இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Thu Nov 13, 2014 6:45 pm

பாகம் - 02

திவ்யா கல்லூரியின் மைதானத்தில் இருந்து வானத்தை பார்த்தபடி இருந்தாள். அந்த வழியாக வந்த கார்த்திக் அவள் அப்படி என்ன தான் பார்க்கிறாள் எனும் ஆவலில் அவளருகில் வந்தான். கார்த்திக் வேறு யாருமில்லை திவ்யாவின் கவிதைகளை ரசிக்கும் ரசிகன். அவளை உற்சாகமூட்டி வழிநடத்தும் நலன்விரும்பி. இத்தனைக்கும் மேல் அவளின் கல்லூரி ஆசிரியர். அவளிற்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசான். கார்த்திக் அந்த கல்லூரிக்கு வந்த புதிய விரிவுரையாளர் தான். உரிய வயதிலேயே கல்வியில் வளர்ந்து தன்னுடைய சிறிய வயதிலேயே விரைவுரையாளராக நியமனம் பெற்றவன். கல்லூரி மாணவிகள் பலரின் கனவுக் காதலன். எல்லோருடனும் நட்போடு பழகுவதால் அவனுடன் பழகுகையில் யாருக்குமே தயக்கம் இருப்பதில்லை. விரிவுரையாளராக இல்லாது நட்போடு கல்வி சொல்லிக் கொடுப்பதில் மிகவும் வல்லவன்.

கார்த்திக் திவ்யாவின் கவிதைகளை ரசிப்பதோடு நிற்கவில்லை. அவளையும் அவள் குணம், அழகு, திறமை எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தான். அவளின் கற்பனைக் கவிதைகளுக்கு எல்லாம் தானே கதாநாயகனாய் வர விரும்பினான். இருந்தும் அவனுடைய விரிவுரையாளர் என்ற போர்வை அவளிடம் காதலுடன் நெருங்க தயக்கம் காட்டியது. இருந்தும் அவளின் கவிதைகளை ரசித்து கருத்து கூறுவதால் அவளிற்கு விரிவுரையாளராய் மட்டுமன்றி நல்ல தோழனாகவும் இருந்தான்.

திவ்யா என்ன பார்க்கிறாள் என்று அவளருகில் சென்று பார்த்த கார்த்திக்கை காற்றில் பறந்து வந்த அவளது நீண்ட கருங்கூந்தல் முத்தமிட்டு சென்றது. ஆணுக்கே அழகை கொடுக்கும் அம்சமான அவனது மீசையில் மெல்ல முத்தமிட்டு சிக்கிய தலைமுடி அவன் முகத்தை மேலே எடுக்க அவனுடன் சேர்ந்து ஒட்டிக் கொண்டது. தன் தலைமுடி சற்று இழுபட்டதை உணர்ந்த திவ்யா திரும்பினாள். அவளுக்கு அருகில் கார்த்திக் நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியுடன் எழுந்து சார் நீங்க என்ன இங்க என்று கேட்டாள். இந்த கவிக்குயில் அப்பிடி என்ன தான் பார்த்து கவி வடிக்க போது என்று தான் நானும் பாக்கிறன் என்றான் கார்த்திக். நான் பயந்திட்டன் தெரியுமா சார் என்றபடி நாணித் தலை குனிந்தாள்.

அங்க பாருங்க சார் நம்ம காலேஜ் மைதானத்தில ஒற்றை மரம். அது தனியா தான் நிக்குது அதுக்கு துணையா எத்தனை ஆயிரம் பறவைகள் காதல் மொழி பேசிய படி, கவலைகளை கூறிய படி, நட்புடன் கூடிக் குலாவிய படி, மகிழ்ச்சிகயை பகிர்ந்தபடி…… இந்த மரத்துக்கு தான் எத்தனை நண்பர்கள் என்று கூறினாள். அந்த மரத்தில உள்ள பறவைகளின் கீச்சிடல் ஓசை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுதி இருக்கு. காதல், நட்பு, இன்பம், துன்பம், தாய்மை, வேதனை இப்பிடி எவ்வளவோ…… எப்பிடியான மனநிலைல இந்த இடத்துக்கு வந்தாலும் அடுத்த நிமிசமே எல்லாம் மாறி மனதில ஒரு நிம்மதி வரும் சார் அது தான் நான் அதிகமா இங்க இருப்பன் என்றாள் திவ்யா. எத்தனையோ தடவை அந்த மரத்தை கார்த்திக் பாத்திருந்தாலும் இன்று அவள் கூறிய அத்தனையும் புதுமையாகவே இருந்தது. உண்மையில் அவள் கூறிய மன நிலையிலிருந்து பார்க்கையில் அங்கு ஒரு இசை கச்சேரியே நடப்பது போல் இருந்தது. இப்படியான சிறிய விடயங்களில் கூட சொர்க்கம் கலந்திருக்கிறது என்பதை கார்த்திக் உணர்ந்தான்.

எப்பிடி திவ்யா உங்களால மட்டும் இப்படியான சிறிய விடயங்களையும் ரசிக்க முடிது? எல்லாரோட பார்வையிலும் அந்த ஒரு மரம் அதில இருக்கிற எண்ணுக் கணக்கற்ற பறவைகள் மட்டும் தான் தெரியும். நீங்க தான் அதை ரசனையோட பாத்திருக்கிறீங்க. உண்மையிலேயே நீங்க கிறேட் திவ்யா என்று அவளை பாராட்டினான். இது என்ன சார் இதுக்கெல்லாம் போய் பாராட்டுவாங்களா? எனக்கு இயற்கை பிடிக்கும். அதுக்கும் மேல பறவைகளிட இசை எனக்கு இனிமையான சங்கீதம். அவ்வளவு தான் என்றாள். அவளின் பேச்சை கேட்டு சிரித்தவன் அவளை பிரமிப்பாக பார்த்தபடி நின்றான். என்ன சார் அப்பிடி பாக்கிறீங்க என்று கேட்க அதுவா நான் உங்ககிட்ட என்னமோ கேக்கணும் என்று வந்தன் ஆனால் உங்களோட சேர்ந்து இந்த இயற்கையை பார்த்ததில அதை மறந்திட்டன் என்று சிரித்தான். ஓ அப்பிடியா அப்போ நினைவு வந்ததும் சொல்லுங்க சார் என்று கூறி சிரித்தாள். தலையசைத்தபடி அவளிடமிருந்து விடை பெற்றான் கார்த்திக்.

அவளின் குறும்புப் பேச்சு, ரசனை யாரையும் அவளிடம் இருந்து ஒரு நொடி கூட விலக விரும்பாது. அதற்கு கார்த்திக் மட்டும் என்ன விதிவிலக்கா? அவளிடமிருந்து விடை பெற்றாலும் அவன் மனது அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் இயற்கையை ரசித்த விதம், அதை அதே தத்ரூபமாக அவனுக்கு சொல்லிய அழகு, அவளின் குறு குறு கண்கள், குறும்புப் பார்வை, அவள் பேசுகையில் அவளோடு சேர்ந்து பேசும் அவளது விழிகள் எல்லாமே அவனைச் சுற்றியபடி இருக்க மெல்ல திரும்பிப் பார்த்தான்.
அவள் மறுபடியும் அந்த இயற்கையில் தாலாட்டோடு சங்கமித்து இருந்தான். மெல்லிய காற்றிற்கு அவளின் கூந்தல் ஆடி அசைந்தபடி இருக்க அவனுக்கு அவளின் கூந்தலில் முகர்ந்த நறுமணம் ஓர் நொடி வந்து போனது. இவள் என்ன கூந்தலிலே பல நறுமணம் நிரம்பிய பூந்தோட்டத்தை வைத்திருக்கிறாளா? அத்தனை நறுமணம் வீசுகிறதே என்று எண்ணினான். அவளோ தன்னையே மறந்து இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து ரசித்து காதலிக்கிறான். அவனே அவளை ரசித்து ரசித்து காதலிக்கிறான். அவனுக்கு ஆசிரியன் என்ற எண்ணமே மறந்து போனது. அவளிடம் காதல் பாடம் படிக்கும் பள்ளிக் குழந்தையாக ஆசைப்பட்டான். அவன் ஆசிரியராக இருந்தாலும் திவ்யாவை விட நான்கு ஐந்து வயதில் தான் மூத்தவனாக இருப்பான்.

தொடரும்……
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by தயாளன் » Thu Nov 13, 2014 9:09 pm

அருமை.தொடர வாழ்த்துகள்....
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by cm nair » Thu Nov 13, 2014 10:28 pm

நல்ல கற்பனை...ஆனால் மரத்திற்க்கு கிடைக்கும் நட்பு,இசை எல்லாம்.. superb aruntha..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Fri Nov 14, 2014 8:46 pm

பாகம் - 03

கார்த்திக் சற்றுக் கருமையானவன் இருந்தும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் தோற்றம், குடும்பத்திற்கு ஒரே ஆண் வாரிசு. அன்புக்கும் குறும்புக்கும் ஒரு தங்கை, பாசமான அம்மா, பரிவுக்கு அப்பா இப்படி ஒரு அழகான சிறிய குடும்பம் தான் அவனுடையது. அவனின் தாய் ஓர் சங்கீத ஆசிரியை. தந்தை அரசாங்கத்தில் கௌரவமான உத்தியோகம். தங்கை பள்ளி செல்பவள். தாயின் ரசனைக்கு தீனி போட்டு அவளோடு சேர்ந்து கவி வடிக்க ஓர் மருமகளை தேடும் பொழுதே அவன் கண்ணில் சிக்கிக்கொண்ட கவிக்குயில் திவ்யா. அவளோடு சேர்ந்து தன் குடும்பமும் காவிய கடலில் திருமணம் எனும் முத்தெடுக்க காத்திருந்தான் கார்த்திக். அவளையும் அவளது கவிதைகளையும் ரசிப்பவனால் அவளிடம் தன்னுடைய மனசை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

மறைந்திருந்து திவ்யாவை ரசித்துக் கொண்டிருந்த கார்த்திக் மறுபடி அவளருகில் செல்ல ஆயத்தமானான். அதற்கிடையில் திவ்யாவின் தோழி சுகந்தி வந்து திவ்யாவின் அருகில் அமர்ந்தாள். இது என்ன சிவ பூஜையில் கரடி போல சுகந்தி வந்திட்டாளே என்ற படி அவர்களின் அருகில் சென்றான். வாங்க சார் என்ன பேச வந்தது நினைவுக்கு வந்திட்டா என்றபடி அவனை குறும்பாக பேசிச் சீண்டினாள் திவ்யா. அவளின் பேச்சை ரசித்தவன் ம்ம்ம் என்று தலையசைத்தான். சரி சார் சொல்லுங்க என்று கூறி சற்று தள்ளி அமர்ந்தாள் திவ்யா. அந்த மைதானத்தின் படிகளில் கார்த்திக்கும் அமர்ந்தான். திவ்யாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கார்த்திக்கை ஓரக் கண்களால் பார்த்து ரசித்தபடி இருந்தாள் சுகந்தி. ஆம் சுகந்தியின் ஒரு தலைக் காதலின் நாயகன் தான் கார்த்திக். திவ்யா மேல் உயிரையே வைத்துள்ள கார்த்திக், கார்த்திக்கையே உயிருக்குயிராக காதலிக்கும் சுகந்தி இவர்களுக்கிடையில் ஆசிரியர் மாணவர் என்ற உறவு முறையை மீறிய நட்பு என்ற உறவு.

அவளருகில் அமர்ந்த கார்த்திக் பேச ஆரம்பித்தான். என்னோட அம்மா ஒரு மியூசிக் சீடி வெளியிட இருக்கிறாங்க. அது ஆறு பாடல்கள் நிறைந்த குறுந்தட்டு. அதுக்கு பாடல் வரிகள் எழுத ஒரு கவிக்குயில் தேவை. நமக்குத் தெரிந்த ஒரே கவிதை தேவதை நம்ம திவ்யா மட்டும் தானே. அது தான் உங்கள கேக்கலாம் என்று வந்தன் என்றான். ஓ அப்பிடியா சார் நீங்க சரியான ஆளை தான் தேர்ந்தெடுத்திருக்கிறீங்க என்றாள் சுகந்தி. ஏய் அடி வாங்க போறாய் சும்மா இரு என்று அவளை செல்லமாகக் கடிந்தாள் திவ்யா. என்ன சார் உங்க அம்மா எவ்வளவு பெரிய ஆள். அவங்க சங்கீத பூஷணம் பட்டம் எல்லாம் பெற்றிருக்காங்க. அவங்க வெளியிட போற குறுந்தட்டுக்கு பாடல் வரிகள் எழுதுற அளவுக்கு எனக்கு திறமை இருக்கா சார் என்ன இது என்று சிணுங்கினாள். அவளது செல்லமான சிணுங்கல் கூட அவனுக்கு சங்கீதமாகவே இருந்தது. அதெல்லாம் உன்னால முடியும் திவ்யா நீ தான் கண்டிப்பா அத பண்ணுறாய் என்று அன்புக் கட்டளை போட்டான் கார்த்திக். சரி சார் என்று தலையசைத்தவளை பார்த்து நாளை என்னோட அம்மாவ சந்திச்சு அதில என்ன விடயங்கள் உள்ளடங்கலாக எழுதணும் என்று பேசிடு என்றான். சரி சார் என்று கூறியவள் இருந்தாலும் சார் என்று இழுக்க ஒண்ணும் சொல்ல தேவையில்லை நீங்க தான் பண்ணுறீங்க என்றான். என்ன சுகந்தி பேசாம இருக்கிறீங்க உங்க நண்பிக்கிட்ட சொல்லுங்களன் என்றான். அதுவரை அவனின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தவள் திடுக்குற்றாள். சரி சார் நான் அவளுக்கு சொல்றன் என்று கூறினாள்.

எழுந்து இரண்டு அடிகள் நடந்த கார்த்திக் சுகந்தி என்று அழைக்க திரும்பியவள் அவனை ஆவலோடு பார்த்தபடி சொல்லுங்க சார் என்றாள். நாளைக்கு எங்க அம்மாவ திவ்யா சந்திக்கணும். அவங்க புதுமுகம் என்றதால அவளால சகஸமா அவங்க கூட பழக முடியுமோ தெரியல. அதனால நீங்களும் நாளைக்கு திவ்யா கூட வந்திடுங்க என்றான். சரி சார் கண்டிப்பா வந்திடுறன் என்றவள் என் வருங்கால மாமியாரை பாக்கிறத நான் மிஸ் பண்ணுவனா என்று மனதுக்குள் கூறி சிரித்தாள். நாளை தங்கள் வீட்டிற்கு விளக்கேற்ற வரும் குலமகளை தன் அன்னைக்கு அறிமுகப் படுத்தி வைக்கும் ஆனந்தத்துடன் மெதுவாக நடந்தான் கார்த்திக்.

வீட்டிற்கு சென்ற சுகந்திக்கு நடந்தவை எல்லாம் கனவு போல் இருந்தது. நாளை தன்னுடைய மனம் நிறைந்த காதலனின் தாயாரை சந்திக்க போவதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தாள். தன்னுடைய காதலை கார்த்திக்கிடம் சொல்லாவிட்டாலும் மனதால் அவனை உயிருக்குயிராய் நேசித்தாள். சாதாரணமான வயதுப் பிரமை என்று ஆரம்பத்தில் நினைத்தவளிற்கு அது பிரமையில்லை தன்னுடைய வாழ்க்கை என்பதை அவள் அவன் மேல் கொண்ட பாசம் உணர்த்தியது. இது பள்ளிக் காதல் போல் கல்லூரிக் காதல் நாளை கல்லூரியை விட்டு சென்றால் மறந்து போய்விடும் என்று நினைத்தவளுக்கு அவனை காணாத ஒவ்வொரு நொடியிலும் தவித்த அவளின் மனதின் தவிப்பு, அவளின் உள்ளத்தின் ஏக்கம் இது தான் காதல், தன்னுடைய வாழ்க்கை என்பதை காட்டியது. காதலை சொல்ல தைரியம் இல்லாமல், மனதுக்குள்ளும் மறைத்து வைக்க முடியாமலும் தவித்தாள் சுகந்தி.

தொடரும்…..!
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by kselva » Fri Nov 14, 2014 8:56 pm

கதையை கதைப்பதில் வல்லவர் தான் நீங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Sat Nov 15, 2014 6:50 pm

பாகம் - 04

வீட்டிற்கு சென்ற கார்த்திக் மறுநாள் திவ்யாவை அழைத்து வரும் விடயத்தை தன் குடும்பத்தினருக்கு சொல்லிக் கொண்டிருந்தான். ஏற்கனவே திவ்யாவை பற்றி அவளது திறமைகளை பற்றி சொல்லி இருந்தமையால் அவளை பார்ப்பதற்கு எல்லாருமே ஆவலாக இருந்தார்கள். அதற்கும் மேல் அவன் அவளை ஒரு தலையாக காதல் செய்வதை அவளது அம்மா மற்றும் தங்கை புரிந்து வைத்திருந்தார்கள். இருந்தும் அவனிடம் அதை பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஆனால் அன்று பொறுமையிழந்த அவனது சுட்டித் தங்கை நாளை நீ திவ்யாவை கூட்டிவர போறது அம்மாட மியூசிக் அல்பத்திற்கு பாட்டு எழுதிறதை பத்தி பேசவா இல்லை உன்னோட கனவுக் காதலிய இவள் தான் உங்க மருமகள் எண்டு அம்மாக்கு அறிமுகப்படுத்தவா என்றாள். அவளிடமிருந்து அப்பிடியான ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கார்த்திக் ஒரு நொடி மௌனமாய் இருந்து விட்டு பாட்டு எழுதவும் இல்லை, அம்மாக்கு மருமகள அறிமுகப்படுத்தவும் இல்லை என்றான். என்னடா சொல்லுறாய் அப்போ உன் டையறில நீ பக்கம் பக்கமா வர்ணிச்சு எழுதிற திவ்யா இவங்க இல்லையா என்றாள். என்ன சொல்றாய் நீ எப்போ என்னோட டையறி படிச்சாய் என்று பதறியவனை டேய் டேய் உண்மைய சொல்லுடா என்றாள் தங்கை. என்னடா மது சொல்றது உண்மையா என்று கேட்ட தாயிடம் பொய் சொல்ல விரும்பாதவன் அம்மா நாளைக்கு நான் இவளுக்கு இவளோட அண்ணிய தானே அறிமுகப்படுத்த போறன். அதுக்குள்ள இப்பிடி துள்ளிட்டு இருக்கிறாள் என்றான். என்ன அண்ணியா அப்போ முடிவே பண்ணிட்டியா அவ தான் உன்னோட பொண்டாட்டி என்று மறுபடி சீண்டினாள் மது. அப்போ முடிவு பண்ணாமலா வீட்டுக்கு கூட்டி வாறன் என்று கூறி அவளது தலையில் கொட்டி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றான் கார்த்திக்.

மறு நாள் காலை வழமையை விட நேரத்துடன் எழுந்து குளித்தாள் சுகந்தி. என்னம்மா நான் எழுப்பினா கூட எழுந்திரிக்காத நீ இன்னிக்கு இவ்வளவு நேரத்தோட எழுந்திட்டியே என்று கேட்ட சுகந்தியின் அம்மா அவளை அவளின் குதூகலத்தை பார்த்து என்னாச்சு என்றாள். அதுவா உன் மருமகனோட வீட்டுக்கு போக போறன். என்னோட வருங்கால மாமியார், குடும்பத்தை பாக்க போறன் என்றாள். உனக்கு எப்பவுமே குறும்பு தான் என்று கூறி அவளின் காதை திருகினார் அம்மா. எப்பவுமே சுகந்தியின் முதல் தோழி அம்மா தான். அவள் தாயாருடன் ரொம்பமும் நெருக்கமாக பழகுவாள். சரி முதல்ல சாப்பிட வா என்று அழைத்த தாயின் குரலுக்கு அது தான் மாமியார் கையால சாப்பிடணும் என்று சொன்னனே அப்புறம் எதுக்கும்மா என்னை படுத்துறாய் என்று கூறி தாயின் கன்னத்தில் பச் என்று முத்தம் பதித்தாள். சரி நீ மாமியார் கையால சாப்பிடுறியோ என் மருமகன் கூட்டி விடுறானோ அது பறவாயில்லை இப்போ என்னோட கையால சாப்பிடு என்று கூறி அவளிற்கு தோசை ஊட்டி விட்டாள். ச்சீ போம்மா என்று வெட்கப்பட்ட படி சாப்பிட்டாள்.

உள்ளே சென்று மறுபடி தன் உடைகளை சரி செய்தவள் துள்ளித்துள்ளி மாடிப்படிகளில் இருந்து இறங்கினாள். என்ன சுகந்திம்மா ரொம்பவுமே குசியா இருக்காய் என்ன தான் விசேஷம் சொல்லேன் என்றார் தாயார். அது தான் நான் சொல்ல நீ நம்பலயே அம்மா என்று கூறி அவளின் கன்னத்தை கிள்ளி விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றாள். அவளின் கால்கள் திவ்யா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க திவ்யாவே அவள் முன்னாடி வந்து நின்றாள். என்ன மெடம் இன்னிக்கு இவ்வளவு நேரத்தோட ரெடி ஆகிட்டிங்க. எப்பவுமே நான் வந்த அப்புறமா தானே அவசரமாக ரெடி ஆகுவாய் என்றாள் திவ்யா. இல்லடி கொஞ்சம் நேரத்தோட எழுந்திட்டன் அப்போ சீக்கிரம் ரெடி ஆகிட்டன் என்றாள் சுகந்தி. உன்ன பாக்க தூங்கி எழுந்திரிச்சவள் போல தெரியல. இராத்திரி முழுக்க முழிச்சிருந்து அப்பிடியே வாற போல இருக்கு என்று கூறிய படி வந்த ஆட்டோவை மறித்தாள்.

ஏய் சுகந்தி நான் நேற்று இருந்த ரென்ஷனில எங்க சாரோட அம்மாவ சந்திக்கிறது என்று கேட்க மறந்திட்டன். இப்போ என்ன பண்ணுறது என்றாள். அவள் யோசித்தபடி நிற்கவும் அவளது தொலைபேசி சிணுங்கியது. யாரு இது புது நம்பரா இருக்கே என்றபடி போனை எடுத்தவள் ஹலோ என்றாள். ஹலோ திவ்யா நான் கார்த்திக் பேசுறன் என்றான். சார் நீங்களா? நானே உங்கள எப்பிடி கூப்பிடுறது என்று யோசிச்சிட்டு இருந்தன். உங்க நம்பர் கூட இல்லை என்றாள். ஏன்டி சார் என்று உயிரை வாங்கிறாய் கார்த்திக் என்று கூப்பிட வேண்டியது தானே என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான் கார்த்திக். நீங்க காலேஜ் ல வெயிட் பண்ணுங்க நான் அங்க வாறன் என்று கூறி போனை கட் செய்தான். சரி என்று கூறி போனை கட் செய்தவளிற்கு மனதுக்குள் பதற்றம். கார்த்திக்கின் அம்மாவை எப்பிடி பார்த்து பேசுவது என்று. அவர் ரொம்ப திறமையானவர். அவரை பார்ப்பதற்கே எல்லாரும் முன் அனுமதி பெற்று தான் போவார்கள். அதனால் அவளது மனது திக் திக் என்று அடித்தபடி இருந்தது. சுகந்தியோ தான் வாழ போகும் வீட்டை பார்க்க போகும் ஆவலில் ரொம்பவே குஷியாக இருந்தாள்.

தன் வீட்டு மகாலஷ்மியை அழைத்து செல்வதற்காக தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தான் கார்த்திக். திவ்யாவிற்காகவே தன்னுடைய முன் பக்கத்து இருக்கையை வாசனை ஸ்ப்ரே அடிச்சு வாசனைப் படுத்தி வைத்திருந்தான். அவள் அதில் அமர போகும் அழகை கற்பனையில் ரசித்தபடி காரை ஓட்டியபடி இருந்தான். கல்லூரியை நெருங்கிக் கொண்டிருக்க அவனது மனது காற்றில் பறக்கும் இலவம் பஞ்சாக இரட்டை கட்டி பறந்தது. அவனது கற்பனை கனவுகளை ஓர் நொடியில் சிதைக்கும் விதமாக அந்த டமார் என்ற சத்தம். கார் சென்ற வேகத்தில் தடுமாறியபடி கரையில் போய் நின்றது.

தொடரும்……!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Mon Nov 17, 2014 6:45 pm

பாகம் - 05

இறங்கிச் சென்று காரை பார்த்த கார்த்திக் அதன் ஒரு பக்க டயர் பஞ்சராகி இருந்ததை கண்டான். ச்சா என்னோட கற்பனை எல்லாமே சிதைஞ்சு போச்சே என்று அதில் குற்றிய ஆணியை நொந்தபடி நின்றான். அவனுடைய காரில் வேறு ஸ்ரெப்னி இருக்கவில்லை. அதனால் தன்னுடைய மெக்கானிக்கிற்கு கோல் பண்ணி அவனை அழைத்து காரை சரி செய்து வீட்டுக்கு கொண்டு வரும் படி கூறிவிட்டு ஆட்டோ ஒன்று பிடித்து காலேஜ்க்கு சென்றான். அங்கு அவனுக்காக காத்தபடி திவ்யாவும் சுகந்தியும் நின்றார்கள். சொறி திவ்யா வாற வழில கார் பஞ்சர் ஆகிட்டு. அது தான் மெக்கானிக்க அழைச்சு ஒட்ட குடுத்திட்டு வர லேட் ஆச்சு. சரி வாங்க ஆட்டோலயே வீட்டுக்கு போகலாம் என்று கூறியபடி ஆட்டோவில் ஏறினான். அவனுக்கு அருகில் திவ்யா அவளுக்கு பக்கத்தில் சுகந்தி. ச்சா இவள் என்ன நந்தி போல எனக்கும் கார்த்திக்குக்கும் இடைல என்று மனசுக்குள் திவ்யாவை திட்டிக் கொண்டாள் சுகந்தி.

தன் அருகில் அமர்ந்திருந்த திவ்யாவை பார்க்கையில் அவனுக்கு ஆனந்தம் பொங்கியது. தன் காரை பஞ்சராக்கிய அந்த ஆணிக்கு நன்றி சொன்னான். தான் காரில் வந்திருந்தால் திவ்யா இவ்வளவு நெருக்கமாக அவன் கூட பயணித்திருக்க மாட்டாளே என்று மனதுக்குள் சிரித்தான். அவள் கூந்தல் அவன் முகத்தை முத்தமிட்டது. நெஞ்சோடு உரசி கதைகள் பேசியது. அவள் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா அவனுடைய மேற்சட்டையுடன் கொஞ்சி விளையாடி காதல் இராகம் பாடியது. வெள்ளைச் சுடிதாரில் மகாலக்சுமி போல வீற்றிருந்தாள். அந்த ஆட்டோ வீதியில் உள்ள மேடு பள்ளங்களை குறைவின்றி தழுவிச் சென்றது. ஒவ்வொரு பள்ளத்திலும் ஆட்டோ விழும்போது திவ்யாவின் மூச்சு பெருமூச்சாய் அவனை தழுவிச் செல்லும். திடீரென ஆட்டோ சாரதி பிடித்த ஸ்பீட் பிறேக்கில் முன்னே சென்று ஆட்டோ கம்பியும் மோத போன திவ்யாவை தாங்கி அணைத்தான் கார்த்திக். என்னப்பா பாத்து ஓட்ட மாட்டியா என்று அவனை கார்த்திக் கடிந்து பேச சரி விடுங்க சார் அவர் என்ன வேணும் எண்டா பண்ணினார் என்று கூறி அவனை சமாதானம் செய்தாள் திவ்யா. திவ்யாவின் தோளை அணைத்த கார்த்திக்கின் கைகள் அப்படியே இருந்தது. திடீரென தன்னை சுதாகரித்த திவ்யா கார்த்திக்கின் கைகள் தன்னை இன்னமும் அணைத்திருப்பதை உணர்ந்தாள். அவள் திரும்பி அவன் அணைத்திருக்கும் தோளைப் பார்க்க சுய நினைவுக்கு வந்த கார்த்திக் சொறி திவ்யா என்றாள். தாங்ஸ் சார் நீங்க மட்டும் என்னை பிடிச்சிருக்காட்டி என்னோட நெற்றில பலத்த அடி பட்டிருக்கும் என்றாள். இவற்றை பார்த்துக் கொண்டிருந்த சுகந்திக்கு தான் திவ்யாவாக இருந்திருக்க கூடாதா என்று மனது ஏங்கியது.

திவ்யா மனதால் மட்டுமல்ல உடலாலும் ரொம்பவே மென்மையானவள். அவளை அணைத்த ஒரு நொடியிலேயே அவளை முழுமையாக உணர்ந்தவன் போல ஆகினான். அவளின் கைகள் பட்டுப்பூச்சி போல் மென்மையாக இருந்தது. ரோஜா பூ இதழ்களை வருடியது போல மென்மையாக இருந்தது அவளை அணைந்த அந்த ஒற்றை அணைப்பு. என்ன தான் வாசனையோ அவளை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தது. தன்னையே மறந்து வேறு உலகத்தில் லயித்த வண்ணம் இருந்தான் கார்த்திக். மொத்தமாய் திவ்யா அவனையும் அவன் உணர்வுகள் உள்ளம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருந்தாள். தொலைபேசி சத்தம் கேட்டு சுதாகரித்தவன் ஹலோ என்றான். அண்ணா எங்கடா இருக்கிறாய் இன்னும் அண்ணிய கூட்டிட்டு வரலயா? உனக்காக காத்திட்டு இருக்கிறம் என்றாள். இதோ கிட்ட வந்திட்டன் இன்னும் 2 நிமிஷத்தில வீட்டில நிப்பன் என்றான்.

அண்ணா இங்க நிப்பாட்டுங்க என்றான் கார்த்திக். மூவரும் இறங்கினார்கள். அழகான இயற்கை சூழல் நிறைந்த நந்தவனமாக காட்சியளித்தது அவனுடைய வீடு. வாசலை அண்மித்ததுமே மல்லிகை வாசம் அவர்களை வரவேற்றது. அவர்களை வரவேற்பதற்காகவே காத்திருந்தது போல் மெல்ல தலையசைத்து வரவேற்று கூறியது அவன் வீட்டு ரோஜா மலர்கள். வீட்டு ராஜகுமாரியை கண்டது போல் ஆர்ப்பரித்து இனிய கானம் பாடியது அவன் வீட்டு லவ்பேட்ஸ் குருவிகள். தான் வாழ போகும் வீடு கோவில் போலிருப்பதை பார்த்த சுகந்திக்கு கால் தரையில் நிக்க மறுத்து வானத்தில் பறந்தது. இயற்கை அழகில் தன்னையே மறந்து வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் திவ்யா. வீட்டின் வாசலுக்கு அருகில் அமைந்திருந்த சிறிய தடாகத்தில் வீற்றிருந்த சரஸ்வதியை பார்த்ததும் வீட்டுக்குள் செல்ல மறந்து சரஸ்வதி சிலையருகே சென்றாள் திவ்யா. சார் இவ்வளவு கலையம்சம் நிறைந்த வீட்டை பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்றாள் திவ்யா. ஏதோ கோவிலுக்குள்ள நுழையிற போல இருக்கு. இந்த பறவைகளின் குரல் மங்கள இசை போல ஒலிச்சிட்டு இருக்கு. இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு. இந்த இயற்கை, பூக்களின் நறுமணம், பறவைகளின் நாதம் இதை எல்லாம் நான் ஒரே இடத்தில இன்னிக்கு தான் பாக்கிறன் என்றாள். இது நீ வாழ போற வீடும்மா உன் ரசனைக்கு ஏத்த போல இருக்கு எண்டு சொல்றியே எவ்வளவு சந்தோசம் தெரியுமா என்று தனக்குள்ளே பூரித்தான் கார்த்திக்.

சரி இதையே பாத்திட்டு இருந்தா எப்பிடி உள்ள போகலாமே என்று கார்த்திக் அழைக்க தலையசைத்த படி கார்த்திக்கின் பின் சென்றார்கள். வீட்டு வாசலை அடைந்த திவ்யா தன்னுடைய வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள். ஏதோ சொர்க்கத்தின் வாசலை தொட்டது போன்ற உணர்வு அவளின் உள்ளத்தில் அலைமோதிச் சென்றது. சுகற்தி உள்ளே சென்று விட்டாள். ஆனால் திவ்யாவோ இன்னும் வாசல் படியையே தாண்டவில்லை. அவனின் வீட்டு கதவில் செதுக்கியிருந்த வீணையின் சிற்பத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். திவ்யா என்ற கார்த்திக்கின் குரலால் நிமிர்ந்தவள் மெல்ல காலடி எடுத்து வைத்தாள். அவள் வலது காலை வைத்து வீட்டுக்குள் வர வேண்டும் என்று மனதுக்குள் இறைவனை வேண்டியபடி நின்றான் கார்த்திக். அவனுடைய வேண்டுதல் வீண் போகவில்லை. அவள் தன்னுடைய வலது காலை எடுத்து மெதுவாக வாசல் படியில் வைத்தாள். அது வரை அமைதியாய் இருந்த கோவிலில் மணியோசை கேட்டது போல் அவளின் கொலுசின் ஓசை ஒலித்தது.

தொடரும்…..!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Tue Nov 18, 2014 11:29 pm

பாகம் - 06

மெல்லிய அவளின் சலங்கை ஓசை சப்தம் எழுப்ப அழகுப் பதுமையாக நடந்து உள்ளே சென்றாள் திவ்யா. கார்த்திக்கின் தாயாரைக் கண்டதும் அவரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க ஆன்டி என்றாள் திவ்யா. நல்லா இரும்மா என்று அவளின் தலையை தடவி நெற்றியில் முத்தமிட்டார் அவன் தாயார். சுகந்தியும் அவரின் கால்களை தொட்டு வணங்க அவளையும் வாழ்த்தி அமர சொன்னார். உங்க இரண்டு பேரையும் பத்தி கார்த்திக் நிறையவே சொல்லி இருக்கான். உங்க இரண்டு பேரோட நட்பு, படிப்பில் உள்ள சுட்டிதனம் எல்லாமே என்றார். அப்பிடியா? ரொம்ப சொல்ற அளவுக்கு நாங்க இல்ல என்று தன்னடக்கத்தை வெளிப்படுத்தினாள் திவ்யா.

சுதா அவர்களுக்கு ஜில் என்ன குளிர்மையுடன் லெமன் கரைத்து வந்தாள். அந்த சூடான காலநிலைக்கு நன்றாக இருந்தது. மெதுவாக சுவைத்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். திவ்யா நான் செய்ய போற அல்பம் பத்தி கார்த்திக் சொல்லி இருப்பான் என்று கார்த்திக்கின் அம்மா ஆரம்பிக்க அவர்களின் பேச்சு தொடர்ந்தது. சுகந்தி அக்கா அவங்க தான் பேச ஆரம்பிச்சிட்டாங்களே இப்போதைக்கு முடிக்க மாட்டாங்க. நீங்க வாங்க நான் உங்களுக்கு வீட்டை சுற்றி காட்டுறன் என்று கூறி அவளை அழைத்தபடி சென்றாள் கார்த்திக்கின் தங்கை சுதா. தான் வாழ ஆசைப்படும் வீட்டை பார்க்கும் ஆவலில் இருந்த சுகந்திக்கு அது நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. இருவரும் எழுந்து சென்றார்கள்.

அவர்களின் வீட மாடி வீடாக இருந்தது. கீழே பெரிய கலையம்சம் நிறைந்த ஹால், அவளின் அம்மாவின் இசைக்கருவிகள் இருக்கும் கோவில் போன்ற ஓர் அறை, பூஜை அறை மற்றும் சமையலறைகள் கீழே இருந்தது. எல்லாமே பார்ப்பதற்கு அழகாக அமைந்திருந்தது. வாங்க அக்கா நாம மேல போவம் என்று அழைத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறியவள் அங்கு அவர்களின் அறைகள் மற்றும் கலையம்சம் நிறைந்த மீன் தொட்டி எல்லாவற்றையும் காட்டினாள். இது தான் அம்மா அப்பாவோட அறை. இது என்னோட அறை. இது என் அண்ணனோட அறை என்று ஒவ்வொரு அறையாக சுற்றிக் காட்டினாள். கார்த்திக்கின் அறையில் அவனது கட்டிலில் ஓர் அழகிய டெடிபியர் இருந்தது. அதை பார்த்ததும் சுகந்திக்கு சிரிப்பாக இருந்தது. என்ன பொண்ணுங்க தான் டெடிபியரோட தூங்குவாங்க. இங்க என்ன உங்க அண்ணா டெடிபியரோட தூங்கிறாரா என்றாள் சுகந்தி. ஐயோ அக்கா அதை ஏன் கேக்கிறீங்க இது அவன் சிங்கப்பூர் போனப்ப வாங்கி வந்தது. தன்னை கட்டிக்க போற பொண்டாட்டிக்கு குடுக்க வாங்கி வந்திருக்கிறான். அதை எப்பவும் தன் பக்கத்தில தான் வைச்சிருப்பான் என்றாள். அப்போ அண்ணாக்கு பொண்ணு பாத்தாச்சா என்று சுகந்தி கேட்க அதெல்லாம் இல்லை அவனுக்கு பிடிச்சத வாங்கியிருக்கான். எப்பவோ வரப் போகும் தன்னோட பொண்டாட்டிக்கு என்றாள். சிரித்த சுகந்தி சுதா எனக்கு கொஞ்சம் தண்ணீர் குடுப்பிங்களா குடிக்க என்றாள். ஓகே கண்டிப்பா… நீங்க இருங்க அக்கா நான் போய் எடுத்திட்டு வாறன் என்று கீழே சென்றாள்.

சுதா சென்றதும் ஓடிச் சென்று அந்த டெடிபியரை தூக்கி கட்டியணைத்தாள் சுகந்தி. எனக்காக காத்திட்டு இருக்கிறியா என்று செல்லமாக சிரித்தாள். அவனது கட்டிலில் அமர்ந்து தன் கைகளால் மெதுவாக தொட்டு பார்த்தாள். இரட்டை தலையணையில் ஒன்றை பார்த்து என்ன உன் கூட பேச ஆள் இல்லாம இருக்கிறீயா? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ நான் வந்திடுவன் என்று அந்த தலையணையை தட்டி சிரித்தாள். மேசை மேலிருந்த கார்த்திக்கின் படத்தை எடுத்து தன்னுடைய கைப்பைக்குள் ஒழித்துக் கொண்டாள். காலடிச் சத்தம் கேட்டதும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தாள். சுதா கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கீழே சென்றார்கள். அங்கு திவ்யாவும் அவர்களுடைய அல்பம் பத்திய பேச்சை முடித்திருந்தாள். என்ன வீட்டை எல்லாம் சுத்திப் பார்த்தாச்சா என்று கேட்க ம்ம்ம்ம் எல்லாம் பாத்தாச்சே என்றாள் சுகந்தி.

ஏய் திவ்யா சாரோட வீடு ரொம்ப அழகா இருக்கு தெரியுமா? இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு என்றாள் சுகந்தி. ஓஓஓ அப்பிடியா என்று கேட்க சரிம்மா என் கூட வா நான் வீட்டை சுத்திக் காட்டுறன் என்று கார்த்திக்கின் அம்மா திவ்யாவை அழைத்தார். அவளும் அவருடன் பின் சென்றாள். சுகந்தி கீழே அவர்களின் குடும்ப ஆல்பம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

திவ்யா ஒவ்வொரு இடத்தையும் ரசனையுடன் பார்த்தாள். அவளிற்கு அவர்களின் இசைக்கருவிகள் நிறைந்த அறையை விட்டு வெளியே வரவே இஷ்டமில்லை. அப்படியே மேல் ஏறிச் சென்றவர்கள் ஒவ்வொருத்தர் அறையாக பார்த்தாள். அவள் மேலே சென்றதை பார்த்த கார்த்திக்கும் மேலே சென்றான். எல்லா அறைகளும் பார்த்தவள் கார்த்திக் அறைக்கு சென்றாள். அவனின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த டெடிபியரை தூக்கி சோ சுவீட் ரொம்ப அழகா இருக்கு என்றாள். எனக்கு டெடிபியர் என்றா ரொம்ப பிடிக்கும். இந்த டெடிபியர ஒரு போட்டோ எடுத்துக்கவா என்று கேட்டாள். தாராளமா எடுத்துக்கோங்க என்று கார்த்திக் கூற தன்னுடைய செல்போனை தேடினாள். அது கீழே விட்டிட்டு வந்ததை உணர்ந்து சரி என்னோட மெபைல் கீழ இருக்கு அப்புறமா எடுத்துகிறன் என்றாள். அதுக்கென்ன என் மொபைல் ல எடுத்திட்டு உங்களுக்கு அனுப்பிறன் என்று கார்த்திக் கூற சரி என தலையசைத்தாள். எதுக்கு திவ்யா டெடிபியரை தனியா எடுப்பான் நீங்க அதை வைச்சுக்கோங்க நான் இரண்டு பேரையும் எடுக்கிறன் என்றான். சரி என்று கூறி டெடிபியரை கட்டியணைத்தபடி நிற்க கார்த்திக் அழகாக படமெடுத்தான். அதற்கு கட்டியணைத்து முத்தமிட்டபின் அவனின் கட்டிலில் வைத்தாள்.

உங்கள ஒண்ணு கேக்கலாமா சார் என்று கூற சொல்லுங்க திவ்யா என்றான் கார்த்திக். என்ன சார் பொண்ணுங்க போல நீங்களும் டெடிபியர் வைச்சு தான் தூங்குவீங்களா என்றாள். அதில்லம்மா அதுக்கு பெரிய கதையே இருக்கு என்று கார்த்திக்கின் அம்மா சொல்ல…. ப்ளீஸ் அம்மா ஏதும் சொல்லாதீங்க என்று கார்த்திக் கெஞ்சினான். ஆன்டி நீங்க சொல்லுங்க அது என்ன பெரிய கதை என்று கேட்க அது அவன் தன்னோட பொண்டாட்டிக்காக வாங்கி வைச்சிருக்கான் என்றார். அதைக் கேட்டதும் திவ்யாவின் முகம் சுருங்கிப் போனது. என்ன ஆன்டி இதை முன்னாடியே சொல்ல கூடாதா? நான் அந்த டெடிபியரை தூக்கி என்ன எல்லாம் பண்ணிட்டன். சார் அவரோட வருங்கால மனைவிக்காக வாங்கினது. எவ்வளவு எதிர்பார்ப்போட வாங்கி இருப்பார் என்றாள். சாரி சார் எனக்கு தெரியாம பண்ணிட்டன் என்றாள். என்ன திவ்யா அதெல்லாம் பெரிய விசயம் இல்ல கூல் என்றான் கார்த்திக். உனக்காக டெடிபியரை நீ கட்டியணைச்சு கொஞ்சுறாய் அதுக்கு ஏதுக்கு சாறி எல்லாம்? என்னால தான் முடியல என் டெடிபியராச்சும் உன் முத்தத்தை வாங்கிச்சே என்று மனதுக்குள் மகிழ்ந்தான் கார்த்திக்.

தொடரும்….
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by sarjan1987 » Tue Nov 18, 2014 11:45 pm

மிகவும் ரசனையுடன் எழுதுகிறீர்கள்........ வாழ்த்துக்கள் மேடம்........ தொடர்ந்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Thu Nov 20, 2014 7:54 pm

பாகம் - 07

சரி வாங்க கீழ போகலாம் என்று எல்லாரும் கீழே வந்தார்கள். கீழே சுகந்தி ஆல்பம் பார்த்தபடி இருந்தாள். சார் உங்க வீடு ரொம்ப அழகா கோவில் போல இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு என்றாள் திவ்யா. உண்மை தான் சார் எனக்கும் உங்க வீட்ட விட்டு போக மனசே இல்லை என்றாள் சுகந்தி. திவ்யா உங்ககிட்ட ஒண்ணு கேட்டா செய்வீங்களா என்றான். என்ன சார் பெர்மிஷன் எல்லாம் கேட்டிட்டு சொல்லுங்க கண்டிப்பா செய்றன் என்றாள் திவ்யா. அது ஒண்ணும் பெருசா இல்லை ஒரு சின்ன மெட்டர் தான் என்றான். என்ன சார் சின்ன மெட்டர் என்று சொல்லிட்டு இப்படி யோசிக்கிறீங்க என்றாள். அதுவா நாம தான் இப்போ நல்ல ப்ரண்ஸ் ஆகிட்டம். அப்புறம் எதுக்கு சார் என்று சொல்லிட்டு கார்த்திக் எண்டே சொல்லலாமே என்றான். அத கேட்டதும் சுகந்திக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது. அப்பாடா எனக்கிருந்த கவலையை சார் போக்கிட்டார் என்று பூரிப்படைந்தாள். என்ன பெயர் சொல்லி கூப்பிடுறதா என்னால முடியாது சார் ப்ளீஸ் என்றாள் திவ்யா. நீங்க எங்களோட குரு அதுக்கும் மேல நீங்க வயசில கூடினவங்க உங்கள பெயர் சொல்லி கூப்பிடுறதா என்றாள். ஆமா அப்பிடி கூப்பிடுறதில தப்போ இல்ல என்றான். என்னால முடியாது அதுவும் பெயர் சொல்லி கூப்பிட ப்ளீஸ் சார் அதை மட்டும் கேக்காதீங்க என்று கெஞ்சினாள் திவ்யா. சரி சரி நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரியே கூப்பிடுங்க என்றான்.

சரி சார் நாங்க வெளிக்கிட போறம். ஆன்டி சொன்ன போல நான் பாடல் வரி எல்லாம் எழுதிட்டு சொல்றன் என்றாள். என்ன வெளிக்கிட போறீங்களா? இருந்து மதியம் சாப்பிட்டு தான் போகணும் என்றார் கார்த்திக்கின் அம்மா. இல்ல ஆன்டி அம்மாக்கு சொல்லிட்டு வரல. உங்க வீட்டுக்கு போய்டு உடன வாறதா தான் சொல்லி இருந்தன். எனக்காக சமைச்சிட்டு காத்திட்டு இருப்பா என்றாள் திவ்யா. இவள் என்ன எல்லாத்தையும் நந்தி மாதிரி வந்து குழப்பிறாள் ச்சா என்று மனசுக்குள் சலித்துக் கொண்டாள் சுகந்தி. என்னம்மா திவ்யா நான் உங்களுக்கும் சேர்த்து சமையல் பண்ணிட்டன் என்றார். திவ்யா இன்னிக்கு அம்மாவோட பிறந்த நாள் அதால தான் இன்னிக்கு உங்கள வீட்டுக்கு கூப்பிட்டன் என்றான் கார்த்திக். ஆன்டியோட பிறந்த நாளா? இத முன்னாடியே சொல்லி இருந்தா அவங்களுக்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கி வந்திருப்பனே என்றாள் திவ்யா. கிப்ட் எல்லாம் எதுக்கும்மா நல்ல மனசு இருக்கே அது போதும் என்றார் கார்த்திக்கின் அம்மா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆன்டி என்று திவ்யாவும் சுகந்தியும் வாழ்த்துக் கூறினார்கள்.

திவ்யாவிற்கு அவங்களோட அம்மாவிற்கு கிப்ட் குடுக்கல என்றது மிகவும் கவலையாக இருந்தது. ஏதோ நினைவு வந்தவள் தனது கைப்பையை திறந்து ஆன்டி என்னோட சின்ன கிப்ட் என்று கூறி கொடுத்தாள். என்ன திவ்யா இதெல்லாம் என்றபடி அதை வாங்கிய கார்த்திக்கின் தாயார் அதை பிரித்து பார்த்தார். வெள்ளை தாமரையில் வெள்ளையுடை உடுத்தி கையில் வீணையேந்திய அழகிய கலையம்சம் நிறைந்த சரஸ்வதி சிலை. ரொம்ப அழகா இருக்கே எங்க வாங்கினது என்று கேட்க நான் ஒரு ஷொப்பிங்மாட் போனப்ப வித்தியாசமா கலையம்சம் நிறைந்ததா இருந்திச்சு வாங்கினன். எப்பவுமே துர்க்கை, லக்ஷ்மி எல்லாருக்குமே கோவில், சிலை எல்லாம் இருக்கு. ஆனால் சரஸ்வதிக்கு மட்டும் தான் சிலையோ கோவிலோ இல்லை. இதை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சு போய்டு வாங்கினன். இப்போ அது உங்களுக்கு கொடுக்க உதவிச்சு என்றாள். என்னம்மா நீ ஆசைப்பட்டு வாங்கினத என்கிட்ட குடுக்கிறியேம்மா என்று கார்த்திக்கின் அம்மா கேட்க இல்லை ஆன்டி இந்த சிலையோட கலையம்சத்தை ரசிச்சு தான் நான் வாங்கினன். ஆனால் அது ஒரு ரசிகையோட கைல இருக்கிறத விட அந்த சரஸ்வதியே குடியிருக்கிற உங்க கைல இருக்கிறது தான் அந்த சிலைக்கு மதிப்பு என்று கூறினாள். அவளின் அன்பை பார்த்த கார்த்திக்கின் தாயார் அவளை கட்டியணைத்து முத்தமிட்டார். சரி வாங்க சாப்பிடலாம் என்று கூற அனைவருமே சாப்பாட்டு மேசைக்கு சென்றார்கள்.

ஆன்டி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டு வாறன். அவங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க என்று கூறியவள் தாயாருக்கு போன் பண்ணி தான் கார்த்திக் வீட்டிலே சாப்பிடுவதாக சொன்னவள் சாப்பாட்டு மேசைக்கு சென்றாள். அங்கு அறுசுவை உணவு சமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மேசையில் இருந்ததும் கார்த்திக்கின் அம்மா அவர்களுக்கு உணவு பரிமாறினார். ரொம்ப சுவையான உணவாக இருந்தது. ஆன்டி நீங்க சங்கீதத்தில தான் மேதை என்று நினைச்சன் உங்க சமையல் சூப்பர். நான் உங்க சாப்பாட்டு அடிமையாகிட்டன். நீங்களா போக சொன்னா கூட இந்த வீடு உங்க சாப்பாடு எல்லாத்தையும் விட்டிட்டு என்னால போக முடியாது போல இருக்கே என்றாள் திவ்யா. அவளின் அந்த வார்த்தையை கேட்ட கார்த்திக்கின் முகத்தில் ஆயிரம் பல்ப் பிரகாசம் மின்னியது. சொர்க்கத்தில் மிதப்பது போன்று உணர்ந்தான். உண்மை தான் ஆன்டி திவ்யா சொல்றது உங்க சாப்பாட்ட சாப்பிட்டவங்க உங்க சாப்பாட்டு ருசிக்கு அடிமையாகிடுவாங்க. இப்போ தான் புரிது எதுக்கு கார்த்திக் சார் காலேஜ் கன்டீன் பக்கம் வாறல எண்டு. உங்க கைல சாப்பிட்டவங்களால எப்பிடி வெளில சாப்பிட முடியும் என்றாள் சுகந்தி.

சாப்பிட்டு முடித்து எல்லாரும் சேர்ந்து சற்று நேரம் உரையாடினார்கள். அவர்கள் வீடு ரொம்ப கலகலப்பாக இருந்தது. அதற்கான காரணம் கார்த்திக்கின் இதய தேவதை அந்த வீட்டில் குடியிருந்தது தான். ஆன்டி ரொம்ப நேரமாச்சு நாம கிளம்பட்டுமா என்றாள் திவ்யா. என்ன வந்ததில இருந்து போறதிலயே குறியா இருக்கிறிங்க திவ்யா என்ற கார்த்திக்கை பார்த்து அதுவா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா உங்க வீட்ட இருந்து போக சொன்னாலும் என்னால போக முடியாது போய்டும். அந்தளவுக்கு உங்க வீட்டோட இயற்கையம்சம், கலை, அன்பு, சாப்பாடு எல்லாத்திலயுமே சொக்கி போய்டன். அது தான் இப்பவே புறப்படலாம் என்று யோசிக்கிறன் என்று சிரித்தாள். ரொம்ப குறும்பு தான் என்று அவள் கன்னத்தில் கிள்ளினாள் சுதா. அவர்கள் வீட்டை விட்டு வெளியேற மனமின்றியே அவர்களிடமிருந்து விடை பெற்றார்கள் சுகந்தியும் திவ்யாவும்.

தொடரும்….
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”