வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Wed Jun 04, 2014 11:22 pm

பாகம் - 01

காலை வேளை கோவில் மணிகள் ஒலித்திட பறவைகளின் நாதம் இனிய கீதம் பாட பனி மூட்டம் மெல்ல விலகிய படி இருந்தது. நாணற்புற்கள் தன் பனித்துளிகளாகிய காதலனோடு கொஞ்சிக் குலாவிய படி மகிழ்ந்திருக்க அவர்களை பிரிக்க கதிரவன் கதிர்களை மெல்ல பரப்பி தன் சோம்பல் முறித்தபடி இருந்தான். கதிரவனை கண்ட பனித்துளிகள் பிரிந்திட மனமின்றி தன் காதலியை விட்டு பிரிந்து செல்ல ஆயத்தமாகியது. சூரியனைக் கண்ட சூரியகாந்தி மலர்களோ அவன் அரவணைப்பில் மெல்ல மலர்ந்து அவன் செல்லும் பாதையில் அவன் பின்னே சுற்றி சுழன்றபடி இருந்தது. நாணற்புற்களின் காதலனான பனித்துளிகளை பிரித்த வருத்தம் ஏதுமின்றி தன் காதலுடன் கூடிக் குலாவியபடி இருந்தது கதிரவன்.

இவர்களின் காதல் இப்படி செல்ல படுக்கையில் சோம்பல் முறித்த வண்ணம் மெதுவாக எழுந்தாள் கவிதா. சட்டென கடிகாரம் பார்த்தவள் அலுவலகம் செல்ல நேரமாகிறது தூங்கிற்று இருந்தேனே என்று தன்னையே திட்டியபடி குளியலறை நோக்கி ஓடினாள். அவசரமாக குளித்து விட்டு பூஜை விளக்கு ஏற்றினாள். அழகிய தேவதையை அழகு சேர்க்கும் வெள்ளை சுடிதாரில் தன்னை நுழைத்து கொண்டாள். வானத்திலிருந்து வந்த தேவதையே தன்னை சூட்டிக் கொண்டதால் காற்றோடு சேர்ந்து அவள் துப்பட்டாவும் கையசைத்து அவளை கட்டியணைத்தது.

தொடரும்……….

பாகம் 2 -
பாகம் 3 -
பாகம் 4 -
பாகம் 5 -
பாகம் 6 -
பாகம் 7 -
பாகம் 8 -
பாகம் 9 -
பாகம் 10 -
பாகம் 11 -

பாகம் 12-

பாகம் 13 -

பாகம் 14 -

பாகம் 15 -


பாகம் 16 -

பாகம் 17 -

பாகம் 18 -

பாகம் 19 -

பாகம் 20 -

பாகம் 21 -

பாகம் 22 -

பாகம் 23 -

பாகம் 24

பாகம் 25

பாகம் 26

பாகம் 27

பாகம் 28

பாகம் 29

பாகம் 30

பாகம் 31

பாகம் 32

பாகம் 33

பாகம் 34

பாகம் 35

பாகம் 36
Last edited by Aruntha on Thu Jun 05, 2014 10:09 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு - தொடர்கதை

Post by ஆதித்தன் » Wed Jun 04, 2014 11:32 pm

புதிய தொடர்கதை!!!!

நீண்ட மாதங்களுக்குப் பின் படுகையில் தொடர இருக்கும், கதையினை படிக்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்... தொடரட்டும் உங்கள் வீணையடி மெத்தையவள் மடியினில் கீதம் பேசும் விரல்கள் தாண்டி காதை சுண்டும் நேரலையில் நாங்களும் மகிழ காத்திருக்கிறோம், வாசகர்களாய்!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு - தொடர்கதை

Post by Aruntha » Wed Jun 04, 2014 11:36 pm

நீண்ட நாட்களின் பின் படுகை.காம் இல் தொடர் கதை மூலம் இணைகிறேன். இதுக்கு அடி எடுத்து கொடுத்த cm nair க்கு என் நன்றிகள். கண்டிப்பா என்னால் முடிந்த அளவுக்கு இதை எடுத்து செல்வேன்
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு - தொடர்கதை

Post by cm nair » Thu Jun 05, 2014 12:04 am

வாழ்த்துக்கள்....அருந்த...துவக்கம் அருமை.... :) :) :)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு - தொடர்கதை

Post by Aruntha » Thu Jun 05, 2014 12:06 am

எல்லாமே நீங்க அடி எடுத்து கொடுத்தது தான். கண்டிப்பா நல்ல கொண்டு செல்ல முயற்சி செய்வேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Thu Jun 05, 2014 10:24 pm

பாகம் - 2

அறையிலிருந்து வெளியில் வந்த கவிதா தாயை பார்த்து சிணுங்கியபடி அம்மா நீங்களாச்சும் நான் தூங்கிட்டு இருந்தப்ப வந்து எழுப்பி இருக்கலாம் தானே ஆபிசுக்கு நேரமாச்சில்லா என்றாள். சரி சரி பொறுமையா இரு இன்னுமே உன்னோட அண்ணன் ரெடி ஆகல நீ எதுக்கு இப்போ துள்ளுறாய் கொஞ்சம் இரும்மா என்று அவளை அமைதிப் படுத்தினாள் தாய். என்ன இன்னும் அந்த தடியன் ரெடி ஆகலயா? அவனுக்கு இராத்திரியே சொல்லிட்டனே இன்னிக்கு நேரத்தோட போகணும் எண்டு என்ன பண்ணிட்டு இருந்தான் என்றபடி ரவியின் அறைக்குள் நுழைந்தாள். அவன் பொறுமையாக இருந்து போன் பேசிட்டு இருந்தான். அவனை பார்க்க கவிதாவுக்கு கோவம் தலைக்கு மேல் போய் விட்டது.

டேய் தடியா உனக்கு நேற்று இரவே சொல்லியிருந்தன் தானே இன்னிக்கு நேரத்தோட வேலைக்கு போகணும் எண்டு என்ன பண்ணிட்டு இருக்காய் என்றபடி அவன் போனை பறித்து ஹலோ நீங்க யாரா இருந்தாலும் பறவாயில்லை என்னோட அண்ணன் கூட அப்புறமா பேசுங்க என்று சொல்லி போனை கட் செய்தாள். ஏய் கவி உனக்கு ரொம்ப கூடி போச்சு எவ்வளவு நாளுக்கு அப்புறமா சிவா போன் பண்ணி இருக்கான் அத போய் கட் பண்ணிட்டியே உன்னை என்று அவள் காதை திருகியபடி வெளியே வர வாசலில் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. கவிதா நீ போய் யாரென்று பாரு நான் அதுக்கிடைல ரெடி ஆகிறன் என்றபடி உள்ளே செல்ல கவிதா வாசலை நோக்கி விரைந்தாள்.

கதவை திறந்தவள் அதிர்ந்து போய் நின்றாள். நீங்களா வாங்க உள்ள என்று அவனை வரவேற்றாள். யாரும்மா வந்திருக்காங்க என்று கேட்டபடி சமையலறையிலிருந்து வெளியே வந்த சாந்தா வாங்க தம்பி என்று அவனை வரவேற்றாள். அம்மா இன்னும் இந்த கவிதா அப்பியே தான் இருக்காளா? நான் ரவி கூட போன் பேசிட்டு இருந்தப்ப யாரு என்று கூட கேக்காம போனை புடுங்கி கட் பண்ணிட்டாள். இன்னுமே அவளிட குழந்தை குணம் மாறல. ஹலோ சார் என்ன வந்ததும் கம்ளைன் பண்ணுறிங்களா வேணாம் இது நல்லதுகில்ல என்று சிவா கூட குட்டிச் சண்டை போட்டிட்டு இருந்தப்ப மறுபடி ரவி அறையிலிருந்து வந்தான் போன் பேசியபடியே. ஓகே சார் நீங்க சொன்னபடியே செய்றன் என்றபடி போனை கட் பண்ணியவன் கவிதா குட்டி நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க கூடாது என்றான். என்ன சொல்லுடா சீக்கிரம் அப்புறம் பாக்கலாம் கோவிச்சுகிறத பத்தி என்று கூற இல்லம்மா எனக்கு மனேஜர் போக் பண்ணினார் எங்கட பிறான்ஜ் க்கு ஒருக்கா போய்டு வர சொல்லி அது தான் உன்னை எப்பிடி கூட்டி போறது எண்டு யோசிக்கிறன் என்றான்.

பாத்தியா கடைசி நேரத்தில கால வாரிட்டாய். முன்னாடியே சொல்லி இருந்தா நானே ஆட்டோல போயிருப்பனே போடா என்றபடி கோவிக்க இரும்மா கூறிவிட்டு டேய் சிவா இவள ஒருக்கா ஆபிசில விட்டிட்டு போறியா எனக்கு அவசர வேலை இருக்கடா ப்ளீஸ் என்றான் ரவி. சரிடா அதுக்கென்ன உனக்காக இது கூட செய்யல எண்டா என்ன ப்ரண்ட்சிப் நான் கூட்டிப் போறன் என்றான். சரி கவிதா எந்த ஆபிஸ் நீ போகணும் என்று சொல்லவே இல்ல என்று சிவா கேக்க நீங்க கேக்கவே இல்லையே என்றாள் கடுப்பாக. ச்சா நானே ஆபிசுக்கு புது மனேஜர் வாறார் நேரத்தோட போகணும் எண்ட ரென்ஷன்ல இருக்கன் நீங்க வேற என்றாள். சரிம்மா ஆபிஸ் பெயர சொல்லு நான் விட்டிட்டு போறன் என்றான் சிவா. அவள் குளோபல் ஐடி கம்பனில அசிஸ்டன் மனேஜர் ஆக இருக்காள் எண்டான் ரவி.

ஓஓஓ நீங்க குளோபல் ஐடி கம்பனில அசிஸ்டன் மனேஜரா சரி வாங்க நானே உங்கள கூட்டி போய் விடுறன் என்று கூற வேண்டா வெறுப்பாக அவன் கூட செல்ல வாசலுக்கு வந்தாள். வந்தவள் திரும்பி ரவியை பார்த்து நேரமாச்சு உன்னை வந்து கவனிக்கிறன் என்றபடி சிவா கூட மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றாள்.

என்னப்பா ரவி கவிதாவ போய் சிவா கூட அதுவும் மோட்டார் சைக்கிள்ல அனுப்பிறியே பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க என்று தனக்குரிய அக்கறையுடன் கேட்டாள் தாய். என்னப்பா இப்பிடி சொல்றாய் ஊர் எண்டா ஆயிரம் சொல்லும் அவங்க வாய எல்லாம் நம்மளால மூட முடியாது. நம்மட பசங்கள பத்தி நமக்கு தெரியும் நீ போய் வேலைய பாரு என்று ரவியின் தந்தை கூற சாந்தா சமயலறைக்கு சென்றாள். ரவி அலுவலக பையை எடுத்தபடி மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

தொடரும்…..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Fri Jun 06, 2014 12:09 am

ரொம்பவே பாஸ்ட்டா பாகம் இரண்டையும் கொடுத்திட்டீங்களா... சூப்பர்...

கதை ஆரம்பத்திலேயே....புள்ளி மீது கோடு வரைய முடிவது போல இருக்கே???
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Fri Jun 06, 2014 1:04 am

புள்ளி மீது கோடு வரையுரமா ரோடு போடுறமா எண்டத பொறுத்திருந்து தான் பாக்கணும். கண்டிப்பா வித்தியாசமான பார்வையில் கொண்டு செல்வேன் என்று நம்புகிறேன் பாக்கலாம் Athithan
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by சாந்தி » Fri Jun 06, 2014 6:57 am

வாங்க அருந்தா...
நீங்க வந்த பிறகுதான் எனக்கு சுறுசுறுப்பு வந்திருக்கிறது...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Fri Jun 06, 2014 8:19 am

சாந்தி wrote:வாங்க அருந்தா...
நீங்க வந்த பிறகுதான் எனக்கு சுறுசுறுப்பு வந்திருக்கிறது...
Thanks santhy akka. Dont worry I am always here
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”