வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun Oct 12, 2014 5:44 pm

ஒர் பாகத்தினை இழுத்து... பிரியும் சூழலை அமைத்துவிட்டால் ... கொஞ்சம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..

நல்லது.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 12, 2014 5:47 pm

சரி கண்டிப்பாக தொடரும் போட்டு ஆரம்பிக்கிறேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:50 pm

பாகம் - 28

கவிதாவும் கார்த்திக்கும் சேர்ந்து ஆபிஸ் வருவதை தன்னுடைய அறையிலிருந்து ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. நேராக சிவா றூமிற்கு இருவரும் சென்றார்கள். அங்கு சென்ற கார்த்திக் தான் கொடுத்த ராஜினமா கடிதத்தை வாங்கி கவிதா முன்னால் கிழித்துப் போட்டான். சிவாவின் மனதில் பாரிய திருப்தி ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக இருந்து இடையில் அவனை பார்த்தாலே வெறுத்த கவிதா இப்போது மீண்டும் கார்த்திக் கூட நல்ல நட்பாக பழக ஆரம்பித்தாள். அவளின் மனதில் தைரியத்தை விதைத்து அவளை மறுபடி பழைய கலகலப்போடும் மகிழ்ச்சியோடும் ஆக்கினான் கார்த்திக். இதனால் கவிதாவின் குடும்பமும் கார்த்திக்கும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள்.

அவளின் மாற்றங்களுக்கு காரணமான கார்த்திக்கை பார்க்க கவிதாவின் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அதனால் அன்று மாலை கார்த்திக் கவிதா வீட்டிற்கு சென்றான். அன்றிலிருந்து சிவா எப்படி கவிதா வீட்டில் பழகுவானோ அதோ போன்று கார்த்திக்கும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறினான். அவர்கள் குடும்பத்தில் தொலைந்த சந்தோசம் மறுபடி திரும்பியதால் கவிதா குடும்பத்தினர், சிவா, கார்த்திக் எல்லோரும் சேர்ந்து சிறிய சுற்றுலா போல செல்ல தீர்மானித்தனர். அதன்படி அந்த வாரத்தின் வார இறுதி நாட்களை தெரிவு செய்திருந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. அனைவரும் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல ஆயத்தமானார்கள். இரண்டு நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்களின் பயணம் மலை, அருவி, பூஞ்சோலை என்று பல இடங்களை தழுவிச் சென்றது. பூஞ்சோலையில் பூக்களோடு பூக்களாய் கவிதாவும் பூத்துக் குலுங்கியபடி நின்றாள். அவளை பார்த்து அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆரம்ப காலத்தை போன்று அவளது குறும்புகள் மறுபடி ஆரம்பித்து எல்லோரையும் கலாய்த்து சிரித்தபடி இருந்தாள்.

அவளுக்கு அருவியும் மழையும் என்றால் கொள்ளை பிரியம். அருவியை கண்டாலே போதும் அந்த இடத்தை விட்டு வெளியே வரவே மாட்டாள். அன்றும் அப்படி தான் அருவியில் குளிப்பதற்காக சென்றாள். தான் சென்றது மட்டுமல்லாமல் குடும்பத்திலுள்ள அனைவர் மேலும் கார்த்திக் சிவா மேலும் தண்ணீரை அள்ளிக் கொட்டி அவர்களையும் அருவியில் குளிக்க வைத்து மகிழ்ந்தபடி இருந்தாள். அவளின் அந்த குறும்புகள் வீட்டில் அனைவருக்கும் பழகியதாக இருந்தாலும் பல நாள் தொலைத்து இருந்தார்கள். அவளின் குறும்புகளைஎன்றுமே கண்டிராத கார்த்திக் அவளையும் அவளின் குறும்புகளையும் அணு அணுவாக ரசித்தபடி இருந்தான்.

அவனை பார்த்தாலே வெறுத்த கவிதா அவனை நட்பாக ஏற்று இன்று அவனையும் தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்று மகிழ்வாக இருப்பதைப் பார்த்து கார்த்திக் தன்னுடைய கனவுகள் யாவும் நனவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற மகிழ்ச்சியில் பூரித்து இருந்தான்இ அவளின் குழந்தை தனத்தில் தானும் பங்கெடுத்து அவளின் அன்பு மழையிலும் அருவியிலும் நனைந்து கொண்டிருந்தான்.

தொடரும்……!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Thu Oct 16, 2014 6:31 pm

பாகம் - 29

அவர்களின் குடும்பம் ஒட்டு மொத்த சந்தோசத்தில் நனைந்தபடி இருந்தது. அப்போது தான் கவிதாவின் மனசில் தான் இத்தனை காலமும் சோகமாக இருந்து குடும்பத்திலுள்ள அனைவரினதும் சந்தோசத்தை பாழடித்து விட்டேனே என்று எண்ணம் தோன்றிய. தன்னுடைய சந்தோசத்திற்காக இல்லை என்றாலும் குடும்பத்தினரின் சந்தோசத்திற்காக வாழ முடிவெடுத்தாள். அதன் முதல் படி தான் இந்த சுற்றுலா.

எதேச்சையாக அவர்கள் அந்த சுற்றுலாவின் போது ரேணுகாவை சந்தித்தார்கள். அவள் தன்னுடைய கல்லூரியுடன் சுற்றுலா வந்திருந்தாள். கவிதாவைக் கண்டதும் ஹாய் அண்ணி என்றபடி ஓடி வந்து கட்டியணைத்தாள். அண்ணி உங்கள பாக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? ஆரம்பத்தில இருந்த போல இருக்கிறீங்க. உங்கள இப்பிடி பாக்கணும் என்று தானே எல்லாருமே ஆசைப்பட்டம். இப்போ அது நடந்திட்டு என்று அவளை முத்தமிட்டாள்.

அண்ணா இறந்தது ஒரு விபத்து. அதுக்காக உங்கட வாழ்க்கையை நீங்க அப்பிடியே வைச்சிருக்காமா நல்ல முடிவு எடுத்திருக்கிறீங்க போல இருக்கு. பூ, பொட்டு வைச்சு நம்மட அதே பழைய அழகான தேவதை போல இருக்கிறீங்க என்றாள். ஏய் என்ன அவளையே கொஞ்சிட்டு இருந்தா நம்மள எல்லாம் கவனிக்க மாட்டியா என்றான் ரவி. டேய் மச்சி உன்னை கவனிக்காமலா என்றபடி அவனருகில் வந்து அவனின் தோளில் சாய்ந்தாள். நடப்பவற்றை எல்லாம் புரியாத புதிராக பார்த்தபடி நின்றான் கார்த்திக்.

கார்த்திக் என்ன பாக்கிறீங்க இவள அறிமுகபடுத்த மறந்திட்டன். இவ தான் எங்க மாமா பொண்ணு ரேணுகா. கமலோட தங்கச்சி. கமலுக்கு கவிய கட்டி வைச்சதும் இவள எனக்கென்று நிச்சயம் பண்ணினது. அப்புறம் நடந்த சம்பவங்களால எல்லாமே நின்னு போய்ட்டு. அப்புறமா இவங்க வீட்டில இருந்து வந்து பேசினாங்க நான் கவிக்கு ஒரு நல்லது நடக்காம என்னோட வாழ்க்கைய பத்தி யோசிக்க மாட்டன் எண்டதால சின்னதா ஒரு மனஸ்தாபம். அதனால அத்தை மாமா வீட்டுக்கு வாறதில்லை. இருந்தாலும் பாக்கிற இடத்தில பேசிக்குவம். இவள் மட்டும் கட்டினா என்னை தான் கட்டிப்பன் என்று பிடிவாதமா இருக்காள் என்றான். எல்லாத்துக்கும் மேல இவளுக்கு கவி எண்டா உயிரு. அவளுக்கு இப்பிடியானதில வருத்தமா இருக்காள் என்றான்.

ஓஓஓ இவ்வளவு இருக்கா என்றான் கார்த்திக். ஆமா என்று தலையசைத்த ரவியை பார்த்து இது யாரு புதுசா நம்ம குடும்பத்துக்குள்ள? என்னை பத்தி நம்ம குடும்பம் பத்தி எல்லாமே சொல்லிங்க இவரு யாரு என்று எனக்கு சொல்லலயே என்றாள். இவன் பேரு கார்த்திக். கவிதா ஆபிஸில வேக் பண்ணுறார். கவிதாவ உயிருக்குயிரா நேசிக்கிறார். அதுக்கும் மேல இப்போ கவியோட இந்த மாற்றம் அத்தனைக்கும் முழுமையான காரண கர்த்தாவே இவர் தான் என்றான்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை ஓடிச் சென்று கார்த்திக்கை கட்டியணைத்தாள். எல்லாருமே அவளை ஆச்சரியமாக பார்த்தபடி நின்றார்கள். நீங்க கார்த்திக் இல்லை. என்னோட கமல் அண்ணா. என்னோட அண்ணிட முகத்தில மறுபடி சந்தோசத்தை வரவழைச்ச ராஜகுமாரன். என்னோட அண்ணிய மறுபடி மங்களகரமா மாத்தின என்னோட அண்ணா என்று அவனை கட்டியணைத்து அழுதபடி நின்றாள். யாருமே எதிர்பார்க்கவில்லை ஆனால் அவள் கார்த்திக்கை அந்த ஒரு நொடியிலேயே அவளோட அண்ணனா ஏத்துக்கொண்டாள். அண்ணி என்னோட அண்ணன் சாகல. கார்த்திக் அண்ணா உருவத்தில நம்ம கூட இருக்காரு. கமலண்ணா தான் கார்த்திக் அண்ணாவ நமக்காகவே இங்க அனுப்பி வைச்சிருக்காரு. அவருக்கும் எத்தனை நாளைக்கு தான் மான் குட்டி போல துள்ளித்திரிந்த உங்களோட சந்தோசம் நிம்மதி, மங்களகரம் எல்லாத்தையும் தொலைஞ்சு இருக்கிறத பாத்திட்டு இருக்க முடியும். அது தான் உங்க பழைய போல பாக்க அண்ணனே இவங்கள நம்மகிட்ட அனுப்பி வைச்சிருக்காரு என்றாள்.

யாருமே எதிர்பார்க்காத வார்த்தைகளை ரேணுகா பேசினாலும் அனைவரும் அந்த நொடி அவள் சொல்வது உண்மை என்பது போல உணர்ந்தார்கள். கமலே கவியின் சந்தோசத்துக்காக கார்த்திக்கை அனுப்பி வைத்ததாக நம்பினார்கள். ஒரு நொடியில் கார்த்திக் கூட ஒட்டிக் கொண்ட ரேணுவை நம்ம முடியாமல் பார்த்தபடி நின்றாள் கவிதா.

தொடரும்……
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Thu Oct 16, 2014 6:57 pm

கதை நன்றாக செல்கிறது ....

புதிய கதாபாத்திரம், கதையை மேலும் நீட்டும் போலிருக்கிறது...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Thu Oct 16, 2014 6:59 pm

நீங்க தானே கதையை ரொம்ப எதிர்பார்த்திங்க. அது தான் கொஞ்சமா நீட்டிக்கலாம் என்று புது கரெக்டர கொண்டு வந்தாச்சு. இனி தொடரும்................
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Fri Oct 17, 2014 10:15 pm

பாகம் - 30

நடப்பவை யாவும் கார்த்திக்கிற்கு சாதகமாகவே இருந்தமையால் அவன் மிகவும் மகிழ்வாக இருந்தான். சரி அண்ணா எப்போ என் அண்ணி கழுத்தில தாலி கட்ட போறீங்க என்று கண்சிமிட்டினாள். ஏய் ரேணு என்கிட்ட அடி வாங்க போறாய் என்று அவளின் காதை திருகினாள் கவிதா. வழமையாக கல்யாண பேச்சு எடுத்தாலே கோவப்பட்டு எரிஞ்சு விழும் கவிதா அன்று அமைதியாக இருந்தாள். அவளின் காதைக்கூட செல்லமாக தான் திருகினாள். இதைப் பார்த்த அவளின் குடும்பம் மிகவும் நிம்மதி பெருமூச்சு விட்டது.

டேய் மச்சி இவ்வளவு நாளா தான் அண்ணிய பத்தி பேசியே என்னோட வாழ்க்கைய பாழடிச்சிட்டு இருந்தாய். இனியாச்சும் என்னை கல்யாணம் பண்ணிப்பியா? இப்போ தானே என்னோட அண்ணிக்கு கார்த்திக் அண்ணன் வந்திட்டார் என்றாள். நம்ம கல்யாணத்தால பிரிஞ்ச நம்ம குடும்பம் மறுபடி நம்ம கல்யாணத்தாலேயே சேரணும்டா என்று சொல்லியபடி சென்று ரவியின் நெஞ்சோடு சாய்ந்தாள். அவளின் ஏக்கமான பேச்சு இன்னமும் ரவி மேல வச்சிருக்கிற பாசத்தை பார்த்து ரொம்பவே வேதனைப்பட்டாள் கவிதா. தன்னுடைய சில முடிவுகளால் மொத்த குடும்பமும் தனக்கு வெளிக்காட்டாமலே நரக வேதனையை அனுபவித்து கொண்டிருந்ததை அந்த நிமிடத்தில் அவளால் உணர முடிந்தது.

சரிம்மா ரேணு நான் என்ன உன்னை மனசால வெறுத்தனா? என் கவிக்கு நல்ல நடக்கும் மட்டும் நம்ம கல்யாணத்தை தள்ளி வைக்க தானே சொல்லி இருந்தன். ஆனால் என்ன தள்ளி வைக்க சொல்லி மாதங்கள் கடந்தா எந்த பெத்தவங்களும் பொறுப்பாங்க வருசக் கணக்கானல் அவங்க தான் என்ன பண்ணுவாங்க. அத்தை மாமா ட கோவத்தில எந்த தப்பும் இல்லை. அவங்களும் பொண்ண பெத்தவங்கக யோசிப்பாங்க தானே. அதுவும் குடும்பத்தில இரண்டே பிள்ளைங்க. கமல் இப்போ நம்ம கூட இல்லை. அவங்கட ஒட்டு மொத்த சந்தோசமும் நீ தானே. சரி விடு எல்லாம் நல்லாவே நடக்கும். எனக்கு மட்டும் என்ன உன்னை பாக்காம பேசாம இருக்கிறது சாதாரண விசயமா? எவ்வளவு கஷ்டம். அது உனக்கு என்ன நான் சொல்லியா தெரியணும்? என்று கூறி அவளின் தலையை வருடினான்.

தன் அண்ணன் ரேணு மேல வைச்சிருந்த பாசத்தை தனக்காகவே இவ்வளவு காலமும் மறைச்சு போலியா எங்க முன்னாடி சந்தோசமா இருந்திருக்கிறானே என்று நினைத்த நொடியே அவளது கண்கள் பனித்தது. அவங்களோட கல்யாணம் உடனடியா நடந்தாகணும் என்று நினைத்தாள். ஆனால் அதை இப்போது கூறினால் தன்னோட கல்யாணத்தை கார்த்திக் கூட செய்ய சொல்லி கேப்பாங்களே என்ற குழப்பத்தில் எதுவுமே பேசாமல் மௌனமாகவே இருந்தாள். அவளின் உதடு மௌனம் சாதித்தாலும் அவளது மனது ஆயிரம் கேள்விகளை கேட்டு தடுமாறிய வண்ணம் இருந்தாள்.

அவளின் திடீர் மாற்றத்தை பார்த்த ரேணுகா என்ன அண்ணி ரொம்ப கலகலப்பா இருந்தீங்க சட்டென்று உங்க முகத்தில வாட்டம் தெரிதே என்னாச்சு? என்ன என்னை பார்த்ததும் அண்ணன் நினைவு வந்திச்சா என்றாள். அவள் எதுவுமே பேசாமல் தரையை பார்த்தபடி நிற்க அதுக்கென்ன அண்ணி இப்போ அண்ணன் தானே இருக்கான் அப்புறம் எதுக்கு வருத்தம் என்று கூறி கார்த்திக்கின் கையை எடுத்து கவிதாவின் கை மேல வைத்தாள். அதை சற்றும் எதிர்பார்க்காத கவி சட்டென்று தன் கையை கார்த்திக் கையிலிருந்து விலக்கினாள். அதை பார்த்த அனைவர் முகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அதை கவனித்த கார்த்திக் அந்த சூழ்நிலையை சரி செய்ய எண்ணினான். என் கவிக்கு ரொம்பவே வெக்கம். அதுக்காக இப்பிடியா கையை சட்டென்று விலக்குவாய் என்று கூறி அவளின் தோளில் கையை போட்டு தன்னோடு அணைத்தான் கார்த்திக்.

எல்லாருடைய முகத்திலும் மறுபடி மகிழ்ச்சி உண்டானது. கவிதாவின் முகத்தில் மட்டும் தடுமாற்றம் உண்டானது. அவனின் கைப்பிடியை விலக்கவும் முடியாமல் அவன் அரவணைப்பில் லயிக்கவும் முடியாமல் தடுமாறினாள். கார்த்திக்கின் குழந்தை தனமான செயல்கள், அவனோட பிடிவாதமான நடத்தைகள் அவளை சங்கடப்படுத்தியது. அவள் குடும்பத்தில் எல்லோருடைய ஆரதரவும் கார்த்திக்கிற்கு இருந்தமையால் அவளால் எதுவுமே பண்ண முடியவில்லை. போலியாக முகத்தில் சிரிப்பை வரவழைத்து சிரித்தாள். தன் மனதில் உள்ளதை எப்படியாவது கார்த்திக்கிற்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்று துடித்தாள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தாள்.

தொடரும்………
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Fri Oct 17, 2014 10:45 pm

கதை விறுவிறுப்பாக.... சுவாரஷ்யமாக செல்கிறது ...

தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன் ...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by Aruntha » Sun Oct 19, 2014 8:58 pm

பாகம் - 31

சுற்றுலா முடிந்து வீட்டிற்கு சென்ற எல்லாருமே நிம்மதியாக இருந்தனர். ரவியும் தனக்கும் ரேணுவுக்கும் மீண்டும் நல்ல உறவு வந்ததையிட்டு மகிழ்வாக இருந்தான். கார்த்திக் கவிதாவுடன் செலவு செய்த நாட்களை நினைத்து பூரிப்புடன் இருந்தான். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்து அந்த நினைவுகளை மீட்டியபடி இருந்தான். தனக்கு கவிதா குடும்பத்தில் கிடைத்திருக்கும் பூரணமான ஒத்துழைப்பையும் அவர்களின் பாசத்தையும் எண்ணும் போது அவனது மனது சிறகடித்து பறந்தது. சிவாவிற்கும் கவி வாழ்க்கையில் நல்லது நடக்க போகின்ற ஓர் மனநிறைவு இருந்தது.

எல்லோருமே மகிழ்ச்சி வெள்ளத்தில் நீச்சலடித்தபடி இருந்தார்கள். கவியால் மட்டும் நடந்த நிகழ்வுகளை சகஜமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டிலுள்ளவர்களின் சந்தோசத்துக்காக தன்னுடைய வெளித்தோற்றத்தை மாற்றியவளால் கமலை மறந்து இன்னுமொரு வாழ்க்கையை ஏற்க முடியவில்லை. கார்த்திக் அவளிடம் ஏற்படுத்திய மாற்றத்தை நல்ல நட்பாக நினைத்து ஏற்றுக் கொண்டாலும் அவனை வாழ்க்கையில் இணைப்பதற்கு அவளால் முடியவில்லை. இதை சுற்றுலா நேரத்தில் அவனுக்கு தெளிவு படுத்தலாம் என்று நினைத்திருந்தவளிற்கு ரேணு நடந்து கொண்ட விதம் எதையுமே பேச விடாது தடுத்தது.

பார்த்த ஓர் நொடியிலே கார்த்திக்குடன் ரேணு ஒட்டிக் கொண்ட விதம் அவளை அண்ணன் ஆக ஏற்று தன்னை அவனுடன் இணைத்து வைத்த அவள் செயல்கள் எல்லாம் அவளை நிலைகுலைய வைத்தது. தன்னால் கார்த்திக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி ரவி ரேணுவின் வாழ்க்கையை சீரழிக்க அவள் விரும்பவில்லை. ரவியும் ரேணுவும் எவ்வளவு உயிராக நேசிக்கிறார்கள் என்றதும் தனக்காக அவர்களின் பாசத்தை தமக்குள்ளேயே புதைத்து இத்தனை காலமும் போலியாக சிரித்து பேசியதையும் நினைக்க அவளிற்கு கண்கள் குழமாகின. அவர்கள் இருவரும் வாழ்க்கையில் எப்படியாவது ஒன்று சேரணும் என்று விரும்பினாள். இருந்தும் தான் கார்த்திக்கை திருமணம் செய்ய சம்மதிக்காவிட்டால் ரவி ரேணுவை கட்டிக்க சம்மதிக்க மாட்டான் என்பதை அவள் தெளிவாக புரிந்து வைத்திருந்தாள்.

கார்த்திக்கிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தால் இந்த விடயத்தில் கார்த்திக் அவளிற்கு நிச்சயம் உதவி புரியமாட்டான் என்பது அவளிற்கு தெரியும். என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் ஒரே கட்சியாகவும் இவள் மட்டும் தனிக் கட்சியாகவும் இருந்து சிந்திக்கலானாள்.

வீட்டிற்கு சென்ற ரேணு நடந்தவற்றையெல்லாம் வீட்டிலுள்ளவர்களிற்கு சொல்லி மகிழ்ச்சியாக இருந்தாள். அவர்ளிற்கு அவள் சொல்வதை நம்பவே முடியவில்லை. இருந்தும் எல்லாரது ஆசைப்படியும் கவிதாவிற்கு நல்லது நடக்க போகிறது என்று நினைத்து மகிழ்ந்தார்கள். அப்படியே ரேணுவின் வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அன்றைய நாள் இரு வீட்டிற்கும் இன்பமாகவே இருந்தது.

போன் றிங் பண்ண எழுந்து சென்று எடுத்தாள் கவிதா. ஹலோ என்றவள் மறுமுனையில் அவளின் அத்தையின் குரல் கேட்டு மிகவும் ஆனந்தமானாள். அத்தை நீங்களா? நான் எதிர்பார்க்கவே இல்லை எப்படி இருக்கிறீங்க? என்ன பண்ணுறீங்க? மாமா எப்படி சுகமா இருக்காரா? இப்பிடி கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள். கவிம்மா இவ்வளவு கேள்விக்கும் நான் பதில் சொல்றது எண்டா ரொம்ப கஷ்டம் ஒவ்வொண்ணா கேளும்மா என்றார். இங்க குடு நான் என் மருமகள் கூட பேசணும் என்று போனை பறித்த மாமனார் என்னம்மா கவிக்குட்டி நல்லா இருக்கியா என்றார். ரொம்ப நாட்களுக்கு அப்புறமா அவர்களின் குரலை கேட்ட கவியால் எதுவுமே பேச முடியவில்லை. அப்படியே போனை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

என்னம்மா சின்ன குழந்தை போல அழுதிட்டு….. இப்போ தான் ரேணு எல்லாமே சொன்னாள். எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என்ன பண்ணுறதம்மா விதி என் பையன் உன் கூட வாழ குடுத்து வைக்கல. சின்ன வயசிலயே உன் வாழ்க்கை இப்பிடி ஆனத நினைச்சு நாங்க தினம் தினம் அழுதிட்டு இருக்கம்மா. என் பையனோட பிள்ளைய தான் நாம தூக்க முடியல என்றால் இங்க ரேணுவும் ரவிய தான் கட்டிப்பன் என்று கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறாள். நாம பேரப்பிள்ளையள பாக்காமலே கண்ண மூடிடுவமா என்று நினைச்சு வேதனை பட்டிட்டு இருந்தம். எல்லாரோட கவலைக்கும் மருந்தா இன்னிக்கு ரேணு வந்து கார்த்திக் பத்தி பேசினாள். அவனால உன்கிட்ட ஏற்பட்ட மாற்றம் பத்தி பேசினாள். ரொம்பவே சந்தோசம்மா இருந்திச்சம்மா. அது தான் உடனயே உனக்கு போன் பண்ணினம் என்றார். யாரம்மா போனில என்று கேட்ட ரவியின் குரலால் திரும்பியவள் அத்தை மாமா பேசுறாங்க என்று கூறி அவனிடம் போனை கொடுத்தாள்.

தொடரும்…..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun Oct 19, 2014 9:27 pm

கேள்விகளுடன் கதை விறுவிறுப்பாக செல்கிறது... காத்திருக்கிறேன் அடுத்தப்பாகத்திற்காக ...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”