Page 15 of 16

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Sat Nov 01, 2014 10:12 pm
by Aruntha
பாகம் - 36

என்ன ரேணு இப்பிடி சஸ்பென்ஸ் வைச்சிட்டு இருக்கிறீங்க சீக்கிரமா சொல்லுங்க என்றாள் கவி. அதுவா நீ அத்தை ஆக போறாய் என்றாள் வெட்கத்துடன் ரேணு. ஏய் நிஜமாவா? என்று கூறி அவளை கட்டியணைத்து முத்தமிட்டாள். எல்லாருமே அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். இந்த வீட்டில மறுபடி சந்தோசத்தை கொண்டு வந்தது நம்மட கார்த்திக் தான். அவனால தான் இத்தனை சந்தோஷமும் நமக்கெல்லாம் கிடைச்சிருக்கு. அது மட்டுமில்லாம நம்ம குடும்பத்தில இப்போ குழந்தைச் செல்வமும் வர போகுது என்று சொல்லி மகிழ்ந்தான் ரவி.

சரி இந்த சந்தோசத்தோட சீக்கிரமா கவியும் கார்த்திக்கும் கல்யாணத்தை பண்ணி நமக்கு ஒரு மருமகனோ மருமகளோ பெத்து குடுத்திட்டா நாமளும் சம்மந்தியாகிடலாமெல்லா என்றாள் ரேணு. அது வரை மகிழ்வாக இருந்த கவிதாவின் முகம் சட்டென மாறியது. இதை பார்த்த கார்த்திக் அவளுடைய நிலைமையை மற்றவர்களுக்கு தெளிவு படுத்த எண்ணினான். ரவி நான் சில விசயம் பேச வேண்டி இருக்கு பேசலாமா என்றான் கார்த்திக். இது என்ன தாளாரமா என்று ரவி கூற கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி கவிதாவும் நானும் காதலிக்கல. என்னோட மனசில கவி மேல காதல் இருக்கிறது உண்மை தான். ஆனால் அவளோட மனசில அவள புரிந்த நல்ல நட்பாக தான் இருக்கிறன். இதை அவள் என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாள். இருந்தாலும் ரவி ரேணு திருமணம் முடியும் மட்டும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். என்னாலும் தட்ட முடியல. சம்மதிச்சிட்டன் என்றான். அவள் கமல் மேல் காதல் மட்டுமில்லை உயிரையே வைச்சிருக்கிறாள். அவளோட உடல், உயிர், இரத்த நாளம் எல்லாத்திலுமே கமல் தான் கலந்திருக்கிறார். கவி என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்காதது வருத்தம் தான். இருந்தும் அவள் மங்களகரமாக இருப்பதை கண்டு மகிழ்வாக இருக்கிறன் என்றான்.

அதுவரை மௌனமாக பேச்சை கேட்டபடி இருந்த கவிதா பேச ஆரம்பித்தாள். கார்த்திக் சொல்றது உண்மை தான் இந்த வீணைல மறுபடி தந்திய போட்டு மங்களகரமாக்கின கார்த்திக்கை வாழ்க்கைல என்னால மறக்க முடியாது. இருந்தாலும் அதை மறுபடி மீட்டிட மட்டும் என்னால குடுக்க முடியாது..நான் மங்களகரமா மாறிட்டன். மறுபடி சுமங்கலியா என்னால மாற முடியாது. அதையும் மீறி என்னோட வாழ்க்கைல கமலிட இடத்தில இன்னொருத்தங்கள ஏத்துக்க முடியும் என்ற மனநிலை வந்தா கண்டிப்பா நான் கார்த்திக்கை ஏத்துக்குவன். ஆனால் அது இந்த ஜென்மத்தில நடக்கும் என்று சொல்ல மாட்டன். என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.

அதுவரை மகிழ்வாக இருந்த கவிதாவின் குடும்பம் அவளின் இந்த பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவளை சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தும் அவள் தன் முடிவிலிருந்து மாறுவதாய் தெரியவில்லை. கார்த்திக் தன் பேச்சை ஆரம்பித்தான். சரி கவிதா உங்க மனசையும் முடிவையும் சொல்லிட்டிங்க. என்னோட முடிவையும் சொல்றன். உங்க பார்த்த நிமிசத்தில இருந்து உங்க கூட மனசால வாழ ஆரம்பிச்சிட்டன். உங்களுக்காகவே சிறுக சிறுக சேமிச்சு வீடும் கட்டி முடிச்சிட்டன். நீங்க உங்க கூட வாழ்ந்த கமல் நினைவோட வாழ போற போல நானும் உங்க நினைவோட வாழுறன் என்று கூறினான். அவளின் முடிவையும் கார்த்திக்கின் பதிலையும் பார்த்து அவளின் குடும்பம் அதிர்ச்சியடைந்தாலும் அவள் மனது மாறுவாள்என்ற சிறிய நம்பிக்கையில் இருந்தார்கள்.

அந்த வீணையை மறுபடி மீட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அவளின் மன மாற்றத்திற்கு உரிய நாளை எதிர்பார்த்துக் காத்த வண்ணம் கார்த்திக். அவனின் நம்பிக்கையும் காதலும் வீண் போகாது என்ற உறுதியில் கவிதாவின் குடும்பமும் சிவாவும் அந்த நாளை எதிர்பார்த்த வண்ணம்…………………!

முற்றும்!

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Sat Nov 01, 2014 10:41 pm
by cm nair
super...super..super... :ays: :ays: :) :) :great:

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Sat Nov 01, 2014 10:45 pm
by ஆதித்தன்
குழம்பு சூப்பர் ....

சமைச்ச கைக்கு தங்க வளையல் தான் போடணும்...

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Sat Nov 01, 2014 10:52 pm
by cm nair
mmmm :thins:

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 9:48 pm
by Aruntha
ஆதி நீங்க எப்போ தங்க வளையல் அனுப்பி வைக்க போறீங்க? சீக்கிரம் அனுப்பிடுங்க.

நன்றி cm nair.

சரி ஏதாச்சும் தலைப்பு அல்லது கரு இருக்கா அடுத்த கதைக்கு?

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 9:58 pm
by ஆதித்தன்
Aruntha wrote:ஆதி நீங்க எப்போ தங்க வளையல் அனுப்பி வைக்க போறீங்க? சீக்கிரம் அனுப்பிடுங்க.
நீ சமைக்க கத்துக்கிட்ட பிறகு ...

:isir: :isir: :isir: :isir: :isir: :isir:

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:00 pm
by Aruntha
நடக்கிற விடயங்களை பத்தி பேசுங்க ஆதி. இப்பிடிஎல்லாம் காமடி பண்ண கூடாது

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:07 pm
by ஆதித்தன்
Aruntha wrote:நடக்கிற விடயங்களை பத்தி பேசுங்க ஆதி. இப்பிடிஎல்லாம் காமடி பண்ண கூடாது
:amen: சரி சரி ...

சீக்கிரம்
தங்க வளையல் இல்லைன்னாலும்,
தகட்டிலாவது ஒன்னு வாங்கி அனுப்பி வைச்சிடுறேன்.

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:10 pm
by Aruntha
ஆஹா. சரி அடுத்த கதைக்கு தலைப்பு?

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:26 pm
by ஆதித்தன்
Aruntha wrote:ஆஹா. சரி அடுத்த கதைக்கு தலைப்பு?
மேடம் வேலையில்லாம ரொம்ப ப்ரியா இருக்கிறீங்களா .... தலைப்பு தலைப்புன்னு ஒன்னும் தெரியாத என்னைப் போய் நச்சரிக்கீங்க :enn: :enn: :enn: