பாப்பா போட்ட தாப்பா...! தாய்மார்கள் ஜாக்கிரதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
nilashni
Posts: 15
Joined: Sun Jan 22, 2017 9:56 pm
Cash on hand: Locked

பாப்பா போட்ட தாப்பா...! தாய்மார்கள் ஜாக்கிரதை

Post by nilashni » Tue Mar 21, 2017 8:40 pm

என்னங்க...! தலைப்பை பார்த்த உடன், இது ஏதோ தவறான விஷயம் என்று நெனச்சிட்டீங்களா? அது தான் இல்ல. இது உண்மையிலேயே ஒரு பாப்பா போட்ட தாப்பாவை பற்றிய உண்மை சம்பவம் தான். தாய்மார்கள் சில விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சம்பவம் எழுதப்படுகிறது.

என் தோழி ஒருத்திக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.கணவர், வீட்டின் சற்று தொலைவில் அமைந்துள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணவர் வேலைக்கு சென்ற பிறகு , என் தோழியும் குழந்தையும் மட்டும் தான் வீட்டில் இருப்பார்கள்.

தினமும் குழந்தையை தூங்க வைத்து விட்டு குளிப்பதற்கு செல்வாள் என் தோழி. அன்றைக்கும் குழந்தையை தூங்க வைத்து விட்டு வழக்கம் போல் வீட்டின் இருபுறமும் உள்பக்கமாக தாழ்பாள் போட்டு விட்டு வீட்டிற்குள் இருக்கும் குளியலறையில் குளிக்க சென்றாள்.

அன்று மட்டும் ஏனோ, குழந்தை சீக்கிரமாக முழித்து விட்டது. அருகில் யாரும் இல்லாததால் குழந்தை அழ தொடங்கியது. குழந்தையின் அழுகுரலை கேட்ட என் தோழி, இதோ வந்திட்டேன்டா கண்ணா என்றவாறு வேகமாக குளிக்க தொடங்கினாள். அம்மாவின் குரலை கேட்டதும், குழந்தை குளியலறை நோக்கி தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தது. குளியலறைக்கு சென்று தன் பிஞ்சு கைகளால் கதவில் அடித்து அடித்து விளையாடியது. கதவில் இருந்த கொண்டியை (தாழ்பாள்) இழுத்து இழுத்து விளையாடியது.

எதிர் பாராத விதமாக குழந்தை கொண்டியை இழுத்ததில் கதவு லாக் ஆகி விட்டது. என் தோழி குளித்து முடித்து வேகமாக கதவை திறக்க முயன்றாள். ஆனால் திறக்க முடியவில்லை. குழந்தை வெளியில் எதையோ வைத்து அடித்து அடித்து விளையாடுவதும், சிரிப்பதுமாக இருந்தது. குழந்தையின் குரலை கேட்டதும் குழந்தை விளையாடியதில் தான் கதவு லாக் ஆகி விட்டது என்று என் தோழிக்கு புரிந்து விட்டது.
வெளியில் யாராவது இருக்கீங்களா? இருந்தா கொஞ்சம் வாங்களேன், என்று பலவிதமாக கூச்சலிட்டு பார்த்தாள். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் இவளது குரல் கேட்காததால் மிகவும் நொந்து போனாள். நேரம் செல்ல செல்ல, குழந்தையும் அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகைை ஒருபுறம், தான் வெளியி்ல் வரமுடியாத நிலை மறுபுறம் என்ற கவலை அவளை வாட்டி வதைத்தது. என்ன செய்வதன்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல குழந்தையின் அழுகுரல் கேட்பதும் நின்று விட்டது. குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதட்டத்துடன் அதிகமாக கூச்சலிட்டு அழ ஆரம்பித்தாள்.

என் தோழியின் கணவர் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருவது வழக்கம். வழக்கம் போல் வீட்டிற்கு வந்த அவர், வெளியே நின்று மனைவியின் பெயரை சொல்லி கூப்பிட்டும், ஹாணிங் பெல்லை அழுத்தியும் பார்த்தார். எந்த பதிலும் இல்லாததால் பூட்டப்படாத ஜன்னல் வழியே உள்ளே பார்த்தார். அங்கு குழந்தை கீழே வெறும் தறையில் தூங்கி கொண்டிருந்தது. எங்கோ தன் மனைவியின் அழுகுரல் கேட்க, அவளது பெயரை சொல்லி உரக்க அழைத்து பார்த்தார். அவரது குரலை கேட்ட என் தோழிக்கு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது. என்னங்க, நான் இங்க இருக்கங்க. எப்படியாவது கதவை திறந்து விடுங்க என்று கதறினாள். மனைவியின் அழுகுரலை கேட்ட அவர், வேக வேகமாய் ஜன்னல் கதவை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்று பூட்டியிருந்த கதவை திறந்து விட்டார். வெளியே வந்த மனைவி நடந்ததையெல்லாம் கணவனிடம் கூற, இருவரும் சென்று குழந்தையை பார்த்தனர். அங்கே குழந்தை தூங்குவதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். அன்று முதல், என் தோழி குழந்தையை தனியாக விட்டு விட்டு எந்த வேலையும் செய்வதில்லை.

குழந்தை தூங்க தானே செய்கிறது என்று, குழந்தையை தனியாக விட்டு விட்டு, அருகில் உள்ள கடைக்கு செல்வது, குளிக்க செல்வது, பக்கத்து வீட்டிற்கு செல்வது என்றவாறு பல தாய்மார்கள் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கு செல்வதாக இருந்தாலும் குழந்தைகளை வீட்டில் தனியாக விடாதீர்கள். சொந்தங்களுடனோ, நன்கு தெரிந்தவர்களின் பொறுப்பிலோ விட்டு செல்லுங்கள். இல்லையென்றால் பல விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”