உதவி செய்யாத வலிமை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

உதவி செய்யாத வலிமை

Post by mubee » Mon Sep 30, 2013 3:14 pm

சிங்கம் ஒன்று கடற்கரை ஓரம் உலாவிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடலிலிருந்து தலையை உயர்த்திய திமிங்கிலம் ஒன்று சிங்கத்தைப் பார்த்து, ‘இந்தக் கடலுக்கு அரசன் நான். காட்டிற்கு அரசன் நீ. நாம் இருவரும் நண்பர்களானால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாமே. நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டது.

மகிழ்ந்த சிங்கம், ‘நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஆபத்துக் காலத்தில் உதவி செய்து கொள்வோம்’ என்றது.

அதன் பிறகு இரண்டும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டன. ஒருநாள் சிங்கம் தனியே உலாவிக் கொண்டிருந்தது. முரட்டுக் காட்டெருமை ஒன்று அதைக் தாக்க ஓடி வந்தது. அஞ்சி நடுங்கிய சிங்கம் ஓட்டம் பிடித்தது. எருமையோ அதைத் துரத்திக் கொண்டு வந்தது.

கடற்கரைக்கு வந்த சிங்கம், ‘நண்பனே!’ என்று குரல் கொடுத்தது. திமிங்கிலத்தின் தலை கடலுக்கு மேல் தோன்றியது. தன் நிலைமையை அதனிடம் சொன்ன சிங்கம், ‘காட்டெருமை துரத்தி வருகிறது. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்றது.

நண்பனுக்கு உதவி செய்வதற்காகத் திமிங்கிலம் கரைக்கு வந்தது. அதனால் கரையில் ஊர்ந்து செல்ல முடியவில்லை. மீண்டும் கடலுக்குத் திரும்பியது. காட்டெருமையிடம் இருந்து தப்பிய சிங்கம் மீண்டும் கடற்கரைக்கு வந்தது. ‘நண்பனே! ஆபத்து நேரத்தில் உதவி செய்வதாகச் சொன்னாயே. இப்படிக் கைவிட்டு விட்டாயே’ என்று குறை சொன்னது.

அதற்குத் திமிங்கிலம், ‘நண்பனே நீயும் நானும் மிகுந்த வலிமை உள்ளவர்கள்தான். என் ஆற்றல் கடலில் மட்டும் செல்லும். உன் வலிமை நிலத்தில் மட்டும்தான் செல்லும். நாம் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்ய இயலாத நிலையில் உள்ளோம்’ என்று விளக்கியது.

உண்மை நிலையை உணர்ந்த சிங்கம் அமைதி அடைந்து அங்கிருந்து சென்றது.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”