இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Tue Nov 18, 2014 11:29 pm

பாகம் - 06

மெல்லிய அவளின் சலங்கை ஓசை சப்தம் எழுப்ப அழகுப் பதுமையாக நடந்து உள்ளே சென்றாள் திவ்யா. கார்த்திக்கின் தாயாரைக் கண்டதும் அவரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க ஆன்டி என்றாள் திவ்யா. நல்லா இரும்மா என்று அவளின் தலையை தடவி நெற்றியில் முத்தமிட்டார் அவன் தாயார். சுகந்தியும் அவரின் கால்களை தொட்டு வணங்க அவளையும் வாழ்த்தி அமர சொன்னார். உங்க இரண்டு பேரையும் பத்தி கார்த்திக் நிறையவே சொல்லி இருக்கான். உங்க இரண்டு பேரோட நட்பு, படிப்பில் உள்ள சுட்டிதனம் எல்லாமே என்றார். அப்பிடியா? ரொம்ப சொல்ற அளவுக்கு நாங்க இல்ல என்று தன்னடக்கத்தை வெளிப்படுத்தினாள் திவ்யா.

சுதா அவர்களுக்கு ஜில் என்ன குளிர்மையுடன் லெமன் கரைத்து வந்தாள். அந்த சூடான காலநிலைக்கு நன்றாக இருந்தது. மெதுவாக சுவைத்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். திவ்யா நான் செய்ய போற அல்பம் பத்தி கார்த்திக் சொல்லி இருப்பான் என்று கார்த்திக்கின் அம்மா ஆரம்பிக்க அவர்களின் பேச்சு தொடர்ந்தது. சுகந்தி அக்கா அவங்க தான் பேச ஆரம்பிச்சிட்டாங்களே இப்போதைக்கு முடிக்க மாட்டாங்க. நீங்க வாங்க நான் உங்களுக்கு வீட்டை சுற்றி காட்டுறன் என்று கூறி அவளை அழைத்தபடி சென்றாள் கார்த்திக்கின் தங்கை சுதா. தான் வாழ ஆசைப்படும் வீட்டை பார்க்கும் ஆவலில் இருந்த சுகந்திக்கு அது நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. இருவரும் எழுந்து சென்றார்கள்.

அவர்களின் வீட மாடி வீடாக இருந்தது. கீழே பெரிய கலையம்சம் நிறைந்த ஹால், அவளின் அம்மாவின் இசைக்கருவிகள் இருக்கும் கோவில் போன்ற ஓர் அறை, பூஜை அறை மற்றும் சமையலறைகள் கீழே இருந்தது. எல்லாமே பார்ப்பதற்கு அழகாக அமைந்திருந்தது. வாங்க அக்கா நாம மேல போவம் என்று அழைத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறியவள் அங்கு அவர்களின் அறைகள் மற்றும் கலையம்சம் நிறைந்த மீன் தொட்டி எல்லாவற்றையும் காட்டினாள். இது தான் அம்மா அப்பாவோட அறை. இது என்னோட அறை. இது என் அண்ணனோட அறை என்று ஒவ்வொரு அறையாக சுற்றிக் காட்டினாள். கார்த்திக்கின் அறையில் அவனது கட்டிலில் ஓர் அழகிய டெடிபியர் இருந்தது. அதை பார்த்ததும் சுகந்திக்கு சிரிப்பாக இருந்தது. என்ன பொண்ணுங்க தான் டெடிபியரோட தூங்குவாங்க. இங்க என்ன உங்க அண்ணா டெடிபியரோட தூங்கிறாரா என்றாள் சுகந்தி. ஐயோ அக்கா அதை ஏன் கேக்கிறீங்க இது அவன் சிங்கப்பூர் போனப்ப வாங்கி வந்தது. தன்னை கட்டிக்க போற பொண்டாட்டிக்கு குடுக்க வாங்கி வந்திருக்கிறான். அதை எப்பவும் தன் பக்கத்தில தான் வைச்சிருப்பான் என்றாள். அப்போ அண்ணாக்கு பொண்ணு பாத்தாச்சா என்று சுகந்தி கேட்க அதெல்லாம் இல்லை அவனுக்கு பிடிச்சத வாங்கியிருக்கான். எப்பவோ வரப் போகும் தன்னோட பொண்டாட்டிக்கு என்றாள். சிரித்த சுகந்தி சுதா எனக்கு கொஞ்சம் தண்ணீர் குடுப்பிங்களா குடிக்க என்றாள். ஓகே கண்டிப்பா… நீங்க இருங்க அக்கா நான் போய் எடுத்திட்டு வாறன் என்று கீழே சென்றாள்.

சுதா சென்றதும் ஓடிச் சென்று அந்த டெடிபியரை தூக்கி கட்டியணைத்தாள் சுகந்தி. எனக்காக காத்திட்டு இருக்கிறியா என்று செல்லமாக சிரித்தாள். அவனது கட்டிலில் அமர்ந்து தன் கைகளால் மெதுவாக தொட்டு பார்த்தாள். இரட்டை தலையணையில் ஒன்றை பார்த்து என்ன உன் கூட பேச ஆள் இல்லாம இருக்கிறீயா? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ நான் வந்திடுவன் என்று அந்த தலையணையை தட்டி சிரித்தாள். மேசை மேலிருந்த கார்த்திக்கின் படத்தை எடுத்து தன்னுடைய கைப்பைக்குள் ஒழித்துக் கொண்டாள். காலடிச் சத்தம் கேட்டதும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தாள். சுதா கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கீழே சென்றார்கள். அங்கு திவ்யாவும் அவர்களுடைய அல்பம் பத்திய பேச்சை முடித்திருந்தாள். என்ன வீட்டை எல்லாம் சுத்திப் பார்த்தாச்சா என்று கேட்க ம்ம்ம்ம் எல்லாம் பாத்தாச்சே என்றாள் சுகந்தி.

ஏய் திவ்யா சாரோட வீடு ரொம்ப அழகா இருக்கு தெரியுமா? இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு என்றாள் சுகந்தி. ஓஓஓ அப்பிடியா என்று கேட்க சரிம்மா என் கூட வா நான் வீட்டை சுத்திக் காட்டுறன் என்று கார்த்திக்கின் அம்மா திவ்யாவை அழைத்தார். அவளும் அவருடன் பின் சென்றாள். சுகந்தி கீழே அவர்களின் குடும்ப ஆல்பம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

திவ்யா ஒவ்வொரு இடத்தையும் ரசனையுடன் பார்த்தாள். அவளிற்கு அவர்களின் இசைக்கருவிகள் நிறைந்த அறையை விட்டு வெளியே வரவே இஷ்டமில்லை. அப்படியே மேல் ஏறிச் சென்றவர்கள் ஒவ்வொருத்தர் அறையாக பார்த்தாள். அவள் மேலே சென்றதை பார்த்த கார்த்திக்கும் மேலே சென்றான். எல்லா அறைகளும் பார்த்தவள் கார்த்திக் அறைக்கு சென்றாள். அவனின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த டெடிபியரை தூக்கி சோ சுவீட் ரொம்ப அழகா இருக்கு என்றாள். எனக்கு டெடிபியர் என்றா ரொம்ப பிடிக்கும். இந்த டெடிபியர ஒரு போட்டோ எடுத்துக்கவா என்று கேட்டாள். தாராளமா எடுத்துக்கோங்க என்று கார்த்திக் கூற தன்னுடைய செல்போனை தேடினாள். அது கீழே விட்டிட்டு வந்ததை உணர்ந்து சரி என்னோட மெபைல் கீழ இருக்கு அப்புறமா எடுத்துகிறன் என்றாள். அதுக்கென்ன என் மொபைல் ல எடுத்திட்டு உங்களுக்கு அனுப்பிறன் என்று கார்த்திக் கூற சரி என தலையசைத்தாள். எதுக்கு திவ்யா டெடிபியரை தனியா எடுப்பான் நீங்க அதை வைச்சுக்கோங்க நான் இரண்டு பேரையும் எடுக்கிறன் என்றான். சரி என்று கூறி டெடிபியரை கட்டியணைத்தபடி நிற்க கார்த்திக் அழகாக படமெடுத்தான். அதற்கு கட்டியணைத்து முத்தமிட்டபின் அவனின் கட்டிலில் வைத்தாள்.

உங்கள ஒண்ணு கேக்கலாமா சார் என்று கூற சொல்லுங்க திவ்யா என்றான் கார்த்திக். என்ன சார் பொண்ணுங்க போல நீங்களும் டெடிபியர் வைச்சு தான் தூங்குவீங்களா என்றாள். அதில்லம்மா அதுக்கு பெரிய கதையே இருக்கு என்று கார்த்திக்கின் அம்மா சொல்ல…. ப்ளீஸ் அம்மா ஏதும் சொல்லாதீங்க என்று கார்த்திக் கெஞ்சினான். ஆன்டி நீங்க சொல்லுங்க அது என்ன பெரிய கதை என்று கேட்க அது அவன் தன்னோட பொண்டாட்டிக்காக வாங்கி வைச்சிருக்கான் என்றார். அதைக் கேட்டதும் திவ்யாவின் முகம் சுருங்கிப் போனது. என்ன ஆன்டி இதை முன்னாடியே சொல்ல கூடாதா? நான் அந்த டெடிபியரை தூக்கி என்ன எல்லாம் பண்ணிட்டன். சார் அவரோட வருங்கால மனைவிக்காக வாங்கினது. எவ்வளவு எதிர்பார்ப்போட வாங்கி இருப்பார் என்றாள். சாரி சார் எனக்கு தெரியாம பண்ணிட்டன் என்றாள். என்ன திவ்யா அதெல்லாம் பெரிய விசயம் இல்ல கூல் என்றான் கார்த்திக். உனக்காக டெடிபியரை நீ கட்டியணைச்சு கொஞ்சுறாய் அதுக்கு ஏதுக்கு சாறி எல்லாம்? என்னால தான் முடியல என் டெடிபியராச்சும் உன் முத்தத்தை வாங்கிச்சே என்று மனதுக்குள் மகிழ்ந்தான் கார்த்திக்.

தொடரும்….
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by sarjan1987 » Tue Nov 18, 2014 11:45 pm

மிகவும் ரசனையுடன் எழுதுகிறீர்கள்........ வாழ்த்துக்கள் மேடம்........ தொடர்ந்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Thu Nov 20, 2014 7:54 pm

பாகம் - 07

சரி வாங்க கீழ போகலாம் என்று எல்லாரும் கீழே வந்தார்கள். கீழே சுகந்தி ஆல்பம் பார்த்தபடி இருந்தாள். சார் உங்க வீடு ரொம்ப அழகா கோவில் போல இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு என்றாள் திவ்யா. உண்மை தான் சார் எனக்கும் உங்க வீட்ட விட்டு போக மனசே இல்லை என்றாள் சுகந்தி. திவ்யா உங்ககிட்ட ஒண்ணு கேட்டா செய்வீங்களா என்றான். என்ன சார் பெர்மிஷன் எல்லாம் கேட்டிட்டு சொல்லுங்க கண்டிப்பா செய்றன் என்றாள் திவ்யா. அது ஒண்ணும் பெருசா இல்லை ஒரு சின்ன மெட்டர் தான் என்றான். என்ன சார் சின்ன மெட்டர் என்று சொல்லிட்டு இப்படி யோசிக்கிறீங்க என்றாள். அதுவா நாம தான் இப்போ நல்ல ப்ரண்ஸ் ஆகிட்டம். அப்புறம் எதுக்கு சார் என்று சொல்லிட்டு கார்த்திக் எண்டே சொல்லலாமே என்றான். அத கேட்டதும் சுகந்திக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது. அப்பாடா எனக்கிருந்த கவலையை சார் போக்கிட்டார் என்று பூரிப்படைந்தாள். என்ன பெயர் சொல்லி கூப்பிடுறதா என்னால முடியாது சார் ப்ளீஸ் என்றாள் திவ்யா. நீங்க எங்களோட குரு அதுக்கும் மேல நீங்க வயசில கூடினவங்க உங்கள பெயர் சொல்லி கூப்பிடுறதா என்றாள். ஆமா அப்பிடி கூப்பிடுறதில தப்போ இல்ல என்றான். என்னால முடியாது அதுவும் பெயர் சொல்லி கூப்பிட ப்ளீஸ் சார் அதை மட்டும் கேக்காதீங்க என்று கெஞ்சினாள் திவ்யா. சரி சரி நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரியே கூப்பிடுங்க என்றான்.

சரி சார் நாங்க வெளிக்கிட போறம். ஆன்டி சொன்ன போல நான் பாடல் வரி எல்லாம் எழுதிட்டு சொல்றன் என்றாள். என்ன வெளிக்கிட போறீங்களா? இருந்து மதியம் சாப்பிட்டு தான் போகணும் என்றார் கார்த்திக்கின் அம்மா. இல்ல ஆன்டி அம்மாக்கு சொல்லிட்டு வரல. உங்க வீட்டுக்கு போய்டு உடன வாறதா தான் சொல்லி இருந்தன். எனக்காக சமைச்சிட்டு காத்திட்டு இருப்பா என்றாள் திவ்யா. இவள் என்ன எல்லாத்தையும் நந்தி மாதிரி வந்து குழப்பிறாள் ச்சா என்று மனசுக்குள் சலித்துக் கொண்டாள் சுகந்தி. என்னம்மா திவ்யா நான் உங்களுக்கும் சேர்த்து சமையல் பண்ணிட்டன் என்றார். திவ்யா இன்னிக்கு அம்மாவோட பிறந்த நாள் அதால தான் இன்னிக்கு உங்கள வீட்டுக்கு கூப்பிட்டன் என்றான் கார்த்திக். ஆன்டியோட பிறந்த நாளா? இத முன்னாடியே சொல்லி இருந்தா அவங்களுக்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கி வந்திருப்பனே என்றாள் திவ்யா. கிப்ட் எல்லாம் எதுக்கும்மா நல்ல மனசு இருக்கே அது போதும் என்றார் கார்த்திக்கின் அம்மா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆன்டி என்று திவ்யாவும் சுகந்தியும் வாழ்த்துக் கூறினார்கள்.

திவ்யாவிற்கு அவங்களோட அம்மாவிற்கு கிப்ட் குடுக்கல என்றது மிகவும் கவலையாக இருந்தது. ஏதோ நினைவு வந்தவள் தனது கைப்பையை திறந்து ஆன்டி என்னோட சின்ன கிப்ட் என்று கூறி கொடுத்தாள். என்ன திவ்யா இதெல்லாம் என்றபடி அதை வாங்கிய கார்த்திக்கின் தாயார் அதை பிரித்து பார்த்தார். வெள்ளை தாமரையில் வெள்ளையுடை உடுத்தி கையில் வீணையேந்திய அழகிய கலையம்சம் நிறைந்த சரஸ்வதி சிலை. ரொம்ப அழகா இருக்கே எங்க வாங்கினது என்று கேட்க நான் ஒரு ஷொப்பிங்மாட் போனப்ப வித்தியாசமா கலையம்சம் நிறைந்ததா இருந்திச்சு வாங்கினன். எப்பவுமே துர்க்கை, லக்ஷ்மி எல்லாருக்குமே கோவில், சிலை எல்லாம் இருக்கு. ஆனால் சரஸ்வதிக்கு மட்டும் தான் சிலையோ கோவிலோ இல்லை. இதை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சு போய்டு வாங்கினன். இப்போ அது உங்களுக்கு கொடுக்க உதவிச்சு என்றாள். என்னம்மா நீ ஆசைப்பட்டு வாங்கினத என்கிட்ட குடுக்கிறியேம்மா என்று கார்த்திக்கின் அம்மா கேட்க இல்லை ஆன்டி இந்த சிலையோட கலையம்சத்தை ரசிச்சு தான் நான் வாங்கினன். ஆனால் அது ஒரு ரசிகையோட கைல இருக்கிறத விட அந்த சரஸ்வதியே குடியிருக்கிற உங்க கைல இருக்கிறது தான் அந்த சிலைக்கு மதிப்பு என்று கூறினாள். அவளின் அன்பை பார்த்த கார்த்திக்கின் தாயார் அவளை கட்டியணைத்து முத்தமிட்டார். சரி வாங்க சாப்பிடலாம் என்று கூற அனைவருமே சாப்பாட்டு மேசைக்கு சென்றார்கள்.

ஆன்டி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டு வாறன். அவங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க என்று கூறியவள் தாயாருக்கு போன் பண்ணி தான் கார்த்திக் வீட்டிலே சாப்பிடுவதாக சொன்னவள் சாப்பாட்டு மேசைக்கு சென்றாள். அங்கு அறுசுவை உணவு சமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மேசையில் இருந்ததும் கார்த்திக்கின் அம்மா அவர்களுக்கு உணவு பரிமாறினார். ரொம்ப சுவையான உணவாக இருந்தது. ஆன்டி நீங்க சங்கீதத்தில தான் மேதை என்று நினைச்சன் உங்க சமையல் சூப்பர். நான் உங்க சாப்பாட்டு அடிமையாகிட்டன். நீங்களா போக சொன்னா கூட இந்த வீடு உங்க சாப்பாடு எல்லாத்தையும் விட்டிட்டு என்னால போக முடியாது போல இருக்கே என்றாள் திவ்யா. அவளின் அந்த வார்த்தையை கேட்ட கார்த்திக்கின் முகத்தில் ஆயிரம் பல்ப் பிரகாசம் மின்னியது. சொர்க்கத்தில் மிதப்பது போன்று உணர்ந்தான். உண்மை தான் ஆன்டி திவ்யா சொல்றது உங்க சாப்பாட்ட சாப்பிட்டவங்க உங்க சாப்பாட்டு ருசிக்கு அடிமையாகிடுவாங்க. இப்போ தான் புரிது எதுக்கு கார்த்திக் சார் காலேஜ் கன்டீன் பக்கம் வாறல எண்டு. உங்க கைல சாப்பிட்டவங்களால எப்பிடி வெளில சாப்பிட முடியும் என்றாள் சுகந்தி.

சாப்பிட்டு முடித்து எல்லாரும் சேர்ந்து சற்று நேரம் உரையாடினார்கள். அவர்கள் வீடு ரொம்ப கலகலப்பாக இருந்தது. அதற்கான காரணம் கார்த்திக்கின் இதய தேவதை அந்த வீட்டில் குடியிருந்தது தான். ஆன்டி ரொம்ப நேரமாச்சு நாம கிளம்பட்டுமா என்றாள் திவ்யா. என்ன வந்ததில இருந்து போறதிலயே குறியா இருக்கிறிங்க திவ்யா என்ற கார்த்திக்கை பார்த்து அதுவா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா உங்க வீட்ட இருந்து போக சொன்னாலும் என்னால போக முடியாது போய்டும். அந்தளவுக்கு உங்க வீட்டோட இயற்கையம்சம், கலை, அன்பு, சாப்பாடு எல்லாத்திலயுமே சொக்கி போய்டன். அது தான் இப்பவே புறப்படலாம் என்று யோசிக்கிறன் என்று சிரித்தாள். ரொம்ப குறும்பு தான் என்று அவள் கன்னத்தில் கிள்ளினாள் சுதா. அவர்கள் வீட்டை விட்டு வெளியேற மனமின்றியே அவர்களிடமிருந்து விடை பெற்றார்கள் சுகந்தியும் திவ்யாவும்.

தொடரும்….
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Sat Nov 22, 2014 6:53 pm

பாகம் - 08

அத்தனை நிமிடமும் கலகலப்பாய் இருந்த கார்த்திக்கின் வீடு களையிழந்தது போல் ஆனது. சுகந்தியை வீட்டில் இறக்கி விட்டு திவ்யா வீட்டிற்கு சென்றாள். என்னம்மா இவ்வளவு நேரம் எங்க போனாலும் நீ இப்பிடி நிக்க மாட்டியே என்றார் திவ்யாவின் தாய். அதுவா அம்மா இப்போ கூட எனக்கு வர மனசே இல்லை தெரியுமா அவ்வளவு கலையம்சம் நிறைஞ்ச வீடும்மா கார்த்திக் சார் வீடு. அங்க போனால் யாராலும் திரும்பி வர பிடிக்காது. சொர்க்கத்தை யாருமே பார்த்ததில்லை. என்னை கேட்டா சொல்லுவன் கார்த்திக் சார் வீடு தான் சொர்க்கம் என்று. யாரும் சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் அவரோட வீட்டை போய் பாக்கலாம் என்றாள். அப்பிடியா நீ சொல்றத பார்த்தால் எனக்கே அந்த வீட்டை பார்க்கணும் போல இருக்கு என்றார் தாய். சரிம்மா நான் போய் குளிச்சிட்டு வாறன் என்று கூறி அறைக்குள் சென்றாள் திவ்யா.

வீட்டுக்கு சென்ற சுகந்தி நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள். தன் கைப்பையை திறந்து கார்த்திக் வீட்டிலிருந்து திருடி வந்த கார்த்திக்கின் போட்டோவை எடுத்தாள். என்னடா கார்த்திக் அப்பிடி பாக்கிறாய்? உன்னோட வீட்டில நான் வந்து வாழணும்டா உன் அம்மா, அப்பா, தங்கை கூட எல்லாம் ஒண்ணா இருக்கணும் என்று கூறி அவன் போட்டோவிற்கு முத்தம் கொடுத்தாள். இன்னிக்கு தானே நான் என் வாழ போற வீட்டில கால் பதிச்சு இருக்கன். கண்டிப்பா உன் மனசிலும் கால் பதிச்சிடுவன்டா செல்லம் என்று கார்த்திக்கின் படத்துடன் காதல் மொழி பேசிட்டு இருந்தாள்.

அது வரை ஹாலில் இருந்த கார்த்திக்கிற்கு திவ்யாவின் நினைவே வந்து போய்க் கொண்டிருந்தது. நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தான். தன் அருகில் இருந்த டெடி பியரை எடுத்து முத்தமிட்டான். என் திவி குட்டி குடுத்த முத்தம் இனிச்சிச்சா என்று கூறி டெடிபியரை கட்டியணைத்தபடி படுத்தான். எதேச்சையாக பார்த்தவன் டெடிபியரில் பொட்டு ஒட்டியிருப்பதை அவதானித்தான். அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது திவ்யா கட்டியணைத்து முத்தமிட்ட போது அவள் பொட்டு அதில் வந்திருக்கணும் என்று. ஏற்கனவே அவள் நெற்றியிருந்த அந்த பொட்டை அவன் ரசித்திருந்ததால் அதை மெல்ல எடுத்து அழகு பார்த்தபடி இருந்தான். என்னடா டெடிபியரோடயே கனவா என்றபடி உள்ளே நுழைந்த சுதா அவன் கையில் இருந்த பொட்டை பார்த்து இது என்னடா கைல பொட்டெல்லாம் வைச்சிருக்கிறாய் என்று கேட்க அதுவா அது என்னோட திவி குட்டிட பொட்டு என்றான். அண்ணிட பொட்டா அது எப்பிடி உன்கிட்ட வந்திச்சு என்று கேட்க தன் செல்போனில் இருந்த படத்தை காட்டி இப்பிடி என்றான். அதில் அவள் டெடிபியரை கட்டியணைத்த போட்டோ, முத்தமிட்ட போட்டோ எல்லாம் இருந்திச்சு. ஆஹா நான் மேல வரல றூம்ல இதெல்லாம் நடந்திச்சா என்று அவனை வம்புக்கு இழுக்க ஒண்ணும் நடக்கல நீ வெளிய போ என்று கூறி அவளை வெளியில் தள்ளி கதவை சாற்றினான். செல்போனில் திவ்யாவின் போட்டோவை பார்த்து கற்பனையில் மிதந்தான்.

அன்றைய பொழுது மூவருக்குமே தூக்கமில்லாது போனது. சுகந்தி கார்த்திக்கின் படத்தை பார்த்து காதல் வானில் மிதந்து கொண்டு இருந்தாள். கார்த்திக் டெடிபியரை கட்டியணைத்தபடி திவ்யா நினைவுலே மூழ்கி இருந்தான். அப்பப்போ அவள் போட்டோவை பார்த்து முத்தமிட்டான். திவ்யாவோ கார்த்திக்கின் வீட்டின் இயற்கை ரசனையை இணைத்து கார்த்திக்கின் தாயார் கேட்டது போல் பாடல் வரிகள் எழுதிக் கொண்டிருந்தாள். அவளின் மனதும், ரசனையும் இணைந்து வெள்ளை தாளில் அழகான வரிகளாக நர்த்தனமாடியபடி இருந்தது. தன் வீட்டிற்கு ஏற்ற மருமகள் தான் திவ்யா என்பதில் மனதார திருப்தி கொண்டு அவளை பற்றி கார்த்திக்கின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் அம்மா.

இரவு நெடு நேரமாக கவிதை வரிகளில் லயித்திருந்த திவ்யா நேரமாகி தான் தூங்க சென்றாள். அதனால் மறுநாள் காலை தாமதமாகவே தூக்கத்திலிருந்து எழுந்தாள். எழுந்தவள் வழமைக்கு மாறாக இனிய வீணையின் நாதம் காற்றில் மிதந்து வர திவ்யா ஜன்னல்களை திறந்தாள். எதிர் வீட்டில் தோட்டத்தின் நடுவில் கண்களை முடியவாறு ஒருவன் வீணை மீட்டிக் கொண்டு இருந்தான். இனிமையான காலை வேளை இனிய இசையில் அவள் லயித்தாள். தலையை கோதிய படி கண்களை மூடி இசையை ரசித்த வண்ணம் இருந்தாள். திடீரென்று அவளின் காதுகளுக்கு தேன் வார்த்ததை போல் மிதந்து வந்த வீணையின் இசை நின்றது. சட்டென கண்களை திறந்தவள் எதிர்வீட்டு தோட்டத்தை உற்று பார்த்தாள். என்னடா மிதுன் காலையிலே பாகவதர் மாதிரி வீணையோடு உட்கார்ந்திட்டே என்றபடி ஒருவன் நின்றான். அப்போது தான் அவளிற்கு புரிந்தது வீணையை மீட்டிக் கொண்டிருந்தவனின் பெயர் மிதுன் என்பது. மிதுன் என்ற பெயரைக் கேட்டதும் திவ்யா ஒரு நொடி சிந்தனையில் ஆழ்ந்தாள். என்னடா உனக்கு தெரியாத என் உயிரே இந்த வீணை தான் என்பது புதுசா கேக்கிறாய் என்றான். எப்ப பாரு வீணையை மீட்டிட்டே இரு உன் மனசில உள்ளதை மட்டும் சொல்லிடாத என்று திட்டினான் நண்பன் குமார்.

மிதுன் என்ற பெயரை கேட்டதும் அவளிற்கு சில வருடங்களின் முன் தாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்த கதாசிரியன் பெயர் நினைவுக்கு வந்தது. இந்த வீணையின் இசை கூட அவனின் இசை போலவே இருந்தது. அவனாக இருக்குமோ என்று எண்ணி அவனின் முகத்தை பார்த்துவிட எவ்வளவோ முயற்சித்தாள். அவன் மற்றைய பக்கம் திரும்பி இருந்தமையால் அவளால் அவனுடைய முகத்தை பார்க்க முடியவில்லை. தாயார் தேனீர் கொண்டு வர திரும்பியவள் தேனீரை வாங்கிய பின் மறுபடி பக்கத்து வீட்டை பார்த்தாள். அதற்கிடையில் மிதுன் அந்த இடத்தை விட்டு நீங்கி வீட்டுக்குள் சென்றிருந்தான். ஏமாற்றமாக திரும்பியவள் குளியலறைக்கு சென்றாள்.

தொடரும்….
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by cm nair » Sat Nov 22, 2014 9:15 pm

superb..aruntha..continue... :ro:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Mon Nov 24, 2014 6:36 pm

பாகம் - 09

குளியலறைக்கு சென்றவள் அந்த வீணையின் இசையை நினைத்தபடி இவன் அந்த மிதுன் ஆக இருப்பானோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தாள். அவளால் வேறு எதையுமே நினைக்க முடியவில்லை. அந்த வீணையின் ஒலி மட்டும் அவள் காதுக்குள் எதிரொலித்த வண்ணம் இருந்தது. அவள் பக்கத்து ஊரில் குடியிருந்த போது அங்கு அவளின் வீட்டுக்கு அருகில் மிதுன் என்று ஓர் கதாசிரியன் குடியிருந்தான். அவன் வீணை வாசிப்பதில் மிகவும் திறமையாவன். எப்போதுமே அவனது வீணையின் நாதம் தான் திவ்யாவின் காலை நேர சுப்ரபாதம். என்றுமே காலையில் அவனின் வீணையின் இசையில் தன்னை மறந்து இருப்பாள். எத்தனை சோம்பலாக தூங்கினாலும் அவனது வீணையின் இசையின் ஓசையிலே புத்துணர்ச்சி பெற்று எழுந்திடுவாள். அத்தனை வசீகரமான இசை அவனுடையது.

மிதுன் பக்கத்து வீட்டில் அவனுடைய தாயாருடன் குடியிருந்தான். இசையிலே அதிக ஆர்வம் உள்ளவன் அத்துடன் திரைப்படங்களுக்கு, பத்திரிகைகளுக்கு எழுதும் கதாசிரியனும் கூட. இயற்கையை ரசிப்பதிலும் இசையை மீட்டுவதிலும் அவனுக்கு நிகர் யாருமே இல்லை. சிறந்த ஓவியனும் கூட. ஓர் நொடி பார்ப்பதை அப்படியே ஓவியமாக வரைவதில் வல்லவன். காலைக்காட்சி முதல் காணும் காட்சி வரை அவனிடம் ஒரு நொடியில் ஓவியமாகி விடும். அவனின் இசையில் தன்னை மறந்த திவ்யா அவனின் இசை முதல் ஓவியம், கதைகள் வரை அத்தனைக்கும் முதல் ரசிகையாக மாறினாள். அவனின் கதைகளுக்கு விமர்சனம் சொல்லுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள நல்ல விடயம், சில மெருகூட்டக் கூடிய விடயம் என்பவற்றை அவனுக்கு தயங்காமல் சொல்லுபவள். அதனால் மிதுனின் மனதில் மலர்ந்திருந்த வாடாத திவ்ய மலர் அவள்.

அவள் பழைய வீட்டிலிருந்த பொழுதுகளில் அடிக்கடி மிதுன் வீட்டிற்கு சென்று வருவாள். மிதுனும் அவர்கள் வீட்டில் ஒரு செல்லப் பிள்ளையாக இருந்தான். அவனுக்கு அத்தனை திறமைகளையும் கொடுத்த இறைவன் சிறுவயதில் நடந்த ஓர் கோர விபத்தில் அவனுடைய ஒற்றை காலை பறித்துக் கொண்டான். ஊனம் ஒரு குறையில்லை என்பதை நிரூபித்தவன் மிதுன். அவனின் குறைகளை விட அவனின் திறமைகள் பலராலும் பேசப்பட்டு பலரின் மனதில் வாழ்ந்து வந்தான். பல விருதுகளை பெற்றி தன்னாலும் முடியும் என்று உலகத்தோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தான். எத்தனை மனதில் வாழ்ந்தாலும் அவன் தேடிய, குடியிருக்க விரும்பிய கோவில் திவ்யாவின் உள்ளமே. திவ்யாவிற்கு அவளின் மனதை புரிந்த ஓர் இனிய தோழன்.

அவன் இசை நிகழ்வொன்றிற்கு வெளிநாடு சென்ற சமயத்தில் திவ்யாவும் அவளது பழைய வீட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அவனிற்கு சொல்லாமலே அவள் தன்னுடைய வீட்டை விட்டு வேறு ஊருக்கு சென்றாள். வெளிநாட்டிலிருந்து வந்த மிதுனிற்கு இது அதிர்ச்சியை கொடுத்தாலும் அவளை எப்படியாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்தான். தினமும் மிதுனின் வீணையிசையில் துயிலெழுந்த திவ்யா அவனின் இசையின் நாதம் இன்றி வாடினாள். அவனை சந்திப்பதற்கு பல தடவை முயற்சி செய்தும் அவளால் முடியாது போனது. ஒரு தடவை அவளுடைய பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது கூட அவன் அங்கிருந்து வேறு இடம் மாறி விட்டதாக அயலவர்கள் கூறினார்கள். திவ்யாவின் பிரிவை தாங்க முடியாதவன் அதே வீட்டிலிருந்தால் அவளது நினைவு தன்னை வாட்டும் என்று எண்ணி அவனும் அந்த வீட்டை காலி பண்ணி வேறு வீட்டிற்கு சென்றிருந்தான்.

எங்கு வீணை இசைக் கச்சேரி என்று கேட்டாலும் அது மிதுனாக இருக்காதா என்று பல தடவை அவனை தேடி கடைசியில் களைத்தே போய் விட்டாள் திவ்யா. சில சமயங்களில் அவனுடைய பேட்டி, மற்றும் நிகழ்வுகளை பார்த்து அவன் நல்லாக இருக்கிறான் என்னால் தான் பார்க்க முடியவில்லையே என்று மனதை தேற்றிக் கொள்வாள். அவனை விட்டு தூர சென்றாலும் அவனின் இசை அவளை என்றுமே அவனை சுற்றி நெருக்கமாகவே வைத்திருந்தது. அவனது வீணைக் கச்சேரி சீடி வந்தால் முதலாவதாக சென்று வாங்கி கேட்பாள். அதில் அவளுக்கு ஒரு ஆறுதல் நிம்மதி மகிழ்ச்சி.

இன்று அதே வீணை இசையையும் மிதுன் என்ற பெயரையும் கேட்டவளால் ஒரு நொடி கூட மனது இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்து வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு வரலாமா என்று சிந்தித்தாள். இருந்தும் ஏதோ ஒன்று தடுக்க சரி நாளை காலை சரி பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அடிக்கடி தன்னுடைய அறை ஜன்னலை திறந்து பக்கத்து வீட்டை நோட்டமிட்ட படி இருந்தாள். என்னடி காலைல இருந்து பக்கத்து வீட்டயே பாத்திட்டு இருக்கிறாய் என்ற தாயாரின் குரல் கேட்டு திரும்பியவள் இல்லம்மா காலைல ஒரு வீணையிட இசை கேட்டு எழுந்தன். அது நம்மட மிதுன் ஆக இருக்குமோ என்று தான் அது யாரு என்று பார்த்து விட இருக்கிறன் என்றாள். மிதுன்னா? அவன் எப்பிடி இங்க? அதுக்கு வாய்ப்பே இல்லை. இப்போ அவனெல்லாம் பெரிய பாராட்டுக்குரிய பிரபலமாகிட்டான். இப்பிடியான வீட்டில எல்லாம் குடியிருக்க மாட்டான் என்று தாயார் கூற அந்த கருத்து கூட சரியாக இருந்தமையால் அவள் வெளிக்கிட்டு கோவிலுக்கு சென்றாள்.

தொடரும்……!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Fri Nov 28, 2014 6:37 pm

பாகம் - 10

கோவிலுக்கு சென்றவளின் உள்ளம் அவளையே அறியாமல் மிதுனிற்காக வேண்டியது. காலையில் கேட்ட வீணையின் இசை அவளின் மனசை சலனப்படுத்தியிருந்தது. காற்றில் மிதந்து வந்த காலை நேர கனிவான கானத்தின் சொந்தக்காரன் கண்டிப்பாக மிதுனாக இருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டினாள். யாரம்மா மிதுன் பெயரிற்கு அர்ச்சனை செய்தது என்ன பூசாரியின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தவள் நான் தான் சாமி குடுங்க என்று பிரசாதத்தை வாங்கினாள். மிதுன் என்ற தன்னடைய பெயரைக் கேட்ட மிதுன் யார் என் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பதை அறிய ஆவலாக வந்தான். அங்கு மங்களகரமாக அர்ச்சனைத் தட்டு பிரசாதத்துடன் நின்றாள் அவனின் காதல் தேவதை திவ்யா.

ஏய் திவி நீயா என்ற மிதுனின் குரலால் மகிழ்ந்தவள் அப்போ காலைல வீணை என் பக்கத்து வீட்டில வாசிச்சது நீங்களா? என்றாள். ஆமா திவி நேற்று மாலை தான் அந்த வீட்டுக்கு குடி வந்தம். நீ பக்கத்து வீட்டில இருக்கிறது எனக்கு தெரியும். கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு பிரசாதத்தோட உன் வீட்டுக்கு வரலாம் என்று நினைச்சு கோவிலுக்கு வர நீ இங்க இருக்கிறாய் என்றான். என் வேண்டுதல் வீண் போகல மிதுன். காலைல அந்த வீணை இசையை கேட்டதில இருந்து அது கண்டிப்பா நீங்களா இருக்கணும் என்று தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டன். என் வேண்டுதல் வீண் போகல என்று கூறி தான் பண்ணிய அர்ச்சனையில் இருந்த விபூதியை அவன் நெற்றியில் வைத்து விட்டாள். அவன் அருகில் இருந்த போதெல்லாம் கோவிலுக்கு சென்று வந்து விபூதி வைத்து விடுவாள். ஆனால் சில ஆண்டுகளின் பின் மறுபடி அவள் கையால் விபூதி வைத்த போது மிதுனின் உடல் எல்லாம் சில் என்றானது. மகிழ்ச்சியில் பூரித்தான். உங்கள பார்த்தா அம்மா எவ்வளவு சந்தோசபடுவா தெரியுமா? வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூறி அவனை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றாள்.

வீட்டு வாசலுக்கு சென்றவள் அம்மா யாரு வந்திருக்கா என்று பாரேன் என்று குரல் கொடுத்தாள் திவ்யா. தம்பி நீங்களா? காலைல உங்க வீணை இசை கேட்டதில இருந்தே இவள் ஒரு மாதிரி இருந்தாள். இப்போ தான் இவள் முகத்தில உண்மையான சந்தோசத்தை பார்க்கிறன் என்றார். நாம எல்லாரும் இப்படி சந்தோசமா சந்திச்சு 3-4 வருசமாச்சே என்றார். திவி நீ இன்னுமே அப்படியே இருக்கிறாய் அதே குறும்பு, அதே பாசம் எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றான். என்ன மிதுன் இப்பிடி சொல்றீங்க அதெல்லாம் மறக்க கூடிய நினைவா? திவி எப்பவுமே மாற மாட்டாள். ஒருத்தங்க மேல பாசம் வைச்சா அது அப்பிடியே தான் இருக்கும் அது தெரியாதா என்றாள். ஏய் நீங்க என்ன பாட்டு சீடி வெளியிட்டாலும் முதல் ஆளா நான் வாங்கி கேப்பன் தெரியுமா? உங்கள உங்க இசையை என்னால மறந்து ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மிதுன் என்றாள்.

வீட்டு கோலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே சென்றவள் வெளியில் கார்த்திக் நிப்பதை கண்டாள். வாங்க சார் என்ன எங்க வீட்டுக்கு வந்திருக்கிறீங்க ஒரு போன் பண்ணி இருந்தா நானே வந்திருப்பனே என்றாள். நான் உங்களுக்கு போன் பண்ணினன் ஆன்சர் இல்லை அது தான் புறப்பட்டு வந்திட்டன் என்றான். ஓஓஓ நான் கோவிலுக்கு போகும் போது சைலன்ஸ்ல போட்டன் வந்து பாக்க மறந்திட்டன் வாங்க சார் என்று கார்த்திக்கை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா கார்த்திக் சார் வந்திருக்காரு ஒரு காபி சேர்த்தே போடும்மா என்றாள். கார்த்திக் வந்து உட்கார்ந்ததும் திவ்யா மிதுன் அருகே சென்று அமர்ந்தாள். அவள் ஒரு ஆண் அருகே நெருக்கமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அவன் யாராக இருக்கும் என்று அறிய கார்த்திக்கின் மனது துடித்தது. ஏய் திவி இது யாரு உன் புது நண்பனா என்ற மிதுனின் கேள்விக்கு ஏய் அவரு என்னோட சார் காலேஜ்ல படிப்பிக்கிறார் என்றாள். சார் இது மிதுன். எங்களோட குடும்ப நண்பன். அதுக்கும் மேல இவர பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது பிரபல வீணை வித்துவான் மிதுன் இவரே தான் என்றாள். நீங்களா அது உங்கள பாக்கணும் என்று நான் எவ்வளவோ தடவை முயற்சி பண்ணி இருக்கன் என்று கூறியபடி எழுந்து அவருக்கு கை குலுக்கினான் கார்த்திக். எங்க வீட்டில எல்லாருமே உங்க ரசிகர்கள் தான். எங்க அம்மா உங்க வீணை இசையில தன்னையே மறந்திடுவாங்க என்றான்.

மிதுன் எங்களுக்கு 8-9 வருசமா நல்ல நண்பர். நாம இருந்த ஊருல எங்க பக்கத்து வீட்டில இருந்தார். பேருக்கு தான் பக்கத்து வீடு சாரோட இருப்பு எல்லாமே நம்ம வீட்டில தான். மிதுன்ட வீணை இசை தான் எனக்கு இரவு நேர தாலாட்டு விடிகாலை சுப்பிரபாதம் எல்லாமே. ஆனால் அவன் வெளிநாடு போன சந்தர்ப்பத்தில நாங்களும் ஊரை விட்டு இங்க வர வேண்டி ஏற்பட்டிச்சு அதோட பிரிஞ்சிட்டம். இப்போ தான் மறுபடி சந்திச்சிருக்கிறம். இவனோட இசை, பாசம் எல்லாத்தையுமே இத்தனை காலம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டன். எங்க வீணை இசை போனாலும் இவனோட நினைவு வரும். இவனோட இசை என் இரத்தத்தோட கலந்த ஒண்ணு என்று கூறியபடி மிதுனின் தோளில் சாய்ந்தாள் திவ்யா. ஏய் திவி என்னாச்சும்மா அது தான் நான் வந்திட்டன் அப்புறம் எதுக்கு இவ்வளவு சோகம் கூல் மை டியர் என்று கூறி அவளின் தலையை கோதி விட்டான். கார்த்திக்கிற்கு திவ்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல இருந்தது. தன்னுடைய கனவுக் காதலியோட மனது பூராக இன்னொருவன் நிறைந்திருக்கிறானே என்று நினைக்கையில் கார்த்திக்கிற்கு உயிரே போவது போல இருந்தது.

சரி சார் ஏதும் அவசரமா வந்திங்களா என்று கேட்க அம்மா எழுதி முடிச்ச பாடல் வரிகளை வாங்கி வர சொன்னாங்க அது தான் என்றான். ஓ அப்படியா இருங்க சார் கொண்டு வாறன் என்று எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்றாள். அவளின் தாயார் தேனீர் கொடுத்து விட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். உங்கள பத்தி என் பொண்ணு நிறையவே சொல்லி இருக்காள், அதுக்கும் மேல அவளுக்கு உங்க வீடு, அந்த சூழல் எல்லாமே ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க வீட்டில இருந்து வந்ததில இருந்து உங்கள வீட்டை பத்தியே என் கூட பேசிற்று இருந்தாள் என்று கார்த்திக்கிற்கு கூறிய வண்ணம் இருந்தார். இந்தாங்க சார் இன்னும் இரண்டு பாடல் தான் எழுதணும் நாளைக்கே அதை குடுத்திடுறன் என்றாள். சரி திவ்யா அப்போ நான் கிளம்புறன் அம்மா பாட்டுக்காக பாத்திட்டு இருப்பாங்க என்றான் கார்த்திக். நாளைக்கு சாயங்காலம் முடிச்சிடுவீங்களா? என்று கேட்க ஆமா நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு எடுத்திட்டு வாறன். உங்க அம்மா கூட மிதுனோட ரசிகையாச்சே அதனால நாளைக்கு நானம் மிதுனும் உங்க வீட்டுக்கு வாறம் என்றாள். சரி திவ்யா நாளைக்கு சந்திப்போம் என்று கூறியபடி விடைபெற்றான் கார்த்திக்.

தொடரும்….!
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by arrs » Fri Nov 28, 2014 6:56 pm

Aruntha wrote:பாகம் - 01

கார்முகில் கூட்டம் கருக் கொண்டெழுந்த கருங்கூந்தலில், பால் நிலவை பறை சாற்றும் விதமான அழகிய வட்ட வதனத்தில், கயல் மீனே கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அகன்ற கயல் விழிகள், மாதுளை முத்துக்களை சிந்தி நிற்கும் வரிசை பற்கள், பார்த்ததும் கிளிக்கு பறித்துண்ண தூண்டும் கொவ்வை பழ இதழ்கள், தக்காளி போன்ற மென்மையான கன்னங்கள், காதோரம் வளைந்து நெளிந்து நர்த்தனம் ஆடும் சில ஒற்றை தலை முடி, இத்தனைக்கும் நடுவில் செதுக்கி வைத்த கற்பக்கிரகம் போல் ஜொலிக்கும் மென்மை ததும்பும் பெண்மை தான் திவ்யா. பார்க்கும் பலரை தன் பக்கம் இழுக்கும் வசீகரப் புன்னகை, மிடுக்கான நடை, நட்பு பாராட்டும் மனது, வசதிகள் போதுமானதாக இருந்தும் எளிமையான தோற்றம், செல்ல பிள்ளை என்பதை எடுத்துக் காட்டும் அவளின் கனிவான செல்ல பேச்சு இவளை, இவளின் அன்பை யார் தான் தவறி விட துணிவார்கள் என்னும் அளவிற்கு அழகு பதுமை அவள்.

கல்லூரி செல்லும் காலக்குயில் அவள். இசையை இரசிப்பதில் இவளுக்கு நிகர் யாருமே இல்லை. பறவைகளின் கீச்சிடலில் இருந்து, இயற்கையாக மேனி தீண்டி செல்லும் மெல்லிய தென்றலின் ஓசை வரை அதிலுள்ள இசையை மென்மையாக ரசிப்பவள். மழைத்துளிகளின் ஓசையில் பல்லவி பாடுபவள். இயற்கை இவளிற்கு இணை பிரியா நண்பன். இசை இவளின் அன்புக் காதலன். கவிதைகள் அவளின் கையடக்க நாட்குறிப்பு அதை வரைவதிலேயே அவளின் அத்தனை உணர்வுகளும் சங்கமம். அவள் இருக்கும் இடம் அனைவரையும் கவர்ந்திடும் ஆலயம். அதில் அவளின் கனிவான பேச்சுக்களும் துணுக்குகளும் மங்கள இசை. இந்த அழகிய வீணையில் ஏழிசை மீட்ட ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் ஆயிரம். அவளிற்கோ அனைவரையும் நட்போடு பார்க்கும் நேர்மையான குணம். அந்த வீணையில் ஏழிசை மீட்டி இனிய ராகம் மீட்ட போகும் அழகிய இளங்குமரனை காணக் காத்திருக்கும் அவளின் நட்புகளும் உறவுகளும். அவள் மனதையும் கொள்ளை கொள்ளும் ரசிகனோ கதாசிரியனோ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனுக்காக காத்திருக்கும் பொறுமையின் தேவதை திவ்யா.

திவ்யாவின் உணர்வுகளை புரிந்து அவளோட வாழ்க்கையில் துள்ளி நடை போட்டு கதை பேசி மகிழும் சின்ன வயசு அன்புத் தோழி சுகந்தி. நட்புக்காக உயிரையும் கொடுக்கும் குணமுள்ள திவ்யாவிற்கு ஏற்றால் போல் அவளை புரிந்து நடக்கும் பிரிய தோழி அவள். திவ்யாவின் ரசனைகளினதும் கவிதைகளினதும் முதல் ரசிகை அவள். கல்லூரியில் பரீட்சையில் முதல் இரண்டு இடங்களையும் மாறி மாறி தக்க வைத்துக் கொள்வதில் திவ்யாவும் சுகந்தியும் தான் என்றுமே இருப்பார்கள். இவர்களின் நட்பை பார்த்து கல்லூரி சக தோழர்கள் முதல் கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் நட்பையே முன்னுதாரணமாக மற்றவர்களிற்கும் காட்டியிருக்கிறார்கள். இத்தனை இனிமையான குணம் கொண்ட திவ்யா மேல் யாருக்குமே எந்த பொறாமையும் இல்லை. அவளை அன்பாக நட்பாக பார்த்து நேசிப்பவர்களே அதிகமாக இருந்தார்கள். அதில் அவளின் பள்ளித் தோழர்கள் முதல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை விதிவிலக்கல்ல.

தொடரும்…….!
கதை கவிதை நடையில்(கர்பகிரகத்தை விட சிற்பம் அல்லது சிலை யே நலம்)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: இரண்டு மனம் வேண்டும் - தொடர் கதை

Post by Aruntha » Thu Oct 29, 2015 5:53 pm

கார்த்திக்கின் மனது ரொம்பவே குழப்பமாக இருந்தது. தன் இதய மாளிகையில் குடியிருக்கும் தேவதையின் மனதில் இன்னொருவனா? அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தன் மனதை அந்த நொடி கிடைத்த அதிர்ச்சி வலியை அவனாலேயே பொறுக்க முடியவில்லை. எப்படி வீட்டில் சென்று சொல்வது என்ற குழப்பம் வேறு. அவன் மனதில் அவள் காதலி என்ற உறவையும் மீறி அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் இதயத்தில் மருமகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவளை தன் ஆசைத் தங்கை உள்ளத்தில் அண்ணியாக குடி கொண்டிருப்பவளை எப்படி எனக்கு சொந்தமில்லை என்று வீட்டில் கூறுவது? அவனுக்கு கிடைத்தது அதிர்ச்சி என்பதற்கும் மேலாக மனதுக்குள் ஆயிரம் கேள்வி. விடை தெரியாத வினாக்களோடு மெதுவாக நடந்தான். தன் சொல்லப்படாத ஒரு தலைக் காதலுக்கு கிடைத்த பெரிய இழப்பாக இதை அவனால் ஏற்க முடியவில்லை. முடிவே இல்லாத வாழ்க்கையை பிடித்தபடி நடந்தான்.

அம்மா மிதுனின் தீவிர ரசிகையாக இருந்தாலும் அவனை தன்னுடைய வீட்டில் எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்தான் கார்த்திக். இரண்டு நாட்களில் மிதுனுடன் வீட்டுக்கு வருவதாக கூறிய திவ்யாவை என்ன செய்வது? அங்கு வந்து அவள் கூறப் போகும் மிதுனுக்கும் அவளுக்குமான உறவை ஏற்கும் பக்குவம் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்குமா? எதுவுமே அவனுக்கு புரியவில்லை. தெருவில் சென்று கொண்டிருக்கும் வாகனத்துக்கு குறுக்காய் பாய்ந்து தன் உயிரை மாய்த்து கொண்டால் என்ன என்று கூட சிந்தித்தான். தற்கொலை கூட கோளைகளின் முடிவென அனைவருக்கும் பாடமெடுக்கும் அவனது மனது கூட ஒரு நொடி சிந்தனையிழந்து போனது. கால் போன போக்கில் நடந்த படி இருந்தான்

தொடரும்.....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”