என்றென்றும் உன்னோடு - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by Thamillmadhan » Tue Jul 10, 2012 2:07 pm

வணக்கம் அக்கா, ஒவ்வொரு முறையும் கதையை படித்து முடித்தவுடன் அடுத்த பகுதியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறீர்கள். அரவிந்தன் கதாபாத்திரத்தின் மூலம் நீங்கள் வெளிபடுத்திய கருத்தை நானும் ஏற்று கொள்கிறேன். இன்று வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றும் விஷயங்கள் பலவும் பிற்காலத்தில் யோசிக்கும்போது நமக்கு பெரிதாய் தெரிவதில்லை. சீக்கிரம் அடுத்த பகுதியை பதிவு செய்யுங்கள், யாரந்த டைரக்டர் என்று தெரிந்து கொள்ள காத்துகொண்டு இருக்கிறேன். :alu:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Jul 10, 2012 3:53 pm

கோபம் வந்தது....அதுவும் நெற்றி பொட்டிற் அடித்தார் போன்று வீறிட்டு எழுந்தது. அந்த வீறிடலின் மறுசெயலாய்....கம்பியை பிடித்து நகர்ந்து அவன் முன்பாக நின்றேன்..எப்பொழுது அவன் என்னை பார்த்தான், குறைந்த பட்சம் மூன்று முறையாவது அந்தப்பக்கம் திரும்பினேன், எப்படி என் பார்வைக்கு விலகினான்.

அவன் பார்வையில் நான் எப்பொழுது விழுந்தேன். எல்லாம் சரியாகவே இருக்கட்டும் அவன் ஏன் எனக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.

(பயணச்சீட்டு எடுப்பது ஒரு குற்றமா, ஏதோ பழகியவளாயிற்றே...என்று எடுத்திருக்காலம், என்று அருந்தாவும் முத்துலட்சுமி அம்மாவும் முனகுவது செவியி்ல் கேட்கிறது)

அதை விட பெரிய காரியம் நான் போகும் இடம்மெல்லாம் வந்து என் மனதை கீறி ஏன் இம்சிக்க வேண்டும்.

முகத்தில் தெரித்த ஆக்ரோஷம் அருகில் போனதும், காணாமல் போனது.

அந்த ஆங்கிலம் கலந்த இந்திய பெண் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாள். அருகில் வாசுகி, ஜீவிதா இருவருமே கருணாலயாவின் பகுதி நேர ஊழியர்கள், குழந்தை ஆங்கிலோ இந்திய பெண்ணிடமிருந்து இவள் புறமாய் தாவி ம்மா என்று மழலை பேசியது.

“ஓ உங்களுக்கு முன்பே தெரியுமல்லவா“ குழந்தைக்கு ஈடாய் மழலை பேசினாள் பழுப்பு நிற கண்ணழகி.

ம்மா என்று மீண்டும் கை நீட்டினாள் குழந்தை.

தூக்கினால் என்ன குறைந்து போவாயா? பல்லிடுக்கில் மொழிந்தான் ஜீவா

அவன் பார்வையை முற்றிலுமாய் தவிர்த்தேன்.

என்னால் பேலன்ஸ் செய்யமுடியவில்லை, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றேன் அவளைப்பார்த்து.

நான் எழுந்துகொள்கிறேனே என்றாள் ஜீவிதா

வேணாம்பா உட்கார் என்றேன்

உன் அழகான மனைவி முன்பு உன் குழந்தை ம்மா என்று என்பாற் கைநீட்டி விட்டது என்பதற்காகவே நான் உன் குழந்தையை தூக்கிவிட வேண்டுமா? மனம் முரண்டு பிடித்தது.

குழந்தையை அள்ளி கன்னத்தில் முத்தமிட தோன்றிய போதும் வீம்பு தடுத்தது.

ஓட்டுநர் முன் வந்த மாட்டிற்காக திடீரென ப்ரேக்கை அழுத்த, என் புவி ஈர்ப்பு மையத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ, நான் முன்புறம் சரிய, அவன் கை என் அடிவயிற்றில் அழுந்தி ஐந்து விரல்களும் இடுப்பில் பதிந்தது.

ஒரு ஆண்மகனின் தீண்டல், இத்தனை மாற்றங்களை உண்டு பண்ண முடியுமா? என்ன... உடற் தீண்டலின் மின்சார தாக்கங்களை காதல் எனக் கொள்ள முடியுமா? இந்த உணர்வுகள் காதலன் கையணைப்பில் மட்டுமே கை கூடுமோ... கண நேரத்துளியில் என் முகம் அவன் நெஞ்சுக்கூட்டருகே அழுந்தி மீணடது.

ச்சே இத்தனை குள்ளமா நான் என்று சலித்துக்கொண்டபோதும், அவன் மீது உண்டாகியிருந்த பிரத்யோக வாசனை மனதை மயக்கவே செய்தது.

கண்டவன் தொட்டால் காலில் இருப்பது கழலும் மனதை கொண்டவன் தொட்டால் மட்டுமே இந்த வேதியல் மாற்றம் என்று மனம் பரிவர்த்தனை புரிந்தது.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by MALATHI » Tue Jul 10, 2012 3:55 pm

நீங்க எனக்கு மட்டும்தான் உடன் பிறவா சகோதரி என நினைத்தேன் என்னை விட உங்கள் கதையை அதிகமாக நேசிப்பவர் தமிழ்மாதன் தான் போலும், நான் கேட்க நினைக்கும் அனைத்து கேள்வியையும் அவரே கேட்டு விடுகிறார். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். :wae:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Jul 10, 2012 4:11 pm

தங்கச்சி மாலதி உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்... தமிழ்மதன், தமிழ்ராஜா, ஆதித்தன், அருந்தா, சுமையா, முத்துலட்சுமி அம்மா, ராஜாதிராஜா அண்ணா, மணி அண்ணா, மாலதி, நதி இவர்கள் எல்லோரும் எனக்கு படுகை கொடுத்த உறவுகள்... பார்த்தாயா பட்டியலில் உமாஜனா வை மறந்துவிட்டேன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Tue Jul 10, 2012 6:20 pm

ஒரே நாளில் மூன்று பாகங்களைக் கடந்தும் விரு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் .. கதையினை இதுநாள் வரையில் படித்ததே இல்லை

( வாழ்க்கையில் ஒழுங்கா ஒர் கதையாவது முழுசா படிச்சிருப்பீயா நீ, இல்ல கதை புத்தகமாவது தொட்டு இருப்பீயா????)
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Wed Jul 11, 2012 1:58 pm

எரிச்சல் முகத்தில் காட்டமாய் தெரிந்ததோ என்னவோ, இடுப்பில் பதிந்த விரல்கள் மட்டும் அகன்றது. கம்பியை பிடித்து நின்றிருந்தவன் என் பாற் கொண்ட அருகாமையை மட்டும் அகற்றவில்லை. கண்களின் குறுகுறுப்பும் முகத்தில் தவழ்ந்த மந்தகாச புன்னகையும் மாற வில்லை. ஏன் மனைவி என்ன நினைப்பாள் என்ற எண்ணம் கொஞ்சமுமா இல்லை.
நான் சிறிது கடினப்பட்டு திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன். அவள் சாலையில் வேடிக்கை பார்ப்பதிலேயே நோக்கமாய் இருந்தாள்.

ஜீவிதாவும் மற்றவளும் கோழி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அந்த ஆங்கிலோ இந்திய பெண் மீது எனக்கு எரிச்சல் வந்தது. என்ன பெண் இவள் கணவன் என்ன செய்கிறான் என்பதைக்கூட கவனிக்காமல், அங்கு என்ன வேடிக்கை வேண்டி கிடக்கிறது.

“நீயும் அழகுதான்” என்றான் ஜீவா

“ம்” என்றேன் காட்டமாய் திரும்பி, “என்ன சொன்னீங்க“

என் வாயால் திரும்ப கேட்க வேணுமா? நீ அழகுன்னு சொன்னேன்.

என்ன துணிச்சல் இவனுக்கு மனைவி முன்னிலையில் பிரிதொருவளை அழகு என்று சொல்வதற்கு.

“நான் ஒண்ணும் உங்க வைஃப் அழகை ரசித்துக்கொண்டிருக்கவில்லை“

“மனைவியா, வினாவலில் ஏதோ தொக்கி நின்றது.

“நீ ரசிக்கலினாலும் என் வைஃப்போட அழக நா ரசிச்சுட்டுதான் இருக்கேன், அந்த கண்ணு, பேசும் போது ஜாலிக்கும் அவள் உதடு“

ம் ம் போதும் உங்கள் வர்ணனை, உங்க வைஃப்ப வீட்டுக்குள்ள வச்சு அழகு பாத்துக்க வேண்டியது தான பொது இடத்துல விவஸ்த இல்லாம?

“அவ சரின்னு சொன்னா இப்படியே திரும்பி போக நான் தயார்தான்“

“நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா, அவங்க பேர் என்ன, சற்று திரும்பி ஹலோ என்ற வார்த்தை எனக்குள் ஜனிப்பதற்கு முன்பதாக...அவன் இடது கை விரல்கள் எனது இடையை பற்றியது.

ஹேய் என்றொரு சன்ன ஒலி என்னை கட்டுப்படுத்த...வானத்து தேவதையானேன் நான்

இது என்ன விந்தை, அவன் செயலை என்னால் தடுக்க முடியவில்லை. சுற்றமும் சூழலும் இதயத்தில் இல்லை. அவன் நான் என்று தனிமை சூழ்ந்து நிற்பதின் மாயாஜாலம் தான் என்ன? உதடுகளில் அசைவும், கன்னத்தில் செம்மையும் பரவுவதேன்... இது தான் வெட்கமோ...கண்கள் அவனை நேர் நோக்காமல் விரைந்து கொண்டிருந்த மரங்களில் லயிப்பதாய் பாவித்தது...

இந்த கணம் இப்படியே நீண்டு விடலாம் வாழ்க்கையின் எல்லை வரை, காற்று புகா இறுக்கத்தில், மனதை கொள்ளைவிட்டவனின் அருகாமையில், நெஞ்கூட்டின் வெம்மையில் பத்திரமாய் பதுங்கி கொள்ளலாம்.

என்ன பெண் நான், பெண்மையின் பலவீனமோ இது... யாரோ ஒருவளின் கணவனிடத்தில்...இப்படி மயங்கிடக்கிறது மனம்.

அறையவும் முடியாமல், விலகவும் வழியில்லாம், இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே. இது பெண்மைக்கு இழுக்கல்லவா, கண்கள் கலங்கி வழியட்டுமா என்றது.

அவன் விரல்கள் இடையை துறந்தன. விகசித்து விரிந்த கண்கள் மீண்டும் சோற்றுகஞ்சியில் மூழ்கி எழுந்தன. முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அந்த இறுக்கம் இத்தனை நாழிகை எங்கிருந்தது?

அவன் நெருக்கம் சுகம் கலந்த வேதனை என்றால்...அவனின் விலகள் இதயத்தை கீறி பங்கிட்டது.
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by Thamillmadhan » Wed Jul 11, 2012 2:26 pm

வணக்கம் சகோதரி, கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. வாழ்த்துக்கள். சகோதரி மாலதி கேட்பது போல நான் உங்களுக்கு மட்டும் சகோதரன் அல்ல. அவருக்கும் கூட நான் சகோதரன் தான். அவர் கேட்க்க நினைத்த கேள்விகளையே நானும் கேட்பதாக கூறியிருந்தார். யார் கேட்டால் என்ன சகோதரி? கேள்விக்கு பதில் கிடைத்தால் சந்தோசம் தானே. :clab:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Fri Jul 20, 2012 7:35 pm

thamilselvi wrote: ஆதித்தன் சார் என்றென்றும் உன்னோடு கதை பக்கம் வரவில்லையே என்று சொன்னேன்.....கதை பின்னுக்கு போய் விட்டது என்று சொல்வதற்கில்லை.....

அதிக வேலையா ஆதி....எனக்கும் தான் படுகை பக்கம் வர கூட நேரமில்லாமல் படுத்துகிறது என்ன செய்வது.............அப்படி இருந்தாலும்
:isir: :isir: :isir:
ஆதிய கொஞ்சம் சீண்டி பார்க்கிறீர்களா??? நடக்கட்டும்.

ஆனால், நான் செய்ததே சரி. இருந்தாலும் உங்கள் ஆசைப்படி கதையை படித்துவிட்டேன் என்பதன் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

கதையை மொபைல் வழியாகவே படித்துவிடுவதால் ... அப்போது பின்னூட்டம் கொடுக்க இயலாது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Thu Feb 28, 2013 1:08 pm

/////

:wal: :wal: :wal:

மாதக் கணக்கில் ஆளே காணாமல் போயிட்டு ..இப்ப என் கதையைக் காணோம்னு தேடுனா எப்படி?

இதோ ... உங்க கதையை முதல் இடத்திற்கு ரிப்ளே பதிவு மூலம் கொண்டுவந்துட்டேன் ... கண்டு கொள்ளுங்கள் ..



அப்புறம் ... கதையின் கதாபாத்திரம் எல்லோர்க்கும் மறந்திருக்கும் ... முக்கியமா எனக்கு மறந்தே போயிடுச்சி ...

ஆகையால், முன் சுருக்கம் முதலில் போட்டுப்புடுங்க :ino:

:thanks:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Fri Mar 01, 2013 8:42 am

சரிங்க ஆதி சார்....ஆனாலும் என்றென்றும் உன்னோடு கதையின் வேறு எந்த பாகத்தையும் படிக்கமுடியவில்லை
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”