நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

Post by விமந்தனி » Sun Aug 25, 2013 1:35 am

பள்ளிக்கூடம் என்பது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. அதில் நானும் விதிவிலக்கு அல்லவே.
http://4.bp.blogspot.com/-3vue7qTGBu8/U ... copy-1.jpg[/fi]நம் எல்லோருக்குமே பள்ளிப்பருவம் என்பது அழகான வசந்தகாலம் என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகையாகாது என்றே நினைக்கிறேன். இன்னும் கேட்டால், நன்றாய் படிக்கும் பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதே ஓர் சுகானுபவம் தான்.

எனது பள்ளிப்பருவம் வித்தியாசமானது. ஆமாம்... LKG-யிலிருந்து Plus2-வரையுலும் ஆறு schools மாறிவிட்டேன். என் தந்தையின் வேலை நிமித்தமாக சென்னையிலும், கோவையிலும் மாற்றி மாற்றி படிக்கவேண்டிய சூழ்நிலை. வேறு school மாறும் ஒவ்வொருமுறையும் மிரட்சியுடன் தான் புதிய சூழலை ஏற்று கொள்ளவேண்டியதிருக்கும். காரணம்,"புது ஸ்சூலு, புது பிரென்ட்சு, புது யுனிபார்மு, புது டீச்சரு.. கலக்கறே.." என்று என்னை சகஜமாக்க முயல்வதாக நினைத்து இன்னும் என் வயிற்றில் புளியை கரைத்து பீதியை கிளப்பி விடுவார்கள் அக்கம் பக்கத்தினர். சின்ன பிள்ளையாதலால் அதை கூட வாய் திறந்து சொல்லமுடியாது.

கோவையில், school போக எனக்கு குதிரை வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சில நேரங்களில் குதிரை வண்டியை பார்த்தாலே பேயடித்தது போலாகிவிடுவேணாம். School-லுக்கு போவதில் அவ்வளவு திகில் எனக்கு. இன்றும் கூட அம்மா இதை என் பெண்ணிடம் சொல்லி, சொல்லி பாட்டியும் பேத்தியுமாக சேர்ந்து என்னை ஒரு வழி(!) செய்துவிடுவார்கள்.

8th std-க்கு பிறகு தான் பள்ளி செல்வதை ரசிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு போவதேன்பதே ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இத்தனை பள்ளிகள் மாறி மாறி படித்ததாலோ என்னவோ எனக்கென்று சொல்லும்படியாக தோழிகள் வட்டம் இருந்ததில்லை. இன்று Face Book-ல் பிரெண்ட்ஸ் chat பார்க்கும் போது நான் எவ்வளவு பெரிய விஷயத்தை மிஸ் செய்திருக்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது.

10th-திலும் Plus 2-விலும் எனக்கு கிடைத்த இரண்டு தோழிகளுமே இப்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கல்லூரி...? அது அதை விட மோசம். ரெண்டாவது செமஸ்டர் வரும் முன்பே திருமணம் நிச்சயித்து விட்டார்கள்.

So, no more friends என்றே சொல்லவேண்டும். பிரெண்ட்ஸ் இல்லாத காரணத்தினால் என் கவனம் புத்தகம் பக்கம் பக்கம் திரும்பியது. நிறைய நாவல்கள், தரமான கதைகள் என ஏகப்பட்டது படித்துவிட்டேன். அதில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் பால குமாரனின் 'தாயுமானவன்' போன்ற நாவல்கள் மறக்கமுடியாதவை.
'இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என்று இப்போது வந்திருக்கும் பட title, கதாசிரியர் பாலகுமாரனின் favorite வரிகளுள் ஒன்று.

பள்ளிப்பருவத்தின் இறுதியில் என்னுடன் கை கோர்த்து வந்தது என்னுடைய கவிதைகள் தான். 10th-ல் தான் எழுத ஆரம்பித்தேன். எப்படி எழுத ஆரம்பித்தேன், எது என்னை எழுத வைத்தது என்பதெல்லாம் தெரியவில்லை.

பார்த்த அனைத்தையும் கவிதையாக்கினேன், என்னை சுற்றி இருந்த அத்தனை விஷயங்களும் எனக்கு அழகாகவே தெரிந்தது. அழகாய் தெரிந்தவை அனைத்தும் கவிதையாய் மாறியது.

அடேயப்பா... இவ்வளவு எழுதி விட்டேனா? ஆச்சர்யம் தான். "நாமாள இம்புட்டு பக்கம் எழுதுறோம்னு, மலைச்சு நின்னுட்டு வாங்க...." ன்னு ஆதி sir சொன்னார். முதலில் '100 வரிகளா..?' என்று நானும் மலைத்து தான் போனேன்.ஆனால், ஆதி sir சொன்னது போல், '100 வரிகள் என்று மலைத்து நின்றுவிடாதீர்கள், கொஞ்சம் நிதானமாக யோசித்துவிட்டு, எழுத உட்காருங்கள்.. 500 வரிக்குள்ளும் அடங்காது. ஏனரொர் புத்தகமே எழுதி விற்பனை செய்திடலாம், அத்தனை இனிமையானது, பள்ளி வாழ்க்கை.' என்றார். நிஜம் தான். ஆனால், இதை படிப்பவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்கவேண்டும் இல்லையா?

அதனால், இத்துடன் என்னுடைய பள்ளி கதையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் என் நன்றி.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

Post by sk3662 » Sun Aug 25, 2013 12:25 pm

காலை வணக்கம்....
தங்களின் பள்ளி வாழ்க்கை குறிப்பு.....நன்றாக ....உள்ளது....!
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

Post by விமந்தனி » Sun Aug 25, 2013 2:11 pm

:thanks:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

Post by cm nair » Sat Sep 21, 2013 4:30 pm

மிக அருமை..கவிதைகள் எழுதுவதை நிறுத்த வேண்டாம் .....
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: நினைவுகள் - ஒரு பொக்கிஷம்

Post by விமந்தனி » Fri Oct 04, 2013 4:00 pm

:thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”