இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Mon Nov 24, 2014 6:36 pm

பாகம் - 09

குளியலறைக்கு சென்றவள் அந்த வீணையின் இசையை நினைத்தபடி இவன் அந்த மிதுன் ஆக இருப்பானோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தாள். அவளால் வேறு எதையுமே நினைக்க முடியவில்லை. அந்த வீணையின் ஒலி மட்டும் அவள் காதுக்குள் எதிரொலித்த வண்ணம் இருந்தது. அவள் பக்கத்து ஊரில் குடியிருந்த போது அங்கு அவளின் வீட்டுக்கு அருகில் மிதுன் என்று ஓர் கதாசிரியன் குடியிருந்தான். அவன் வீணை வாசிப்பதில் மிகவும் திறமையாவன். எப்போதுமே அவனது வீணையின் நாதம் தான் திவ்யாவின் காலை நேர சுப்ரபாதம். என்றுமே காலையில் அவனின் வீணையின் இசையில் தன்னை மறந்து இருப்பாள். எத்தனை சோம்பலாக தூங்கினாலும் அவனது வீணையின் இசையின் ஓசையிலே புத்துணர்ச்சி பெற்று எழுந்திடுவாள். அத்தனை வசீகரமான இசை அவனுடையது.

மிதுன் பக்கத்து வீட்டில் அவனுடைய தாயாருடன் குடியிருந்தான். இசையிலே அதிக ஆர்வம் உள்ளவன் அத்துடன் திரைப்படங்களுக்கு, பத்திரிகைகளுக்கு எழுதும் கதாசிரியனும் கூட. இயற்கையை ரசிப்பதிலும் இசையை மீட்டுவதிலும் அவனுக்கு நிகர் யாருமே இல்லை. சிறந்த ஓவியனும் கூட. ஓர் நொடி பார்ப்பதை அப்படியே ஓவியமாக வரைவதில் வல்லவன். காலைக்காட்சி முதல் காணும் காட்சி வரை அவனிடம் ஒரு நொடியில் ஓவியமாகி விடும். அவனின் இசையில் தன்னை மறந்த திவ்யா அவனின் இசை முதல் ஓவியம், கதைகள் வரை அத்தனைக்கும் முதல் ரசிகையாக மாறினாள். அவனின் கதைகளுக்கு விமர்சனம் சொல்லுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள நல்ல விடயம், சில மெருகூட்டக் கூடிய விடயம் என்பவற்றை அவனுக்கு தயங்காமல் சொல்லுபவள். அதனால் மிதுனின் மனதில் மலர்ந்திருந்த வாடாத திவ்ய மலர் அவள்.

அவள் பழைய வீட்டிலிருந்த பொழுதுகளில் அடிக்கடி மிதுன் வீட்டிற்கு சென்று வருவாள். மிதுனும் அவர்கள் வீட்டில் ஒரு செல்லப் பிள்ளையாக இருந்தான். அவனுக்கு அத்தனை திறமைகளையும் கொடுத்த இறைவன் சிறுவயதில் நடந்த ஓர் கோர விபத்தில் அவனுடைய ஒற்றை காலை பறித்துக் கொண்டான். ஊனம் ஒரு குறையில்லை என்பதை நிரூபித்தவன் மிதுன். அவனின் குறைகளை விட அவனின் திறமைகள் பலராலும் பேசப்பட்டு பலரின் மனதில் வாழ்ந்து வந்தான். பல விருதுகளை பெற்றி தன்னாலும் முடியும் என்று உலகத்தோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தான். எத்தனை மனதில் வாழ்ந்தாலும் அவன் தேடிய, குடியிருக்க விரும்பிய கோவில் திவ்யாவின் உள்ளமே. திவ்யாவிற்கு அவளின் மனதை புரிந்த ஓர் இனிய தோழன்.

அவன் இசை நிகழ்வொன்றிற்கு வெளிநாடு சென்ற சமயத்தில் திவ்யாவும் அவளது பழைய வீட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அவனிற்கு சொல்லாமலே அவள் தன்னுடைய வீட்டை விட்டு வேறு ஊருக்கு சென்றாள். வெளிநாட்டிலிருந்து வந்த மிதுனிற்கு இது அதிர்ச்சியை கொடுத்தாலும் அவளை எப்படியாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்தான். தினமும் மிதுனின் வீணையிசையில் துயிலெழுந்த திவ்யா அவனின் இசையின் நாதம் இன்றி வாடினாள். அவனை சந்திப்பதற்கு பல தடவை முயற்சி செய்தும் அவளால் முடியாது போனது. ஒரு தடவை அவளுடைய பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது கூட அவன் அங்கிருந்து வேறு இடம் மாறி விட்டதாக அயலவர்கள் கூறினார்கள். திவ்யாவின் பிரிவை தாங்க முடியாதவன் அதே வீட்டிலிருந்தால் அவளது நினைவு தன்னை வாட்டும் என்று எண்ணி அவனும் அந்த வீட்டை காலி பண்ணி வேறு வீட்டிற்கு சென்றிருந்தான்.

எங்கு வீணை இசைக் கச்சேரி என்று கேட்டாலும் அது மிதுனாக இருக்காதா என்று பல தடவை அவனை தேடி கடைசியில் களைத்தே போய் விட்டாள் திவ்யா. சில சமயங்களில் அவனுடைய பேட்டி, மற்றும் நிகழ்வுகளை பார்த்து அவன் நல்லாக இருக்கிறான் என்னால் தான் பார்க்க முடியவில்லையே என்று மனதை தேற்றிக் கொள்வாள். அவனை விட்டு தூர சென்றாலும் அவனின் இசை அவளை என்றுமே அவனை சுற்றி நெருக்கமாகவே வைத்திருந்தது. அவனது வீணைக் கச்சேரி சீடி வந்தால் முதலாவதாக சென்று வாங்கி கேட்பாள். அதில் அவளுக்கு ஒரு ஆறுதல் நிம்மதி மகிழ்ச்சி.

இன்று அதே வீணை இசையையும் மிதுன் என்ற பெயரையும் கேட்டவளால் ஒரு நொடி கூட மனது இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்து வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு வரலாமா என்று சிந்தித்தாள். இருந்தும் ஏதோ ஒன்று தடுக்க சரி நாளை காலை சரி பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அடிக்கடி தன்னுடைய அறை ஜன்னலை திறந்து பக்கத்து வீட்டை நோட்டமிட்ட படி இருந்தாள். என்னடி காலைல இருந்து பக்கத்து வீட்டயே பாத்திட்டு இருக்கிறாய் என்ற தாயாரின் குரல் கேட்டு திரும்பியவள் இல்லம்மா காலைல ஒரு வீணையிட இசை கேட்டு எழுந்தன். அது நம்மட மிதுன் ஆக இருக்குமோ என்று தான் அது யாரு என்று பார்த்து விட இருக்கிறன் என்றாள். மிதுன்னா? அவன் எப்பிடி இங்க? அதுக்கு வாய்ப்பே இல்லை. இப்போ அவனெல்லாம் பெரிய பாராட்டுக்குரிய பிரபலமாகிட்டான். இப்பிடியான வீட்டில எல்லாம் குடியிருக்க மாட்டான் என்று தாயார் கூற அந்த கருத்து கூட சரியாக இருந்தமையால் அவள் வெளிக்கிட்டு கோவிலுக்கு சென்றாள்.

தொடரும்……!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Fri Nov 28, 2014 6:37 pm

பாகம் - 10

கோவிலுக்கு சென்றவளின் உள்ளம் அவளையே அறியாமல் மிதுனிற்காக வேண்டியது. காலையில் கேட்ட வீணையின் இசை அவளின் மனசை சலனப்படுத்தியிருந்தது. காற்றில் மிதந்து வந்த காலை நேர கனிவான கானத்தின் சொந்தக்காரன் கண்டிப்பாக மிதுனாக இருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டினாள். யாரம்மா மிதுன் பெயரிற்கு அர்ச்சனை செய்தது என்ன பூசாரியின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தவள் நான் தான் சாமி குடுங்க என்று பிரசாதத்தை வாங்கினாள். மிதுன் என்ற தன்னடைய பெயரைக் கேட்ட மிதுன் யார் என் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பதை அறிய ஆவலாக வந்தான். அங்கு மங்களகரமாக அர்ச்சனைத் தட்டு பிரசாதத்துடன் நின்றாள் அவனின் காதல் தேவதை திவ்யா.

ஏய் திவி நீயா என்ற மிதுனின் குரலால் மகிழ்ந்தவள் அப்போ காலைல வீணை என் பக்கத்து வீட்டில வாசிச்சது நீங்களா? என்றாள். ஆமா திவி நேற்று மாலை தான் அந்த வீட்டுக்கு குடி வந்தம். நீ பக்கத்து வீட்டில இருக்கிறது எனக்கு தெரியும். கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு பிரசாதத்தோட உன் வீட்டுக்கு வரலாம் என்று நினைச்சு கோவிலுக்கு வர நீ இங்க இருக்கிறாய் என்றான். என் வேண்டுதல் வீண் போகல மிதுன். காலைல அந்த வீணை இசையை கேட்டதில இருந்து அது கண்டிப்பா நீங்களா இருக்கணும் என்று தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டன். என் வேண்டுதல் வீண் போகல என்று கூறி தான் பண்ணிய அர்ச்சனையில் இருந்த விபூதியை அவன் நெற்றியில் வைத்து விட்டாள். அவன் அருகில் இருந்த போதெல்லாம் கோவிலுக்கு சென்று வந்து விபூதி வைத்து விடுவாள். ஆனால் சில ஆண்டுகளின் பின் மறுபடி அவள் கையால் விபூதி வைத்த போது மிதுனின் உடல் எல்லாம் சில் என்றானது. மகிழ்ச்சியில் பூரித்தான். உங்கள பார்த்தா அம்மா எவ்வளவு சந்தோசபடுவா தெரியுமா? வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூறி அவனை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றாள்.

வீட்டு வாசலுக்கு சென்றவள் அம்மா யாரு வந்திருக்கா என்று பாரேன் என்று குரல் கொடுத்தாள் திவ்யா. தம்பி நீங்களா? காலைல உங்க வீணை இசை கேட்டதில இருந்தே இவள் ஒரு மாதிரி இருந்தாள். இப்போ தான் இவள் முகத்தில உண்மையான சந்தோசத்தை பார்க்கிறன் என்றார். நாம எல்லாரும் இப்படி சந்தோசமா சந்திச்சு 3-4 வருசமாச்சே என்றார். திவி நீ இன்னுமே அப்படியே இருக்கிறாய் அதே குறும்பு, அதே பாசம் எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றான். என்ன மிதுன் இப்பிடி சொல்றீங்க அதெல்லாம் மறக்க கூடிய நினைவா? திவி எப்பவுமே மாற மாட்டாள். ஒருத்தங்க மேல பாசம் வைச்சா அது அப்பிடியே தான் இருக்கும் அது தெரியாதா என்றாள். ஏய் நீங்க என்ன பாட்டு சீடி வெளியிட்டாலும் முதல் ஆளா நான் வாங்கி கேப்பன் தெரியுமா? உங்கள உங்க இசையை என்னால மறந்து ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மிதுன் என்றாள்.

வீட்டு கோலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே சென்றவள் வெளியில் கார்த்திக் நிப்பதை கண்டாள். வாங்க சார் என்ன எங்க வீட்டுக்கு வந்திருக்கிறீங்க ஒரு போன் பண்ணி இருந்தா நானே வந்திருப்பனே என்றாள். நான் உங்களுக்கு போன் பண்ணினன் ஆன்சர் இல்லை அது தான் புறப்பட்டு வந்திட்டன் என்றான். ஓஓஓ நான் கோவிலுக்கு போகும் போது சைலன்ஸ்ல போட்டன் வந்து பாக்க மறந்திட்டன் வாங்க சார் என்று கார்த்திக்கை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா கார்த்திக் சார் வந்திருக்காரு ஒரு காபி சேர்த்தே போடும்மா என்றாள். கார்த்திக் வந்து உட்கார்ந்ததும் திவ்யா மிதுன் அருகே சென்று அமர்ந்தாள். அவள் ஒரு ஆண் அருகே நெருக்கமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அவன் யாராக இருக்கும் என்று அறிய கார்த்திக்கின் மனது துடித்தது. ஏய் திவி இது யாரு உன் புது நண்பனா என்ற மிதுனின் கேள்விக்கு ஏய் அவரு என்னோட சார் காலேஜ்ல படிப்பிக்கிறார் என்றாள். சார் இது மிதுன். எங்களோட குடும்ப நண்பன். அதுக்கும் மேல இவர பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது பிரபல வீணை வித்துவான் மிதுன் இவரே தான் என்றாள். நீங்களா அது உங்கள பாக்கணும் என்று நான் எவ்வளவோ தடவை முயற்சி பண்ணி இருக்கன் என்று கூறியபடி எழுந்து அவருக்கு கை குலுக்கினான் கார்த்திக். எங்க வீட்டில எல்லாருமே உங்க ரசிகர்கள் தான். எங்க அம்மா உங்க வீணை இசையில தன்னையே மறந்திடுவாங்க என்றான்.

மிதுன் எங்களுக்கு 8-9 வருசமா நல்ல நண்பர். நாம இருந்த ஊருல எங்க பக்கத்து வீட்டில இருந்தார். பேருக்கு தான் பக்கத்து வீடு சாரோட இருப்பு எல்லாமே நம்ம வீட்டில தான். மிதுன்ட வீணை இசை தான் எனக்கு இரவு நேர தாலாட்டு விடிகாலை சுப்பிரபாதம் எல்லாமே. ஆனால் அவன் வெளிநாடு போன சந்தர்ப்பத்தில நாங்களும் ஊரை விட்டு இங்க வர வேண்டி ஏற்பட்டிச்சு அதோட பிரிஞ்சிட்டம். இப்போ தான் மறுபடி சந்திச்சிருக்கிறம். இவனோட இசை, பாசம் எல்லாத்தையுமே இத்தனை காலம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டன். எங்க வீணை இசை போனாலும் இவனோட நினைவு வரும். இவனோட இசை என் இரத்தத்தோட கலந்த ஒண்ணு என்று கூறியபடி மிதுனின் தோளில் சாய்ந்தாள் திவ்யா. ஏய் திவி என்னாச்சும்மா அது தான் நான் வந்திட்டன் அப்புறம் எதுக்கு இவ்வளவு சோகம் கூல் மை டியர் என்று கூறி அவளின் தலையை கோதி விட்டான். கார்த்திக்கிற்கு திவ்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல இருந்தது. தன்னுடைய கனவுக் காதலியோட மனது பூராக இன்னொருவன் நிறைந்திருக்கிறானே என்று நினைக்கையில் கார்த்திக்கிற்கு உயிரே போவது போல இருந்தது.

சரி சார் ஏதும் அவசரமா வந்திங்களா என்று கேட்க அம்மா எழுதி முடிச்ச பாடல் வரிகளை வாங்கி வர சொன்னாங்க அது தான் என்றான். ஓ அப்படியா இருங்க சார் கொண்டு வாறன் என்று எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்றாள். அவளின் தாயார் தேனீர் கொடுத்து விட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். உங்கள பத்தி என் பொண்ணு நிறையவே சொல்லி இருக்காள், அதுக்கும் மேல அவளுக்கு உங்க வீடு, அந்த சூழல் எல்லாமே ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க வீட்டில இருந்து வந்ததில இருந்து உங்கள வீட்டை பத்தியே என் கூட பேசிற்று இருந்தாள் என்று கார்த்திக்கிற்கு கூறிய வண்ணம் இருந்தார். இந்தாங்க சார் இன்னும் இரண்டு பாடல் தான் எழுதணும் நாளைக்கே அதை குடுத்திடுறன் என்றாள். சரி திவ்யா அப்போ நான் கிளம்புறன் அம்மா பாட்டுக்காக பாத்திட்டு இருப்பாங்க என்றான் கார்த்திக். நாளைக்கு சாயங்காலம் முடிச்சிடுவீங்களா? என்று கேட்க ஆமா நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு எடுத்திட்டு வாறன். உங்க அம்மா கூட மிதுனோட ரசிகையாச்சே அதனால நாளைக்கு நானம் மிதுனும் உங்க வீட்டுக்கு வாறம் என்றாள். சரி திவ்யா நாளைக்கு சந்திப்போம் என்று கூறியபடி விடைபெற்றான் கார்த்திக்.

தொடரும்….!
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by arrs » Fri Nov 28, 2014 6:56 pm

Aruntha wrote:பாகம் - 01

கார்முகில் கூட்டம் கருக் கொண்டெழுந்த கருங்கூந்தலில், பால் நிலவை பறை சாற்றும் விதமான அழகிய வட்ட வதனத்தில், கயல் மீனே கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அகன்ற கயல் விழிகள், மாதுளை முத்துக்களை சிந்தி நிற்கும் வரிசை பற்கள், பார்த்ததும் கிளிக்கு பறித்துண்ண தூண்டும் கொவ்வை பழ இதழ்கள், தக்காளி போன்ற மென்மையான கன்னங்கள், காதோரம் வளைந்து நெளிந்து நர்த்தனம் ஆடும் சில ஒற்றை தலை முடி, இத்தனைக்கும் நடுவில் செதுக்கி வைத்த கற்பக்கிரகம் போல் ஜொலிக்கும் மென்மை ததும்பும் பெண்மை தான் திவ்யா. பார்க்கும் பலரை தன் பக்கம் இழுக்கும் வசீகரப் புன்னகை, மிடுக்கான நடை, நட்பு பாராட்டும் மனது, வசதிகள் போதுமானதாக இருந்தும் எளிமையான தோற்றம், செல்ல பிள்ளை என்பதை எடுத்துக் காட்டும் அவளின் கனிவான செல்ல பேச்சு இவளை, இவளின் அன்பை யார் தான் தவறி விட துணிவார்கள் என்னும் அளவிற்கு அழகு பதுமை அவள்.

கல்லூரி செல்லும் காலக்குயில் அவள். இசையை இரசிப்பதில் இவளுக்கு நிகர் யாருமே இல்லை. பறவைகளின் கீச்சிடலில் இருந்து, இயற்கையாக மேனி தீண்டி செல்லும் மெல்லிய தென்றலின் ஓசை வரை அதிலுள்ள இசையை மென்மையாக ரசிப்பவள். மழைத்துளிகளின் ஓசையில் பல்லவி பாடுபவள். இயற்கை இவளிற்கு இணை பிரியா நண்பன். இசை இவளின் அன்புக் காதலன். கவிதைகள் அவளின் கையடக்க நாட்குறிப்பு அதை வரைவதிலேயே அவளின் அத்தனை உணர்வுகளும் சங்கமம். அவள் இருக்கும் இடம் அனைவரையும் கவர்ந்திடும் ஆலயம். அதில் அவளின் கனிவான பேச்சுக்களும் துணுக்குகளும் மங்கள இசை. இந்த அழகிய வீணையில் ஏழிசை மீட்ட ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் ஆயிரம். அவளிற்கோ அனைவரையும் நட்போடு பார்க்கும் நேர்மையான குணம். அந்த வீணையில் ஏழிசை மீட்டி இனிய ராகம் மீட்ட போகும் அழகிய இளங்குமரனை காணக் காத்திருக்கும் அவளின் நட்புகளும் உறவுகளும். அவள் மனதையும் கொள்ளை கொள்ளும் ரசிகனோ கதாசிரியனோ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனுக்காக காத்திருக்கும் பொறுமையின் தேவதை திவ்யா.

திவ்யாவின் உணர்வுகளை புரிந்து அவளோட வாழ்க்கையில் துள்ளி நடை போட்டு கதை பேசி மகிழும் சின்ன வயசு அன்புத் தோழி சுகந்தி. நட்புக்காக உயிரையும் கொடுக்கும் குணமுள்ள திவ்யாவிற்கு ஏற்றால் போல் அவளை புரிந்து நடக்கும் பிரிய தோழி அவள். திவ்யாவின் ரசனைகளினதும் கவிதைகளினதும் முதல் ரசிகை அவள். கல்லூரியில் பரீட்சையில் முதல் இரண்டு இடங்களையும் மாறி மாறி தக்க வைத்துக் கொள்வதில் திவ்யாவும் சுகந்தியும் தான் என்றுமே இருப்பார்கள். இவர்களின் நட்பை பார்த்து கல்லூரி சக தோழர்கள் முதல் கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் நட்பையே முன்னுதாரணமாக மற்றவர்களிற்கும் காட்டியிருக்கிறார்கள். இத்தனை இனிமையான குணம் கொண்ட திவ்யா மேல் யாருக்குமே எந்த பொறாமையும் இல்லை. அவளை அன்பாக நட்பாக பார்த்து நேசிப்பவர்களே அதிகமாக இருந்தார்கள். அதில் அவளின் பள்ளித் தோழர்கள் முதல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை விதிவிலக்கல்ல.

தொடரும்…….!
கதை கவிதை நடையில்(கர்பகிரகத்தை விட சிற்பம் அல்லது சிலை யே நலம்)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Thu Oct 29, 2015 5:53 pm

கார்த்திக்கின் மனது ரொம்பவே குழப்பமாக இருந்தது. தன் இதய மாளிகையில் குடியிருக்கும் தேவதையின் மனதில் இன்னொருவனா? அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தன் மனதை அந்த நொடி கிடைத்த அதிர்ச்சி வலியை அவனாலேயே பொறுக்க முடியவில்லை. எப்படி வீட்டில் சென்று சொல்வது என்ற குழப்பம் வேறு. அவன் மனதில் அவள் காதலி என்ற உறவையும் மீறி அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் இதயத்தில் மருமகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவளை தன் ஆசைத் தங்கை உள்ளத்தில் அண்ணியாக குடி கொண்டிருப்பவளை எப்படி எனக்கு சொந்தமில்லை என்று வீட்டில் கூறுவது? அவனுக்கு கிடைத்தது அதிர்ச்சி என்பதற்கும் மேலாக மனதுக்குள் ஆயிரம் கேள்வி. விடை தெரியாத வினாக்களோடு மெதுவாக நடந்தான். தன் சொல்லப்படாத ஒரு தலைக் காதலுக்கு கிடைத்த பெரிய இழப்பாக இதை அவனால் ஏற்க முடியவில்லை. முடிவே இல்லாத வாழ்க்கையை பிடித்தபடி நடந்தான்.

அம்மா மிதுனின் தீவிர ரசிகையாக இருந்தாலும் அவனை தன்னுடைய வீட்டில் எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்தான் கார்த்திக். இரண்டு நாட்களில் மிதுனுடன் வீட்டுக்கு வருவதாக கூறிய திவ்யாவை என்ன செய்வது? அங்கு வந்து அவள் கூறப் போகும் மிதுனுக்கும் அவளுக்குமான உறவை ஏற்கும் பக்குவம் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்குமா? எதுவுமே அவனுக்கு புரியவில்லை. தெருவில் சென்று கொண்டிருக்கும் வாகனத்துக்கு குறுக்காய் பாய்ந்து தன் உயிரை மாய்த்து கொண்டால் என்ன என்று கூட சிந்தித்தான். தற்கொலை கூட கோளைகளின் முடிவென அனைவருக்கும் பாடமெடுக்கும் அவனது மனது கூட ஒரு நொடி சிந்தனையிழந்து போனது. கால் போன போக்கில் நடந்த படி இருந்தான்

தொடரும்.....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”