Page 1 of 1

சிறுகதை

Posted: Thu Mar 08, 2012 9:07 pm
by muthulakshmi123
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன

வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான்.

அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,"இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான்

உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்" என்றான்.

பிச்சைக்காரன், 'அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்' என்றான்.

அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,'ஒரு

ரூபாய் அதிகம்.நான் உனக்கு 50 பைசா தருகிறேன்.இல்லையென்றால் வேண்டாம்' என்று அற்ப புத்தியுடன்

சொல்ல,

பிச்சைக்காரன் 'அப்படியானால் பரவாயில்லை! அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்'னு

சொல்லிட்டு நடந்தான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 காசிற்கு தந்து விடுவான்ற

எண்ணத்தோட பின் தொடர்ந்து வந்துகிட்டிருந்தாரு.

அப்ப எதிர்ல வந்த இன்னொரு வியாபாரி கழுதை காதுல வைரத்தைப் பார்த்துட்டு அந்த பிச்சைக்காரனிடம்

1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத வைர வியாபாரி அதிர்ச்சியுடன் 'அட..அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள

வைரத்தை வெறும் ஆயிரத்திற்கு கொடுத்துட்டு இவ்வளவு சந்தோசமா செல்கிறாயே! நன்றாக ஏமாந்து

விட்டாய்'னு சிரிச்சு கிண்டலடிச்சாரு.

அதைக்கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்போடு..'யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத்

தெரியாது..அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்.மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய

தொகை.எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன்.அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 காசிற்காக

கோடி ரூபாய் வைரத்தை இழந்து விட்டாயே? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்"னு நடந்தானாம்...

Re: சிறுகதை

Posted: Thu Mar 08, 2012 9:44 pm
by ramkumark5
மிக அருமையான கதை லட்சுமியம்மா. நம்முள் பலர் சிறு சிறு விசயங்களை தேடி தேடி வாழ்க்கையை இழக்கிறோம்.

Re: சிறுகதை

Posted: Thu Mar 08, 2012 10:26 pm
by muthulakshmi123
ramkumark5 wrote:மிக அருமையான கதை லட்சுமியம்மா. நம்முள் பலர் சிறு சிறு விசயங்களை தேடி தேடி வாழ்க்கையை இழக்கிறோம்.

சிறு சிறு விஷயங்களை தேடி பெரிய விஷயங்களை இழக்கிறோம் என்பதே உண்மை

Re: சிறுகதை

Posted: Mon Mar 12, 2012 7:35 am
by rajathiraja
சிறப்பான கதை. நன்றிகள் முத்துலட்சுமியம்மா! இது ஒரு படிப்பினை கதையும் கூட.. .

Re: சிறுகதை

Posted: Mon Mar 12, 2012 7:57 am
by ஆதித்தன்
சின்னச் சின்னக் கதைகள் கூட நம்மை சிறு சிறு அனுபத்திலிருந்து காக்கும் கவசம். அந்த வகையில் இந்த கதையும் ஒர் பாடத்தினைக் கற்றுக் கொடுக்கிறது.

நன்றி.

Re: சிறுகதை

Posted: Mon Mar 12, 2012 10:47 am
by muthulakshmi123
Athithan wrote:சின்னச் சின்னக் கதைகள் கூட நம்மை சிறு சிறு அனுபத்திலிருந்து காக்கும் கவசம். அந்த வகையில் இந்த கதையும் ஒர் பாடத்தினைக் கற்றுக் கொடுக்கிறது.

நன்றி.

நன்றி ஆதித்தன் சார்