வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 19, 2014 9:34 pm

ஓகே காத்திருங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Mon Oct 20, 2014 7:17 pm

சரிங்க
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Wed Oct 22, 2014 10:11 pm

பாகம் - 32

சொல்லுங்க மாமா என்றபடி பேச்சு எடுத்தான் ரவி. என்ன மருமகனே நம்ம குடும்பத்தில இருந்த எல்லாத் தடையுமே போனது போல இருக்கு. நாளைக்கே உங்க வீட்டுக்கு உனக்கும் ரேணுவுக்கும் நிச்சயம் பண்ண வாறம் என்றார். என்ன சொல்றீங்க மாமா என்று கேக்க ஆமா தம்பி நாம எல்லாம் என்ன விரும்பியா பிரிஞ்சு இருந்தம். எல்லாம் நல்லதுக்கு தான். நாளைக்கு விடிய போற பொழுது நல்லாவே விடியட்டும். ரொம்ப நாளைக்கு அப்புறமா நாம எல்லாரும் சேர்ந்து இந்த வருஷத்து தீபாவளிய சந்தோசமா கொண்டாடுவம் என்றார். நரகாசுரன் இறந்ததுக்காக கொண்டாடுற தீபாவளிய நம்ம சோகம் எல்லாம் நம்ம விட்டு தொலைஞ்ச நாளாவே கொண்டாடுவம் என்று கூறி போனை கட் செய்தார்.

ஓடிச்சென்று கவியை தூக்கி சுற்றினான் ரவி. என்னடா அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்காய்? அப்பிடி என்ன தான் மாமா சொன்னாரு என்று கேட்டாள். நாளைக்கே ரேணுவ எனக்கு நிச்சயம் பண்ண வாறாராம் என்று கூறி சிரித்தான். அப்பிடியா ரொம்ப சந்தோசம் என்று சொல்லி சிரித்தபடி இருக்க கார்த்திக்கின் போன்கவிதாவிற்கு வந்தது. கார்த்திக்கின் நம்பரைப் பார்த்ததுத் ரவி போனை எடுத்து ஹலோ மச்சான் என்றான். என்ன புதுசா மச்சான் எல்லாம் சொல்றிங்க என்று கேட்க அதுவா நாளைக்கு எனக்கும் ரேணுவுக்கும் நிச்சயம் பண்ண வாறாங்க எல்லாமே உங்களால தான். நீங்க கவி மனச மாத்தினது தான் எல்லாத்துக்குமே காரணம். நாளைக்கு நம்மட நிச்சயம் நடக்கட்டும். அப்பிடியே உங்களுக்கும் கவிக்கும் நல்ல நாளா பாத்து நிச்சயம் பண்ணிட்டு ஒண்ணாவே கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று கூறி விட்டு சரி என் மச்சான் கூட பேசு என்று கூறி போனை கவிதாவிடம் கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்றான்.

ஹலோ கவி ரவி சொன்னதெல்லாம் நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு என்று கூறினான். ஆமா கார்த்திக் அவங்க எல்லாம் நான் நீங்க சொல்லி என்னோட பழைய தோற்றத்தில இருந்து மாறினதில ரொம்பவே சந்தோசமா இருக்காங்க என்றாள். ஆனால் ரவி கூறியதில் இருந்த சந்தோசம் கவியின் குரலில் இருக்கவில்லை. அது கார்த்திக்கின் மனசில் சிறு நெருடலாக இருந்தாலும் ஏதுமே கேட்காது அவளுடன் சாதாரணமாக பேசி விட்டு நாளை சந்திப்போம் என்று கூறி போனை வைத்தான்.

மறுநாள் அவர்கள் வீடு கோலகலமாக அலங்கரிக்கப்பட்டு மிகவும் மகிழ்வாக இருந்தது. அன்று தான் பிறந்து முதல் தடவையாக தீபாவளி கொண்டாடுவது போல் அனைவரும் இன்புற்று இருந்தார்கள். மதிய உணவு முடிந்து மாலை நிச்சயதார்த்தம் செய்தார்கள் ரவிக்கும் ரேணுவிற்கும். அப்படியே அன்றய இரவு வாணவேடிக்கைகள், பட்டாசு இப்படியே குதூகலமாக இருந்தார்கள். அனைவருமே குழந்தைகள் போல தீபமேற்றி பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தார்கள். பல வருடங்களின் பின் தன் குடும்பத்தில் மீண்டும் வந்த மகிழ்ச்சியை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தாள் கவிதா. இத்தனை சந்தோசத்துக்கும் ஒட்டு மொத்த காரணமும் கார்த்திக் என்று நினைக்கும் போது அவன் மேல் அவளையும் அறியாத ஓர் மரியாதை வந்தது.

மெதுவாக கார்த்திக் பக்கமாக நடந்து சென்ற கவிதா அவனை பார்த்து ரொம்ப தாங்ஸ் கார்த்திக் என்றாள். என்ன எனக்கு நன்றி எல்லாம் சொல்லிட்டு என்னாச்சு என்றான். கவிதா கண்கள் பனிக்க இந்த வீட்டில என்னால தொலைஞ்சு போன சந்தோசம், நிம்மதி எல்லாத்தையும் நீங்க மறுபடி மீட்டுக் கொடுத்து இருக்கிறீங்க. அதனால தான் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று கமலின் படத்தை பார்த்தபடி கண்ணீர் மல்கநின்றாள்.

தொடரும்…..
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by sarjan1987 » Thu Oct 23, 2014 6:11 pm

கதை மிகவும் அருமை..... தொடர்ந்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sat Oct 25, 2014 9:29 pm

பாகம் - 33

திடீரென திரும்பிப் பார்த்த கார்த்திக் கவிதா இல்லாததால் அவளை சுற்றும் முற்றும் தேடினான். எங்குமே இல்லாதமையால் அவளின் அறையை நோக்கி சென்றான். அங்கு அவள்கமலின் படத்தின் முன் நின்று அழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவளை குழப்பவும் மனமின்றி அப்படியே விட்டுச் செல்லவும் மனமின்றி மெதுவாக கவிதாஎன்று அழைத்தான். அவனின் குரலால் நிமிர்ந்த கவிதா அவனை பார்த்ததும் கண்களை துடைத்த வண்ணம் என்ன கார்த்திக் என்று கேட்டாள. என்ன கவி எல்லாருமே அங்க சந்தோசமா நிக்கிறாங்க நீங்க மட்டும் இங்க இப்பிடி நிக்கிறீங்க என்று சோகமாக கேட்டான். அவளால் பதில் ஏதுமே சொல்ல முடியவில்லை. மறுபடி அவளது கண்கள் குழமாகியத.

கார்த்திக் நான் உங்க கூட பேசணும் என்று எப்பவுமே முயற்சி பண்ணுவன். ஆனால் என்னால முடிவதில்லை. அதுக்கு நீங்களும் எங்க குடும்பமும் தான் முக்கியமான காரணம். நான் இப்போ சொல்றத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ தெரியல. ஆனால் என்னோட மனச பத்தி உங்களுக்கு நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என்று கூறி கார்த்திக்குடன் பேச ஆரம்பித்தாள்.

கார்த்திக் என்னை மன்னிச்சிடுங்க. என்னால என்னோட வெளித்தோற்றத்தை மட்டும் தான் மாத்திக்க முடிஞ்சதே தவிர என்னோட மனசு நான் கமல் மேல் வைச்சிருந்த பாசத்தை மாத்திக்க முடியல. அதுவும் என்னோட சந்தோசத்துக்காக இல்லை. என்னை சுத்தியிருக்கிற என் மேல பாசம் வைச்சிருக்கிறவங்களுக்காக. என் மனசில சரி வாழ்க்கைல சரி கமலிட இடத்தில இன்னொருத்தர வைச்சு பாக்க முடியல. இது கமல் ஆசையா மீட்டின வீணை. இப்போ தந்தி அறுந்திடிச்சு. ஆனாலும் மறுபடி தந்தி போட்டாச்சு. இருந்தாலும் இன்னொருத்தர் மீட்டினாலும் அது அதே இசையை குடுக்காது. ஆனால் இதை நான் இப்போ உங்களுக்கு சொல்லாம இன்னும் உங்க மனசில ஆசைய வளர்க்க விரும்பல. அதே நேரம் இதை இப்போ வீட்டில சொல்லி ரவி ரேணு கல்யாணத்தை நிறுத்தவும் விரும்பல. இத சொன்னா கண்டிப்பா அவங்க சந்தோசமா இருக்க மாட்டாங்க. அதனால……………………… என்று இழுத்தவளை இடை மறித்தது கார்த்திக்கின் குரல்.

சரி கவி நீங்க சொல்றது எனக்கு புரிது. இதை இப்போ என்கிட்ட சொன்னது போல வீட்டில யாருகிட்டயும் சொல்லி அவங்க சந்தோசத்தை அழிச்சிடாதீங்க. உங்க குடும்பத்துக்காகவும் எனக்காகவும் உங்க வெளித் தோற்றத்தை மாற்றின உங்களேட மனசு கண்டிப்பா கமலிட இடத்தில என்னை ஏற்கிறதுக்கும் சம்மதிக்கும். அது உடன நடக்காட்டி கூட பறவாயில்லை. சில, பல வருடம் ஆனாலும் நான் காத்திட்டு இருப்பன் என்றான். அவனது அந்த வார்த்தையை கேட்டதும் கவிதா அதிர்ச்சியடைந்தாள். தான் பேசுபவற்றை கேட்டு கோவபட்டு பிடிவாதம் பிடிச்சு எல்லாரையும் கூட்டுவான் என்று பயந்தவளிற்கு அவனது அன்பான பேச்சு ஆறுதலை கொடுத்தது.

எனக்கு ஆரம்பத்திலயே தெரியும் கவி உங்க மனசு என்னை ஏற்க எவ்வளவு கஸ்டபடுது என்றது. இருந்தாலும் நான் சிறு பிள்ளை தனமா நடந்து கொண்டது நீங்க மாறணும் என்று தான். காதலிச்சா அவங்க கூட வாழ்ந்தா தான் அந்த காதல் பூரணமானது என்று இல்லை. அவங்கள மனசில நினைச்சிட்டே வாழுறது கூட ஒரு புனிதமான வாழ்க்கை தான். அதனால நான் உங்கள கண்டிப்பா கட்டாயபடுத்த மாட்டன். அதே நேரம் உங்கள தவிர வேறு யாரையும் கல்யாணமும் பண்ணிக்க மாட்டன். உங்க மனசு மாறும் வரை காத்திருப்பன் என்று கூறி அவளின் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்தான். அன்போடு அவனின் அணுகுமுறையை பார்த்து ஓரளவு ஆறுதலடைந்தபடி இருந்தாள்.

தொடரும்……………
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by cm nair » Sat Oct 25, 2014 10:24 pm

அருமையிலும் அருமை... :great:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 26, 2014 7:30 pm

பாகம் - 34

கவிதா நீங்க தப்பா நினைக்கல என்றால் உங்களிடம் ஒண்ணு கேக்கலாமா? என்றான் கார்த்திக். தாராளமா கேளுங்க என்றாள். இல்லை கவி உங்கள பார்க்க ரொம்ப வித்தியாசமான பொண்ணா இருக்கு. நீங்க கமலை திருமணம் செய்து ஒண்ணரை வருசம் தான் அவர் மனைவியா இருந்திருக்கிறீங்க. அதுக்கும் மேல ஒரு மாதம் கூட அவர் கூட நீங்க மனைவியா ஒண்ணா வாழ்ந்ததில்லை. இப்பிடி இருக்கிறப்ப நீங்க கமல் மேல வைச்சிருக்கிற பாசம், அன்பு இதெல்லாம் பாக்க இந்தளவு ஒரு பொண்ணால ஒரு ஆணை நேசிக்க முடியுமா என்று பிரமிப்பா இருக்கு என்றான். அவனின் பேச்சை கேட்டு மெல்லிய புன்முறுவல் பூத்த கவி தன் பக்கத்து பேச்சை ஆரம்பித்தாள்.

நீங்க என் அண்ணன் ரவி, சிவா சொன்ன என் வாழ்க்கைய மட்டும் தான் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்க. அது இல்லை என்னோட வாழ்க்கை எனக்கும் கமலுக்குமான வாழ்க்கை நான் பிறந்த நிமிசமே ஆரம்பிச்ச வாழ்க்கை. நான் பிறந்து ஹாஸ்பிடல்ல இருந்தப்ப என்னை முதலில முத்தமிட்டதே என்னோட கமல் தான் என்று அம்மா சொல்லுவாங்க. அப்போ அவனுக்கு ஒரு வயது. நாம எல்லாருமே கூட்டு குடும்பமா ஒண்ணா தான் இருந்தம்.

நான் என்னோட அம்மா, அப்பா, அண்ணன் கைப்பிடிச்சு நடை பயின்றத விட என்னோட கமலிட கைப்பிடிச்சு தான் நடை பழகி இருக்கன். கட்டினதுக்கப்புறமா தான் பொண்டாட்டி புருஷன் சாப்பிட்ட எச்சி தட்டில சாப்பிடுவா. ஆனால் நான் குழந்தையா இருந்தப்பவே கமல் குடிச்ச புட்டிப்பால தட்டிக் குடிச்சு வளர்ந்திருக்கன். என்னோட அழு குரல் கேட்டாலே தான் பால் குடிச்சிட்டு இருந்தா கூட அதை கொண்டு வந்து எனக்கு குடுத்து என்பசிய போக்கி இருக்கான் கமல். அவன் கையபிடிச்சிட்டு துள்ளித் துள்ளி அவனோட கதை பேசி தான் பள்ளிக்கு கூட செல்வன். சிறு வயதில இருந்து சாப்பிட்டா என்ன, சண்டை போட்டா என்ன, தூங்கினா என்ன எல்லாமே கமல் கூட தான்.

அது கூட ஒரு வகையில என்னோட வாழ்க்கை என்று தான் சொல்லணும். அறியாத வயதா இருந்தாலும் நான் பிறந்த நிமிசத்தில இருந்தே கமல் கூட வாழ ஆரம்பிச்சிட்டன். அவனோட புரிந்துணர்வு, பாசம் சிறுவயசில விளையாட்டா தெரிஞ்சாலும் ஒரு வயது வர காதலா மாறிடிச்சு. படிப்பு, பெத்தவங்களோட வேலை நிமித்தம் எங்களோட கூட்டு குடும்ப வாழ்க்கை தனிக்குடித்தனமா மாறினாலும் நம்ம இரண்டு குடும்பத்துக்குள்ளும் இருந்த அந்த கூட்டு பாசம் அப்பிடியே தான் இருந்திச்சு. நாம இருந்த இடத்தில இருந்து தூரமாகினாலும் மனசால அத விட நெருக்கமானோம். இப்பிடி இருந்ததால எங்க காதலுக்கும் தடை இருக்கல. கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். அவன் கூட அவன் மனைவியா வாழ்ந்த நாட்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய குறுகிய நாட்களாக இருந்தாலும் மனதால நாம மானசீகமா வாழ்ந்த வாழ்க்கை 20 வருடங்களுக்கும் மேலானது என்றாள்.

என் மனது, அசைவு, உடல், உயிர், நாடித்துடிப்பு எல்லாத்திலயுமே கமல் கலந்திருக்கான். அவனோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இது வீட்டில உள்ளவங்களுக்கு புரிஞ்சாலும் என்னோட எதிர்காலம், வாழ்க்கை எல்லாம் பார்த்து என்னோட மறுமணத்திற்கு கட்டாயப்படுத்திறாங்க. இது அவங்களோட தப்பில்ல. எல்லா பெத்தவங்களோடயும் மனசு அப்பிடி தான் என்றாள். இப்ப சொல்லுங்க கார்த்திக் என்னால எப்பிடி உங்க கூட வாழ முடியும்? ஒரு நொடி கூட கமல மறந்து என்னால இருக்க முடியாது என்றாள்.

கார்த்திக் உங்களோட களங்கமில்லாத பாசம், அன்பு, காதல் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்கும் மேல தூய்மையான அன்பை பொழிற உங்கள வாழ்க்கைல ஏற்க முடியாது என்று சொல்றதுக்கு என்கிட்ட எந்த காரணமும் இல்லை. ஆனால் என்னால கமலிட இடத்தில இன்னொருத்தர வைச்சு பார்க்க முடியாது. மற்றும் படி நான் உங்கள வெறுக்கல. உங்க மேல நல்ல மரியாதை இருக்கு. சொல்ல போனால் புனிதமான பாசம், தூய்மையான அன்பு கூட இருக்கு. அதெல்லாம் வைச்சு உங்கள என் கணவனா மட்டும் ஏத்துக்க முடியல என்றாள்.

அவளின் அந்த பேச்சு, அவளுக்கும் கமலுக்குமிடையான வாழ்க்கை எல்லாவற்றையும் பார்த்த கார்த்திக்கிற்கு கவிதாவை இதற்கு மேலும் திருமணத்திற்கு வற்புறுத்தி காயப்படுத்த விரும்பவில்லை. அவள் மனதில் கமல் எந்தளவிற்கு கற்பகிரகம் போல வீற்றிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான். இருந்தும் அவனால் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்ளும் அளவிற்கும் அவன் கவிதா மேல் கொண்ட பாசம் இருக்கவில்லை. இருந்தும் அவளின் பொதுவான வெளித்தோற்ற மாற்றங்களை கண்டு மகிழ்ந்தான்.

கார்த்திக் என்ற கவிதாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவன் எனக்காக ஒரு உதவி பண்ணுவீங்களா? என்றாள். சொல்லுங்க கவிதா கண்டிப்பா பண்ணுறன் என்றாள். நான் இப்போ பேசின எந்த விடயத்தையும் இப்போ என் வீட்டில யாருக்கும் சொல்லாதீங்க. ரவி ரேணு கல்யாணம் நல்ல படியா நடக்கட்டும். அதுக்கு அப்புறமா நானே இதை வீட்டில புரியும்படியா சொல்லிடுறன். அது மட்டும் எனக்காக ப்ளீஸ்…… என்று தயங்கியவளை கண்டிப்பா சொல்ல மாட்டன். இப்படியான ஒரு பொண்ணை காதலிக்க கிடைச்சதே என்னோட பாக்கியமா நினைக்கிறன். அதுக்கும் மேல உங்க மனசில எனக்கும் ஒரு புனிதமான நல்ல இடம் இருக்கு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு கண்டிப்பா இந்த விடயத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பன் என்று கூறினான்.

ஏய் கவி ரொம்ப நேரம் நாம பேசிட்டு இருக்கிறம். வெளில நம்மள தேட போறாங்க வாங்க வெளிய போகலாம் என்று அவள் கையை பிடித்தபடி வெளியே சென்றான். அது வரை அவன் அவளை நெருங்கினாலே தயங்கிய கவிதா அந்த நொடி அவனின் அன்பிற்கு கட்டுப்பட்டாள். அவன் தன்னை புரிந்து கொண்டதை நினைத்து மகிழ்ந்தாள். நல்ல நட்போடு கைகோர்த்து செல்வதாய் நினைத்து அவனோடு சகஜமாக பழக ஆரம்பித்தாள்.

தொடரும்……
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 8:15 pm

கதை அருமை ...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 26, 2014 8:21 pm

ரொம்ப நன்றி ஆதி. நீங்க கூறியதால் தான் கதையை மேலும் விவரித்து எழுத ஆரம்பித்தேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Mon Oct 27, 2014 6:15 pm

பாகம் - 35

மறுபடி அவர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தில் மகிழ்ந்தார்கள். அன்று இரவு கவியின் மாமா குடும்பத்தினர், சிவா மற்றும் கார்த்திக் எல்லாருமே கவிதா வீட்டில் தங்கி இருந்தார்கள். அவர்களின் வீடு சொர்க்கத்திற்கு ஈடான ஓர் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் நீச்சலடித்து கொண்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக ரேணு ரவி திருமணத்தை விரைவில் நடத்த தீர்மானித்தார்கள். அதன் படி அடுத்து வருகின்ற நல்ல முகூர்த்ததில்திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள். பெரிதாக ஆடம்பரமாக செய்யாமல் சொந்தங்களுடன் மட்டும் செய்வதாக முடிவெடுத்தார்கள்.

என்ன நமக்கு மட்டும் தான் திருமணமா? அப்பிடியே அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேர்த்து திருமணத்தை செய்தால் ஒரே மேடையில் இரண்டு கல்யாணம் நடந்ததா போகுமே என்றாள்.அவளின் ஆலோசனையும் சரியாக படவே ரவி கார்த்திக்கை பார்த்து உங்க திருமணத்தையும் செய்தால் நல்லம் என்று கூறினான். அத்தனை நிமிடமும் மகிழ்ச்சியாக இருந்த கவிதாவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. அவள் கார்த்திக்கை ஏக்கமாக பார்த்தாள். அவளை கண்களால் சமாதானம் செய்தவன் இல்லை உங்க கல்யாணத்தை முதலில நடத்துவம். அப்புறமா நீங்க இரண்டு பேருமே பொண்ணு மாப்பிளைக்கு தோழன் தோழியா நின்று நம்ம கல்யாணத்தை பண்ணுங்களன் என்றான். இல்ல அண்ணா ஒண்ணா செய்வம் என்றாள் ரேணு.

இல்லை ரேணும்மா முதலில உங்க கல்யாணம் முடியட்டும் எப்போவோ நிச்சயம் பண்ணி தடை பட்டது. நம்ம கல்யாணமும் சேர்த்து செய்றதெண்டா இன்னும் லேட் ஆகும். நீங்க முதல்ல பண்ணிக்கோங்க அப்புறமா நாம பண்ணிக்கிறம் என்றான். அதும் சரியாக தோணவே எல்லாரும் சம்மதித்தார்கள். அதன் படி அடுத்த முகூர்த்தத்தில் ரேணு ரவி கல்யாணம் முடிவானது. அன்றைய நாளிலிருந்து அனைவருமே கல்யாண வேலைகளில் மும்முரமாக இணைந்தார்கள். கவி கார்த்திக் தன்னை புரிந்து நடந்து கொண்ட மகிழ்ச்சியில் அவனோட நல்ல நட்பாக நெருங்கி பழக ஆரம்பித்தாள். இது அவளின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்தது.

திருமண நாளும் வந்தது. அனைவரும் மெச்சும் படி அவர்கள் திருமணம் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. அது வரை தனிமையாக இருந்த கவிதாவிற்கு இப்போ வீட்டிலிருந்து அவளோடு சண்டை போட்டு விளையாட ரேணுவும் சேர்ந்து கொண்டாள். அவர்கள் வீட்டில் ரேணு வந்த நாளிலிருந்து அவர்களின் சந்தோசம் பல மடங்கானது. தன்னால் பாதிக்கப்பட்ட ரவி ரேணு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் கவிதா களிப்பாக இருந்தாள்.

ரேணு ரவியை வற்புறுத்தி தன்செலவிலேயே ஹணி மூணுக்கு சிங்கப்பூர் அனுப்பி வைத்தாள் கவிதா. தன் தங்கையின் திருப்திக்காகவும் ரேணுவின் சந்தோசத்துக்காகவும் ரவி அவளுடன் சென்றான். அவர்களின் வெளிநாட்டு பயணம் மகிழ்வாக கடந்தாலும் அவர்கள் மனதில் கவிதா பற்றிய ஏக்கம் இருந்தபடியே இருந்தது. தாங்கள் சென்றதும் உடனடியாக அவளது திருமண வேலையை பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தார்கள். அவர்கள் வெளிநாட்டு பயணம் முடித்து திரும்பி வருகையில் கவிதா வேலை நிமிர்த்தம் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவளது வேலை பார்க்கும் இடத்திலிருந்து இருவர் செல்ல வேண்டி இருந்தது. அவளும் சிவாவும் செல்லவேண்டிய நிகழ்வாக இருந்தாலும் சிவா அதிலிருந்து ஒதுங்கி கொண்டான். அவளும் கார்த்திக்கும் மனம் விட்டு பேச பழக சந்தர்ப்பம் அமைக்க எண்ணி அவனுக்கு வேறு வேலை இருப்பதாக கூறி கார்த்திக்கை அந்த நிகழ்விற்கு செல்லுமாறு கேட்டான். அதன் படி ரவி வந்த மறுநாள் கார்த்திக்கும் கவிதாவும் வெளியூர் செல்ல ஆயத்தமானார்கள். அந்த நிகழ்வு தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற இருந்தது.

கார்த்திக்குடன் புகையிரதத்தில் பயணம் செய்தபடி இருந்தாள் கவிதா. கவி இந்த நிகழ்வில நம்முடைய முழு கவனத்தையும் காட்டி நமக்கான புதிய திட்டங்களை எப்பிடியும் எடுக்க முயற்சி பண்ண வேண்டும் என்று கூறி அவர்களின் திட்டம் பற்றி பேசிய படி சென்றார்கள். ரொம்ப நேரம் பேசியபடி சென்றதால் சோர்வடைந்த கவிதா கார்த்திக்கின் தோளில் சாய்ந்து அப்படியே தூங்கி விட்டாள். அவளை பாசமான காதலியாக அணைக்கவும் முடியாமல் நட்போடு பார்க்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அவளின் கள்ளம் கபடமற்ற மனசு, அவன் மேலுள்ள நம்பிக்கை எந்த சலனமுமின்றி தூங்க வைத்துக்கொண்டிருந்தது. அவளோட மனதால் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த கார்த்திக்கால் எந்த சலனமுமின்றி அவளை பார்க்க முடியவில்லை.

தன்னை மாற்றி கொள்ள வேண்டுமென்ற அவளின் வேண்டுகோளை நினைத்தவன் இன்றும் கூட அவள் கமலின் மனைவியாக தான் வாழ்கிறாள் அவளை தப்பாக பார்ப்பதே தவறு என்று உணர்ந்து அவளை குழந்தையை போல் அணைத்து தலையை கோதி விட்டான். குழந்தை தனமான அவளின் தூக்கத்தை ரசித்தபடி இருந்தான். அவளின் நட்புக்கும் தன் காதலுக்குமிடையில் சிக்கி தவித்தபடி பயண களைப்பில் அவனும் தன்னை மறந்து தூங்கினான்.

புகையிரதம் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் இருவரும் எழுந்து சென்றார்கள். அவர்களை அழைக்க அலுவலகத்திலிருந்து வேறு ஊழியர் ஒருவர் வந்திருந்தார். அவர்களை கூட்டிச் சென்று ஹோட்டலில் தங்க வைத்து விட்டு சென்றார். பகலில் வேலை, இரவில் நெடு நேரம் ஹோட்டல் றூமில் அவர்களின் சிறு வயது குறும்புகள், நிகழ்வுகள் பற்றிய சம்பாசணை இப்படியே அந்த பத்து நாட்கள் எப்படி சென்றது என்று தெரியாமலே ஓடியது. அவர்கள் அந்த நிகழ்வை முடித்து ஊருக்கு திரும்பினார்கள்.

அவளோடு பயணித்த நாட்கள் நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவங்கள், அவளுடன் செலவு செய்த நாட்கள் கார்த்திக்கின் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்களாக இருந்தது. எல்லாவற்றையும் பரத்திற்கு சொல்லி சிரித்தபடி இருந்தான். என்னடா இவ்வளவு சொல்றாய் என்ன தான் இருந்தாலும் அவளிட மனசில கமல் தான் இருக்கான் உன் கல்யாணம் நடக்காதே என்றான். ஆமா அது எனக்கும் தெரியும். இப்போதைக்கு அவளோட நிம்மதி சந்தோசம் தன் முக்கியம். அதை அப்புறமா பாக்கலாம்என்று அவனை சமாதானமாக்கி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தவன் சோகத்தக்குள் மூழ்கினான்.

ரவியின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது. கார்த்திக்கின் போன் றிங் சத்தம் கேட்டு எடுத்தவன் மறுமுனையில் ஹலோ கார்த்திக் நான் ரவி பேசுறன். வீட்டுக்கு ஒருக்கா வர முடியுமா என்றான். என்ன நான் ஆபிசில வேலையா இருக்கன் அவசரமா என்றான். இல்லை பொறுமையா வேலை முடிஞ்சதும் கவிதாவையும் ஆபிஸில இருந்து கூட்டிட்டு நேர வாங்க என்றான். என்ன ரவி ஏதும் விசேசமா என்று கேட்க எல்லாம் நல்ல விடயம் தான் வாங்க என்று கூறி போனை கட் செய்தான்.

கவிதாவை பார்த்த ரவி போன் பண்ணிய விடயத்தை கார்த்திக் கூறினான். தனக்கும் ரவி போன் பண்ணி இதை தான் கூறினான் என்று கவியும் சொன்னாள். என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருவரும் ஆபிசை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்கள். அங்கு ரேணுவின் அம்மா அப்பா எல்லாருமே கூடியிருந்தார்கள். வாங்க கவி கார்த்திக். உங்கள தான் எதிர்பார்த்திட்டு இருக்கம் என்று கூறி ரேணு உள்ளே அழைத்தாள். என்ன சஸ்பென்ஸ் வைச்சிட்டு என்ன என்று சொல்லுங்க என்றாள். யாருக்கு தெரியும் கவி எங்களையும் போன் பண்ணி வர சொன்னாங்க வந்து இவ்வளவு நேரமாகியும் எதுவுமே சொல்லல. நீங்க மட்டுமில்ல எங்களுக்கும் ஏதுமே தெரியாது என்றார் கவியின் அப்பா. எல்லாம் நல்ல விசயம் என்று சொல்றாங்க என்றார் மாமா. ரவி ரேணு என்ன சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் அவர்களையே பார்த்தபடி இருந்தார்கள்.

தொடரும்……
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”