Page 1 of 1

இலுமினாட்டி ஆட்சி - தலைவர் யார்?

Posted: Sat Aug 26, 2017 11:32 pm
by ஆதித்தன்
Image

தமிழகம் ஒர் சிறந்த இயற்கை வளம் மிகுந்த பகுதி என்பதோடு, சிறப்பான உழைப்பாளிகளைக் கொண்ட பகுதியும் ஆகும். தமிழக மக்களின் உழைப்பினால் கிடைத்தப் பொருள்களை கடல் கடந்தும் வணிகம் செய்து சிறப்பு நிலையினை பழங்காலத்திலேயே பெற்றிருந்தவர்கள் தமிழ் இலுமினாட்டிகள்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது ஒளவை வாக்கு, வணிகம் செய்ய வருவபவர்கள் சாத்தான்கள் என்பது சில மதத்தவர்கள் வாக்கு.

உலகையே ஆண்ட தமிழர்கள், தங்களது ஆளுமையை மீண்டும் உலகுக்கு காட்டத்துடிக்கும் ஒர் போராட்டம் புதியதாக ஈழத்தின் வீழ்ச்சிக்குப் பின் உருவாகியிருக்கிறது.

இலுமினாட்டி என்ற ஒர் தத்துவம் பெரிய அளவில் தமிழகத்திற்குள் பேச வைத்தவர்களும் அவர்களே, தங்களது எதிரிகளை வீழ்த்த ஆயத்தமாகுவதும் அவர்களே. ஆம், உண்மைதான்.. ஈழத்தின் வீழ்ச்சியில் கொடுப்பது போல் கொடுத்து கெடுத்தவர்களும் உலகப் பெரும் வணிக இலுமினாட்டிகளே என்பதனை இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த ஈழத் தமிழர்கள் நன்றாக உணர்ந்துவிட்டதன் விளைவுதான் இத்தகைய பழம்பெரும் சாத்தான் வேதம் மீண்டும் ஓதுவது.

உலக படை பலத்துடன் இருக்கும் கார்ப்ரேட் இலுமினாட்டிகளுக்கும், தன் மன உறுதியினை மட்டும் கொண்ட தமிழ் இலுமினாட்டிகளுக்கும் இடையிலான பனிப்போர் தொடங்கிவிட்டது. ஆனால் தனுக்குள்ளேயே எட்டப்பன் இருக்கிறான் என்பது தெரியாமல் ஈழத்தில் சரிவினைச் சந்தித்ததுபோல, இப்பொழுதும் தனக்குள்ளே எட்டப்பன்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் தெரியாமல் செயல்படுவதுதான் தமிழ் இலுமினாட்டிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், மிக நேர்த்தியாக கார்ப்ரேட் இலுமினாட்டிகள் தமிழகத்தில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக ஆட்சிக் கட்டிலில் உட்கார இலுமினாட்டிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கார்ப்ரேட் இலுமினாட்டியா? தமிழ் இலுமினாட்டியா? என்பதனை நிதானாக நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.

தலைவன் இல்லாத படை நொடியில் வீழ்ந்துவிடும், சரியான தலைமை இல்லாமல் இருப்பதுதான் தமிழ் இலுமினாட்டி என்பதனைக் காட்டிலும் தலைவனை வரவிடாமல் கார்ப்ரேட் இலுமினாட்டிகள் மிகச் சாதுரியமாக தலைபோல் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தினை விவசாயப் பொருள் உற்பத்திக்கு தயார்படுத்த வேண்டும் என்பதனை கார்ப்ரேட் இலுமினாட்டிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நிர்ணயம் செய்துவிட்டனர். அதற்கான ஆயத்த வேலைகள் தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறதே தவிர... மாற்று அரசியல் எதிலும் இல்லை.

தமிழக ஆட்சி கவிழ்க்கப்படும் என்று கார்ப்ரேட் இலுமினாட்டிகள் அன்றே சொல்லிவிட்டதாக இலுமினாட்டி தகவல்களை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஆர்வளர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். அதன்படி பார்த்தாலும் தற்போதைய அரசியல் சூழல் என்பது தமிழக அரசு என்பது சுயமாக இயங்குவது போலவும் தெரியவில்லை... நிலையாக நீடிக்குமா? என்பதும் உறுதியில்லை.

இராமன் ஆண்டாளும், இராவணன் ஆண்டாளும் நமக்கு ஒர் கவலையும் இல்லை என்று தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருப்பவர்கள் தான் அனேகபேர்கள் என்பதனை தமிழக சூழலுக்கு நடுவே பிக் பாஸ் ஏற்படுத்திய பிம்பத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படியான சூழலில் கண்டிப்பாக தமிழ் இலுமினாட்டிகளால் தனக்கான வலுவினை சேர்ப்பது என்பது, சரியான தமிழக மக்களை தன்னோடு இணைத்துக் கொள்ளாதவரை முடியவே முடியாது. அதிலும், தனக்குள்ளே ஊடுருவி நிற்கும் கார்ப்ரேட் இலுமினாட்டிகளை அடையாளம் கண்டு பிரித்தாளும் சூழ்ச்சியினையும் சரியாக கையாளவிட்டால், முயற்சிகள் அனைத்தும் அன்றுபோல் கடைசியில் வீணாகிப்போய்விடலாம்.

சரியான தலைவரையும் சரியான கொள்கையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆட்சிக்கு பலம்.