வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Fri Jun 27, 2014 12:18 pm

பாகம் - 23

அதற்கு மேலும் அவன் வைத்த பூவை தலையிலிருந்து எடுக்க முடியாதவள் அப்படியே விட்டுவிட்டாள். சரி நேரமாகுது நாம வீட்டுக்கு போவமா என்றான் சிவா. அனைவரும் கோவிலில் இருந்து வெளிக்கிட்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள். அவர்களிடமிருந்து விடைபெற்று சிவாவும் ரவியும் கவிதாவும் ஒன்றாக சென்றார்கள். அவர்கள் சென்ற திசையையே பார்த்தபடி கார்த்திக்கும் பரத்தும் நின்றார்கள். சிவாவின் கார் அவர்களின் கண்ணை விட்டு மறைய கார்த்திக்கும் பரத்தும் மோட்டார் சைக்கிளை எடுத்தார்கள்.

என்ன கார்த்திக் கவிதாவ பார்த்து அப்பிடி சொல்லிட்டாய். நான் உங்கள காதலிக்க சொல்லியோ கல்யாணம் பண்ணிக்க சொல்லியோ கேக்கல நீங்க பூவும் பொட்டும் வைச்சு எப்பவும் இப்பிடியே இருக்கணும் என்று. இப்பிடி நீ சொன்னதில என்னடா இருக்கு அவள எப்பிடி உன்னை நேசிக்க வைப்பாய் என்றான் பரத். அப்பிடி இல்லை பரத் நான் அவளுக்கு அப்பிடி சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. அவளோட மனசில கமல் எவ்வளவு தான் ஆழமா இருந்தாலும் இனி எப்போ அவள் பொட்டு வைச்சாலும் சரி பூ வைச்சாலும் சரி என் நினைவு தான் அவளுக்கு வரும். அவள் பொட் டு பூ வைக்காட்டி கூட எங்க அத பார்த்தாலும் அவளையே அறியாமல் என்னை நினைப்பாள். அத அவளால நினைச்சாலும் தடுக்க முடியாது. அதனால தான் அப்பிடி சொன்னன் என்றான் கார்த்திக்.

என்ன சொல்றாய் நிஜமாவ? என்றான் பரத். ஆமா பரத் எந்த விடயத்தை நாங்க மறக்க நினைகிரமோ அது நம்மட நினைவில அடிக்கடி வரும் இது தான் ஜதார்த்தம். அத தான் நானும் சொல்றன். கண்டிப்பா சிவா சரி ரவி சரி அவளுக்கு பூ வாங்கி குடுப்பாங்க வைக்க சொல்லி. அந்த நொடி கண்டிப்பா அவள் என்னை நினைப்பாள். நீ பொறுத்திருந்து பாரு என்றான் கார்த்திக். ஏதோ நீ சொல்றது சரியா வந்து அவள் வாழ்க்கைல ஒரு நல்லது நடந்தா எங்களுக்கும் சந்தோசம் தானே என்றான் பரத்.

வீட்டுக்கு சென்ற கவிதா அப்படியே சென்று தனது அறை கதவை சாற்றி விட்டு கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதாள். நடந்தவற்றை எல்லாம் சிவாவும் ரவியும் வீட்டில் சொல்லி கொண்டு இருந்தார்கள். நடந்ததை கேட்டு ரவியின் அம்மா அப்பா மகிழ்ந்தார்கள். யாருமே சென்று கவிதாவை குழப்ப விரும்பவில்லை. கண்டிப்பாக அவள் குழப்பமாகவும் சோகமாகவும் இருப்பாள் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார்கள். சற்று நேரத்தில் கட்டிலில் இருந்து எழுந்தவள் உடை பூராகவும் குங்குமம் சிந்தி இருந்ததால் குளிக்க ஆயத்தமானாள். தலை முடியை சரி செய தலையில் இருந்த பூ மாலை கையில் பட்டது. அப்பிடியே சென்று கண்ணாடியை பார்த்தாள். நெற்றியில் போட்டும் தலையில் பூவுமை இருந்தாள். பூவை கழற்றி விட்டு குளிக்க நினைத்து பூவிற்கு கையை கொண்டு செல்ல கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்தது நினைவில் வந்தது. அவளையே அறியாமல் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு எதிரொலித்த வண்ணம் இருந்தது.

தலையை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணாடியில் கமலின் படம் தெரிந்தது. அவளின் அறையில் கமலின் படம் பெரிதாக பிரேம் போட்டு இருந்தது. அவள் காலையில் முதலில் விழிக்கும் போது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை அவளின் கண்ணுக்கு முதலில் தெரிவதே கமலின் படம் தான். கண்ணாடியில் கமலின் படம் தெரிய திரும்பி பார்த்தாள். பூவை கழற்றிய படி கமலின் படத்தையே பார்த்த படி இருந்தாள். அவளின் கண்கள் குளமாக நிரம்பியது.

மறு நாள் காலை அலுவலகம் போக ரெடி ஆகிய கவிதா குளித்து விட்டு வந்து நேரமாகியதால் அவசரமாக தலை வாரினாள். கமலின் படத்திற்கு மல்லிகை பூ மாலை வைத்தாள். தினமும் கமல் படத்திற்கு மல்லிகை மாலை வைத்து தான் வெளியே செல்வாள். மாலையை கமலின் படத்திற்கு போட கார்த்திக் சொல்லிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. அவளால் நேற்று நடந்த விடயத்தை மறக்க முடியவில்லை. நெடு நேரமாகியும் கவிதாவை காணவில்லை என்று ரவியும் அம்மாவும் அவளின் அறையை நோக்கி வந்தார்கள். அவள் கமல் படத்தையே பார்த்த படி சுவரில் சார்ந்து நின்றாள். கவிதா என்ற தாயின் குரல் கேட்டு நிமிர்ந்தவளின் தலை கமலின் படத்தில் தட்டியது. அவனின் படத்தில் இருந்த மல்லிகை மாலை கவிதாவின் தலையில் விழுந்தது.

தொடரும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Fri Jun 27, 2014 12:34 pm

செண்டிமெண்டாக எல்லாம் டச்சி பண்றீங்க????
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Mon Jul 07, 2014 10:27 pm

சின்னச்சிறு தடங்கல்களால் கதையின் தொடர்ச்சி, கடந்த சில நாட்களாக வரயிலாமல் போய்விட்டது....அடுத்த சில தினங்களில் மீண்டும் விட்ட இடத்திலிருந்தே கதை தொடர்ச்சியினை தொடர்வேன் என்று கதையாசிரியர் தகவல் அனுப்பியுள்ளார்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sat Jul 12, 2014 12:02 am

பாகம் - 24

அதிர்ந்து போய் கமலின் படத்தை நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. என்ன கவிதா கமலிட படத்தை பாக்கிறாய்? சிவா சொல்லி கார்த்திக் உன் தலைல பூ வைச்சு பொட்டு வைத்ததை கமலே விரும்பி இருக்கார். அந்த பூ உன்னோட தலைல எப்பவும் இருக்கணும் எண்டத விரும்பி தான் கமலே தன் படத்தில இருந்த பூவ உன் தலைமேல விழ வைச்சு உணர்த்தி இருக்கார் என்றான் ரவி. நீ இதுக்கும் மேல புரிஞ்சுக்காம இருந்தா கமலிட ஆத்மா கூட சாந்தியடையாது என்றான் ரவி.

வெளியில் கார் கோன் சத்தம் கேட்க சிவா வந்ததை உணர்ந்த கவிதா வெளியே வந்தாள். கையில் மல்லிகை மாலையுடன் வந்தவன் அதை கவிதாவிடம் கொடுத்து தலையில் வைக்க சொல்லி கேட்டான். அவளால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் மறுப்பு சொல்ல முடியவில்லை. மாலையை வாங்கியபடி சென்று கமலின் படத்தின் முன்னால் நின்று அழுதாள். சிவா கொடுத்த மாலையை அப்படியே கமலின் படத்திற்கே போட்டு விட்டாள். அவளின் பிடிவாதமான மனதினை எண்ணி எல்லாரும் வருந்தினார்கள்.

சிவா வந்தமையால் ஆபிசுக்கு செல்ல அவசரமாக கண்ணாடி முன் சென்று தலையை சரி செய்தாள். கண்ணாடியில் அவள் நேற்று கழற்றி ஒட்டிய பொட்டு அவளின் நெற்றிக்கு நேராக இருந்தது. கண்ணாடியில் பார்க்கும் போது அவள் பொட்டு வைத்திருப்பது போல் தோற்றமளித்தது. பொட்டை கண்ணாடியில் தொட்டு பார்த்தவள் ச்சா எல்லாம் கார்த்திக் பண்ணின வேலையால வந்தது என்று சலித்தபடி கைப்பையை எடுத்து கொண்டு வெளியில் வந்தாள். அவளின் வெறுமையான நெற்றியையும் தலையையும் பார்த்து அவளின் குடும்பத்தால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது. அவளை மாற்ற முடியவில்லை.

அவள் வெளியே வந்ததும் அவளிடம் எதுவுமே பேசாமல் அனைவரும் மௌனமாக இருந்தனர். அவள் சிவா நேரமாச்சு போவமா என்று கேட்க அவனும் சரி என தலையாட்டியபடி அவளின் பின் சென்றான். அவள் காரில் ஏற அவர்களின் கார் ஆபிசை நோக்கி விரைந்தது. என்ன கவி நேற்று கார்த்திக் அவ்வளவு சொல்லியும் உன்மனசு மாறலயா என்றான். என்ன சிவா அவன் தான் அறிவில்லாம உழறுறான் என்றால் நீங்களுமா? ப்ளீஸ் அந்த டொப்பிக் பேச வேண்டாமே என்றாள். அப்போது அவளின் செல் போன் மணி சிணுங்கியது. எடுத்து பார்த்தவள் கார்த்திக் என்ற பெயரை பார்த்ததும் போனை எடுக்காமல் அப்படியே வைத்து விட்டாள். யாரம்மா போன் என்ற சிவாவின் கேள்விக்கு அதுவா வேற யாரு அந்த கார்த்திக் தான் எனக்கு பேச பிடிக்கல அது தான் என்றாள்.

அவளுக்கு பதில் சொல்வதற்கிடையில் சிவாவின் போன் றிங் ஆகியது. அதற்கும் கார்த்திக் தான் எடுத்தான். சிவா போனை எடுத்து சொல்லுங்க கார்த்திக் என்றான். கவிதாவின் முகம் கார்த்திக் பெயரை கேட்டதும் சட்டென மாறியது. இல்ல சார் நான் கவிதாக்கு போன் பண்ண ஆன்சர் பண்ணல. உங்க கூட இருந்தா என் கூட பேச சொல்லுவீங்களா என்றான். அவளின் குணம் தெரிந்த சிவா எப்படி அவளை பேச வைப்பது என்று எண்ணியபடி காரை ஓட்டினான். அவனுக்கு சரியான நேரம் இருந்ததால் அவனின் முன் பொலிஸ் நிப்பதை பார்த்து கவி இந்தா கார்த்திக் லைன்ல இருக்கான் பேசு முன்னாடி பொலிஸ் நிக்குது. போன் பேசிட்டு ஓடினான் பிடிச்சிடுவாங்க என்று கூறி அவளிடம் போனை கொடுத்தான். இக்கட்டான சூழ்நிலையில் போனை வாங்கி ஹலோ என்றாள்.

ஹலோ கவிதா என்ன கோவமா இருக்கிறீங்களா? என் கூட பேச பிடிக்கலயா? என் போன் நம்பரை பார்த்ததுமே நீங்க ஆன்சர் பண்ணல போல என்றான். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அப்பிடி இல்ல கார்த்திக் நான் போன் சைலன்ஸ்ல வைச்சிருந்தன் நீங்க போன் பண்ணினது கேக்கல என்று பொய் சொன்னாள். அவளின் பொய்யான பேச்சையும், தடுமாற்றத்தையும் பார்த்து மனசுக்குள் சிரித்தான் சிவா. கண்டிப்பா கார்த்திக் மனசு காயம் பட கூடாது என்று தானே கவி இப்பிடி சொல்லறாள் இல்லாவிட்டால் ஆமா என்று ஒற்றை வார்த்தையில் பேசி பேனை கட் பண்ணி இருக்கலாமே. அப்படி என்றால் கண்டிப்பா கார்த்திக் மேல் இவளுக்கும் ஒரு பாசம் இருக்கு. அத எப்பிடியும் காதலா மாத்தணும் என்று எண்ணினான்.

கோவம் இல்லை என்றால் நான் சொன்னத எல்லாம் ஏற்றுக் கொண்டிங்களா கவிதா என்றான் கார்த்திக். என்ன சொல்றிங்க என்று குரலை சற்று உயர்த்தியவளை இல்லை உங்க குடும்பத்தவங்க உங்களுக்கு கொடுத்த பொட்டையும் பூவையும் நீங்க மறுபடி வைச்சிங்களா என்று கேக்கிறன் என்றான். இல்ல கார்த்திக் என்னால அதை வைக்க முடியாது. என் கமல் போனதோடயே அதெல்லாம் போய்ட்டு. ப்ளீஸ் எதுக்கு இப்போ அதெல்லாம் என்று கேட்டாள். சரி நாங்க ஆபிஸ் தான் வந்திட்டு இருக்கம் அங்க வந்து பேசுறன் என்று கூறி போனை கட் செய்தாள். எதுக்கு சிவா கார்த்திக் போனை என்கிட்ட குடுத்திங்க என்று கவிதா கேட்க சரி நான் தான் குடுத்தன் நீ கதைக்க பிடிக்கல என்று சொல்லி கட் பண்ணி இருக்க வேண்டியது தானே எதுக்கு பேசினாய் என்றான் சிவா. என்ன சிவா சொல்றிங்க ஒருத்தன எப்பிடி மனசு நோகிற போல தூக்கி எறிஞ்சு பேசுறது அது தப்பாச்சே என்றாள். அப்போ கார்த்திக் மனசு காயபட கூடாது என்று நினைக்கிறாய் அப்பிடி தானே என்றான் சிவா. அப்பிடி இல்லை சிவா அது வந்து என்று தடுமாறியவளை சரி சரி ஆபிஸ் வந்திட்டு இறங்கி போங்க மெடம் என்றான் சிவா. ச்சீ போடா என்றபடி கார் கதவை திறந்தாள். அங்கே கார் பாக்கில் கார்த்திக் அவளை பார்த்தபடி நின்றான்.

தொடரும்….
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Fri Sep 19, 2014 11:13 pm

பாகம் - 25

கார்த்திக்கை பார்த்தவள் முகம் சலனமடைந்தது. கவிதா ப்ளீஸ் கோவபடாதீங்க. நேற்று ஆபிஸில நடந்து கொண்டதுக்கு சாரி என்றான். அவன் அவளை கோவமாக பார்த்தாள். பதில் ஏதும் கூறாமல் நகர முற்பட்டவளின் கைகளை எட்டிப் பிடித்தான் கார்த்திக். என்ன கவிதா அவ்வளவு சொல்லியும் பொட்டு, பூ வைக்காம வந்திருக்கிறீங்களே என்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கண்களில் நெருப்புப் பொறி பறப்பது போல் இருந்தது. அவளின் பார்வையில் ஒரு நொடி பயந்தே போனான் கார்த்திக். இருந்தும் தைரியமாக அவளின் பற்றிப் பிடித்த கைகளை விடாமல் இருந்தான். நடப்பவற்றை வேடிக்கை பார்த்தபடி நின்றான் சிவா.

அவனின் கைகளின் பிடியை எடுப்பதற்காக கவிதா தன்னுடைய மற்றைய கையை எடுக்க அதையும் சேர்த்து பிடித்த கார்த்திக் அவளின் இரண்டு கைகளையும் தன் ஒற்றைக் கைப்பிடிக்குள் கொண்டு வந்தான். அதிர்ந்து போய் அவனையும் சிவாவையும் மாறி மாறி பார்த்தாள். சிவா எதுவுமே தெரியாதவன் போல் காரை லொக் செய்வது போல் பாசாங்கு பண்ணினான். தன் மற்றைய கையில் வைத்திருந்த ஸ்ரிக்கர் பொட்டை எடுத்து கவிதாவின் நெற்றியில் வைத்த கார்த்திக் அவளின் கைப்பிடியை விட்டான். நெற்றியில் அவன் வைத்த பொட்டை தொட்டு பார்த்தபடி கார்த்திக்கை பார்த்தாள். அவளை பேச விடாமல் தடுக்க என் செல்லம் பொட்டு வைச்சிருக்கா ரொம்ப அழகா இருக்காய் என்றபடி அவளின் அருகில் வந்தான் சிவா. பொட்டை கழற்ற சென்ற கவிதாவை தடுத்தான் சிவா. நாம எவ்வளவு சொல்லியும் நீ வீட்டில பொட்டு வைக்கல நான் பூ குடுத்தன் அதையும் வைக்கல. ஆனால் கார்த்திக் ரொம்ப தைரியமா பொட்டு வைச்சிட்டான். ஆனால் அதை கழட்ட மட்டும் நினைக்காத என்றான் சிவா.

கவிதா ப்ளீஸ் நீங்க என்னை லவ் பண்ணணும் என்று நான் வற்புறுத்தல. கல்யாணம் பண்ணிக்க சொல்லியும் கேக்கல. அப்பிடி நடந்தா சந்தோசபடுவன். ஆனால் எப்பவுமே உங்கள வற்றுபுறுத்தி கேக்க மாட்டன். இப்போ எனக்குள்ள ஒரே ஆசை எல்லா பொண்ணுங்களையும் போல நீங்க பொட்டு வைச்சு பூ சூடி இருக்கணும் என்றான் கார்த்திக். கவி கார்த்திக் சொல்றதில எந்த தப்பும் இருக்கிற போல எனக்கு தெரியல. நீ உன்னோட பிடிவாதம் மூட நம்பிக்கைகளை மனசில வச்சு உன்னையும் வருத்தி நம்மளையும் எதுக்குமா நோகடிக்கிறாய் என்றான் சிவா. இப்போ என்ன நான் பொட்டு வைக்கணும் அவ்வளவு தானே சரி நாளைல இருந்து வைக்கிறன் ஓகேவா என்றாள். சின்ன திருத்தம் நாளைல இருந்தில்ல இன்னிக்கு இருந்து என்றான் சிவா. உன் ஜோக்குக்கெல்லாம் சிரிக்கிற மூட்ல நான் இல்லை என்று கூறி நடந்தாள் கவிதா.

கவிதா மெடம் ஒரு நிமிசம் என்ற கார்த்திக்கின் குரல் கேட்டு திரும்பியவள் நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க. அப்பிடியே பூவையும் தலைல வைச்சிடுங்க இன்னும் அழகா இருப்பீங்க என்று சிரித்தான். கவிதாவால் சிரிக்க முடியவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு திரும்ப நீங்க நாளைக்கு பூ வச்சிட்டு வராட்டி இன்னிக்கு பொட்டு வைச்ச போல பூவும் வைப்பன் மறந்திடாதீங்க கவிதா என்றான் கார்த்திக். கார்த்திக் நீங்க ரொம்ப ஓவரா பண்ணுறீங்க வேணாம் நல்லதுக்கில்ல என்றாள் கவிதா. இன்னிக்கு பொட்டு தான் கொண்டு வந்தன் நாளைக்கு பூவும் கொண்டு வருவன் நீங்க இரண்டுமே இல்லாம வந்தால் கண்டிப்பா வைச்சு விடுவன். அத விட வீட்டில இருந்து வாறப்பவே வைச்சிட்டு வந்திடுங்க என்றான். அவனின் பேச்சை கேட்டு அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை சிரித்தபடி அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.

கார்த்திக் என்ன இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் தைரியம். நாம யாருமே அவளை இவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தினது இல்லை. அதுக்கும் மேல நாம ஏதும் பேசினால் அவள் கோவபடுவாள் அதனாலயே அமைதியா இருந்திடுவம். நீங்க குழந்தை போல அவளை நெருங்கி காரியத்தை சாதிச்சிட்டீங்க. உங்க மேல கோவபடவும் முடியாமல் உங்க செயலை தடுக்கவும் முடியாமல் இருக்காள் கவி. நீங்க பேசினத கேட்டு சிரிச்சிட்டே போறாள் கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும் கார்த்திக் கவலை படாம உங்க முயற்சியை கைவிடாம இருங்க என்றான் சிவா. ரொம்ப தாங்ஸ் சார். கவிதா எனக்கு கிடைச்சால் அத விட இந்த உலகத்தில எனக்கு சந்தோசம் ஏதுமே இல்லை என்றான் கார்த்திக். நாளைக்கு அவள் பூவும் பொட்டும் வைச்சிட்டு வந்தாலே அவள் உங்கள ஏற்று கொண்டிட்டாள் என்று தான் அர்த்தம் பொறுத்திருந்து பாப்பம் என்றான் சிவா. ஆமா சார் நானும் அத தான் யோசிச்சன் பாக்கலாம் என்றபடி இருவரும் ஆபிசுக்குள் நுழைந்தார்கள்.

ஆபிசுக்குள் மற்றைய அலுவலர்கள் கவிதாவை சூழ நின்றார்கள். அனைவரும் கவிதாவை எதற்காக சுற்றி நிற்கிறார்கள் என்றதை பார்க்க சிவாவும் கார்த்திக்கும் அவ்விடத்திற்கு சென்றார்கள். மெடம் நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கிறீங்க. உங்கள நாங்க பொட்டு வைச்சு இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. இன்னிக்கு பொட்டு வைச்சு அழகா இருக்கிறீங்க என்றார்கள் சக அலுவலர்கள். அந்த இடத்தில் கார்த்திக்கும் சிவாவும் கவிதாவை பார்த்தபடி நிற்க சார் இன்னிக்கு கவிதா மெடம் ரொம்ப அழகா இருக்காங்க வீட்டுக்கு போய் அவங்களுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க என்று சிவாவை பார்த்து சொன்னார்கள். சிரித்தபடி நாணத்துடன் நின்ற கவிதாவின் கண்கள் கார்த்திக்கை தேடியது.

தொடரும்…
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sat Oct 11, 2014 8:27 pm

பாகம் - 26

அவளின் பார்வையில் படாது மறைந்தே நின்ற கார்த்திக் சற்று நேரத்தில் அவளின் பார்வையில் பட்டான். அவனைப் பார்த்ததும் தடுமாறியவள் பார்வையை மறுபக்கம் திருப்பினாள். என்ன மெடம் எல்லாரும் பேசிட்டு இருக்கம் நீங்க யாரை தேடிட்டு இருக்கிறீங்க என்ற குரலால் நிமிர்ந்தவள் நான் யாரையும் தேடலையே என்றாள். சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி தன்னுடைய அறைக்கு சென்றாள்.

தனது மேசையில் சென்று அமர்ந்தவள் நடந்ததையே நினைத்தபடி இருந்தாள். அவளிற்கு கார்த்திக்கின் குணம் ரொம்பவே பிடித்திருந்தாலும் அவனை தன் வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவளது மனது உடன்படவில்லை. அவனின் செய்கைகள் அவளிற்கு கமலின் நினைவையே மறுபடி மறுபடி கண் முன் கொண்டு வந்தது. அவன் அவளுக்காக பூ வாங்கி வந்து அதை அவளின் முடியில் சூடி அழகு பார்ப்பது, அழகான பொட்டுக்களை வாங்கி அவளின் உடைக்கேற்ற நிறத்தில் அணிய வைப்பது இவற்றையே அவளிற்கு நினைவு படுத்தியது. அவளால் கமலின் இடத்தில் கார்த்திக்கை வைத்து பார்க்க முடியவில்லை. கார்த்திக்கை வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவித்தாள்.

ஏதோ எண்ணியவள் எழுந்து சிவாவின் அறைக்குள் சென்றாள். சிவா எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு வீட்டுக்கு போகவா என்றாள். அவளின் மனது குழப்பத்தில் இருப்பதை அறிந்த சிவா என்னம்மா ஆச்சு? கார்த்திக் பண்ணினத நினைச்சு அப்சற் ஆக இருக்கிறியா என்றான். அப்பிடி எல்லாம் இல்லை என்னால கார்த்திக்க கமல் இடத்தில வைச்சு பாக்க முடியல அதனால அவன் பண்ணுறத ஏற்க முடியல. அவன் குழந்தை பிள்ளை போல அடம் பிடிச்சு பைபோஸ் ஆக தன்னோட ஆசைய என்மேல திணிக்கிறான் என்றாள். சிவாவிற்கு அவள் பேசுவதற்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை. தடுமாறியபடி இருந்தான். வேறு வழியின்றி கார்த்திக்கிற்கு போன் பண்ணினான்.

ஹலோ கார்த்திக் நான் சிவா பேசுறன். என் கபின் க்கு ஒருக்கா வாங்க என்றான். ஓகே சார் என்று கூறியவன் எழுந்து சிவா றூமிற்கு சென்றான். அங்கு அவன் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் அவனுக்காக காத்திருப்பதை அறியாமலே. கார்த்திக் ப்ளீஸ் இதில இருங்க உங்க கூட நிறைய விடயம் பேசணும் என்றான். அவனும் அமர்ந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்தால் கவிதா சற்று தள்ளி அமர்ந்தாள்.

கார்த்திக் நான் பேச போறது உங்க மனச காயப்படுத்துதா இல்லையா என்றது எனக்கு தெரியாது. ஆனால் உங்க கூட பேச வேண்டிய கட்டாயத்தில இருக்கிறன். இது ஆபிஸ் இங்க ஒவ்வொருவரும் நிம்மதியா வேலை பார்க்க தான் இங்க வாறது. நீங்க செய்ற வேலையால கவிதா தன்னால வேலை பார்க்க முடியல வீட்டுக்கு போக போறன் என்று கேக்கிறாள். இதுக்கும் மேல நீங்க இப்பிடி கவிதா கூட நடந்திட்டு இருந்திங்க எண்டா நான் உங்கள ஆபிஸில இருந்து டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும். ப்ளீஸ் இத மைண்ட் ல வைச்சு இனி வேலை பாக்கிறதா இருந்தா பாருங்க இல்லை நான் உங்களுக்கு எதிரா அக்ஸன் எடுக்க வேண்டி வரும் என்று சற்று கடுமையாக பேசினான்.

சிவாவிடமிருந்து அப்படியான வார்த்தைகளை எதிர்பார்க்காத கார்த்திக் திகைத்து போய் நின்றான். இருந்தும் கவிதா மேலுள்ள அளவுகடந்த பிரிய்தில் தான் அப்படி கூறுகின்றான் என்றதை புரிந்தவன் ஓகே சார் நான் இனி அப்படி தொந்தரவு பண்ணல என்று கூறி விட்டு சிவாவின் அறையிலிருந்து எழுந்து வெளியில் சென்றான். சென்றவன் நேரே தன் அறைக்கு சென்று தன் வேலையை ராஜினமா செய்யும் கடிதத்தை எழுத ஆரம்பித்தான்.

என்ன சிவா நான் அவன் பண்ணுறது கஷ்டமா இருக்கு என்று தானே சொல்ல வந்தன். அதுக்காக அவன இப்பிடியா கண்டிப்பிங்கள். இப்போ என்னால அவனை நீங்க வேலைய விட்டு நிறுத்தினா அந்த பழி எனக்கு தான் வந்து சேரும். நீங்க பேசினது தப்பு என்றாள் கவி. என்ன கவி நான் உன்னோட சந்தோசத்தை பாக்கிறன் நீ அவனுக்காக பேசுறாய். அவன் உன்னோட தனிப்பட்ட விடயத்தில தலையிட்டது தப்பு. ஆரம்பத்தில நானும் பேசாம இருந்தன் உனக்கு நல்லது நடந்தா ஓகே என்று. ஆனால் அவன் இப்போ ரொம்ப ஓவராக போறான். இது தான் அவனுக்கு வோணிங். இனியும் பண்ணினா டிஸ்மிஸ் பண்ணிடுவன் என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த கார்த்திக் ரொம்ப சாரி சார் நான் கவிதா மேல இருந்த காதலிலும் அவங்க வாழ்க்கைல நல்லது நடக்க வேணும் என்ற ஆதங்கத்திலும் தான் அப்பிடி பண்ணினன். இப்போ பாருங்க மங்களகரமா எவ்வளவு அழகா இருக்காங்க. இத தான் நான் விரும்பினன். என்னை லவ் பண்ண தேவையில்லை ஏன் கல்யாணம் கூட செய்ய தேவையில்லை ஆனால் மங்களகரமா பூ பொட்டு வைச்சு இருக்க தானே கேட்டன். இதில தப்பு இருக்கிறதா எனக்கு தெரியல. அது உங்க 2 பேருக்கும் தப்பா தெரியிறப்ப இனி ஒரு நிமிசம் நான் இங்க வேலை பார்த்தாலும் அது எல்லாருக்குமே கஷ்டம் தான். எனக்கு உங்கள எப்பவும் மங்களகரமா பாக்கணும் என்று தான் ஆசை. அது உங்களுக்கு பிடிக்கல. இனியும் நான் உங்கள கஷ்ட படுத்தல. நீங்க உங்களுக்கு பிடிச்ச போல இருங்க அத கேக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை. இனி என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று கூறி தன்னுடைய ராஜினமா கடிதத்தை சிவாவிடம் கொடுத்து விட்டு பதிலுக்கு எதிர்பாராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

தொடரும்……
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sat Oct 11, 2014 8:45 pm

ஆச்சர்யம் ....

நீண்ட நாட்களுக்கு பின் தொடர்ந்தாலும்.. கதை முன்பாகம் மறக்கவில்லை ...

கொஞ்சம் சினிமாத்தனம் தெரிந்தாலும், அடுத்து என்ற கேள்வியிருக்கிறது..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 12, 2014 1:58 pm

பாகம் - 27

அவன் அப்படி நடந்து கொண்டதால் மிகவும் குழப்பமடைந்த கவிதா எதுவுமே பேசாமல் எழுந்தாள். என்ன கவிம்மா இப்போ உனக்கு சசந்தோசமா? அவன் தான் நாம டிஸ்மிஸ் பண்ணாம தானாவே விலகிட்டான். அவனால அவனோட மனச மாத்த முடியாது. உன்னாலும் மாற ஏலாது. இப்பிடி இருக்காம அவன் எடுத்த முடிவு ரொம்ப சரி. ஒரு மாதிரி எனக்கு இருந்த பெரிய தலைவலி தீர்ந்திடிச்சு என்றான் சிவா. என்ன சிவா இப்பிடி சொல்றிங்க அவன் என்னால வேலைய விட்டு போறான் இது உங்களுக்கு சந்தோசமா? ச்சா என்ன இது? கார்த்திக் எவ்வளவு நல்ல பையன் எதுக்கு இப்பிடி பண்ணுறான் என்றபடி சிவாவின் அறையை விட்டு வெளியே வந்தாள்.

கவி வெளியில் செல்லும் வரை காத்திருந்த சிவா கார்த்திக்கிற்கு போன் செய்தான். கார்த்திக் ரொம்ப சாரி. நான் அப்பிடி பேசினது கவிதாவுக்காக தான். மத்தும் படி உங்கள காயப்படுத்த இல்லை. அவளால மற்றவங்கள் கஷ்டபடுறத அவள் தாங்க மாட்டாள். நான் உங்களுக்கு எதிரா பேசினால் அவள் கண்டிப்பா உங்களுக்கு சாதகமா பேசுவாள். நான் உங்கள வெறுக்கிறன் எண்ட அனுதாபம் சோகம் இதனாலேயே உங்க மேல அவளுக்கு பாசம் வரும். அவளால உங்கள விரும்ப முடியல. அதே நேரம் உங்களில எந்த வெறுப்பும் இல்லை. உங்கள கமலிட இடத்தில வைச்சு பாக்க முடியாத பாச போராட்டத்தில தான் இப்பிடி குழம்பிறாள். உங்க ராஜினமாவ நான் மேலிடத்துக்கு குடுக்க மாட்டன். நீங்க ஒரு 3 நாளைக்கு லீவு எண்டு சொல்றன். அப்புறம் எல்லா நிலைமையும் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்றான் சிவா.

சார் உண்மையிலயே ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க அப்பிடி சொன்னதும் ஒரு நிமிஷம் நான் ஆடிப் போய்டன். இருந்தாலும் ஏதோ காரணம் இருக்கும் என்று உள் மனம் சொல்லிச்சு. அது தான் ஏதுமே பேசல. அதுக்கும் மேல என்னால ஆபிஸில இருந்து கவிதாவ காய படுத்த விருப்பம் இல்லை. அதனால தான் ராஜினமா கடிதம் குடுத்தன். உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்ல சார் என்றான் கார்த்திக். ரொம்ப சந்தோசம் கார்த்திக் நீங்க கவிதா மேல வைச்சிருக்கிற பாசத்துக்கு. கண்டிப்பா அவள் மனசு மாறும். தைரியமா நம்பிக்கையோடு இருங்க என்று கூறினான் சிவா.

ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு சென்ற கவிதா சோகமாய் அப்படியே கட்டிலில் சாய்ந்தாள். அவளால் கார்த்திக் வேலையை விட்டு சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தும் அவனை தன் வாழ்க்கையில் ஏற்கவும் முடியவில்லை. குழப்பமாக இருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். எழுந்து பார்த்தவள் மணி இரவாகியிருந்தது. அவளின் நிலைமையை தெரிந்த வீட்டிலிருந்தவர்களும் அவளாகவே வரட்டும் என்று நினைத்து பேசாமல் இருந்தார்கள். அன்று சிவாவும் அவர்கள் வீட்டிலேயே தங்கினான். எழுந்தவள் சென்று குளித்துவிட்டு வெளியில் வந்தாள். என்ன சிவா இன்னிக்கு இங்க தானா? ரொம்ப ஹப்பி எவ்வளவு நாளாச்சு நாம எல்லாரும் சேர்ந்து இருந்து என்றாள். அவளது பேச்சு எதுவுமே நடக்காத போன்ற தோரணையில் இருந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கும் எதுவுமே புரியவில்லை. அவளிடம் கேட்கவும் விரும்பவில்லை. எல்லோரும் மகிழ்வாக அவளுடன் அன்றைய நாளை களித்தார்கள்.

காலை சீக்கிரமாகவே எழுந்த கவிதா முதல் வேலையாக கார்த்திக்கிற்கு போன் செய்தாள். வெகு நேரமாகவும் அவனது போன் யாருமே எடுக்கவில்லை. தன் மேல் கோபமாக உள்ளானோ என்று குழம்பினாள். அதற்கும் மேல் அவன் தான் காயப்படுத்தியதால் ஏதும் தப்பான முடிவு எடுத்திருப்பானா என்று பயந்தாள். அவளால் தன்னுடைய பயத்தை வெளியில் காட்டவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தவித்தாள். எதற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று பாக்கலாம் என்ற எண்ணத்தில் அவசரமாக சென்று குளித்து விட்டு வெளியே வந்தாள். வந்தவள் போனை பார்த்தாள் அதில் கார்த்திக்கின் மிஸ் கோல் இருந்தது. சற்று பயத்துடன் மறுபடி அவனுக்கு போன் பண்ணினாள்.

ஹலோ கார்த்திக் என் மேல கோவமா? எதுக்காக என்னோட போன் ஆன்சர் பண்ணல என்றாள் சற்று தயக்கமாக. என்ன கவிதா இப்பிடி கேக்கிறீங்க உங்க மேல எனக்கு என்ன கோவம். நீங்க போன் பண்ணினப்பா நான் குளிச்சிட்டு இருந்தன் வந்து பார்த்தா உங்க மிஸ் கோல் இருந்திச்சு அது தான் உடன போன் பண்ணினன் என்றான். ஓஓஓ அப்பிடியா தாங்ஸ் கார்த்திக். என்னை மன்னிச்சிடுங்க உங்கள ரொம்பவே காயப்படுத்திட்டன் என்றாள். இல்ல கவிதா நீங்க ஒண்ணும் என்ன காயப்படுத்தல நீங்க யாதார்த்தமா தான் பேசினீங்க நான் தான் ஏதோ….. சரி அதெல்லாம் விடுங்க நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் கோவிலுக்கு வருவீங்களா? என்றாள். கண்டிப்பா கவிதா நீங்க கூப்பிட்டு நான் வராமலா? என்றான் கார்த்திக். சரி நாம கோவிலில சந்திக்கலாம் என்று கூறி போனை கட் செய்தாள்.

அவள் போனை கட் செய்ததும் கார்த்திக் சிவாவிற்கு போன் பண்ணி நடந்தவற்றை கூறினான். ஓஓஓ அப்பிடியா ரொம்ப சந்தோசம் நீங்க கோவிலில போய் அவள பாருங்க. எல்லாம் நல்லா நடந்தா ரொம்ப சந்தோசம் என்றான் சிவா. ஓகே சார் நான் அப்புறமா பேசுறன் என்று கூறியவன் அவசரமாக கோவிலுக்கு செல்ல ஆயத்தமானான்.

ஏதோ மனதில் பெரிய திருப்தியுடன் கமலின் படத்தை தொட்டு கும்பிட்டாள் கவிதா. கமலின் படத்திற்கு வைப்பதற்காக அலளது தாயார் எடுத்து வைத்திருந்த பூவை எடுத்து தன்னுடைய தலையில் சூட்டிக் கொண்டாள். கண்ணாடி முன் சென்றவள் முதல் நாள் கார்த்திக் வைத்த ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில் ஒட்டிய இடத்தில் தேடினாள். அதை எடுத்து நெற்றியில் வைத்தபடி கோவிலுக்கு செல்ல ஆயத்தமானாள். அவளின் மாற்றத்தை கண்ட அனைவரும் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருந்தும் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. அவளாக சொல்லட்டும் என்று காத்திருந்தார்கள்.

சிவா இன்னிக்கு என்னால ஆபிஸ்க்கு ரைம் க்கு வர முடியாது. நான் கார்த்திக்கை மீற் பண்ண கோவிலுக்கு போறன். அவன மீற் பண்ணிட்டு கொஞ்சம் லேற் ஆக வருவன் என்றாள். அவனும் சரி என தலையாட்டி விட்டு உன்னை கோவில்ல விட்டிட்டு வேலைக்கு போகவா என்று கேட்க இல்லை நான் ஆட்டோ பிடிச்சு போறன் என்றவள் அவர்களிடமிருந்து விடைபெற்று கோவிலை நோக்கி சென்றாள்.

கோவிலில் கவிதாவிற்காக காத்திருந்த கார்த்திக் கவிதாவின் மாற்றத்தை கண்டதும் மகிழ்ச்சியடைந்தான். வாங்க கவிதா உங்கள இப்பிடி பாக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்று கூறி மகிழ்ந்தான். இருவரும் கோவிலை சுற்றி வணங்கிய பின் ஓர் ஓரமாக அமர்ந்தார்கள். கார்த்திக் நான் இப்பிடி இருக்க வேணும் என்று தானே ஆசைப்பட்டிங்க. நீங்களும் எங்க குடும்பத்தவங்க எல்லாரும் ஆசைப்பட்ட போல நான் என்னை மங்களகரமாக மாத்திகிட்டன். என்னால நீங்க வேலை விட்டா இருக்க கூடாது. இன்னிக்கே நீங்க வேலைல மறுபடி சேருங்க என்றாள். கவிதா இப்பிடி ஒரு மாற்றத்தை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல. தாங்ஸ் ரொம்ப தாங்ஸ். நான் இன்னிக்கே வேக்ல ஜொயின் ஆகிறன் என்றான்.

மகிழ்வோடு வேலையில் இணைவதற்காய் கார்த்திக் அலுவலகம் செய்ய ஆயத்தம் ஆகினான். சரி வாங்க கவிதா நானும் ஆபிஸ் தான் போகிறேன் உங்களையும் கூட்டிப் போறன் என்று கூறி அவளை அழைத்த வண்ணம் ஆபிஸ் நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

தொடரும்.......
Last edited by Aruntha on Sun Oct 12, 2014 5:49 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun Oct 12, 2014 2:17 pm

கதையை அவசரப்பட்டு முடிச்ச மாதிரி இருக்கு ....

ஒர் திருப்பம் .... பிரியும் சூழல் எதுவும் இல்லாமல், காத்திருப்பு என்ற விடையில் முடித்தது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 12, 2014 5:34 pm

நீங்கள் சொல்றது உண்மை தான் ஆதி. கதையை இன்னும் மேலதிகமாக கொண்டு செல்வதற்கு எனக்கும் போதிய நேரமின்மையின் காரணத்தால் கதையை ஓரளவு முடிவுக்கு கொண்டு வர எண்ணி முற்றும் போட்டு விட்டேன். அடுத்த தடவை கதை எழுதும் போது மேலதிக தகவல்களை கருத்தில் கொள்கிறேன்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”