Page 1 of 1

பணத்தினை முழுமையாக திரும்பக்கொடுக்குமா வங்கிகள்???

Posted: Mon Nov 14, 2016 10:03 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=5l977aqnRZg[/youtube]
#கடன்
2014 ஆண்டு, வெளிநாட்டுக்கடனுக்கு கட்ட வேண்டிய வட்டி ரூ.4.27 இலட்சம் கோடியினை ரூ.4.57 இலட்சம் கோடி கடன் வாங்கிக் கட்டியுள்ளது இந்தியா. எவன் ஒருவர் கடன் வாங்கி, அதற்கான வட்டி கட்ட கடன் வாங்குகிறானோ, அவனை கடன் கொடுத்தவர்கள் மூழ்கடித்துவிடுவார்கள் என்பதே நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை, தற்பொழுது கார்ப்ரேட் நாடுகள் இந்தியாவுக்கு கடன் கொடுத்து தன் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டதோடு தற்போதைய Clean India, Make in India, Digital India, 2020 Vision ஆகிய அனைத்தும் வெள்ளையர்களை மையமாகக் கொண்டு மறைபொருள் கொண்ட திட்டமாகும்.

தற்போதைய சூழலில் நாட்டின் சுழற்சியில் 17 இலட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் உள்ளனவாம், அதில் கள்ள நோட்டு 400 கோடி இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. இந்த மக்களிடம் சர்வ சாதரணமாக புழங்கும், 1000, 10,000 என சிறிய தொகை மற்றும் பல ஆண்டுச் சேமிப்புத் தொகையான இலட்சம் இவற்றினை வங்கியில் டெபாசிட் செய்தாலே 5 இலட்சம் கோடி வந்துவிடும்.

அரசு இந்த பொதுமக்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த இந்த 5 இலட்சம் கோடிக்கே தனது இலக்கினை வைத்திருக்கிறதே தவிர, கருப்பு பணத்திற்கோ, கள்ளநோட்டிற்கோ அல்ல.


வங்கிகள் 500 கோடிக்கும் மேல் என ஒர் கம்பெனிக்கு கொடுக்கிறது என பல கம்பெனிகளுக்கு கொடுத்து, வராக்கடனாய் தள்ளுபடி செய்யப்பட்ட கோடிகள் 1.15 இலட்சம் கோடிகள். வராக்கடனில் இருக்கும் தொகை 3.75 இலட்சம் கோடி..

இப்படி மக்களிடமிருந்து பணத்தினை வாங்கி, கடன் என்று பெரிய கம்பெனிக்குக் கொடுத்து பணம் இல்லாமல் போனதால், தனது சர்க்கரத்தினை சரியாக சுழற்றவே, மக்கள் வீட்டில் ஐநூறு ஆயிரம் எனச் சேர்த்து வைத்திருப்பார்கள், அதனை எல்லாம் சேமிப்பு என்றுச் சொல்லி வங்கியில் போடச் சொல்லிவிட்டால் அதனை வைத்து காலம் ஓட்டலாம் என்ற பார்த்தார்கள், ஆனால் கொண்டு போடவில்லை.

பார்த்தார்கள், கறுப்பு பணத்தினை வெளியில் கொண்டு வரணும் என்றுச் சொல்லி, ஒன்றும் அறியா பொதுமக்கள் பணத்தினை எல்லாம் தடை செய்து, வங்கியில் டெபாசிட் செய்ய வைக்கவே 500&1000 தடை செய்யப்பட்டு, அவர்கள் இலக்குப்படி தற்பொழுது 1.50 இலட்சம் கோடி வந்துவிட்டது.

1.50 இலட்சம் கோடியும், கஷ்டப்பட்டு நூறு ஆயிரம் என்று சேர்த்து வைத்த இந்திய நாடு முழுவதுமான மக்கள். இன்னும் மீதம் இருக்கும் நாட்களில் கூடுதல் தொகை வரும்.

ஆனால், கருப்பு பணம் வராது. ஏனெனில் அதனை வாங்கிக் கொள்ள முடிந்தால் ஏன், வராக்கடன் என்று எல்லாம் தள்ளுபடி செய்கிறார்கள்???

மொத்தத்தில் மக்கள் மத்தியில் முளகாய் அரைக்கிறார்கள்.

அதுமட்டுமா.. கடன் கடன் என்று வாங்கி, ஆண்டு வட்டி மட்டுமே 4.27 இலட்சம் கோடி ரூபாய் கட்ட வேண்டியிருக்கிறது.

ஒர்வேளை நாட்டின் கடனுக்கான வட்டியினைக்கட்ட வேண்டும் என்று போட்ட பணத்தினைக் கட்டிவிட்டால்.. அந்தோ ... திரும்ப பணம் எடுக்க கியூவில் நின்றோம் என்றுச் சொன்னால் கிடைக்க வருடம் வந்துவிடும்..

சிந்தியுங்கள் மக்களே .. கடன் வாங்கியவன் திவால் நோட்டீஸ் கொடுக்கும் பொழுது, தற்பொழுது திவாலில் நிற்கும் அரசு????

Image