என்றென்றும் உன்னோடு - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Jul 03, 2012 11:55 am

மாலதி நான் Miss இல்ல Mrs தான் விரைவில் என்றென்றும் உன்னோடு தொடரும் :cool:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Tue Jul 03, 2012 7:34 pm

thamilselvi wrote:அய்யய்யோ ஆதி சார் பின்னூட்டமில்லாவிட்டால் கதை சூடு பிடிக்காதே... என் சென்சிட்டிவ் காணமல் போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் எழுத்து சுதந்திரத்தை என்றென்றும் உன்னோடு கதையின் பின்னூட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.
:grain: உங்கள் சென்சிட்டிவ் குறைந்துவிட்டது என்பதனை நாங்கள் சொல்ல வேண்டும். அதற்காக டெஸ்ட் வைக்கிறேன்னு... நான் பாட்டுக்கு விளையாட்டுத்தனமா பண்ணினால் நீங்க... மறுபடியும் வீணாய் இரண்டு சொட்டு கண்ணீரை விட வேண்டியிருக்கும்.... ஆகையால் இந்த விஷப் பரிட்சை வேண்டாம்.
MALATHI wrote:HELLO MISS THAMILSELVI MEM கதை எழுத சொன்னது நான் நீங்க ரெண்டு பேரும் என்னடான்ன ஆர்கூயுமெண்ட் பண்ணிட்டு இருக்கிங்க கதை எழுத முடியுமா முடியாதா, ஜிவாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா இல்லையா, யாழினி யார கல்யானம் பன்னிக்கபோறங்க இத மட்டும் சொல்லிடுங்க இல்லனா என் தலை வெடித்து விடும். அப்படி எனக்கு எதுனாச்சும் ஆச்சுனா நீங்கதான் காரணம், பார்த்துகோங்க,
இதில் ஒர் சின்ன திருத்தம் ... மாலதி அவர்களுக்கு ஏதேனும் விபரீத ஆபத்துகள் ஏற்பட்டால் திருமதி. தமிழ்ச்செல்வி ராஜகுரு அவர்கள் தான் முழுப் பொறுப்பு என்பதனை அவரே சொல்லியிருக்கிறார். அதனைச் சொல்லும் பொழுது பெயருக்கு முன்னால் பிழை இருந்தாலும் தப்பிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ... படுகை பொறுப்பு ஏற்காது என்ற வருத்தமான செய்தியுடனும்... ஆதாரத்தை பூட்டிக் கொள்கிறேன்.

இனி தமிழ்ச் செல்வியாச்சி.... மாலதியாச்சி...
============================================================================

இப்பக்கூட... விடாது பதிலுக்கு பதில் தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. இது என் சுபாவம் மற்றும் நமக்குள் விபத்தைக் கொடுக்கலாம் என நினைக்கிறேன்... ஆகையால் :ino:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by Aruntha » Tue Jul 03, 2012 9:20 pm

ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா? ஆதி சிங்கம் கிளம்பிடிச்சா?
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by mnsmani » Tue Jul 03, 2012 9:45 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரனகளளமாய் போச்சி. பாவம் ஆதி.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Wed Jul 04, 2012 12:23 am

படுக்கையை கொண்டு போய் மாடியில் தொப்பென்று போட்டேன். அந்த தொப்பில் என் மனதின் வலி தெரிந்திருக்கும் போலும், யாமினி சாரிடா, என்றால் கரங்களைப்பற்றி.

“அவனுக்காக நான் சாரிக்கேட்டுக்கறேன்” அவளின் பேசும் செயலை இடைமறித்தான் அரவிந்தன். இதுல சாரிக்கேட்க என்ன இருக்கு யாழினிக்கு கரண் தான் சரியான ஜோடி”

இப்படி பேச உனக்கு வெட்கமா இல்ல, அவ லவ் பண்றன்னு தெரிஞ்சும் கூட உன் அண்ணன பத்தியே பேசிட்டிருக்க

லவ்ல என்ன பெரிசா பாதுகாப்பு இருக்குன்னு நெனக்குற, அவன் நல்லவனா கெட்டவனான்னு எப்படி தெரியும். அரேஜ் மேரேஜ்ன்னா சட்டய பிடிச்சு கேட்டலாம் ஏன் இப்படி பண்றேன்னு, அவ மேல இருக்க அக்கறையில தான் சொல்றேன் நீ வாய மூடு” என்று அதட்டினான் அரவிந்தன்.

எனக்கொண்ணும் அவ மேல அக்கறப்பட்டு பேசற மாதிரி தெரியல, உன் அண்ணனுக்காக பேசறாப்ல தான் தெரியுது. என்றாள் யாமினி

எனக்காக ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்ட போடுறீங்கப்பா, அந்த பேச்ச விடுங்களேன் என்று அதற்கொரு முற்று புள்ளி வைக்க முற்பட்டேன்.

வாய் சொன்னாலும், மனம் அதை ஏற்றுகொள்ளவில்லை. என் காதல் உணர்வு பொய்த்து போவதில் எனக்குள் ஒரு மரணவலி ஏற்பட்டது. ஜீவாவின் கண்களுக்குள் மின்னி போன பார்வைக்குள் ஒளிர்ந்த காதல் கீற்று, என்னை ஹிம்சித்தது. வெகு நாட்கள் கழித்து நண்பர்களின் கூடல் கரண் இடைப்பட்டதால் ஏதோ ஒரு இறுக்கத்தை உண்டு பண்ணியது.
இறுக்கத்தை கலைக்க விரும்பாமலோ, அல்லது மேலும் என்னை சங்கடப்படுத்த மனமில்லாமலோ நண்பர்கள் இருவரும் உறங்குவதாய் பாசாங்கு செய்ததில் நான் சற்று இலகு தன்மையை அடைந்தேன்.

மல்லாந்து படுத்து வானத்தை நோக்கி பார்க்கையில் எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னி சிரித்தன. வீண்மீன் கூட்டங்களின் பின்னணியில் கரணும் ஜீவாவும் மாறி மாறி காட்சியானார்கள்.

இருவரும் வான இருளில் கரைந்து போக… குழந்தை மட்டும் அம்மா என்று மழலை மொழியோடு கைகளை நீட்ட சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டேன் ஈர்ப்பு ஜீவா மீதா ? குழந்தை மீதா? சாப்பிட்டிருப்பாளா? உறங்கியிருப்பாளா? என அடுக்கடுக்காய் கேள்வி எழ எல்லாம் உறங்கியிருப்பாள்… அவள் அம்மாவை அனைத்தபடி என்று இடித்துரைத்த மனதிற்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் திகைத்தேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Wed Jul 04, 2012 6:24 am

Aruntha wrote:ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா? ஆதி சிங்கம் கிளம்பிடிச்சா?
ஆதி சிரிச்சிட்டாளே ... அப்புறம் கடைசியில் கஷ்டத்துலதான் போய் விடும்... இதுல நீ வேறயா :ank: :ank:
mnsmani wrote:இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரனகளளமாய் போச்சி. பாவம் ஆதி.
என் மேல் அக்கரைப்படுவதற்கு இந்த ஒரே ஒர் நல்ல உள்ளமாவதே இருக்கே :): :):
thamilselvi wrote:ஈர்ப்பு ஜீவா மீதா ? குழந்தை மீதா?
:enn: பெண்கள் பக்கத்திலிருந்து இதற்கு விளக்கமான பதில் வேண்டியிருக்கிறது.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by MALATHI » Wed Jul 04, 2012 10:29 am

பெண்ணாக பிறந்தாலே குழ்ந்தையின் மீது ஈர்ப்பு வருவது இயல்பான விஷயம், ஆனால் யாழினி ஜீவாவின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க திறனற்றவள் ஆன போதே தெரிஞ்ச்சுக்கலாம், யாழினிக்கு யார் மேல் ஈர்ப்பு என்று. இதுக்கு மேல் நா சொல்லலப்பா அப்புறம் தமிழ் மேம் என்னை அடிச்சுடுவாங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Wed Jul 04, 2012 5:24 pm

MALATHI wrote:பெண்ணாக பிறந்தாலே குழ்ந்தையின் மீது ஈர்ப்பு வருவது இயல்பான விஷயம், ஆனால் யாழினி ஜீவாவின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க திறனற்றவள் ஆன போதே தெரிஞ்ச்சுக்கலாம், யாழினிக்கு யார் மேல் ஈர்ப்பு என்று. இதுக்கு மேல் நா சொல்லலப்பா அப்புறம் தமிழ் மேம் என்னை அடிச்சுடுவாங்க.
இப்படி எல்லாம் சொல்லி ஒர் பருவ பெண்ணின் உண்மையான சூழலை மறைப்பது.. தங்கள் இனத்தின் ரகசியத்தைக் காப்பது போல் தெரிகிறது.

ஒரே ஒருத்தர் தான் படுகை பெண்ணா? ...

நான் ரொம்ப எதிர்பார்த்ததுதான் தவறோ>....................... :nao:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Thu Jul 05, 2012 1:22 pm

சுகமான ஆழ்ந்த நித்திரை அல்ல, அரை விழிப்பு நிலை நித்திரையும் என் கண்கள் தழுவப்போவதில்லை என்பதை உணர்ந்ததும், அவ்விடம் விட்டு எழுந்தேன். என் எழுகையோ, அல்லது அங்கிருந்து நான் இடம் பெயர்ந்ததோ யாமினியையும், அரவிந்தனையும் எள் அளவும் பாதிக்கவில்லை. நித்திரை தேவதை அவர்களை ஏறகுறைய ஆழ்நிலை கடலில் தள்ளியிருக்க வேண்டும்.

பூனை போல் பாதம் பதித்து படிகளில் இறங்கினேன். தரைக்கும் நோகக்கூடாது என்று என் பாதங்கள் காற்றிலே பாவியது. முன்விரல்கள் மட்டுமே தரை தொட்டு தாவியது.

இருட்டின் அமைதியை கிழிக்கும் அந்த கதவை எப்படி திறப்பது? எண்ணெய் காணாத கிரீல்... கொஞ்சம் அழுத்தமாய் க்ரீச்சிடும். இரவின் அமைதியில் பெற்றோர் உடன் இருந்தும் கூட, அவர்களின் உறக்க நிலை தனிமையை தரும் ஏதோ ஒரு குழந்தையை அச்சுறுத்தகூடும் அந்த ஒலி.

மதில் சுவற்றின் அருகில் கொட்டப்பட்டிருந்த மணற்குவியலின் மீது ஏறி மறுபுறம் குதித்தேன். தொப்பென்ற சன்னமான ஒலியும் கூட அதீதமாய் என் செவி தீண்டியது. அது இரவின் நிசப்பத்திற்கே உண்டான தனித்துவம். உறங்கி வழிந்த சாலையின் மங்கலான இருளும், சர்ர்ர் என்று சுழன்று சப்திக்கும் காற்றும் துணை வர அந்த சாலையில் நடந்தேன். தெரு நாய் ஒன்று வாலை இருகால்களுக்குள் ஒடுக்கி முடங்கிக்கொண்டு வினோத ஒலி எழுப்பியது.

டிங் டிங் டிங் என மணி அடித்தபடி வந்தது அந்த மிதி வண்டி சற்று மிதி வண்டியை மாற்றியமைக்கப்பட்ட வண்டி (அது அதற்கு என்ன பெயர் தெரியவில்லை, ஒரு வேளை உங்களுக்கு தெரிந்திருந்தாள் மிதிவண்டியை மாற்றி படித்துக்கொள்ளுங்கள்)

அந்த சராசரிக்கும் குள்ளமானவனை முன்பே தெரியும்....ஹேய் எப்போதிருந்து இந்த வேலை என்றேன்.
அதே கேள்வியை அவன் என்பாற் திருப்பினான்.

எது

சுவத்துல ஏறி குதிக்கிறது

எங்க இருந்த நீ, நான் குதிச்சத பாத்துட்டிருந்தியா, என்று இருபுருவங்கள் மேலெழ அதிசயித்தேன்.

இருளுக்கும் கண்கள் உண்டு போலும், நான் குதிப்பதை யாரும் பார்க்கப்போவதில்லை என்று நினைத்தால் இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் கேள்வி எழுப்பிக்கொண்டு, மனம் சலித்துக்கொண்டது.

குல்பி வேணுமாக்கா

வேண்டாம் மணியடிக்காம போடா

ஏங்க்கா உங்காள் வர்றேன்னாரா?

ம் என்ன அவன் வினாவிற்கு விழித்தேன்... இரவில் தனித்து நடக்கும் பெண்கள் எல்லோரும் ஆளுக்காகதான் நடப்பார்களா என்ன?

வெறுப்பேத்தாம போடா...என்ற வாய்மொழிக்கு வெள்ளந்தியாய் சிரித்தபடி மிதிவண்டியை தள்ளிக்கொண்டு குல்பி என்றொரு பெருங்குரல் எழுப்பி நடந்தான் அவன்.

இப்பொழுது சிரிப்பொலி பின்புறமிருந்து வந்தது.

மின்சாரகம்பத்தின் நீண்ட நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மேல் சாய்ந்திருந்தான்.

அவன்......?
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by Thamillmadhan » Thu Jul 05, 2012 5:12 pm

வணக்கம் சகோதரி, மீண்டும் உங்களை படுகையின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுவாகவே பெண்களுக்கு குழந்தைகளின் மீது அன்பும், ஈர்ப்பும் உண்டு. அது பெண்களுக்கே உண்டான தனி குணம். சஸ்பெண்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லுங்க அங்கு நின்றுகொண்டு இருந்தது யார்? உங்களுடைய அடுத்த பதிவில் இந்த கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். :alu:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”