ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Sat Jul 28, 2012 8:21 pm

அன்பான படுகை நன்பர்களுக்கு இந்த தொடர்கதையை சமர்பிக்கிறேன்.........., :thanks:




ராஜெஸ்வரியும் மதுமிதாவும் சிறுவயது தொழிகள்.இவர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல நன்பர்களாக

இருந்தனர்.இரண்டு தோழிகளும் எங்கு சென்றாலும் ஒன்றாகதான் செல்வார்கள். இவர்களின் அன்பை கண்டு வியந்தனர் ராஜெஸ்வரியின்

பெற்றோரும் மதுமிதாவின் பெற்றோரும்.இவர்கள் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கவேண்டும் என்பதற்க்காக ராஜெஸ்வரியின் பெற்றோர்

தங்கள் சொந்த ஊரான உவரியை விட்டுவிட்டு திசையன்விளையில் இருக்கும் மதுமிதா வீட்டுக்கு அருகில் வந்தனர்.அன்றுமுதல் ராஜேஸ்வரியின்

பெற்றோரும் மதுமிதாவின் பெற்றோரும் ஒரே குடும்பம் போல் வாழ்ந்துவந்தனர்.ராஜேஸ்வரியின் அம்மாவும் அப்பாவும் சிமெண்ட்

தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.மதுமிதாவின் அப்பாவும் அம்மாவும் ஆசிரியராக வேலை பார்க்கின்றனர் அதுவும் தங்கள் மகள்

மதுமிதா படிக்கும் அதே பள்ளியில். வேலை முடிந்ததும் ராஜெஸ்வரிக்கும் மதுமிதாவுக்கும் தினமும் சாப்பிடுவதர்காக நிறைய

பொருட்கள் வாங்கி வருவார்கள் ராஜெஸ்வரியின் அப்பா அம்மா.அதில் மதுமிதாவுக்கு ரொம்ப பிடித்தது சாக்லேட்.இப்படியாக இவர்களின் நட்பு

போய்கொண்டே இருந்தது.ஒரு நாள் ராஜேஸ்வரியும் மதுமிதாவும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து காத்துகொண்டு இருந்தனர் ராஜெஸ்வரியின்

அப்பா அம்மா சாக்லெட் வாங்கிவருவார்கள் என்று. ஆனால் அவர்கள் இரவு 8மணி ஆகியும் வரவில்லை. உடனே மதுமிதாவின் அப்பா அம்மா

தங்கள் குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டுஅவர்கள் வேலை பார்க்கும் சிமெண்ட் கம்பேனிக்கு பொய் பார்க்க சென்றனர்.ஆனால்

அங்கே போய் பார்த்தபிறகு தான் தெரிந்தது அவர்கள் உலை வெடித்து இறந்துவிட்டனர் என்று.அதை தெரிந்துகொண்ட அவர்கள் மனம் உடைந்து

போனார்கள் அந்த துக்கம் தாங்கமுடியாமல் ஊரை விட்டு செல்லமுடிவு எடுத்தனர். எல்லா காரியங்களும் முடிந்ததும் வீடு திரும்பினர்

மதுமிதாவின் அப்பா அம்மா.வீடு திரும்பியதும் தங்கள் மகள் மதுமிதாவும் ராஜேஸ்வரியும் விளையாடுவதை கண்டு மனம் கலங்கினார்கள்.

மறுநாள் ராஜெஸ்வரியையும் மதுமிதாவையும் கூட்டிகொண்டு தங்கள் உறவினர்கள் இருக்கும் நவலடி என்ற ஊருக்கு

சென்றனர்.ராஜெஸ்வரியையும் தங்கள் மகளாக கருதி வளர்த்து வந்தனர்.மதுமிதாவும் ராஜெஸ்வரியும் ஒருவழியாக பள்ளி படிப்பை முடித்து

ரிசல்ட்டுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். தங்கள் மகள் பள்ளி படிப்பை முடித்துவிட்டால் இனி என்ன படிக்க வைக்கலாம் என அக்கம் பக்கம்

விசாரித்தார் மதுமிதாவின் அப்பா தீபக்.






தொடரும்...................................... :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by ஆதித்தன் » Sat Jul 28, 2012 9:46 pm

கதை ஓட்டம் எல்லாம் அருகிலிருக்கும் ஊர்களை மையமாக வைத்தே செல்வதைப் பார்த்தால் ... கற்பனை வளம் பெருகி ஓடும் போலிருக்கிறதே...

ஓடட்டும் ஓடட்டும்...
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Sun Jul 29, 2012 8:06 pm

:news: ஒரு வழியாக அக்கம் பக்கம் விசாரித்து தங்கள் மகளை தொழிற்கல்வி படிக்க வைக்கனும் என்ற முடிவை எடுத்தார் தீபக்.

எதுக்கும் மதுமிதாவிடமும் ராஜெஸ்வரியிடமும் கேட்போம் அடுத்து என்ன படிக்க இருக்கிங்க என்று,

நினைத்துகொண்டே வீடு திரும்பினார் தீபக்.

வீட்டிற்கு வரும் வழியில் தனது அண்ணன் பேருந்தில் இருந்து இறங்குவதை பார்த்து திகைத்து நின்றார் தீபக்.

”வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிங்க எதாவது விஸேசமா ”?

”அப்படி ஒன்னும் இல்ல தீபக் மதுமிதாவ சின்ன வயசுல பாத்தது.இவ்வளவு நாட்களா ஒரே வேலை எங்கயும் நவில முடியல அதான் வரமுடியல

இப்பதான் நேரம் கிடைச்சது அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.அப்புறம் வீட்டுல எல்லாரும் நலமா தீபக்”?

”எல்லாரும் நல்லா இருக்காங்க, அண்ணி வரவில்லையா அண்ணா”?

”வீட்டுல ஒரு சின்ன வேலை அதான் வரல அவங்க எல்லாரும் நாளைக்கு வந்துருவாங்க தீபக்”.

”சரி அண்ணா, வாங்க வீட்டுக்கு போகலாம் நீங்க வந்தது திவ்யாக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோஸப்படுவாள்”.

தீபக்கும் அண்ணன் மணியும் ரோட்டோரமா நடந்து வந்து வீட்டை அடைந்தனர், வீட்டிற்குள்

நுழைந்ததும் தனது மனைவி திவ்யாவை அழைத்தார் தீபக்.” திவ்யா, திவ்யா வீட்டிற்கு யார் வந்திருக்கானு பாரு”

மனைவி திவ்யா மறுமுனையில் இருந்து பதில் கொடுத்தார். ”இதோ வாரெங்க” என்று.

வெழியே வந்து பார்த்தார் திவ்யா.”அடடே வாங்க மச்சான் எப்படி இருக்கீங்க மற்றவங்க வரலையா?

பாத்து எத்தனை வருடம் ஆகுது இப்பதான் நேரம் கிடைச்சதா”?

ஆமா அண்ணி இப்பதான் நேரம் கிடைச்சது வரமுடியல என்னால, மற்றவங்க நாளைக்கு வருவாங்க.

அப்படியா சரி சரி பொய் குளிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் காப்பி போட்டு வைக்கிறேன்.

சரி அண்ணி மதுமிதாவ எங்க?

மதுமிதாவா? அவளுக்கு நாளைக்கு ரிசல்டாம் அதான் கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்னிட்டு வாரேன்னு போயிருக்கா?

சரி அண்ணி நாங்க போய் குளிச்சிட்டு வாரோம்.

சரி நான் காபி போட்டுவைக்கிறேன் போயிட்டு வாங்க.

மதுமிதாவும் ராஜெஸ்வரியும் கோயிலுக்கு பொய் அர்ச்சனை பன்னிவிட்டு வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும் வீட்டு வாசலில் புதிதாக செருப்பு கிடப்பதைப்பார்த்து யாரோ விருந்தாளிகள் வந்திருக்காங்க

வா பார்க்கலாம் என்று கூறிய படியே உள்ளே நுழைந்தனர் இருவரும்.

அம்மா அம்மா

என்ன மதுமிதா?

யாராவது விருந்தாளிகள் வந்திருக்காங்கலா?

ஆமாம் மதுமிதா உன் அப்பாவோட அண்ணன் வந்திருக்காங்க அதான் உன் பெரியப்பா.

அப்படியா! சரிம்மா. என்று கூறிய படியே அர்ச்சனைபன்னிய பிரசாதத்தை பூஜை அறையில் வைத்தால் மதுமிதா.

நாளைக்கு ரிசல்டு நல்லபடியாக வரவேண்டும் என இருவரும் நினைத்து கொண்டனர்.

மதுமிதாவின் அப்பா தீபக் குளித்துவிட்டு வெளியே வந்தார். வந்ததும் “வாம்மா மதுமிதா என்ன நளைக்கு ரிசல்டா”?

ஆமாப்பா நாளைக்கு ரிசல்டு.

அப்படியா சரி நல்லது அடுத்து என்ன படிக்க போறீங்க?

அது என்னும் முடிவு எடுக்கலப்பா முதல்ல ரிசல்டு வரட்டும் அப்புறம் பாக்கலாம்னு இருக்கோம். :news:






தொடரும்.......................................
Last edited by velsingh on Sun Jul 29, 2012 8:49 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by ஆதித்தன் » Sun Jul 29, 2012 8:33 pm

உன்னுடைய கதை எழுதும் ஆர்வம் மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுத எழுத என்னும் அருமையாக கற்பனை வளத்தோடு எழுதுவாய் என நம்புகிறேன்.


அப்படியே கதையில் உள்ள உறவு முறை தவறாக உள்ளது திருத்தம் செய்யவும்.

பாராட்டுகள் :ros:
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Sun Jul 29, 2012 8:53 pm

தக்க சமயத்தில் உதவியதற்கு நன்றி ஆதித்தன் அண்ணா






:thanks:
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Mon Jul 30, 2012 8:38 pm

:news: ”சரி நாளைக்கு ரிசல்டு வரட்டும் பார்ப்போம் நீங்க போய் கால் கை கழுவிட்டுவாங்க

அம்மா காப்பி போட்டுவச்சிருக்காங்க குடிக்கலாம்”

என்று கூறினார் தீபக். இருவரும் கால் கை கழுவ சென்றனர்.

மணி குளித்துவிட்டு வெளியெ வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

மணியும் தீபக்கும் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

தீபக்கின் மனைவி திவ்யா இருவருக்கும் காப்பிகொண்டுவந்து கொடுத்தார்.

பிறகு மூவரும் நாற்காலியில் உட்கார்ந்து குடும்ப விஸயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து மதுமிதாவும் ராஜேஸ்வரியும்

கை கால் கழுவிவிட்டு வெளியே வந்தனர். மணி இருவரிடமும் “வாங்கம்மா எப்படி இருக்கீங்க

உங்களை சின்ன வயசுல பார்த்தது அப்புறம் இப்பதான் பார்க்குறேன்,நான் யாருனு தெரியுதா”

நாங்க நல்லா இருக்குறோம் நீங்க பெரியப்பானு அம்மா சொன்னாங்க.

”அப்படியா சரி உட்காருங்க ஏன் நிக்குறீங்க” என்றார் மணி.

இருவரும் நாற்காலியில் உட்கார்ந்தனர். அம்மா திவ்யா மதுமிதாவுக்கும்

ராஜேஸ்வரிக்கும் காப்பி கொண்டுவர சமையல் அறைக்கு சென்றார்.

அண்ணன் மணி மதுவிடமும் ரஜேஸ்வரியிடமும் தங்களுடைய பள்ளி நினைவுகளை

பற்றி கூருமாரு கேட்டார். மதுவும் ராஜேஸ்வரியும் தங்கள் பள்ளி நினைவுகளை

பற்றி தனது பெறியப்பாவிடமும் அப்பாவிடமும் கூறிக்கொண்டு இருந்தனர்.

இதற்கிடையில் அம்மா திவ்யா மதுவுக்கும் ராஜேஸ்வரிக்கும் காப்பி கொண்டுவந்து

கொடுத்து விட்டு சமையல் வேலை பார்க்கப்போவதாக கூறிவிட்டு சென்றார்.

மதுவும் ராஜேஸ்வரியும் தங்கள் பள்ளி நினைவுகளை மாறி மாறி சொல்லி

சந்தோஸமாக பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போவது தெரியவில்லை.

அம்மா திவ்யா சமையல் வேலை முடிந்ததும் சாப்பிட அழைத்தார்.அப்போது

மணி 9 அவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை.கடைசியில் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.

மதுவும் ரஜேஸ்வரியும் நாளைக்கு ரிசல்டு என்பதால் அதையே நினைத்து

கொண்டு தூக்கம் இல்லாமல் தவித்தனர் இருவரும்.

ஒரு வழியாக காலை 9 மணி ஆகிவிட்டது.மதுவின் அப்பா தீபக்கும்

அண்ணன் மணியும் அருகில் உள்ள கம்யூட்டர் செண்டருக்கு சென்றனர்.

வீட்டில் மதுவும் ராஜேஸ்வரியும் ரிசல்ட்டு எப்படி வரும்னு தெரியாமல் பயந்து கொண்டிருந்தனர்.

கொஞ்ச நேரம் கழித்து அப்பாவும் பெரியப்பாவும் கையில் சுவீட் கொண்டுவருவதை

பார்த்தனர் இருவரும் மகிழ்ச்சியில் அப்பாவிடம் பதறியபடியே கேட்டனர்.”அப்பா ரிசல்டு எப்படி” என்று.

அப்பா தீபக் சந்தோஸத்தில் “உன்ன மாதி ஒரு பொண்ண பெத்ததுக்கு ரொம்ப சந்தோஸமா இருக்குமா

“என்று கூறி கையில் இருந்த மார்க் காபியை நீட்டினார் தீபக்.இருவருக்கும் ஆச்சரியம் ரிசல்டில்

மதுமிதா 1100 மதிப்பெண்னும் ராஜேஸ்வரி 1094 மதிப்பெண்னும் வாங்கிருந்தனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது அம்மா திவ்யாவிடம் கூறினர் இருவரும்.

அம்மா திவ்யா சந்தோஸத்தில் இருவரையும் அனைத்து முத்தமிட்டார்.

அப்புறம் அப்பா தனது மகள்கள் இருவரிடமும் “ரிசல்டு வந்துட்டு அடுத்து என்ன

படிக்க போறீங்க” என்று கேட்டார்.இருவரும் பொறியியல்கல்வி படிக்கபோவதாக

சொன்னார்கள்.வீட்டில் அனைவரும் இவர்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு

உடனடியாக கவுன்சிலிங் பார்ம் வாங்க போனார்கள்.அப்பா தீபக் கவுன்சிலிங் பார்ம்

வாங்கி வந்து மதுவிடமும் ராஜேஸ்வரியிடமும் நிரப்ப சொன்னார்.

இருவரும் அந்த பார்மை நிரப்பிக்கொண்டிருக்கும் போது தீபக்கின் அண்ணன் குடும்பத்தார் வீட்டிற்குள் நுழைந்தனர். :news:









தொடரும்................... :thanks:
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Tue Jul 31, 2012 7:55 pm

:news: ”அடடே! வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க”என்று கேட்டார் தீபக்.

”நல்லா இருக்கேன்,நீங்க எப்படி இருக்கீங்க”? என்று பதில் கூறினார் தீபக்கின் அண்ணி சரஸ்வதி.

”நாங்க நல்லா இருக்குறோம்,இதோ இதுதான் என் இரண்டு பொண்ணூங்க”

என்று கூறி கையை நீட்டினார் தீபக். பின்பு மதுமிதாவின் அருகில் போனார் சரஸ்வதி

“நீங்க ரெண்டு பேர்ல யாரு மதுமிதா ,ராஜேஸ்வரி”என்று கேட்டார்

.இரண்டு பேரும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர் சிறிது நேரம்

அவர்களிடம் பேசிவிட்டு அப்புறம் சரஸ்வதி திவ்யாவை பார்ப்பதுக்காக சமையல்

அறைக்கு சென்றார்.மதுவும் ராஜேஸ்வரியும் பார்ம் நிரப்பி முடித்து தனது

அப்பா தீபக்கிடம் கொடுத்தனர்.தீபக்கும் மணியும் அந்த பார்ம்ம வாங்கிகொண்டு

தபால்நிலையத்திற்கு சென்றனர்.மதுமிதாவும் ராஜேஸ்வரியும் சரியாக இரவு

தூங்காததால் இருவரும் தூங்க போவதாக கூறிவிட்டு தங்கள் படுக்கை அறைக்கு சென்றனர்.

திவ்யாவும் சரஸ்வதியும் சமையல் அறையில் ஒருவருக்கொருவர் குடும்பத்தை பற்றி

பேசி கொண்டே சமையல் வேலையை பார்த்தனர்.அப்படியே மணி 12.45 தாண்டியது

திவ்யா எல்லோருக்கும் உணவு பரிமாற தயார் நிலையில் வைத்தார்.

சரியாக மணி 1 அடித்தது தீபக்கும் மணியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

வந்த உடனே தனது மனைவியிடம் “பார்ம் அனுப்பிட்டேன் என்னும் இரண்டு

நாட்களில் போய் சேர்ந்துவிடும்” எனறார் தீபக்.அப்புறம் சரஸ்வதி

மதுமிதாவையும் ராஜேஸ்வரியையும் சாப்பிட அழைத்துவர சென்றார்.

மணியும் தீபக்கும் சாப்பிட அமர்ந்தனர்.திவ்யா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார்.

”சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு அண்ணி கூட கொஞ்சம்” என்றார் மணி..

திவ்யா சாப்பாடு கூட கொஞ்சம் வைத்துவிட்டு “சாப்பிடுங்க சாப்பிடுங்க வயரு

நிறைய சாப்பிடுங்க” என்று சிரித்து கொண்டே கூறினார்.பின்பு ராஜெஸ்வரியும்

மதுவும் சாப்பிட அமர்ந்தனர் அவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினார் திவ்யா.

திடீரென்று மணிக்கு போன் வந்தது எடுத்து பேசினார் மணி ”ஹலோ! யார் பேசுரது”

என்றார் மணி.மறுமுனையில் மணியின் முதலாளி பேசினார் “மணி உடனே

வா அவசர வேலை உள்ளது” என்று கூறினார்.”மணி உடனே வருவதாக கூறி

போனை ஆப் செய்தார்.மணியும் சரஸ்வதியும் மாலையில் 5 மணிக்கு

கிளம்புவதாக முடிவு செய்தனர்.பின்பு மணியும் தீபக்கும் கை கலுவ சென்றனர்.

கொஞ்ச நேரத்தில் மதுவும் ராஜேஸ்வரியும் கை கலுவிவிட்டு செடிகளுக்கு

தண்ணீர் ஊற்ற சென்றனர். கடைசியில் திவ்யாவும் சரஸ்வதியும் மீதமுள்ள

சாததை சாப்பிட்டு முடித்தனர்.பலபடியும் மணிக்கு முதலாளியிடம் இருந்து போன் வந்தது

”என்ன முதலாளி சொல்லுங்க”என்றார் மணி.”மணி வரும் போது டாக்குமெண்ட்

கொண்டுவர மறந்துறாத” என்றார்.மணியும் சரி முதலாளி என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

மணி அவசர வேலையாக இருப்பதால் 5 மணிக்கு போவாமல் 3 மணிக்கே கிளம்பினர்.

வீட்டில் அனைவருக்கும் வருத்தம் ”இன்னைக்கு தான வந்தீங்க அதுக்குள்ள போறீங்க” என்றார் திவ்யா.

”இல்ல அண்ணி அவசர வேலை அதான் என்னொரு நாள் வாறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினர்.

தீபக் அவர்களை வழி அனுப்ப சென்றார்.திவ்யா அவர்களை அனுப்பிவிட்டு வீடு

பெருக்க வீட்டிற்குள் சென்றார்.தீபக், அண்ணன் மணியை வழி அனுப்பிவிட்டு

4மணிக்கு வீடு திரும்பினார்.பின்பு வீட்டில் இரவு உணவை முடித்துவிடு தூங்க சென்றனர்.

காலையில் திவ்யாவும் தீபக்கும் பள்ளிக்கு வேலை பார்க்க சென்றனர்.

மதுமிதாவும் ராஜேஸ்வரியும் வீட்டு வேலையை பார்த்துக்கொண்டனர்.

அப்படியே ஒரு வாரம் சென்றன.ஒரு வாரம் கழித்து காலை 10 மணிக்கு

வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தை ஓப்பன் பன்னி படித்தனர்

மதுமிதாவும் ராஜேஸ்வரியும். அந்த கடிதத்தில் இரண்டு நாள் கழித்து கவுன்சிலிங்

என்று போடப்பட்டிருந்தது.அந்த சந்தோஸமான செய்தியை தனது அம்மாவிடமும் அப்பாவிடமும் கூருவதற்க்காக

காத்துக்கொண்டிருந்தனர்.மாலையில் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்ததும் செய்தியை கூறினர். :news:



தொடரும்………………………………….
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by ஆதித்தன் » Tue Jul 31, 2012 8:16 pm

கதையை படிக்கும் பொழுது.... எப்போ அந்த கொலை வரும்.. என்ற ஒர் எதிர்பார்ப்பினை உருவாக்கும் தலைப்பாய் சூப்பராக வைத்துவிட்டீர்.

தொடரட்டும்...
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Wed Aug 01, 2012 7:03 pm

:news: இரண்டு நாள் கழித்து கவுன்சிலிங் என்பதால் தீபக்கும் திவ்யாவும் பள்ளிக்கு ஒரு வாரம்

விடுமுறை எடுத்தனர்.பின்பு கவுன்சிலிங்கிற்கு தேவையான டாக்குமெண்ட்

அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருந்தனர் மதுமிதாவும் ராஜேஸ்வரியும்.

மதுமிதாவுக்கு காலையில் 8 மணிக்கு கவுன்சிலிங் போடப்பட்டிருப்பதால்

கவுன்சிலிங்கிற்கு முந்தைய நாள் இரவே சென்னைக்கு கிளம்பினார்கள்.

ஒரு வழியாக பேருந்தில் ஏறி உட்கார்ந்தனர்.தீபக் மதுமிதாவிடம் “மதுமிதா

கவுன்சிலிங்கிற்கு தேவையான டாக்குமெண்ட் எல்லாம் இருக்குதானு

பாத்துக்கம்மா” என்றார்.”ம்ம்ம் எல்லாம் சரியாக இருக்குதுப்பா”என்றார் மதுமிதா.

பேருந்து மாலையில் 5 மணிக்கு கிளம்பி விடியற்காலை 6 மணிக்கு சென்றுவிட்டது.

என்னும் 2 மணி நேரம் மட்டுமே இருப்பதால் அவசர அவசரமாக கவுன்சிலிங்

மையத்திற்கு சென்றனர்.அங்கு அவர்களுக்கு எந்த கல்லூரி தேர்ந்தெடுக்கலாம்

என்று அறிவுரை உடனுக்குடன் வழங்கப்பட்டிருந்தது.மணி சரியாக 8 மணி

ஆனது அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று ஒருவருக்கொருவர்

பேசிக்கொண்டனர்.ஒருவழியாக இருவரும் ஒரே கல்லூரியை தேர்ந்தெடுத்தனர்

.பின்பு வெளியே வந்து தனது அம்மா அப்பாவிடம் கூறினர் “அப்பா நாங்க ரெண்டு

பேரும் ஒரே கல்லூரியை தெர்ந்தெடுத்துள்ளோம்,அது திருநெல்வேலியில் இருக்கு

எல்லா வசதிகளும் அந்த கல்லூரியில் உள்ளது” என்றனர்.தீபக் சிரித்துக்கொண்டே

”பரவாயில்லையே இவ்வளவு வயது ஆகியும் ரெண்டு பேரும் ஒன்னா இருக்கீங்க

ரொம்ப சந்தோஸம் சரி வாங்க சாப்பிட போலம்”என்று கூறி அழைத்து சென்றார் தீபக்.

ஒரு பெரிய ஓட்டலுக்கு சென்றனர் நான்கு பேரும், தீபக்கும் திவ்யாவும் ஒரு பக்கமும்

எதிர்பக்கம் ராஜேஸ்வரியும் மதுமிதாவும் உட்கார்ந்தனர்.அங்கு வேலை செய்பவர்

“உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும்”என்று கேட்டார்.தீபக் அவரிடம்

“தோசை ஆடர் செய்தார்”.நான்கு பேரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை எடுத்திருப்பதால் திவ்யா தீபக்கிடம் “என்னங்க நாம

மெரினா கடற்கரையை சுற்றிபார்த்து விட்டு நாளைக்கு போவோம்” என்றார்.

தீபக்கும் சரி என்று கூறி அழைத்துசென்றார்.பின்பு எல்லா இடத்தையும்

சுற்றிபார்த்துவிட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பினர்.மாலை 5 மணிக்கு வீடு திரும்பினர்.

மறுநாள் காலையில் திருநெல்வேலியில் உள்ள கல்லூரிக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

ஒரு 10 மணிக்கு வீட்டில் இருந்து கிழம்பினர் நான்கு பேரும்,கல்லூரிக்கு சென்று பார்த்தால்

அவர்களுக்கு ஒரே வியப்பு கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருந்ததைக்கண்டு

சந்தோஸப் பட்டனர் கல்லூரியும் நல்லபடியாக அமைந்துவிட்டது என்று.அப்புறம்

கல்லூரி முதல்வரை கண்டு பேசினர்.அவர் “இரண்டு பேரையும் ஹாஸ்டலில் தங்கி

படிக்க வையுங்கள் அவர்களால் தினமும் போய் வரமுடியாது கஸ்டம் பிறகு அவர்களால்

படிப்பில் கவனம் செலுத்தமுடியாது”என்றார்.திவ்யாவும் தீபக்கும் சிறிது நேரம் யோசித்து

சரி என்று கூறினார்கள்.கல்லூரி முதல்வர் அடுத்த வாரம் திங்கள்கிழமை கல்லூரி

தொடங்கும் என்று கூறி அனுப்பிவைத்தார்.பின்பு மாலையில் வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும் திவ்யாக்கு ஒரே வருத்தம் “என்னங்க நாம நம்ம

பொண்னுங்களை விட்டு எப்படி தனியா இருப்போம்” என்று கேட்டார்.

தீபக் திவ்யாவிடம் “நான்கு வருடம் தான சீக்கிரம் போயிடும் நாம வாரத்துக்கு

ஒருமுறை போய் பாத்துக்கலாம்” என்று கூறி சமாதானம் செய்தார்.கல்லூரி

அடுத்த வாரம் திங்கள்கிழமை தொடங்க இருப்பதால் அதற்கு தேவையான புக்ஸ்,

நோட்டுக்களை வாங்கிகொண்டு வீட்டில் வைத்தார் தீபக்.அப்படியே நான்கு நாட்கள்

கழிந்தன சனிக்கிழமை வீட்டிற்கு ஒரு தபால் வந்தது.அதில் கல்லூரி திங்கள்கிழமை

ஆரம்பம் ஆவதால் தங்கள் மகளை ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்து சேர்க்குமாறு

கூறப்பட்டிருந்தது.அதை படித்ததும் தீபக் மனம்கலங்கினார் “இவ்வளவு நாட்களாக

கூடவே இருந்த பொண்ன பிரியிரோமே என்று” ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

மதுமிதாவிடம் “சரிம்மா நாளைக்கு கல்லூரிக்கு போனும் துணிகளை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்” என்றார். :news:



தொடரும்……………………………….


:thanks:
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: ஒரு நள்ளிரவுக்கொலையின் மர்மங்கள்

Post by velsingh » Thu Aug 02, 2012 11:21 pm

:wav: மறுநாள் காலையில் வாடகை காரில் கல்லூரிக்குச் சென்றனர்.

அங்கு மதுமிதாவுக்கும் ராஜேஸ்வரிக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டது.

அவர்கள் உடன் இரண்டு தோழிகள் தங்கிருந்தனர்.தீபக்கும் திவ்யாவும்

தனது மகள் இரண்டு பேரிடமும் “சரிம்மா நாங்க போய்ட்டு வாரோம்

உடம்ப பாத்துக்கோங்க அடுத்த வாரம் வருகிறோம்” என்று கூறிவிட்டு சென்றனர்.

ராஜேஸ்வரியும் மதுமிதாவும் தங்கள் அம்மாவையும் அப்பாவையும் டாட்டாகாட்டி வழிஅனுப்பி வைத்தனர்.

ராஜேஸ்வரியும் மதுமிதாவும் தங்கள் உடன் தங்கி இருக்கும் தோழியிடம்

அறிமுக படுத்திக்கொண்டனர்.அவர்களும் தங்களை அறிமுக படுத்திக்கொண்டனர்.

பின்பு மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் தூங்கினர் பின்பு 5 மணிக்கு

எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு காப்பி குடிக்க சென்றனர் கேன்டீனுக்கு.

காப்பி குடித்துவிட்டு 5.30 மணியளவில் ரூம்பிற்கு வந்து மறுநாள் கல்லூரிக்கு

கொண்டு செல்ல வேண்டிய நோட்டுப்புத்தகத்தில் தங்கள் பெயரை எழுதிக்கொண்டனர்.

பின்பு ரூம்பில் உள்ள தோழி புவனேஸ்வரியிடமும் ராதாவிடமும் சிறிது நேரம்

பேசிவிட்டு தூங்கசென்றனர்.காலையில் எழுந்ததும் கல்லூரியில் உள்ள

கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு காலை உணவு சாப்பிட சென்றனர்.

அப்புறம் சரியாக 9 மணியளவில் கல்லூரி தொடங்கியது.கல்லூரி முதல்வரும்

மற்ற ஆசிரியர்களும் எல்லாரையும் அன்புடன் வரவேற்றனர்.ஒவ்வொரு

ஆசிரியரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின் படி வகுப்பிற்கு வந்து

தாங்கள் எடுக்கும் பாடப்பிரிவை பற்றி கூறினர். அதுமட்டும் இல்லாமல்

தங்களுடன் படிக்கும் மற்றவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

கல்லூரியின் முதல் நாள் நன்றாக சென்றது.மாலையில் 4.30க்கு கல்லூரி

முடிவடைந்தது. கல்லூரி முடிவடைந்ததும் ராஜேஸ்வரியும் மதுமிதாவும்

ஹாஸ்டலுக்கு வந்தனர்.பின்பு தங்களுடன் தங்கி இருக்கும் தோழி ராதாவும்

புவனேஸ்வரியும் அவர்களை காப்பி குடிக்க அழைத்துசென்றனர்.அந்த

கல்லூரியில் ராக்கிங் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருப்பதால் மதுமிதாவும்

ராஜேஸ்வரியும் எந்த பயமும் இல்லாமல் இருந்தனர்.அதுமட்டும் இல்லாமல்

தங்கள் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் சீனியர்கள் அவர்களிடம் அன்பாக

பேசி பலகினர்.பின்பு சிறிது நேரம் விளையாடிவிட்டு தங்கள் ரூம்பிற்கு

சென்றனர் மதுமிதாவும் ராஜேஸ்வரியும்.அப்படியே அந்த கல்லூரியின் முதல் நாள் இனிதாக முடிந்தது. :wav:

தொடரும்…………………………


:thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”