வர்க்கம் (சிறுகதை)

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

வர்க்கம் (சிறுகதை)

Post by mubee » Sun Sep 15, 2013 2:51 pm

ஒரு கவளம் போதுமா?

போதும், அது கிடைத்தால் இஸ்­ரா­யீ­லுடன் போராடிக் கொண்­டி­ருக்கும் உயிரை ஒரு நாளைக்­கா­வது இழுத்துப் பிடித்து நிறுத்­தலாம்.

பஞ்­சத்தின் கோரம் ஜாபீரைப் பிடுங்கித் தின்று கொண்­டி­ருக்­கி­றது. அணு அணு­வாக, தண்ணீர், அது எத்­தனை நாளைக்கு ஒரு நோஞ்சான் நோயா­ளியின் உயிரை உடலில் வைத்துக் கொண்­டி­ருக்கும்.

சூடான நீர்த்­து­ளிகள் எனது குழி விழுந்த கண்­க­ளி­லி­ருந்து துளிர்ந்­தன. சேலைத் தலைப்பால் கண்­களைத் துடைத்துக் கொள்ள முயன்றேன், முடி­ய­வில்லை. அழுதேன், ஆசை தீர அழுதேன். அழு­வதால் என்ன ஆகிடப் போகி­றது.

கண­வனைக் கார் விபத்­தொ­ன்றில் இழந்த நான், கைக் குழந்­தை­யு­டனும் மூத்­தவன் ஜாபீ­ரு­டனும் இளை­யவன் நிஸா­ரு­டனும் ஒரு­வாறு காலத்தை ஓட்டிக் கொண்­டி­ருந்தேன்.

கூலி­வேலைதான், மாவி­டிப்பேன். பாத்­திரம் தேய்ப்பேன். சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கி வருவேன். எடு­பிடி வேலை எல்லாம் செய்வேன்.

இரண்­டொரு கவளம் கிடைக்கும், எனக்கும் என் குழந்­தை­க­ளுக்கும் அது­போதும், இடைக்­கி­டையே வரும் விசேட தினங்­களில் எஜ­மா­னிகள் உடுத்து ஒதுக்­கிய பழஞ்­சீ­லைகள், பழுப்­பே­றிய பட்­டா­டைகள், நூறு,இருநூறு ரூபாய்கள்... இப்­படி ஏதா­வது...

ஜாபீர் மீண்டும் முன­கினான். நோயின் கோரத்தை விடப் பசியின் கோரம் அவனை வதைத்துக்கொண்டிருந்தது. குண்­டூசி உடல் குண்டுத் தலை, பாசி படர்ந்த கண்கள், பசி நிறைந்த வயிறு, பார்க்கச் சகிக்­க­வில்லை. குமுறிக் குமுறி அழு­வதா? கோவெனக் கத­று­வதா? பயன்...?

கிடைக்கும் கூலி போதாது. கொழுத்த இடம், பெரிய இடம். இப்­ப­டி­யான இடங்­களல் போய்ப் பாத்­திரம் தோய்த்தாலா­வது பல­னுண்டு. வேளா வேளைக்குச் சோறும் வேண்­டி­ய­வரை உத­வியும் கிடைக்கும். ஆனால் வீட்டு எஜ­மா­னனின் ஒட்­டுக்­க­ளையும் உர­சல்­க­ளையும் சகித்துக் கொண்டால் போதும். அவ்­வ­ளவுதான். இன்னும் பல சலு­கைகள் பெறலாம்.ஏன்? எஜ­மானின் பள்­ளி­யறைப் பஞ்­ச­னையில் கூடப் படுத்துப் புர­ளலாம். எதற்கும் துணிவு வேண்டும். துணிவுதான் எஜ­மா­னியின் செருப்­ப­டியை ஏற்றுக் கொள்ளும் துணி­வல்ல. அது என்­னிடம் நிறைய உண்டு. ஆனால் நான் சொல்­லு­வது வேறு துணிவு. மானத்தை இழக்கும் துணிவு. அந்தத் துணிவு எத்­த­னையோ பெண்­க­ளுக்கு வந்­தாலும் எனக்கு மட்டும் வர­மாட்டேன் என்­கி­றதே: என்ன செய்­வது? வெட்­கங்­கெட்ட சீ இது! இந்த சிந்­தனை வேண்டாம். ஆண்­ட­வனே இந்தத் துணிவை மட்டும் எனக்­குத்­த­ராதே!

வியர்­வை­யிலும் அழுக்­கிலும் புழுங்கி நாறும் சேலை இடையைச் சுற்­றி­யி­ருக்க அங்­கு­மெங்கும் அழுக்கும் கரியும் படை படை­யாக அப்­பி­யி­ருக்க... இந்தத் தோற்­றத்­திற்கே, இவர்­க­ளுக்கு இத்­தனை வெறி­யென்றால் இன்னும் கொஞ்சம் மினுக்கி, மினுக்­கு­வ­தென்ன சுத்­த­மாக உடை அணிந்­தி­ருந்­தாலே போதும். சோரம் போய்­விட வேண்­டி­ய­துதான். மாற்­றி­வி­டு­வார்கள். இல்­லா­விட்டால் தந்­தையும் மக­னு­மாகச் சேர்ந்து தவ­ளையைக் குறி­வைத்து பாம்பின் கொடூ­ரத்­துடன் கண்­களின் வெறி­ப­ளிச்­சிட என்­னையே நோக்­கு­வார்­களா?

அட ஆண்­ட­வனே! தன் மகன்தான் ஒரு வித­வையைச் சுற்றி வட்­ட­மி­டு­கி­றா­னென்­றா­வது தந்தை கொஞ்சம் கூட வெட்­கப்­ப­டவோ வேத­னைப்­ப­டவோ வேண்டாமா சே... வெட்­கக்­கேடு.

எரி­கிற வீட்டில் பிடுங்­கி­யது இலாபமா? தந்­தைக்குத் தெரி­யாமல் மகனும் மக­னுக்குத் தெரி­யாமல் தந்­தையும் என்னைக் கசக்கி எறிய எடுத்த முயற்­சிகள், எத்­த­னங்கள், பட்ட சிர­மங்கள்.

எப்­போதோ அவர்­க­ளது வீட்டை விட்டு ஓடி­யி­ருப்பேன். எஜ­மானி உம்மா... அந்த நோஞ்சான் நோயாளி மனு­சியின் அர­வ­ணைப்­புத்தான் என்னைத் தடுத்து நிறுத்­தி­யது. ஆனால் அதுவும் வெகு விரை­வி­லேயே தகர்ந்து விட்­டதே.

அச்­சம்­பவம் மட்டும் நடக்­கா­தி­ருந்தால்...

மகன் பிதற்­றினான். உடல் தணலாய்க் கொதித்­தது.

உம்மா சோறு சோறு... று சோறு தாம்மா...

அதைத் தவிர வேறு வார்த்­தைகள் வர வில்லை. அவன் வாயி­லி­ருந்து.

மகன் ஒரு கவ­ள­மா­வது உண்ண முடி­யாத நிலை. அதற்­கெல்லாம் காரணம் அந்தச் சம்­ப­வம்தான்,நாக்­கூ­சு­கி­றது.

பெரிய மனி­தர்கள் செய்யும் செயலா இது...?

பென்­னம்­பெ­ரிய பங்­களா வெறிச் சோடி­விடும் எஜ­மானி உம்மா வெளியே சென்­றா­லென்றால்... அன்றும் வெளியே சென்றிருந்தார்கள்.இரவுச் சாப்­பாட்­டிற்­கான சகல சுமை­களும் என் தலை­யில்தான். அந்தப் பெரிய பங்­க­ளா­வுக்குள் இருந்த நிசப்­தத்தைக் கிழித்து கொண்டு அல­றிய வானொ­லி­யி­லி­ருந்து தந்­தையோ, மகனோ வீட்­டிற்குள் இருக்­கி­றார்கள் என்று தெரிந்து கொண்டேன். இடி­யப்­பத்­திற்கு மா பிசைந்து கொண்­டி­ருந்தேன். நெருப்­புச்­சு­வாலை முகத்தை வேறு தீய்த்துக் கொண்­டி­ருந்­தது. வேலையில் மூழ்­கி­விட்டேன்.

திடீ­ரென்று...

சர்ப்பந் தீண்­டி­யது போன்ற உணர்ச்சி. திட்­டுக்­கிட்டுத் திமி­றி­ய­வாறு திரும்­பினேன். அந்தப் பரப்பில்... என்னை அணைத்துக் கொள்ள முயன்ற எஜ­மானின் மகன் தள்ளுண்டான்.

''எஜமான்... இது என்ன வேலை? கொஞ்­ச­மா­வது வெட்கம் மானம் சீச்சீ ''

அது அவர்­க­ளுக்குப் பழக்கம் போலும். வெறி தலைக்­கேற கழுதை போல சிரித்தான்.

என்­தோற்றம். அழுக்குப் படர்ந்த என் நிலை. எனக்கே குமட்­டி­யது. அவ­னுக்கோ.....

ஐந்நூறு ரூபாய் நோட்­டொன்றை நீட்­டினான்.ஏய் இந்தா பிடி...

குடித்­தி­ருக்­கி­றானோ...-?

என் உடம்பு ஏன் இப்­படி நடுங்­கு­கி­றது. பலங்­கொண்டு அவனை விலக்கித் தள்­ளினேன். காறி உமிழ்ந்தேன். வெறிகொண்ட நாய் போல அவ­னது கையைக் கடித்தேன்.

''ஆ'' என்­ற­ல­றினான். பின்பு தன்னைச் சுதா­கரித்துக் கொண்டு மீண்டும் நெருங்­கினான், அடி­யுன்ட புலியைப் போல.

''அடியே! வேலைக்­கார நாயே என்ன செய்றேன் பாரடி''

வாச­ல­டியில் ஏதோ நொருங்கி விழும் ஓசை. தொடர்ந்து ஒரு­ க­னைப்புக் குரல்.

''ஐயையோ வாப்பா வரு­வது போல இருக்கே என்ன செய்வேன்''

எஜமான் வாசலை நெருங்­கி­விட்டார்.

''ஐயோ ஆண்­ட­வனே என்னைக் காப்­பாத்து''

பதறித்துடித்­த­படி ஓடி ஒளிந்துக் கொண் டான்.

குசினிக் கதவைத் தள்ளித் திறந்­த­படி வெறி­யுடன் என்னை நோக்­கினார் எஜமான். முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் கதவைப் பூட்டிக் கொண்டு என்னை நெருங்­கினார் அவர்.

புலி­யி­ட­மி­ருந்து தப்­பி­யா­கி­விட்­டது, இனிக் கர­டி­யுடன் போராட வேண்­டுமே.

கண்­களில் போதை வெறி, உடலின் தள்­ளாட்டம் புரிந்­தது இப்­போது.

அப்பன் கொஞ்சம் தாராளம். அவன் ஆயிரம் ரூபாய்த் தாளை நீட்­டினான். நான் அதைக் கிழித்து எறிந்தேன். வெகுண்டான் ''அடியே... ஒன்ற தொ­ழிலே இது­தாண்டி, இன்­டைக்கு மட்டும் என்­னடி மவுசு''

மிரு­கத்தின் பிடி­யி­லி­ருந்து நான் தப்­பு­வ­தற்குப் பட்ட பாடு...

ஆகவே அப்­ப­டித்தான் செய்ய வேண்டும்.

அப்­படிச் செய்­தி­ருக்­கா­விட்டால் என் கற்பு பரி­தா­ப­மாக அழிக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஆக­வேதான் அப்­படிச் செய்தேன். அது ஒன்றே தான் வழி.

எரிந்து கொண்­டி­ருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்து எங்­கெல்லாம் அவனின் அங்­கங்கள் தட்­டுப்­ப­டு­கி­றதோ அங்­கெல்லாம் கொள்ளியால் பதித்து...

உடலைப் பொசுக்கி...

''ஐயோ... ஆண்­ட­வனே உம்மா!'' என்ற அல­றல்கள்.

கட்டிச் சதையின் கருகல் நாற்றம்...

எடுத்தேன் ஓட்டம், வேறு சிந்­த­னை­யென்ன தப்­பித்தேன் பிழைத்தேன் என்று இருளில் விழுந்­த­டித்துக் கொண்டு ஓடினேன்.

நாட்கள் அழிந்­து­விட்­டன. எஜ­மானி உம்­மாவைக் கூடப் போய்ப் பார்க்க­வில்லை. அவ­ளது நன்­மைக்­கா­கத்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்­சயம், நான் வீட்டை விட்டு ஓடி­யதைப் பற்றி எஜ­மானி உம்மா மிகவும் வருந்­தி­யி­ருப்பாள், கண­வனைத் திட்டித் தீர்த்­தி­ருப்பாள்.

எஜ­மானின் நிலை­யென்ன? அங்­க­மெல்லாம் அழுகி புழுப்­பி­டித்து சேச்சே..சே அப்­ப­டி­யி­ருக்­காது. அவர்­க­ளிடம் பணம் இருக்­கி­ற­தல்­லவா?

இன்று அவர்கள் வீட்­டில்தான் விருந்து.சே! அங்கே போவதா.

மகன் ஜாபீரின் புலம்பல் தீவிர­மாக ஒலித்­தது. கடை­சியில் வற்றிப் போய்­வி­டுமோ?

மனம் சஞ்­ச­ல­ம­டைந்­தது. துணிவு மெல்ல மெல்ல உடலை ஆட்­கொண்­டது.

இடத்தை விட்டு எழுந்தேன். மகனே, பயப்­ப­டாதே உனக்குச் சோறு கொண்டு வாரேன்.

விருந்து நடக்கும் வீட்டை நோக்கி விடு விடு­வென நடந்தேன்.

பின்­புற வழி­யாக வீட்­டினுள் சென்றேன்.

ஒரே கல­க­லப்பும் சிரிப்பும் கும்­மா­ளமும் கூத்தும் பாட்டும் அப்­பப்பா சகிக்­க­வில்லை.

பெரிய ஹோலொன்­றினுள் ஆண்­களின் அட்­ட­காசம். மற்­றொரு ஹோலில் மினி நங்­கை­யர்­களின் அட்­ட­காசம். பெரும்­பெரும் சகனில் எல்லாம் நெய்ச் சோறு மிஞ்சிச் சீர­ழிந்து கிடந்­தது... நிச்­ச­ய­மாக அது வெளியே கொட்­டப்­படும்.

குசு­னியை நெருங்­கி­விட்டேன்.

''நில்­லடி''

கடூ­ர­மான குரல், விக்­கித்து நின்றேன். ''யாரது? எஜ­மா­னி­யம்­மாவா. நம்­பவே முடி­ய­வில்லை''

''எங்­கடி வந்தே! பற வேச...'' காதில் நாராசம் பாச்சி­யது போல இருந்­தது.

''உம்மா''

''வேச... கேடு­கெட்ட தட்­டு­வாணி... தேவடியாள். என்ன உம்­மான்னு சொல்ல உனக்கு வெட்­கமா இல்லை. உன் நாக்கு அழுகிப் போகும்டி... போடி இங்­கே­யி­ருந்து...''

ஆண்டவனே... இது என்ன சோதனை... ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தண்டனையா?

அவள் வெறுப்புடன் என்னை நோக்கி முகத்தில் காறி உமிழ்ந்தாள்.

''ஏண்டி ஒன்னைத் தெரியும்டி... ரொம்ப நல்லவள்லுன்னு நெனச்சிருந்தேன். கடைசியிலே என் புருஷனையும் புள்ளயையும் வலை வீசிப் புடிச்சி எங்க வம்சத்திற்கே களங்கம் உண்டாக்கப் பாத்தியேடி... சீ என் முகத்திலே முளிக்காதே... போடி இங்கிருந்து...'' புரிந்தது... நன்றாகப் புரிந்தது. எஜமான் நல்ல கதை கட்டியிருக்கிறான்.

''வெளக்கு மாத்தால அடிச்சு வெரட்டுறதுக்கு முன்னாலே ஒடடி இங்கிருந்து''

நான் விறைந்துப் போய் நின்றேன்.

வர்க்கம் வர்க்கத்தோடுதானா?

(முற்றும்)
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”