சிறியவர் என்று இகழாதே

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

சிறியவர் என்று இகழாதே

Post by mubee » Sat Sep 28, 2013 3:59 pm

ஒரு மரத்தின் கிளையில் இருந்த பெரிய தேன் கூட்டைக் கரடி ஒன்று பார்த்தது. அதில் உள்ள தேனைக் குடிப்பதற்காக மெல்ல மரத்தில் ஏறியது. பறந்து வந்த தேனீக்கள் “கரடியே! திரும்பிப் போய்விடு. தேன் கூட்டில் நீவாய் வைத்தால் நாங்கள் பொல்லாதவர்களாகி விடுவோம்” என்று எச்சரித்தன.

“அற்பத் தேனீக்களே! என் வலிமை உங்களுக்குத் தெரியாது? ஒரே அடியில் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன். ஒழுங்காகக் கூட்டைவிட்டுச் சென்றுவிடுங்கள். நான் தேன் குடிப்பதற்கு இடைஞ்சல் செய்தால் நீங்கள் அனைவரும் இறப்பீர்கள்” என்று ஆணவத்துடன் சொன்ன கரடி, தேன் கூட்டின் அருகே சென்றது.

கூட்டிலிருந்த தேனீக்கள் அனைத்தும் பறந்து வந்தன. கரடியின் முகத்திலும் கழுத் திலும் வயிற்றிலும் பாய்ந்து பாய்ந்து கொட்டின. வலி பொறுக்க முடியாத கரடி மரத்திலிருந்து கீழே விழுந்தது. அலறியபடி அங்கிருந்து ஓடியது. தேனீ க்களோ அதைத் துரத்தி வந்து கொட்டின. வேதனையால் துடி த்தது கரடி.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”