Page 8 of 10

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 2:53 pm
by thamilselvi
“ஒரு நிமிஷமிருங்க, கால் இருக்கா பாத்துக்கறேன்”

அவன் தானா? அல்லது பிரம்மையா, பேய் பிசாசு என்று மோகினி, இல்லை இல்லை இவன் அழகான மோகனன் என்று ஏதாகிலுமா?

முன்பிருந்தவனுக்கு தெரியாமல் கிள்ள வேண்டும் என்றெண்ணி இரகசியமாய் கிள்ள... என் கை போன இடத்தை கவனித்தவன்... “கனவில்ல நிஜம்தான், மோகினி போல ராத்திரியில என்ன ஊர்வலம் வேண்டிகிடக்கு“

வந்து …….. என்று இழுத்து நான் ஆற அமர பதில் சொல்வதற்கு முன்பாக அங்கிருந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தினுள் இருந்து அவள் வந்தாள்... அவள் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்...பழுப்பேறிய கண்களில் தீ்ட்சண்ய பார்வை. அவள் தோளில் உறங்கிக்கொண்டிருந்தாள்... ஓ இவள் தான் ஜீவாவின் மனைவியா?

“அந்த ஆக்ஸிடென்ட் பற்றி சொன்னேனில்லயா, அப்போ இவங்களும் ஹெல்ப் பண்ணாங்க” என்றான்

ம் என்ற ஆமோதிப்போடு, அவள் பைக்கின் பின் இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

பைக்கில் சாய்ந்திருந்தவன், ஒரு காலை ஸ்டைலாக தூங்கி பைக்கின் மறுப்புறம் போட்டு பைக்கில் அமர்ந்தான். சற்றென்று வடிகஞ்சியின் வெற்று பார்வை அவன் கண்களை ஒட்டிக்கொண்டது.

ஓ மனைவி வந்த உடன் இந்த பார்வை மாற்றமா? மனம் சலசலத்தது.

அவன் ஒரு யு டேன் அடித்து திரும்பினான். ஒரு சின்ன புன்னகை, ஒரு தலையசைப்பு, ஒரு பை எதுவும் இல்லை அவனிடத்திலிருந்து.

அந்த பெண் மட்டும் அளவோடு சிரித்து வருகிறோம் என்றாள்

அடிவயிற்றில் சின்னதாய் ஒரு போர் பிரளயம். நட்பாகவாவது சொல்லிவிட்டு போய் இருக்கலாம் தானே... அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு என் மேல் இருந்த நற்மதிப்பு போய்விட்டிருக்குமோ?

அதிலும் இத்தனை சீக்கிரத்தில் அவனை காண்பேன் என்று எண்ணவில்லை. அந்த காப்பகத்தை நோக்கி கண்களை தவழ விட்டேன்.

சுண்ணாம்பு தேய்ந்திருந்த சுவரில் இயேசு ஐக்கிய சபை என்று எழுதியிருந்தது.

இந்த காப்பகத்தின் நிறுவனர் ஜேம்ஸ், கருணை மனம் கொண்டவர்தான். அவர் இறந்த பிறகு சில வருடங்களாக காப்பகம் மூடியே இருந்தது.

பிரதானமாய் அங்கு அதிக குழந்தைகள் இருக்கவில்லை முப்பதிற்கும் குறைவானவர்களே இருந்ததாய் கேள்வி.

நரைத்த முதிர் வயதில் பொக்கைவாயில் மழலை சிரிப்போடு வலம் வந்தவரின் கண்களின் ஒளி கண்முன் வந்து மறைந்தது.

மீண்டும் அவன் நினைவாய் வந்து ஒட்டிக்கொண்டான். மனைவி குழந்தைகளோடு பார்த்த பின்பும் கூட அவனை நினைப்பது தவறென்றது ஒரு மனம். என்ன அவனை பிடுங்கிக்கொள்ளவா போகிறேன் நினைவு தானே என்று சிறு பிள்ளை தனமாய் சமாதானம் செய்துக்கொண்டது அதே மனம்.

சற்றே என்னை அசுவாசப்படுத்திக்கொண்டவளாய் வீட்டை நோக்கி நடக்கத்துவங்கினேன்.

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 5:02 pm
by ஆதித்தன்
கதையில் இத்தனை விரைவியில் ஒர் ஆங்கிலோ இண்டி ஆண்டி வருவாங்கன்னு எதிர்பார்க்கல...

தொடரட்டும்...

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 8:22 pm
by thamilselvi
காதலுணர்வு சந்திக்காத உயிரினமே உலகத்தில் இல்லை என்று தோன்றியது. அது ஏன் எப்படி எப்போது எதற்காக வருகிறது என்று சொல்வதற்கில்லை போலும். கண்டதும் காதல் வந்து ஹிம்சிக்கும் என்று எனக்கென்ன ஜோதிடமா தெரியும்.

அந்த ஆங்கிலோ இந்திய பெண் வேறு என் கண்களுக்கு நண்பன் பட கதாநாயகியின் சாயலில் அழகாய் தெரிந்தாள்.
அழகாய் ஒரு மனைவி இருக்கும் போது, எங்கே என் மேல் கவனம் திரும்பும். ஒரு வேளை காதல் மனைவியோ… மூக்கும் மூக்கும் இடித்துக்கொள்ளாமல் முத்தமிட்டு பழகியிருப்பார்களோ என்ன மனம் இது கொஞ்சமும் விவஸ்தையில்லாமல் மற்றவர் அந்தரங்கத்தில் ஆஜராகிறதே தமிழ் ராஜா ஒரு கவிதையில் எழுதியிருந்தானே,

மனம் என்ன காதலின் விருந்தாளியா?
ஒவ்வொரு முறையும் அழைத்து உபசரிக்க…
அது உயிரின் கோவில் அல்லவா
வழிபாடு எவ்வளவு வேண்டுமானாலும்
இருக்கலாம்
அதில் உருவம்
ஒன்று தானே இருக்க முடியும்
என்னிடம் இருக்கும் அத்தனைக் காதலுக்கும்
முழு உருவம் நீ தானே

(நன்றி தமிழ்ராஜா)

ஓ ஆண்களின் மனநிலை இதுதானோ வழிபாடு எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்றால்… எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் பழகலாம்…உருவமாய் நேசிப்பவள் மட்டும் தானோ…ச்சே என்ன கண்றாவியாய் சிந்திக்கிறது இந்த மூளை.
எப்பொழுது வீட்டருகே வந்தேன் என்று தெரியவில்லை.

இரும்பு கேட்டின் கம்பிகளில் கால்களை பதித்து உட்புறமாய் குதித்தேன். செருப்போடு குதித்ததால் சப்தம் சற்று கூடுதலாய் கேட்டது.

சரிந்திருந்த மணலில் அமர்ந்துக்கொண்டேன். இரவின் மென்ஒளியில் காற்றின் விசை ஊட்டத்தில் தலையசைத்தது ரோஜா.

ரோஜாவின் மையத்தில் அரவிந்தன் தோன்றினான்… கரணை கட்டிக்கோ உனக்கேற்றவன் பால்யத்திலிருந்து உன்னை நேசிப்பவன், சொன்னவன் காற்றின் சிறு அசைவில் காணாமல் போனான்.

ஜீவா தோன்றினான்… கண்கள் சிரித்தது…பார்வை சரசம் புரிந்தது.

அந்த ஆங்கிலோ இந்திய பெண் வந்தால் மூக்கும் மூக்கும் இடிச்சுக்காமா…..

அய்யோ தலையை வலித்தது. அழுத்திப்பிடித்துக்கொண்டேன்.

மனம் என்ன காதலின் விருந்தாளியா? என்று வினா எழுப்பினான் தமிழ்ராஜா

“ச்சே இவன் வேறு நேரம் காலம் தெரியாமல்”

“யார்”

குரல் வந்த திசையை நோக்கினேன்.

அங்கே அரவிந்தன் நின்று கொண்டிருந்தான்.
“என்ன தனியா பயித்தியம் போல பேசிட்டிருக்க”

மெல்ல தரை நோக்கினேன்.

தோள் பட்டையை பற்றி எழுப்பினான். “எதுவா இருந்தாலும் காலைல பேசலாம் வந்து தூங்கு”

எனக்கு தூக்கம் வரலடா, கொஞ்ச நேரம் கழிச்சு வரேனே…ப்ளீஸ்.

இந்த சூழல் எப்பவும் இப்படியே இருக்காது, இதுவும் கடந்து போய்டும், இப்ப நீ எதுக்காக அழறியோ அதப்பத்தி பின்னாடி எப்பவாவது நெனச்சா உனக்கே சிரிப்பு வரும், வாப்பா ப்ளீஸ் அத்த வேற கவலயா இருக்காங்க என்றான் கெஞ்சுதலாய்.

நான் வேறு வழியின்றி அவன் பின்னே நடந்தேன்.

யாழினி என்னடா ஆச்சு, எங்க போய்ட்ட, அம்மா கவலையாய் என்னை அவள் அருகில் அமர்த்திக்கொண்டாள்.

ஒண்ணுமில்லம்மா, தூக்கம் வரல அதான் கொஞ்சதூரம் நடக்கலாம்னு…

அம்மாவின் பார்வையில் ஒரு தேடல் இருந்தது. அந்த முகத்தை ஊடுருவி பொய் சொல்லும் என் இதயத்தை குத்தி கிழித்தது.

“கரணை உனக்கு பிடிச்சிருக்கு தானே” குரலில் ஒரு ஆராயும் உணர்வு தொனித்தது.

பிறகு பேசலாம் ஆண்டி அவ தூங்கட்டும் என்றான் அரவிந்தன்.

யாமினி நடப்பது எதுவும் தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தாள்.

அம்மா விடுவதாய் தெரியவில்லை, “கரணை உனக்கு பிடிக்காட்டி விட்டுடலாம், இந்த சம்பந்தம் வேண்டாம்”

அம்மாவின் இந்த வார்த்தைகள் அரவிந்தனை சங்கடப்படுத்தியது அப்பட்டமாய் அவன் முகத்தில் பிரதிபலித்தது.

அம்மாவின் முகத்தை பார்த்தேன், மகள் என்ன சொல்ல போகிறாள் என்றொரு பரிதவிப்பு.

அப்படியெல்லாம் ஒண்ணமில்லம்மா, என்று அம்மாவின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டேன்.

என் மனதின் வேதனை கண்ணீராய் அவள் மடியில் வழிந்தது.

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 8:24 pm
by thamilselvi
ஆதி இந்த பேஜ் கொஞ்சம் ஜஸ்டிஃபை பண்ணுங்களேன் ப்ளீஸ்

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 8:37 pm
by ஆதித்தன்
thamilselvi wrote:ஆதி இந்த பேஜ் கொஞ்சம் ஜஸ்டிஃபை பண்ணுங்களேன் ப்ளீஸ்
கதையை டைப் செய்து முடித்ததும், Ctrl + A அமுக்கிவிட்டு பின்னர் இங்கு Justify பட்டனை சொடுக்கினால் சரியாக இருக்கும்.

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 8:52 pm
by ஆதித்தன்
thamilselvi wrote:ஆண்களின் மனநிலை இதுதானோ வழிபாடு எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்றால்… எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் பழகலாம்…உருவமாய் நேசிப்பவள் மட்டும் தானோ…ச்சே என்ன கண்றாவியாய் சிந்திக்கிறது இந்த மூளை.
எப்பொழுது வீட்டருகே வந்தேன் என்று தெரியவில்லை.
தமிழ் ராஜாவின் கவிதைக்கு நீங்கள் தவறான அர்த்தம் கண்டுள்ளீர்.

ஊருக்குள் எத்தனை கோவில் வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால், அவர்க்கான கோட்டை ஒன்று தான், அதில் உருவமானவள் அவள் மட்டும் தான்... அவளை புஷ்பம் கொண்டும் பூசிப்பான்.. பன்னீர் கொண்டும் பூசிப்பான்.

எத்தனை உருவத்தையும் கொள்வான் என்பதில்லை.

:rock: :rock: :rock: :rock:

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 9:18 pm
by thamilselvi
தமிழ்ராஜாவின் கவிதையை...என்றென்றும் உன்னோடு காதாசிரியராக சரியாகவே புரிந்துள்ளேன்...யாழினி என்ற பெண்ணின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப அவளின் குழப்ப நிலைக்கு ஏற்ப அந்த கவிதையின் அர்த்தத்தை மாற்றி புரிந்து கொண்டதாக சித்தரித்துள்ளேன்.... காதல் தோல்வி என வரும் போது எல்லா பெண்களும் அப்படி தான் எல்லா ஆண்களும் அப்படிதான் என்று ஒரு சலிப்பு வருவது இயல்பானதே...இது கதையின் ஓட்டத்திற்காக யாழினியின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது. தமிழ்ச்செல்வியின் கருத்து இது வல்ல

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Mon Jul 09, 2012 9:22 pm
by thamilselvi
தமிழ்ராஜாவின் கவிதைக்கு சரியான பொருளுரை எழுதிய செல்வஆதித்தன் அவர்களுக்கு :edu: பட்டம் வழங்கி பாராட்டுகிறேன் :wink:

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Tue Jul 10, 2012 12:50 pm
by thamilselvi
இரவு தந்த அயர்ச்சியில் அதிக நேரம் தூங்கிவிட்டேன் போலும்... சூரியன் சுள்ளென்று முகத்தில் குத்தினான். ஒரு புறம் துவைத்த துணிகளை உலர்த்தியிருந்தாள் அம்மா... காற்றின் ஆலாபனையில் வெயிலின் சுள்ளும் ஈரத்துணிகளின் சாரலும் என் உறக்கத்தை கலைத்தது.

அரவிந்தன் புறப்பட தயாராகி நின்றான், உடன் யாமினி பேக்கை தோளில் மாட்டியபடி, சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தேன் என்னடி இது எழுப்பியிருக்க கூடாதா?

மகாராணி இரவெல்லாம் நகர்வலம் போய்ட்டு வந்து தூங்குறீங்க, எப்படி எழுப்புறது... கேலிபேசினாள் யாமினி

அரவிந்த் தான் போரான் நீயுமாடி போகணும்

கொஞ்சம் வேலடா போகணும் இல்ல...என்றாள் கெஞ்சுதலாய்

அரவிந்த் பைண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகங்களை கொண்டுவந்து கைகளில் திணித்தான்.

நேரம்கிடைக்கும் போது படிச்சுப் பாரு எல்லாம் கரணோடது

வெறும் எழுத்துக்களை வைத்து காதலை நிர்ணயிக்க முடியுமா என்ன? எழுத்துக்களில் உயிர்ப்பை உணர முடியுமா என்று ஓடிய எண்ண ஓட்டத்தை தடுத்து நிறுத்தினேன். தமிழ்ராஜாவின் கவிதைகளும்...ப்ளாக்கில் படித்த சில கவிதைகளும் கண்களில் கண்ணீரை வரவழைத்ததுண்டு.

உமாஜனா மற்றும் ஆதித்தனின் கவிதைகள் கண்ணீரை வரவழைக்கவில்லை என்றாலும், ஈர்ப்பை ஏற்படுத்தின.
அவனா இவனா என்ற எண்ணவில்லை....மனம் என்ன காதலின் விருந்தாளியா? என்று வினா எழுப்பினான் தமிழ்ராஜா... ஒரு புறம் உயிரான அம்மா நிற்க மறுபுறம் ஜீவா நின்று வாட்டினான்.
கரண் பால்யமுகமாய் நிழலாடி காணாமல் போனான்.

விடைப்பெற்றவர்கள் தலை மறையும் வரை விக்கித்து பார்த்திருந்தேன். இனம் புரியா ஒரு உணர்வு, எதற்காக இப்படி சம்பவிக்கிறது. எனக்கு ஏன் ஜீவாவை பார்த்ததும் சலனம் உண்டாக வேண்டும். கரணுக்கு ஏன் என் மேல் காதல் வரவேண்டும். இருவரில் யாரேணும் ஒருவர் என் வாழ்வில் வராமல் இருந்திருக்கலாம்.

அலைபேசி ரீங்கியது.

அலோ

என்னம்மா யாழினி ஆபிஸ் வர்ரப்பல ஐடியா இல்லயா? என்றார் தாசில்தார்.

புறப்பட்டாச்சு சார் வந்துவிடுகிறேன் என்று பொய் சொன்னேன். பொய் தான்...இந்த பொய் மரியாதையின் நிமித்தம் சொல்ல வேண்டியதாகிறது.

“ஆபிஸ் வரதாம்மா, சாத்தனூர் போற வழியில கிருஷ்ணாபுரம்னு ஒரு ஊர் இருக்காம் அங்க வந்துடு“

“எதுக்காகங்க சார்“

நல்ல மனநிலையில் இருந்தார் போலும் பதில் சொன்னார். மற்ற நேரமாயிருந்திருந்தால் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்கும்... வா என்றால் வந்து நிற்க வேண்டும்... என்ன ஏது என்று கேள்வி கேட்கப்படாது. சில நேரங்களில் வாயை மூடிக்கொண்ருப்பதே மரியாதையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

“கருணாலயா டிரஸ்டோட ப்ரான்ச் அங்க ஆரம்பிக்கிறாங்களாம், இன்னைக்கு பங்ஷன்.

சட்டென்று ஏதோ உருத்தியது. ஏன் கருணாலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை... பகுதிநேர ஊழியர்களுக்கு அழைப்பு இல்லையா என்ன? மனம் விடை காண விழைந்தது.

அவரசகதியில் காலைகடன்களை முடித்து, குளித்து, சீவி, சுடிதாரில் நுழைந்துக்கொண்டேன். ஆபிஸ் போவதென்றால் சேலை உடுத்தலாம். விழா என்பதால் சேலை வேண்டாம் என்று தோன்றியது. எங்கு போனாலும் தேமே என்று உட்கார்ந்திருக்க முடிய போவதில்லை. எனக்கென்று செய்வதற்கு ஏதோ ஒரு வேலை காத்திருக்கும்.

ஒரு சிறிய பர்சும், இருபது ரூபாய்குள் சில்லறைகளும், செல்போனும் மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

வர்றேம்மா, என்றபடி படிகளில் தாவியபோது, அம்மா திட்டுவது செவியில் தேய் பிறையானது.

“என்ன சொன்னாலும் புத்தி வராது...சாப்பிடாம கெடந்து கெடந்து அல்சர்ல வந்து நிக்க போவுது“

செல்வாண்ணாவிற்கு கால் செய்து, கருணாலயா ப்ரான்ச் ஓபனிங்காமே...ஏன்னா எனக்கு சொல்லல என்றேன்.

பதில் என்னை அதிர்ந்து போகச் செய்தது.

உன்னை கூப்பிட வேண்டாம்னு டைரக்டர் சொல்லிட்டார்ம்மா, குறிப்பா உன் பேர சொன்னதால உன்கிட்ட சொல்ல முடியல.

“ஏனாம்“

“தெரியலம்மா“

யார் அந்த டைரக்டர், அழையாத விருந்தாளியா நான் போய் நின்றால் என்னவாகும், நான் தான் யாழினி என்பதாவது அந்த மனிதருக்கு தெரிந்திருக்குமா?

Re: என்றென்றும் உன்னோடு

Posted: Tue Jul 10, 2012 1:56 pm
by thamilselvi
சட்டென்று ஒரு யோசனை தோன்றியது... பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து வருவதைவிட, குறுக்கு சந்தில் புகுந்து ஐந்து நிமிடம் நடந்தால் மெயின்ரோடை அடைந்துவிடலாம். சி7 டவுன் பஸ் வரும், டக டக வென்று தகரடப்பா நகர்வதை போல் இருந்தாலும் பக்கத்து கிராமங்களை சுற்றி செல்வதால்....வயலும் மலையும் காற்றும் மனதிற்கு இதம் தரும். மனிதன் இவையெல்லாவற்றையும் தான் இழந்துக்கொண்டிருக்கிறானே... எங்கு பார்த்தாலும் வான் முட்டும் கட்டிடங்கள்... இயந்திரத்தோடு ஒன்றி... மனிதனும் இயந்திரமாகி விட்டான் என்று தோன்றியது.

நான் மட்டும் என்னவாம், காலையில் அலுவலகம் போனால், இரவு வீடு, மீண்டும் அலுவலகம்...எப்போதாவது அத்திபூத்தார் போல கருணாலயா நிகழ்வுகளில் கலந்துகொள்வது... எச்ஐவி விழிப்புணர்வு வகுப்பு எடுப்பது என்று வெளியில் போனால் தான் உண்டு.

அதற்கும் ஒரு முட்டுகட்டை வந்து விட்டது. யார் அவன் நான் விழாவில் கலந்து கொள்வதால் அவனுக்கு என்ன வந்தது.

சி7 டர்ர்ர் சப்தத்தோடு நின்று டுர்டுர்டுர் என்று பெருமூச்சு விட்டது.

சட்டென்று படிகளில் தாவி ஏறினேன். பேருந்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை என்ற போதிலும், இருக்கைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை.

நின்று பயணிக்கலாம், ஓட்டுநருக்கு பின்புறமாய் முன்படிக்கு அருகில் நின்றிருந்தேன்.

முன்பு ஒரு முறை ஜீவாவும் இங்கு தான் நின்றிருந்தான், என்று மனம் நினைவுப்படுத்தியது... ஏதோ ஒன்றை பார்க்கும் போது ஜீவா நிழலாடி மறைந்தான். எண்ணங்கள் மின் அலைகள் என்கிறார்களே பி சி கணேசனின் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், என் எண்ணங்கள் ஜீவாவை சலனப்படுத்துமோ... அப்படி என்றால் கரணின் எண்ணங்கள் ஏன் என்னை வந்து சேரவில்லை...எங்கோ பறந்த மனதை கட்டி நினைவுலகத்திற்கு கொண்டு வருவது சிரமமாகவே இருந்தது.

கம்பியில் சாய்ந்த படி வேடிக்கைக் காட்சிக்காகவென பார்வையை திருப்ப அங்கு....

நடத்துனர் கடைசி இருக்கையில் இருந்தவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

முன்பு நின்றிருந்தவனின் பார்வை எதையோ உணர்த்த, சட்டென்று தமிழ்ச்செல்வியின் நான் இயந்திர மல்ல கவிதையின் வரிகள் வந்து பதிலுறுப்பதாய் தோன்றியது எனக்கு.


எப்போதாவது...
அத்திபூத்தார்போல் பயணிக்கும்
சுமாரான பிஃகருக்கு
சூப்பராய் பார்வை தூதுவிட்டு,
பேருந்து நின்று
நான் இறங்கிய நிறுத்தத்தில்
மானசீகமாய் மனதிற்கு
காதல் தோல்வி என்று அறிவித்து.

அவன் பார்வையை திருப்பப்போவாதாய் தெரியவில்லை, நான் திருப்பிக்கொண்டேன். எமகாதகத்தி இப்படியுமா கவிதை எழுதுவாள், என்று அங்கலாய்த்துக்கொண்டேன்.

ஒரு வேளை அந்த சுமாரான பிகர் பின் நிற்பவனுக்கு நானாய் இருக்கக் கூடுமோ? என்ற கேள்வி உதட்டில் மென் முறுவலை உருவாக்கியது.

டிக்கெட் எடுக்க வேண்டும், மீண்டும் பின் நிற்பவனை பார்த்து கண நேர காதலியாக விருப்பமில்லை.

இறங்கும் போது எடுத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் நடத்துனரே வரட்டும் என்று விட்டுவிட்டேன்.

மேடம் உங்களுக்கு சார் டிக்கெட் எடுத்துட்டார் என்று குரல் கொடுத்தார் நடத்துனர்.

சாரா....பார்வை பயணித்து நிலைத்த இடத்தில் இருந்தவனை பார்த்தும் பற்றிக்கொண்டு வந்தது.

அங்கே ஜீவா நின்றிருந்தான்.