Page 16 of 19

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 70

Posted: Wed Jun 27, 2012 11:35 am
by Aruntha
இன்றே இந்த உலகின் கடைசி நாள் போன்ற அளவிற்கு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். டேய் செல்வா நீங்க இரண்டு ஜோடியும் சூப்பரா இருக்கிறீங்க நீங்க நாலு பேரும் ஜோடியா நடிக்க போனால் எல்லாருமே உங்களுக்கு மட்டுமே ரசிகராகிடுவாங்க என்றான் சிவா. என்னடா கிண்டல் பண்ணுறியா உதை வாங்க போறாய் என்றாள் செல்வி. சிவா அவள் மட்டுமில்ல நானும் உதைப்பன்டா என்றான் தனேஷ். அட பாவி இப்போ தானே நிச்சயம் ஆச்சு அதுக்கிடைல பொண்டாட்டிக்கு சப்போட் பண்ண ஆரம்பிச்சிட்டியா? என்றான் சிவா.

ஹா ஹா அது தான்டா நல்ல புருஷனுக்கு அழகு என்றான். என்ன நிச்சயம் தானே பண்ணிக்கிட்டிங்க அதுக்கிடைல புருஷன் பொண்டாட்டி என்று உரிமை கொண்டாடுறீங்க என்றபடி வந்தாள் ரம்யா. ஏய் நிச்சயம் பண்ணினாலே பாதி பொண்டாட்டி தான் என்று ரேவதியை அணைத்தபடி வந்தான் செல்வன். டேய் சிவா நம்ம பாடு அம்போ தான் இவங்க எல்லாம் கூட்டா சேர்ந்திட்டாங்க நம்மளுக்கு ஆப்பு வைக்கிறாங்க. இனி நாம தான் ஒரு கூட்டணி சேரணும் போல இருக்கு என்றாள் ரமி.

அவர்கள் அனைவரும் சிரித்து பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் உண்மைலயே இவங்க எல்லாரோடயும் பாசத்தை பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்கு என்றாள் கமலி. நாம எல்லாருமே இப்பிடியே கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்க அந்த கடவுள் தான் வழிவிடணும் என்றாள் பிரியா. நம்ம எல்லாருக்குள்ளயும் தானே நல்ல புரிந்துணர்வு இருக்கு அப்புறம் என்னத்துக்கு இப்பிடியான யோசனை என்றார் தனேஷின் தாய். நல்ல விசேஷம் நடக்கிற வீட்டில இப்பிடி எல்லாம் தப்பு தப்பா யோசிக்க கூடாது என்றார் சிவாவின் தாய்.

அனைவரும் மகிழ்வாக இருக்க மறுபக்கம் குமார் ஆட்கள் தங்கள் பார்ட்டியில் பிஸியாக இருந்தார்கள். அவர்களின் பிஸ்னஸ் பத்தி நாட்டு நடப்பு பத்தி எல்லாம் பேசியபடி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிராமத்து வாழ்க்கையை பத்தி ரொம்பவும் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பட்டிண வாழ்க்கை ரொம்பவே சலிப்பானது ஊரில் ஒரு நிமிசம் மர நிழலில கால் நீட்டி தரைல உட்கார்ந்தா இருக்கிற சுகமே தனி என்று பேசினார்கள்.

அவர்களின் பேச்சோடு பேச்சாக அனைவரும் அதிகமாகவே மது அருந்தினார்கள். அவர்களுக்கு ஏற்றால் போல கமலியும் பிரியாவும் சைட் டிஷ் செய்து கொடுத்த படி இருந்தார்கள். என்ன ஆன்டீஸ் அவங்க தான் தண்ணி அடிக்கிறாங்க என்றால் நீங்களும் சப்போட்டுக்கு சைட் டிஷ் குடுக்கிறீங்களா என்றான் சிவா. என்னப்பா பண்ணுறது அவங்க என்ன தினமுமா தண்ணி அடிக்கிறாங்க இப்பிடி ஏதாச்சும் பார்ட்டில தானே. சரி குடிக்கிறதா முடிவு பண்ணிட்டாங்க அவங்கள தடுக்கிறத விட அவங்க குடிக்கிறது உடம்ப பாதிக்காம நல்ல சைட் டிஷ் குடுத்து அவங்க ஹெல்த்த பாதுக்காக்கிறம் என்றாள் கமலி. இதுவம் நல்ல ஐடியா ஆக இருக்கே என்று சிரித்தான்.

அங்கிள் என்ன உங்க பசங்க நிச்சயதார்த்தத்தை சாட்டா வைச்சு தண்ணி அடிக்கிறீங்களா எல்லாரும் என்றபடி அவர்களை நெருங்கினான் சிவா. டாடி உங்களுக்கு ஏற்கனவே உடம்புக்கு பெருசா முடியல. அப்புறம் எதுக்கு ரொம்ப குடிக்கிறீங்க போதும் நிறுத்துங்க டாடி என்றான் சிவா.

அங்கிள் நீங்க மட்டும் என்ன டாடிக்கு மட்டும் தான் சொல்றன் என்று நினைச்சிங்களா உங்களுக்கும் தான் தண்ணியடிச்சதெல்லாம் காணும் எழுந்திருங்க என்று குமாரை பார்த்து கூறினான் சிவா. என்ன டாக்டர் அங்கிள் உங்களுக்கும் சொல்லணுமா நீங்க வாற நோயாளிகளுக்கு அட்வைஸ் பண்ணுவீங்க இப்போ நீங்களே குடிக்கிறீங்களா என்றான். இல்லப்பா எல்லாம் இப்பிடி பார்ட்டில மட்டும் தானே விடுப்பா என்றார் சிரித்தார் நரேஷ்.

சரிப்பா சிவா நீ இவ்வளவு சொல்றதால நான் இத்தோட நிறுத்திக்கிறன் என்றபடி எழுந்தான் குமார். அது குட் அங்கிள் தாங்க்ஸ் என்று சென்று அவரை கட்டியணைத்தான் சிவா. சரி டாடி உங்களுக்கும் தான் சொன்னன் காணும் இத்தோட எழுந்திருங்க இதுக்கும் மேல உங்க உடம்புக்கு தாங்காது என்று மாசிலாமணியின் கைகளை தடுத்தான் சிவா. இருந்தும் அவர் கேட்காமல் மேலும் குடித்தபடி இருந்தார்.

டாடி பாருங்க அங்கிளே நான் சொன்னத கேட்டு குடிக்கிறத நிறுத்திட்டார் நீங்க மட்டும் குடிக்கிறிங்களே என்றான். டாடி அங்கிளே என் பேச்சுக்கு மரியாதை குடுக்கல நான் உங்க பையன் சொல்றன் நீங்க கேக்காம குடிச்சா என்ன அர்த்தம் உடம்புக்கு முடியாம இருக்க போறீங்களா என்றான் சற்று கடுமையாக. போதையின் உச்சியில் இருந்த மாசிலாமணிக்கு தன்னிலை மறந்து இருந்தது. அவரிற்கு சிவா கூறிய வார்த்தைகள் ஈட்டி போல இதயத்தில் இறங்கியது.

யாரடா என் பையன் நான் எதுக்கு உன் வார்த்தைய மதிக்கணும் என்று கோவமாகினார் மாசிலாமணி. அவரின் அந்த வார்த்தையை கேட்ட டாக்டரம்மா அதிர்ந்து போய் எழுந்தார். மாசிலாமணியின் மனைவி அதிர்ச்சியடைந்து போய் அவரை நோக்கி ஓடி வந்தார். என்னங்க என்ன உழறுறீங்க என்று அவரை அணைத்தாள்.

என்னடி உழறுறன் இவன் யார் எனக்கு கண்டிஷன் போட. இவன் சொன்ன குமார் கேக்கிறானாம் நான் கேக்கிறன் இல்லையாம். அத எனக்கே சொல்றான் பாரு. அவன் கேப்பான் தானே இவன் சொன்னா ஏனெண்டா அவன் ரத்தம் தானே இவன் உடம்பிலும் ஓடுது அது தான் பாசம் பொங்கி வழிது என்றார். நான் ஏன் இவன் சொல்லி கேக்கணும் இவனுக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கு என்றார் மாசிலாமணி.

அனைவருமே அதிர்ச்சியடைந்து போய் இருந்தார்கள். குமாரிற்கு மாசிலாமணி கூறிய வார்த்தைகள் காதில் மறுபடி மறுபடி எதிரொலித்த வண்ணம் இருந்தது. குமாரை பார்த்த ராஜன் அவனருகில் வந்து அவனது தோள்களை மெல்ல பற்றினான். இருவரும் டாக்டரம்மாவை நோக்கி பார்வையை திருப்ப அவர் எதுவுமே பேசாது தலையை குனிந்தார். அந்த நொடியே அங்கு நடந்தவற்றை வைத்து உண்மையை புரிந்து கொண்டாள் ரம்யா.

சிவா டாடிய கூட்டிட்டு சீக்கிரமா வா வீட்டுக்கு போகலாம் என்றார் சிவாவின் தாய். அம்மா இங்க என்ன நடந்திட்டிருக்கு எனக்கு ஒண்ணுமே புரியல சொல்லுங்க என்றான் சிவா. இப்போ ஒண்ணும் பேசிற நேரமில்லை சீக்கிரமா கிளம்பு என்று கணவனை ஒரு கையால் அணைத்தபடி அவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்றார். தாயின் வற்புறுத்தலால் காரை எடுத்து கொண்டு வீடு நோக்கி சென்றான் சிவா.

அங்கு நடந்தது எதுவுமே புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருந்தார்கள். ஜோன் குமாரின் அருகில் வந்து டாக்டரம்மாவை காட்டி இவங்களா உங்க மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டரம்மா என்று கேட்டான். குமார் ஆமா என்று தலையசைக்க அவரை நெருங்கினார் ஜோன். நான் தான் ஸ்கான் பார்த்து அத பத்தி குமார் கூட பேசின டாக்டர் ஜோன். இப்ப சொல்லுங்க மாசிலாமணி சார் சொன்னதெல்லாம் உண்மையா என்றார்.

ஆமா என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினார் டாக்டரம்மா.

தொடரும்……..!
பாகம் 71

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 71

Posted: Thu Jun 28, 2012 7:01 pm
by Aruntha
குமார் என்னை மன்னிச்சிடுப்பா அன்னிக்கே அந்த உண்மை எனக்கு தெரியும். செல்வன் மாடில இருந்து விழுந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி வீட்டுக்கு வந்தப்ப நான் உங்க வீட்டுக்கு வந்திருந்தன். அப்போ இவங்க உன் வீட்டுக்கு வந்திட்டு போனத பார்த்தன். அப்போ தான் அவங்க உங்க குடும்பத்தோட நெருங்கி பழகிறாங்க எண்டதும் சிவா உன் பசங்களோட நல்ல நண்பன் என்றும் தெரிஞ்சிச்சு. இவங்களும் இந்த ஊரில இருக்கிறாங்க என்றதும் புரிஞ்சுது. அதனால தான் நான் மாசிலாமணி வீட்டுக்கு போய் நீங்க யார் என்ற உண்மையை கூறியிருந்தன் என்றார் டாக்டரம்மா.

இருந்தாலும் இந்த உண்மையை நீ வந்து கேட்ட நேரத்தில என்னால சொல்ல முடியல. அதுக்கு காரணம் நான் மாசிலாமணிக்கு கொடுத்த சத்தியமும் இந்த உண்மை தெரிஞ்சா நல்ல பாசமா நட்பா இருக்கிற உங்க உறவுக்குள்ள விரிசல் வந்திடும் என்ற பயமும் தான் என்றார். குமார் என்னை மன்னிச்சுகோப்பா என்றபடி குமாரின் காலில் விழுந்தார் டாக்டரம்மா. என்னம்மா இது எழுந்திருங்க என்று அவரை தூக்கினான் குமார்.

டாக்டரம்மா அங்கிள் எவ்வளவு துடிச்சிட்டு இருந்தாங்க தெரியுமா அன்னிக்கு டாடியும் அங்கிளும் வந்து கேட்டப்பா விபரத்தை சொல்லியிருக்கலாமே நீங்க சொன்னா அவங்க புரிஞ்சு நடந்திருப்பாங்க தானே என்றாள் ரம்யா. என்ன எல்லாரும் ஆளாளுக்கு கதைக்கிறீங்க ஒண்ணுமே புரியல என்றார் கமலி. குமார், ராஜன் இரண்டு பேருக்கும் தெரிஞ்ச உண்மை ரம்யா உனக்கும் தெரிஞ்சிருக்கு. நீங்க சொல்றது ஏதோ புரிஞ்சாலும் தெளிவா புரியல. யாராச்சும் சொல்லுங்க. நீங்க ஐந்து பேரும் ஆளாளுக்கு பேசிட்டு இருந்தால் என்ன அர்த்தம் என்றார் பிரியா. அதற்கு மேலும் எதையும் மறைக்க முடியாத குமார் நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.

அன்றொரு நாள் தான் நரேஷ் வீட்டுக்கு போனது அங்கு டாக்டர் ஜோன் ஐ சந்திச்சது அவர் கமலியை ஸ்கான் பண்ணி அவளோட கர்ப்பத்தில மூணு குழந்தை இருக்கிறத கூறியது, அதற்கு பின் அது பற்றி ராஜனுக்கு கூறி அவனோட ஊருக்கு போய் டாக்டரம்மாவை பார்த்தது, அவர் நடந்த உண்மைகளை கூறியது, அதை பற்றி வீட்டில பேசிட்டிருந்த போது ரம்யா அதை கேட்டதால அவளுக்கு உண்மை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு வந்தது, எல்லாவற்றையும் ஒன்றும் விடாது குமார் கூறினான்.

அப்போ இத்தனை உண்மை தெரிந்தும் இதை எங்களுக்கு கூறாமல் மறைச்சிட்டு இருந்தீங்களா? அதுக்கு இந்த சின்ன பொண்ணு ரம்யா கூட சப்போட்டா? அப்பிடி என்றால் எனக்கு மூணு குழந்தைங்க தான் பிறந்திச்சா? சிவா என் குழந்தையா? அவனை பார்க்கிற போதெல்லாம் என்னை அறியாத ஒரு பாசம் என்னையே ஆக்கிரமிக்கும். அது தான் அவன் வாற நேரமெல்லாம் நான் சந்தோசமாக இருப்பன் அவன் வரலை என்றால் போன் பண்ணி கதைப்பன் இதெல்லாம் அவன் என் பையன் என்றதால எனக்குள்ள வந்த உணர்வா என்று அழுதாள் கமலி.

எங்களுக்கு உண்மை தெரிஞ்சப்பா யார் நம்ம பையன் என்று எங்களுக்கு தெரியாது. அந்த உண்மைய உனக்கு சொன்னால் உன்னோட பெத்த மனசு அதை பத்தியே சிந்திச்சிட்டு இருக்கும். அதனால கெட்டு போக போறது உன்னோட உடல் நிலையும் மன நிலையும் தான். யார் நம்ம பையன் என்று தெரிஞ்சதுக்கப்புறமா உனக்கு உண்மைய சொல்லிக்கலாம் என்று இருந்தம். அது தான் சரி என்று ராஜனும் சொன்னான் அதால தான் உனக்கு சொல்லல. ரம்யாட்ட கூட இத பத்தி யார் கூடயும் பேசாத என்று கண்டிப்பா சொல்லிட்டம் என்றான் குமார்.

டாக்டரம்மா தான் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் தன்னுடைய நிலைமை எல்லாவற்றையும் அனைவரிடமும் கூறி மனதார மன்னிப்பு கேட்டார். அந்த நேரத்தில் அவரிடம் கோவப்பட கூடிய மனநிலையில் யாருமே இருக்கவில்லை. சரி விடுங்க இப்போ எனக்கு என் பையன பாக்கணும் என்றாள் கமலி. இப்ப அவசர படாத அவன் யார் என்று தெரிஞ்சிட்டே நம்ம கூட பக்கத்தில தானே இருக்கிறான் எல்லாம் அப்புறமா பேசிக்கலாம் என்று கமலியை சமாதானம் செய்தான் குமார்.

வீட்டை அடைந்த சிவா டாடி இப்ப எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் நான் உங்க பையன் இல்லையா? அப்போ நீங்களும் அம்மாவும் என்னை வளர்த்தவங்க தானா? எதுக்கு டாடி இப்பிடி எல்லாம் பண்ணினீங்க என்று கேட்டான். அப்போ தான் போதையில் இருந்து சற்று தெளிந்த மாசிலாமணிக்கு தான் அங்கு நடந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. சிவா கேள்வி மேல் கேள்வி கேட்டதால் நடந்தவற்றை அவனுக்கு இனியும் மறைப்பதில் பலன் இல்லை என்று உண்மையை கூற ஆரம்பித்தார்.

உன்னோட அம்மாவுக்கு தொடர்ச்சியா நான்கு தடவை குழந்தை இறந்தே பிறந்திச்சு. ஐந்தாவது தடவை பிரசவத்துக்கு ஹாஸ்பிடல் போகும் போதே உன் அம்மா சொன்னாங்க இந்த குழந்தை மட்டும் உயிரோட பிறக்காட்டி தான் தற்கொலை பண்ணி செத்திடுவன் என்று. அவங்க மனசால ரொம்பவே உடைஞ்சிருந்தாங்க. நம்மட கஷ்ட காலம் அந்த குழந்தையும் இறந்து தான் பிறந்திச்சு. என்ன பண்ணுறது என்றே நான் புரியாமல் இருந்தப்ப தான் குமாருக்கு மூணு குழந்தைங்க அதே ஹாஸ்பிடல்ல பிறந்திச்சு.

அந்த நேரம் குமார் ஹாஸ்பிடல்ல இல்ல. கமலியும் மயக்கத்தில இருந்தாங்க. என்னோட நிலைமைய டாக்டரம்மாக்கு சொல்லி ஒரு குழந்தைய தரும் படி கேட்டன். அவங்களும் என்னோட நிலைமையையும் உன் அம்மாவோட பரிதாபத்தையும் தெரிஞ்சு சம்மதிச்சாங்க. அவங்களுக்கு ஆசைக்கு ஒரு ஆணையும் பொண்ணையும் வைச்சிட்டு உன்னை என்கிட்ட கொடுத்தாங்க. அந்த நேரத்தில உன் அம்மா மயக்கத்தில இருந்தாங்க அதனால நீ அவங்க குழந்தை என்று சொல்லி அவங்ககிட்ட குடுத்திட்டன்.

அந்த நேரத்தில நான் அப்பிடி பண்ணினதால தான் இன்னிக்கு உன்னோட அம்மா உயிரோட இருக்கிறாங்க. அவங்க உயிரை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. அவங்களுக்கும் மூணு குழந்தை பிறந்ததால எனக்கும் அது தப்பா தெரியல. நாம பண்ணுற சின்னதான தப்பால ஒரு உயிரை என் மனைவிய காப்பாத்தின திருப்தி மட்டும் தான் இருந்திச்சு என்றார். இந்த உண்மை இவங்களுக்கு தெரியாது.

அப்போ இது இன்னிக்கு தான் அம்மாக்கு தெரியுமா என்று சிவா கேட்க இல்லை அவங்களுக்கு இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் தெரிய வந்திச்சு. அதுவும் நான் சொல்லல. எனக்கு ஆபரேஷன் பண்ணினப்ப உன்னோட கிட்னி எனக்கு பொருந்தல இரத்தம் எதுவுமே பொருந்தல. அப்போ டாக்டர் டிஎன்ஏ ரெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறாங்க அப்போ தான் அவங்களுக்கு நீ என் பையன் இவ்வை என்ற உண்மை தெரிஞ்சிருக்கு.

அவங்க உன்னை கூட நீ யாரு என்ன உறவு என்று கெட்டிருக்காங்க. அப்போ நீ என் பையன் எண்டு சொன்னதால மேற் கொண்டு எதுவுமே உன்னோட பேசாமல் அம்மாவ கூப்பிட்டு நீ யார் உண்மைலயே உங்க இரண்டு பேருக்கும் பிறந்த பையனா என்று கேட்க அம்மாவும் ஆமா என்று சொல்லி இருக்காங்க. அப்போ அவங்களுக்கு எந்த உண்மையும் தெரியாது. டாக்டர் டிஎன்ஏ ரெஸ்ட் எடுத்து பார்த்தது பத்தி கூறி இருக்காங்க.

நான் டிஸ்சாஜ் பண்ணி வந்து சில நாளில அம்மா டாக்டர் சொன்னத பத்தி என்கிட்ட விசாரிச்சாங்க. அப்போ தான் அவங்களுக்கு நடந்த உண்மை எல்லாவற்றையும் சொல்லியிருந்தன் என்றார். நீ குமார் பையன் என்றது எனக்கு தெரியாது. அவங்க தாத்தா பெயர் மட்டும் தான் தெரியும். ஒரு தடவை நம்மள குடும்பமா குமார் வீட்டில பார்த்த டாக்டரம்மா தான் நீ குமார் பையன் தான் என்ற உண்மைய சொன்னாங்க என்றார்.

அப்போ நீங்க நான் குமார் அங்கிள் பையன் என்று தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் அவங்க கூட நான் பழகிற தடுத்தீங்களா? என்று கேட்டான். ஆமாப்பா அவங்களோட பாசம் உன்னை நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுமோ என்று பயந்தம் அதனால தான் அப்பிடி உனக்கு கட்டுப்பாடு போட்டம் என்றார்.

தந்தையின் அத்தனை கதைகளையும் கேட்ட சிவா அப்பா நீங்க எனக்கு இந்த உண்மைய மறைச்சது கூட தப்பில்ல. அம்மா உயிரை காப்பாத்த தான் அப்பிடி பண்ணினீங்க என்றதால நான் அதை ஒத்துக்கிறன். நான் அவங்க பையன் என்று தெரிஞ்சு அவங்க மேல இருந்த பாசம் நட்பு எல்லாவற்றுக்கும் தடை போட்டிங்க அது தான் என்னால ஏற்க முடியல. இப்பிடி சுயநலமான உங்க இரண்டு பேருக்குமே பையனா வளர்ந்திருக்கிறன் என்று நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. அவங்கள எந்தளவுக்கு எனக்கு பிடிக்கும் என்றது உங்களுக்கே தெரியும். அது தெரிஞ்சும் இப்பிடி பண்ணிட்டீங்களே என்றான்.

நான் கூட நீங்க ஆரம்பத்தில இப்பிடி நடந்துக்கிறத பார்த்து எனக்கும் செல்விக்கும் உள்ள உண்மையான நட்பை சந்தேகபடுறீங்களோ என்று தான் சிந்திச்சன். அதால தான் என்னை அவங்க கூட பழக விடாமல் தடுக்கிறீங்க என்று நினைச்சன். இத பத்தி ரம்யா தனேஷ் கூட கதைச்சப்ப அவங்க எனக்கு ஆறுதல் சொன்னாங்க. ஏன் தனேஷ் கூட வந்து எனக்கும் செல்விக்கும் உள்ள உண்மையான நட்பை பத்தி உங்களுக்கு தெளிவு படுத்தி இருந்தான். ஆனால் உங்க மனசில இப்பிடி வன்மமான எண்ணம் இருந்தது எனக்கு தெரியாம போச்சு என்றான்.

சிவா அது வந்து என்று மாசிலாமணி அவனை கூப்பிட எதுவுமே நீங்க பேச தேவையில்லை உங்கள பெத்தவங்க என்று நம்பினதுக்கு நல்ல பதிலடி கொடுத்திட்டீங்க என்றபடி சென்று தன் அறைக் கதவை ஓங்கி சாத்தினான். அவனிடமிருந்து அப்படியான பதிலை எதிர்பார்க்காத மாசிலாமணியும் மனைவியும் அதிர்ச்சியடைந்தபடி நின்றார்கள். என்னங்க நம்ம பையன் நம்மள வெறுத்திட்டு போய்டுவானா எனக்கு பயமா இருக்கு என்றாள்.

எல்லாம் உங்களால வந்தது சும்மாவா சொல்லி வைச்சாங்க குடி குடியை கெடுக்கும் என்று பழமொழி. அது நம்ம விசயத்தில 100 வீதம் சரியா போச்சு. நீங்க குடிச்சிட்டு அந்த போதையில தானே இத்தனை வருசமா கட்டிக்காத்த உண்மைய போட்டு உடைச்சீங்க என்று அவரை திட்டினாள். உங்க அற்ப நேர சந்தோசத்துக்காக குடிச்சிட்டு நம்ம குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் நாசம் பண்ணிட்டீங்களே என்று புலம்பினாள்.

தொடரும்….!
பாகம் 72

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sat Jun 30, 2012 10:04 am
by MALATHI
hai aruntha darling unoda kathaiya padichutu na appadi akala na unnoda fan realy i like you.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sat Jun 30, 2012 9:24 pm
by Aruntha
அப்பாடா இப்ப தான் எனக்கு திருப்தி. அதுக்கும் மேல இந்த கேள்வி நான் கேக்கல ஆதி தான் கேட்டாரு அவருக்கே தெளிவா சொல்லிடுங்க

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sat Jun 30, 2012 10:27 pm
by ஆதித்தன்
அருந்தாவுக்கும் ஒர் அடிமை சிக்கிட்டாளே!!! பரவாயில்லை.. நல்லாயிருங்க...


சந்து கேப்பில் குடி குடியைக் கெடுக்கும் பழமொழி சூப்பர்.

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 72

Posted: Sun Jul 01, 2012 11:58 am
by Aruntha
தன் கணவனின் குடியின் போதையால் இரு நொடியில் பண்ணிய தப்பு இருபது வருடங்கள் கட்டிக் காத்த வாழ்வின் அத்தனை சந்தோசங்களையும் அழித்த வலிகளை மனதில் சுமந்த படி இருந்தார் மாசிலாமணியின் மனைவி. அவர்கள் எவ்வளவோ முயன்றும் சிவா மனதில் இருந்த வெறுப்பு கோவம் என்பவற்றை மாற்ற முடியவில்லை. அவன் அறையை விட்டு வெளியிலேயே வராமல் இருந்தான்.

கமலிக்கு சிவா தன் பிள்ளை என்று தெரிந்ததில் இருந்தே அவள் மனது அலை பாய தொடங்கியது. அவன் தன் கூடவே இருக்க வேண்டும் என்று மனதால் விரும்பினாள். அவளும் அத்தனை உணர்வுகளுக்கும் தாய்ப்பாசமும் நிறைந்த சராசரிப் பெண் தானே. என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென ரம்யாவை அழைத்தாள். அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்க்க நான் உன்னை ஒரு உதவி கேட்டால் மறுக்காமல் பண்ணுவியா என்றாள்.

என்ன ஆன்டி இப்பிடி கேக்கிறீங்க உங்களுக்கு இல்லாததா கேளுங்க கண்டிப்பா பண்ணிக்கிறன் என்றாள். இல்லம்மா நீ தானே அன்னிக்கு சொன்னாய் நீ மனசால ஒருத்தன நினைக்கிறன் அவனயே கல்யாணம் பண்ணி எனக்கு பையனா தத்து தருவதாக. இப்போ கேக்கிறன் நீ சிவாவ கல்யாணம் பண்ணி என் பையன எனக்கே தருவியா என்றாள். கமலியின் அந்த கேள்வியால் பிரியா ஒரு நொடி திகைத்து போய் நின்றாள். ரம்யா தந்தையையும் குமாரையும் மாறி மாறி பார்த்தாள். இருந்தும் பதில் கூற முடியாது தடுமாற்றமாய் நின்றாள். குமாரும் ராஜனைப் பார்க்க அவன் பேச ஆரம்பித்தான்.

என்ன ரம்யா யோசிக்கிறாய் நீ யார் என்று பெயர் குணம் எதுவுமே தெரியாத குமாரோட பையன தானே மனசில நினைத்திட்டு இருந்தாய். அவனை தானே படமா கூட வரைஞ்சாய். அவன உன் மனசில வைச்சு தானே அன்னிக்கு அவ்வளவு ஸ்ரேட்மண்ட் குமார் கமலி செல்வன் செல்வி எல்லாருக்குமே சொன்னாய். இப்போ என்ன ரொம்பவே அமைதியா இருக்கிறாய் என்னாச்சு என்றார் ராஜன்.

என்னங்க சொல்றீங்க எனக்கு எதுவுமே புரியல என்றாள் பிரியா. இல்லடா பிரியா அன்னிக்கு நீயும் நானும் நாம கமலி குடும்பத்தோட சம்பந்தம் பண்ணலாம் என்று நினைச்சம் ஆனால் ஆயுளுக்கும் நாங்க நண்பர்களா தான் இருக்கணும் என்று தான் இருக்கு என்று என்னோட கதைத்தாய் தானே அதை கேட்ட ரமி அப்பவே சொன்னாள் டாடி குமார் அங்கிளோட மற்ற பையன நான் கட்டிக்கிறன். அவன் எப்பிடி எங்க இருக்கிறான் என்றது முக்கியமில்லை. கண்டிப்பா நல்லா இருப்பான் என்று என் மனசு சொல்லுது நீங்க நினைத்தது போலவே நீங்களும் குமார் அங்கிள் குடும்பமும் சம்மந்தி ஆகலாம் என்று.

இத அவள் குமாருக்கு கூட சொல்லி இருந்தாள். முகமே தெரியாதவன் மேல உயிரா இருந்தாள் தன் மனசால அவனை நேசிச்சாள். அதனோட பிரதிபலிப்பு தான் இப்போ சில நாளாக நம்மட பொண்ணோட மாற்றம் என்றார் ராஜன். ஆமா ஆன்டி அவள் தன்னோட மனசில ஒருத்தன் இருக்கான் அவன தான் கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்பன் அவனையே கல்யாணம் பண்ணி இந்த குடும்பத்திட சந்தோசத்தை பல மடங்காக்குவன் என்று கூறினாள். அப்போ நாங்க விளக்கம் கேக்க எதுவும் சொல்லல. சந்தர்ப்பம் வரேக்குள்ள சொல்லுறதா சொல்லி இருந்தாள் என்றான் செல்வன்.

ஆமா அவன் சொல்றது உண்மை தான் இப்போ சந்தர்ப்பம் வந்திருக்கு. நான் ஒரு மனசா உயிருக்குயிரா நேசிச்சது நம்ம சிவா தான் என்று நினைக்கும் போது என்னால நம்ப முடியல. என்னோட மனச பார்த்து எல்லாருமே சந்தேகமா கேட்ட போது என் பாசத்தை என் மனசை அவனுக்கு நான் கண்டிப்பா புரிய வைப்பன் என்று எல்லாருக்குமே கூறி இருந்தன். ஆனால் அப்போ சிவா தான் என்பது தெரியாது. இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லா உறவுகளையும் புரிந்த ஒருத்தன தான் நான் நேசிச்சிருக்கிறன் என்று என்றாள். அதுக்கும் மேல என் மனசில டாடி மனசில ஏன் குமார் அங்கிள் மனசில என்ன ஆசை இருந்திச்சோ அதையே கமலி ஆன்டியும் கேக்கிறாங்க. அதனால எனக்கு இதில ரொம்ப சந்தோசம். என் நல்ல நண்பன் என்னை புரிஞ்சவன் சிவா அவனை கட்டிக்கிறதில எந்த மறுப்பும் இல்லை என்றாள் ரமி.

சந்தோசம், ஆச்சரியம், அவளின் பொறுப்பான வார்த்தைகளை கேட்ட கமலி அவளை கட்டியணைத்து முத்தமிட்டாள். என் மனசை குளிர வச்சிட்டாயம்மா ரொம்ப நன்றி என்றாள். இருந்தும் இப்போ சிவா வீட்டின் நிலைமை எதையும் அறிய முடியாமல் அனைவரும் ரொம்பவே குழப்பமாக இருந்தார்கள். சிவா தன்னோட மொபைல் சுவிச் ஓவ் பண்ணி இருந்தான். அவனோட வீட்டு நம்பர் செயலிழந்திருந்தது. ஆனால் யாருமே மாசிலாமணியின் நம்பருக்கு முயற்சிக்க விரும்பவில்லை. நேரமோ இரவு பன்னிரண்டு மணியை எட்டிக் கொண்டிருந்தது.

திடீரென செல்வியின் தொலைபேசி அடித்தது. அது சிவாவின் போன் தான் போய் ஆசையாக எடுத்தாள் செல்வி. ஹலோ சிவா சொல்லுடா என்னாச்சு உன் வீட்டில ஏதாச்சும் பிரச்சினையா என்றாள். ஒண்ணுமில்ல நீ அம்மாகிட்ட போன் குடு என்றான். அம்மா சிவா உன்க கூட பேசணுமாம் என்று கமலியிடம் போனை கொடுத்தாள் செல்வி. ஹலோ அம்மா என்று கூறிய சிவா மேல் கொண்டு வார்த்தைகள் வராமல் அழ ஆரம்பித்தான். என்னப்பா சிவா எதுக்கு இப்போ அழுறாய் அது தான் நான் அம்மா இருக்கன் அப்புறம் என்ன என்றாள்.

அம்மா இது வரைக்கும் நான் உங்கள அம்மா என்று எத்தனையோ தடவை கூப்பிட்டு இருக்கன். அப்போ எல்லாம் என்னையே அறியாத ஒரு பாசம் உங்க மேல இருந்திச்சு. இப்போ நீங்க தான் என் அம்மா என்று தெரிஞ்சு கூப்பிடுறப்ப உங்கள பாக்கணும் போல இருக்கு உங்க மடில தலைவச்சு அழணும் போல இருக்கு என்றான். எனக்கு என் டாடியும் மம்மியும் இப்பிடி பண்ணினத நினைச்சு கோவமில்ல அவங்க நிலைமை அவங்க உயிரை காப்பாத்த அப்பிடி பண்ணி இருக்காங்க அது அவங்களோட சூழ்நிலை அத மன்னிக்கிறன் என்றான்.

ஆனால் என்னை அவங்க உங்க பையன் என்று தெரிஞ்சதும் உங்ககிட்ட இருந்து பிரிக்க முயற்சித்தாங்க. உங்க வீட்டுக்கு வர அனுமதிக்கிறது குறைவு. அப்பிடி வந்தாலும் உடனே போன் போட்டு கூப்பிடுவாங்க. இதுகெல்லாம் காரணம் எனக்கும் செல்விக்கும் இடைல இருக்கிற உறவை தப்பா நினைக்கிறாங்க என்று தான் ஆரம்பத்தில நினைச்சன். அத அவங்களுக்கு தெளிவு பண்ணினன் அவள் எனக்கு நல்ல நண்பி ஒரு சகோதர பாசம் தான் அவள் மேல இருக்கு என்று. ஆனால் அதுக்கெல்லாம் இந்த உண்மை தான் காரணம் என்று தெரிய அவங்க மேல எனக்கு வெறுப்பா இருக்கும்மா. இப்போ அவங்க கூட சண்டை போட்டிட்டு நான் அறைக்குள்ள இருக்கிறன் கதவெல்லாம் சாத்திட்டு என்றான்.

அவனுக்கு ஆறுதல் வார்த்தை சொல்ல கூடிய மனநிலையில் கமலி இருக்கவில்லை. இருந்தும் இதெல்லாம் விதி அவங்க மேல கோவிக்காதப்பா எல்லாம் நல்ல படி நடக்கும். இப்போ நாங்க எல்லாம் யார் என்று தெரிஞ்சிட்டு தானே அப்புறமா என்ன எல்லாருமே சந்தோசமா இருக்கிற வழிய தான் பாக்கணும் இப்பிடி சண்டை போட கூடாது என்றாள். அம்மா நீங்க இப்பிடி சொல்றீங்க ஆனால் அவங்க என்ன நினைக்கிறாங்க என்று யாருக்கு தெரியும் என்றான். சரிப்பா நீ எதையுமே நினைச்சு கவலபடாதடா நாளைக்கு நாங்க எல்லாரும் சந்திக்கலாம் என்றாள் கமலி.

சரி எனக் கூறி போனை கட் செய்தவன் மனசு ஒரு நிலையில் இருக்க மறுத்தது. இத்தனை வருடமாக தன்னை எந்த குறையும் இல்லாமல் வளர்த்த தன் தந்தை தாயை நேசிப்பதா அல்லது என்னை பெத்து நான் யார் என்று தெரியாமலே என்னை இப்போ என் மேல பாசத்தை காட்டுற கமலி குமாரை நேசிப்பதா? அவன் மனசு ரொம்பவே குழப்பமாக இருந்தது. மாசிலாமணியின் சூழ்நிலையை மதித்து அவரை மன்னிக்க அவன் மனசு ஒத்துக் கொண்டாலும் அவரின் நடத்தைகளால் வெறுப்பு கொண்டான். எந்த பலனும் இல்லாது தன் மேல் பாசம் காட்டிய குமாரையும் கமலியையும் அதிகமாக நேசித்தான்.

நட்பென்ற வட்டத்துக்குள் ஒண்ணாக குலாவிய செல்வன் செல்வி தன் கூட பிறந்த உடன் பிறப்புக்கள் என்று நினைக்க அவன் மனசு மகிழ்ச்சியடைந்தது. நாம எல்லாம் ஒண்ணு சேரணும் என்று தான் அந்த கடவுள் கூட நமக்குள்ள நட்பென்ற பாலத்தை கட்டி இப்போ உண்மை எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வாறார் என்று சிந்தித்தான். அவனுக்கு சிறு வயதிலேயே பெற்றவங்களிடம் இருந்து தன்னை பிரித்த கடவுளை கோவிப்பதா இப்போ மறுபடி இணைத்த கடவுளுக்கு நன்றி சொல்வதா என்றே தெரியாதிருந்தது.

அவனது மனது குழப்பத்துடன் சிந்தித்துக்கொண்டிருந்த வேளை அவனது தொலைபேசி சிணுங்கியது. யாருடனும் கதைக்கும் மன நிலையில் இல்லாதவன் போனை கட் செய்யலாம் என்று எடுத்த போது அதில் அழைத்த அழைப்புக்குரிய இலக்கம் அவனை அப்படி செய்ய விடாது தடுத்தது. போனை எடுத்து ஹலோ என்றான்.

தொடரும்………..!
பாகம் 73

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Mon Jul 02, 2012 11:44 am
by MALATHI
அருந்தாவின் கதைக்கு நான் எப்பவுமே அடிமைதான் ஆதி ஸார்

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Mon Jul 02, 2012 10:22 pm
by ஆதித்தன்
MALATHI wrote:அருந்தாவின் கதைக்கு நான் எப்பவுமே அடிமைதான் ஆதி ஸார்
உங்களின் ஒருவருக்கராயினும் கண்டிப்பாக கதையினை 100 பாகம் வரை கொண்டு செல்வார் என நினைக்கிறேன்..

நல்லது :arrow:

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 03, 2012 8:33 am
by Aruntha
Athithan wrote:
MALATHI wrote:அருந்தாவின் கதைக்கு நான் எப்பவுமே அடிமைதான் ஆதி ஸார்
உங்களின் ஒருவருக்கராயினும் கண்டிப்பாக கதையினை 100 பாகம் வரை கொண்டு செல்வார் என நினைக்கிறேன்..

நல்லது :arrow:
இங்க பாருடா உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கிறாங்க.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 03, 2012 6:46 pm
by ஆதித்தன்
Aruntha wrote:
Athithan wrote:
MALATHI wrote:அருந்தாவின் கதைக்கு நான் எப்பவுமே அடிமைதான் ஆதி ஸார்
உங்களின் ஒருவருக்கராயினும் கண்டிப்பாக கதையினை 100 பாகம் வரை கொண்டு செல்வார் என நினைக்கிறேன்..

நல்லது :arrow:
இங்க பாருடா உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கிறாங்க.
இல்லாட்டினாலும் இவங்க அப்படியே சொன்னா கேட்டுக்குவாங்க .... சொல்லுங்க மாலதி ..