரதி கார்-ல வருவ..அதிசயமா பார்ப்போம்.எட்டு வரை நல்ல டீசர்ஸ்..நல்ல தோழிகள்..அப்பவும் அமைதியான பொண்ணு. ஒன்பது,பத்தில் கீதா, சுகந்தி-ன் நட்பு கிட்டியது.எஸ்டர் மிஸ் ரொம்ப அழகா ஆங்கில பாடம் நடத்துவாங்க...நான் அவங்க பெட் மாணவி.அப்பறம் ஜயலக்ஷ்மி மிஸ் அறிவியில் நல்ல சொல்லி தருவாங்க..அந்த சமயத்தில மலயாளம் மீடியம் ஒரு பொண்ணு என்னை கூப்பிட்டிட்டு வெட்கப்படுமெங்க..என்னனு கேட்ட admire-ம்...
கீதா நானும் ஒன்னா நடந்த எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க...காரணம் அவள் கார் முகிலின் நிறம்..மனம் என் அளவில் தும்பை பூ வெண்மை...நான் க்ரீம் டீஷ்டம்பர் கலர்-க...கருப்பு..வெள்ளை வெல்லம்-னு சொல்லுவாங்க...கருப்புல இருக்கிற தித்திப்பு எத்திலங்க இருக்குது?பதினோனு புடிச்சது....எல்லாம்...!கீதா சுகந்தி அறிவியல் க்ரூப்..நான் வரலாறு க்ரூப்..அப்ப எல்லாம் அப்பா, அம்மா-கு இஷ்டம் ஆனதைதான் படிக்கணம்..என்ன செயறது..?டாக்‌டர் ஆக ஆசைபபட்டு கணக்காளர் ஆயிட்டேன்...ம்..
பதினோனு..புது முகங்கள்..60 மாணவிங்க... முதல் ஆசானாக பாலு என்கிற பாலசுப்ரமணியம் சார் வந்தாரு..மாணவிகளை பார்த்தவுடன் அவருக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.எந்த கல்லூரியில் படிச்சிங்க...கல்யாணமானவார...காதலிச்சு இருக்கீங்களா..நாலு மூலையிலிருந்து நாற்பது கேள்வி கணைகள்..பாவம் மனுஷன் அடி போயிட்டாரு...ஹிஸ்டரீ க்ரூப்-ல் அன்றய நாள் bigoraphy வகுப்புஆகிவிட்டது.அப்பவும் நான் அமைதியான பொண்ணுதாங்க.ரெண்டு நாட்கள் முடிந்தபொழுது அவரை பார்த்து கேள்வி கேட்டவர்கள் பயப்பட ஆரம்ப்பித்தார்கள்...நன்றாக அகௌன்டெந்ஸீ சொல்லி தருவார்..இடை-ல் ஸிநிமா கதை சொல்வாரு...suddenly பாடத்தில் இருந்து கேள்வி கேட்ப்பாரு...ஆனாலும் நல்ல ஆசான்...அவரை அடுத்து வந்தவரும் ப்ரஹ்மாச்ாரி...பாலு சார் பிராமின்..அடுத்து வந்தவர் கிரிஸ்டின்.பாலு சார் என்ன சொன்னாரோ....தெரியல..வந்தவர்...அவருடய சுய சரித்திரத்தை கரும்பலகைல் எழுத ஆரம்பித்துவிட்டார்.... என்னுடய க்ரூப்-ல் ஆரோக்கிய மேரீஎன்றொரு மாணவி..பார்க்க அழகாக இருப்பார்...வாரலாறு க்ரூப்-ப இல்லை பையோக்ரஃபீ க்ரூப்-ப என்றதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.. தீடீரென்று திரும்பி பார்தத அவர் லாஸ்ட் பென்ச் ஸ்டாண்ட் என்றார்.நாங்கள் 15 பேரும் எழுந்து நின்றோம்.எதற்காக சிரித்தீர்கள்...சொன்னால் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்றார்.யாருக்கும் தைரியம் வரல. மேரீ முதலில் அவர்களை உட்கார சொல்லுங்கள்.நான் சொல்கிறேன் என்றதும் மணி அடித்தது.எகநாமிக்ஸ் டீசர் சிங்காரி உள்ளே வரவும் அவர் அமைதியாக சிரித்து கொண்டு போனார்.சிங்காரி பெயருக்கு பொருத்தம் இல்லை என்றாலும் திறமையான டீசர்.நன்றாக பாடம் நடத்துவார்.நான் 90%மார்க் ஸ்கோர் பண்ணது எகநாமிக்ஸ்-ல் தான்.கண்டிப்பான டீசர்.அவங்க காலேஜ் படிக்கும்போது கால் கட்டை விரலை பார்த்துதான் நடப்பார்களாம். அப்படியும் ஒரு மாணவன் அவர்களை காதலிததானாம். இது எதற்கு சொல்கிறேன் என்றால் இனி வரும் ஒரு கதை.. அடுத்து ஆங்கில டீசர் கீதாவாசன்.அவரது வகுப்பில் அவரது விழிகளை பார்த்தால நல்ல தூக்கம் வரும்.மாணவிகளில் ஒரு கேடீ மாணவி குணசுந்தரி..பெயருக்கு அப்பாற்பட்டவர்.அவள் வைத்த பெயர்(English டீசர்) முட்டை கோஸ்... அடுத்து ஹிஸ்டரீ டீசர் பெயர் ஸ்வ்மினி எல்லாரும் அழைப்பது ஷோமினி.கால் மேல் கால் போட்டுதான் பாடம் நடத்துவார்..அவருடய வெண் நிற கால்களை பலரும் காமென்ட்ஸ் அடிப்பார்கள். நான் அவருடய செல்ல மாணவி.காரணம் அவரும் மலயால தேசம்.யாருடனும் அதிகம் பேசமாட்டேன்.எங்கள் பள்ளியின் எதிர்புறம் ஆண்கள் விடுதி.
ஆதனால் ஷோமினி மிஸ், "என்ன நீங்க எல்லாம் ஸ்ரீதேவி...உங்களை பாக்கருவாங்க எல்லாம் கமல்ஹாஸானா...என்பார்கள்..பாலு சாருக்கு பின்னால் வந்தவர் பெயர் காமராஜர்...அவர் வணிகவியல் (commerce) க்கும் ஆசான். அவர் முதலில் கருபபலகையில் அவரது பெயர்...மற்ற விவரங்கள்..நல்ல கதை எழுத்தாளர்...நித்யன் என்ற பெயரில் அவரது முதல் கதை ஆன்நத விகடனில் வந்து உள்ளதாகவும் சொன்னார்.அவரது பையோக்ரஃபீ முடிந்த அடுத்த நாள் வகுப்பில் தலைவர் காமராஜர் புகைப்படம் மாட்டினார்கள். வகுப்பில் நுழைந்த உடன் கண்ணில் கண்டதை (காமராஜர் புகைப்படம்) கண்டு சிரித்ததும் அல்லாமல்...15 பேராக இருந்த எங்களை 5+5+5 பேராக மாற்றி உட்கார வைத்துவிட்டார்.நான்,தமயந்தி,ஜயந்தி,ராதா,மேரீ 2வது லைந்-லும் ரேணுகா போன்றோர் கடைசியிலும் இடமாற்றம். நான் அமைதியான பெண் என்பதால் மட்டுமல்ல....எல்லாருக்கும் நல்ல தோழி என்பதால் யாராலும் எனக்கு ஒரு கவலைஊம் இல்ல.காமராஜ் சாரு வாரத்தில் ஒரு நாளில் தான் நோட் புக் பார்ப்பாரு..ஒரு நாள் திடீரென்று prayer-ல் நோட் புக் பார்க்க போகிறேன்..எல்லாரும் எடுத்து வைக்க சொன்னார். முதல் 2வகுப்பு அவருடையது.மேரீ,ராதா எங்கள் க்ரூப்-ல் செய்திருக்கவில்லை.prayer-ல் இருந்து நழுவ நினைத்த பலரும் பின்னால் திரும்பினால் மாஸ்டர்ஸ்...முக்கியமாக பாலுவும்,காமராஜ் சார்...மேரீ திடீரென்று உட்கார முற்பட்டாள்.என்ன..என்று கேட்பதற்குள்...தலைச்சுத்துது..என்றால்..அவளின் சாகசத்தால் ஹோம்‌வர்க் செயாதவர்கள் அவளுடன் இருவர் வகுப்பிற்கு அனுப்பபபட்ட்னர்.அடுத்து ராதாவிற்கு வயிறு வலி..அவளும் நழுவிவிட்டாள்..prayer முடிந்து வகுப்பும் துவங்க காமராஜ் சார் வந்தார்.மேரீ,ராத பக்கம் அவர் பார்வை சென்றது.இருவரும் நார்மல்..நோட் புக்ஸ் correction செய்தார்.ஆரோக்கிய மேரீ என்றார்.மேரீ எழுந்தாள்.தலைசுற்றல் மாறிவிட்டதா என்றவர்..யாரை பார்த்து காபீ அடித்தாய் என்றார்..நான் காபீ குடிப்பதில்லை அவள் கூற வகுப்பில் சிரிப்பலை பொங்கி வழிந்தது.அவரும் மேலும் புன்னகை உடன் naration இல்லை என்றபடி நோட்-ஐ கொடுத்தார்..அடுத்து எம்.ஆர்.ராதா என்றார்.ஆர்.ராதா என்பதை அவ்வாறு சொன்னார்.அவள் எழுந்தாள்..வயிறு வலி எப்படி இருக்கு..அதில் ஒரு விஷமத்தனம்.அவள் ஒன்றும் பேசவில்லை.பின் பொதுவாக சொன்னார்...யாரை பார்த்து எழுதினாலும் சரியாக எழுதுங்கள்.என்றார்.அடுத்து என் முறை....என்.சந்திரிகா என்றார்...கோபமும்,அழுகைம் வந்தது.அதற்குள் மேரீ...இல்லை..சந்திரிகா.என்.என்று கூறவும் ஏன் அவங்க பேச மாட்டாங்களா..? என்றார்.நல்ல விளக்கத்துடன் எழுதி இருக்காங்க...குட் என்றபடி நோட்-இ தந்தாலும் அவர் என் இனிஷசலை கூறிய முறை பிடிக்கல. அப்பறம் பல கதைகள்....அவை அனைத்தும் வேதனை கலந்த இனிமையானது...பின் கல்லூரி...பள்ளி அளவிற்கு இல்லை......B.com...M.com எல்லாம் முடிந்தது...ஆடிடிங்க்...டைபிஸ்ட்,அகௌன்டென்ட் அப்படியாக வாழ்க்கை...கல் யாண பிடியில்..tension-எல்லாமாக மும்பயில் போய் கொண்டிருக்கிறது...........................நண்பர்கள்...தோழிகள்...........
தோழிகள் எல்லாரும்...பிரிந்து விட்டோம்..ஆனால் நினைவுகள் பிரியவில்லை...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நெஞ்சம் மறப்பதில்லை- பள்ளி நினைவுகள்...

Post by ஆதித்தன் » Tue Oct 01, 2013 7:00 pm

மகிழ்வான நிகழ்வுகளின் நினைவலைகள் பலமாக இருக்கிறது போல...
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: நெஞ்சம் மறப்பதில்லை- பள்ளி நினைவுகள்...

Post by விமந்தனி » Wed Oct 02, 2013 12:56 pm

நண்பர்கள் பிரியலாம். ஆனால் அவர்களின் நினைவுகள் என்றும் பிரியாது. உங்களது சுகமான சுமைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... :ro:
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: நெஞ்சம் மறப்பதில்லை- பள்ளி நினைவுகள்...

Post by பத்மணி » Fri Oct 04, 2013 10:06 pm

நூருவரிகளில்அடங்குமாநம்நினைவுகள்மும்பைவாசியாகஇருப்பதால் தானோ என்னவோ தமிழை சரியாக எழுதமுடியவில்லை எப்படி இருந்தாலும் உங்கள் முயற்ச்சி பாராட்டக்கூடியது,வாழ்க வழமுடன்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”